சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 பிப்ரவரி, 2022
சென்றாண்டுசிறந்த நாவலுக்கான “ அந்நியர்கள் “ நாவலுக்காக சென்னை எழுத்து அறக்கட்டளை வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சுப்ரபாரதிமணீயன் அவர்களுக்குப் பாராட்டுதெரிவிக்கப்பட்டது. அந்நியர்கள் நாவலை பள்ளி ஆசிரியரும் கவிஞருமான பொன் சண்முகசுந்தரம் அறிமுகப்படுத்திப் பேசினார். சமீபத்தில் சார்ஜா புத்தக்க் க்ண்காட்சியில் புக்கிஷ் விருது பெற்ற சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சத்ருக்கன் நன்றி கூறினார்
ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்
ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை ஒரு வெற்றிடமாகவே இருப்பதால் முடிந்தவரை பெண்களையும் இந்த படைப்பாற்றல் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும் . ஓவியத்துறையிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும்.
என்று ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் புதன் அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற மாதக்கூட்ட்த்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது குறிப்பிட்டார்.
சி. சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.
ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் மேலும் பேசுகையில் இப்படிக்குறிப்பிட்டார்:
” ஓவியம் என்பது காட்சிப்படுத்துதல் குறிப்பாக ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு வார்த்தையை நாம் எழுத்தாகவும் அல்லது ஒலி வடிவிலும் கேட்பது அதை நம்மால் காட்சியாக சிந்திக்க முடியாது. ஆனால் ஆயிரம் வார்த்தைகளை எழுதி ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகளை ஐந்தே கோடுகளில் வெளிப்படுத்தி விட முடியும். குறிப்பாக அதிக மதிப்பெண்கள் பெறும் அனைவரும் வலது முளையை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மதிப்பெண்களில் சிறந்து விளங்குகிறார்கள் தவிர படைப்பாற்றலையும் ஒளிர்வதில்லை. அதே சமயத்தில் வலது மூளையை பயன்படுத்தி அதிக அளவில் சிந்திப்பவர்கள் ஓவியம் இசை சிற்பம் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றனர். உதாரணமாக நமக்கு ஒரு வார்த்தையை அல்லது ஒரு வாக்கியத்தை புரிந்துகொள்வதற்கு அந்த வாக்கியத்தோடு இணைந்த படங்கள் உதவி செய்வது போல் வலது மூளை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு வார்த்தைகளையும் காட்சிப் படுத்திக் கொள்கிறார்கள் அந்த காட்சிப்படுத்துதல் என்பது அவர்கள் மூளைக்குள் ஒரு திரைப்படம் ஓடுவது போல பதிந்து விடுவதால் அதை வெளிப்படுத்துவதிலும் அவர்கள் ஒரு படைப்பாற்றல் மிக்க வெளிப்பாடாக வெளிப்படுத்துகிறார்கள்.உதாரணமாக வளது முளையை கண்டறிய எளிமையான ஒரு பயிற்சியை ஒரு வாரத்திற்கு ஏழு நாள் இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள் என்றால் அதற்கான விடையை 2 என்கிற என்னை 7 என்கிற என்னை பெருக்கி விடை காண்பவர்கள் பொதுவாக வழக்கமான இடது மூளையைப் பயன்படுத்துங்கள் என்று கொள்ளலாம். ஆனால் ஏழு கூட்டல் 7 என்கிற வகையில் பதில் சொல்லக் கூடிய மனிதர்கள் படைப்பாற்றல் மிக்க வலது மூளை பயன்படுத்தும் மேதைகள். இவர்கள்தான் ஓவியம் சிற்பம் இசை