சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 பிப்ரவரி, 2022
நான் கண்ட தமிழீழம் ( முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்பும் )
ஓவியர் புகழேந்தி நூல் ... வரலாறே வழிகாட்டும்
*சுப்ரபாரதிமணியன்
”எந்த ஒரு கலையும் வெறுமனே கலையாக இருக்க முடியாது. உணர்ச்சியும் உத்வேகமும் ஆழ்மனதில் பதிந்து இருந்தால் மட்டுமே அது கலைப் படைப்பின் ஊடாக வெளிப்படும் .கலை வடிவத்தின் ஊடாக வெளிப்படும் .கலை வடிவங்கள் மூலம் நாம் இழந்ததை , நாம் சிந்திய ரத்தத்தை கலையின் மூலம் நம்முடைய வீரத்தை வெளிப்படுத்த வேண்டும் ..நாம் இன்றைக்கு தோற்று இருக்கலாம் .பின்னடைவை சந்தித்து இருக்கலாம் .ஆனால் இந்த பின்னடைவும் தோல்வியும் நாம் இன்னும் முன் நோக்கி செல்வதற்கான ஒரு பாடமாக இருக்கவேண்டும் அதற்கு இந்த கலை வடிவங்களை பயன்படுத்த வேண்டும்., அடுத்தடுத்த நிலைக்கு ,அடுத்தடுத்த தலைமுறைக்கு இதன் மூலம் நம் வரலாற்றையும் வாழ்வையும் போராட்டத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும் ” என்பதில் நம்பிக்கை கொண்டவர் ஓவியர் புகழேந்தி அவர்கள்
இந்த நூலில் இலங்கை பயணம் பற்றிய இரண்டு காலகட்டங்களின் அனுபவங்களை விரிவாகச் சிறந்த புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார் .
நந்திக்கடல் போன்ற முக்கியமான இடங்கள் பற்றிய வர்ணனை ஒரு நாவல் தன்மையுடன் ஒரு சிறுகதை தரும் சிறப்பான அதிர்வுகளையும் கொண்டிருக்கிறது. நந்திக் கடல் சார்ந்த பகுதியை நாம் இப்படியும் முன் நிறுத்தலாம் என்பது தெரிகிறது .வள்ளிபுனம் செந்தளிர் இல்லம் ...போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணம் பற்றிய பகுதியில் யுத்தத்தின்போது இழந்த பெற்றோர்களின் குழந்தைகளை பற்றிய சித்திரங்கள் மனதை நெகிழ வைக்கின்றன .
ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் ஒருமித்த எழுச்சிமிகு உறுதியான போராட்ட குரல் மட்டுமே உலகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பும் என்பதைக் காணாமல் போன தங்களின் குழந்தைகளைப் பற்றிய விவரிக்கும் பெற்றோருடைய கோணத்தில் இருந்து கொண்டே அந்த முகாமின் குரலாகும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் .
உலகை உலுக்கிய செம்மணி படுகொலை பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றும் அதுசார்ந்த செம்மணி புதைகுழி பற்றிய புகைப்படங்களும் மனதை உலுக்குவதாக இருக்கிறது . அது போல் தலைவர் பிரபாகரின் வீட்டு கிணறும் முற்றமும் அது அழிக்கப்பட்டபின்பு உள்ள நிலையும் கூட .ஈழத்து பல பகுதிகளின் சிதைவுகள் நம்மை உறுத்துகின்றன
.அவரின் ஒவ்வொரு இலங்கை பயணத்தின் போதும் கல்வி சுற்றுலா அனுபவங்கள் என்று நிறுத்திக்கொள்ளாமல் போராளிகளை சந்திப்பதும் அவர்களுடன் உரையாடும் போதும் அவர்கள் கலை இலக்கிய வடிவங்களில் ஆர்வம் கொள்ளச் செய்வதும் அவரின் முக்கிய பணியாக இருக்கிறது.அது போராளிகளை தன்னம்பிக்கையுடன் உத்வேககத்துடன் போராடச் செய்யும் தன்மை கொண்டது .போராளிகளுக்கு சண்டையின் தன்மை பற்றியும் அதில் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முறை பற்றியும் தெளிவுபடுத்தி சரியான விளக்கத்துடன் தயார் படுத்தினால் இலகுவாகவும் விளையாட்டாகவும் சண்டை பிடிக்கக்கூடிய மனோநிலை அவர்களுக்கு உருவாகும் என்பது ஒரு நம்பிக்கையாக இருப்பதையும் பதிவு செய்திருக்கிறார்
“ எதிரியின் அழிவில் தான் எங்களது வெற்றியே தங்கியிருக்கின்றது எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டிருக்கும் ராணுவ வீரர் நடுவே உயிர் பிடுங்கப்படும் வரை என்பது போராளிகள் உயிருடன் இருப்பார்கள் .எனவே எதிரியின் அளவுக்கு வேகமாக செல்லுங்கள் .முடிந்தவரை எதிரிகளை வேகமாக எதிர்கொள்ளுங்கள் . அதன் மூலம் வெற்றியை பெறுங்கள் “என தலைவர் பிரபாகரன் போராளிகளுக்கு விளக்கிக்கொண்டு இருந்ததை அவர் நேரில் பார்த்த சாட்சிகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் .
வட தமிழகத்தை போலல்லாது தென்தமிழகம் சிங்களக் குடியேற்றங்களும் ராணுவம் கொலை பசியாலும் ராணுவத்துடன் கூடிநின்ற சிங்கள முஸ்லிம் காடையர்களாலும் சிரமம் த ரப்பட்டது பற்றிய அவரின் சித்திரங்கள் எவ்வித பாவனையும் இல்லாமல் எளிமையாக வெளிப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பல்வேறு வகையான மனிதர்களைச் சந்திக்கிறார் வேதனை கோபம் ஆற்றாமை அழுகை என்று பல்வேறு உணர்ச்சிகளோடு அவர்களுடன் உரையாடல் அமைந்திருப்பதை இந்நூலின்பல பகுதியில் காட்டுகின்றன ..
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்வது பாரிய குறைவாக உள்ளது என்று அவர் ஒரு இதழுக்கு கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் .அது போல் சில பேட்டிகள் இந்த நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டு அவரின் அரசியல் பார்வை தெளிவாகிறது.
இலங்கை போராட்டம் சார்ந்த நிலைகளையும் மக்கள் வாழ்வினையும் பயண அனுபவங்களையும் கொண்டு ஓவியர்
புகழேந்தி இதில் பதிவு செய்திக்கிறார் ..அந்த பதிவுகளை அவரின் பல ஓவியங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன .அந்த ஓவிய பதிவுகள் ஒரு நிரந்தர கல்வெட்டுகளாக மாறியிருக்கின்றன .ஓவியர் புகழேந்தியின் வாழ்க்கைப்பயணத்தில் ஓவியம் கலை இலக்கியப் படைப்புகள் மட்டுமில்லாமல் அரசியலும் முக்கிய பங்கு வகிப்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது
தோழமை சென்னை
சுப்ரபாரதிமணியன்
ReplyForward