விஞ்ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் ஆகவும் மாற்றி யோசிக்கும் திறன் மிக்கவர்களாகவும் எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். ஆனால் வகுப்பறையில் இவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெறுபவர்களாக இருப்பதால் இவர்கள் பள்ளி அளவில் புறக்கணிக்கப்பட்டு நல்ல கலைஞர்களாக வரவேண்டிய ஆற்றல் வராமல் தடுக்கப்படுகிறது. படைப்பாற்றல் மிக்க இந்த வகை மனிதர்கள் 70 சதவீத மதிப்பெண்களை தாண்டுவதில்லை. ஆனால் இடது மூளையை பயன்படுத்தும் மனிதர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றாலும்கூட வாழ்க்கையில் சிறு தோல்வியைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத மனிதர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் படைப்பாற்றல் மிக்கவர்கள் படிப்பில் தடுமாறுகிறாற மனிதர்கள் மிகச்சிறந்த ஆளுமைகளாக கலைஞர்களாக விஞ்ஞானிகளாக இன்றளவும் வாழும் பல மனிதர்களை பல ஆளுமைகளை நம்மால் பட்டியலிட முடியும்
இன்று பத்மபூஷண் விருது பெறுகி சுந்தர் பிச்சை முதல் ஆகச் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட காலம் சென்ற கி ராஜநாராயணன் போன்றவர்களெல்லாம் எட்டாம் வகுப்பை கூட தாண்டுவதற்கு சிரமப்பட்டு இருந்தாலும்கூட படைப்பாற்றலில் உலகமே வியக்கும் அளவிற்கு எழுத்துத் துறையிலும் விஞ்ஞானத் துறையிலும் சாதித்த வரலாறு இதற்கு சான்றாகும் எனவே கண்களால் படிப்பது காதுகளால் படிப்பது போன்ற படைப்பாற்றலை நமது ஐம்புலன்களையும் சமநிலையில் பயன்படுத்தி பத்திரிக்கை மற்றும் ஊடகம் புகைப்படம் என எல்லாத் துறையிலும் இந்த பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டால் இப்பொழுது கூட நம்மால் மிகப்பெரிய அளவில் கதை கவிதை கட்டுரைகளை உலக அளவில் எழுதி புகழ் பெற முடியும். அதற்கு வயதும் ஒரு தடை அல்ல.
சார்ஜா புத்தக கண்காட்சியின் புக்கிஷ் விருது பெற்றவரும் அந்நியர்கள் என்ற நாவலை படைத்ததற்காக ரூபாய் ஒரு லட்சம் பரிசு பெற்ற நாவலாசிரியர் திரு சுப்ரபாரதிமணியன் அவர்களை பாராட்டும் இந்த நிகழ்வில் எனக்கும் ஓவியம் குறித்து எனது பகிர்வை இங்கே பதிவு செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு அனைத்து இலக்கிய உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்”
நிகழ்ச்சியில் மக்கள் மாமன்றத்தைச்சார்ந்த நிர்வாகிகள் சத்ருக்கன், சிவகுமார்பிரபு மற்றும் பலர் பங்கு பெற்றனர் . கவிதை வாசிப்பில் து சோ பிரபாகர், அருணாசலம், நாதன் ரகுநாதன், ஒற்றைக்கை மாயாவி மனோகர் உட்பட பலர் பங்குபெற்றனர்.
சென்றாண்டுசிறந்த நாவலுக்கான “ அந்நியர்கள் “ நாவலுக்காக சென்னை எழுத்து அறக்கட்டளை வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சுப்ரபாரதிமணீயன் அவர்களுக்குப் பாராட்டுதெரிவிக்கப்பட்டது. அந்நியர்கள் நாவலை பள்ளி ஆசிரியரும் கவிஞருமான பொன் சண்முகசுந்தரம் அறிமுகப்படுத்திப் பேசினார். சமீபத்தில் சார்ஜா புத்தக்க் க்ண்காட்சியில் புக்கிஷ் விருது பெற்ற சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சத்ருக்கன் நன்றி கூறினார்
இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் பட்டறை ....
இகவிதை2022
கவிதை2022 தொகுப்புக்கு கவிதைகள் வரவேற்கப்படுகிறது