சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 4 நவம்பர், 2021
கொரானாவில் விளையும் இயற்கை மாற்றம் : கொ.மா.கோ.இளங்கோ
மனிதன்,தன் சுயநலத்திற்காகஇயற்கை அறிவியலைவெல்ல விரும்புகிறான். ஒவ்வொருமுறையும்இயற்கை, அவனுக்குச்சரியான பாடம் கற்பித்துக் கொண்டே இருக்கிறது. மனிதனின் பேராசைக்கு சாட்சியாக இப்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கிறது ஒரு பெருந்தொற்று. காட்டுயிர் மூலம் பரவிய கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரர்களுக்குஅவன் இரையாகிக்கொண்டிருக்கிறான். தன் தவறை உணர்ந்து இந்த மனிதகுலம்வருந்துகிறதாஎன்றால் இல்லவே இல்லை.
கொரானாதொற்று பாதிப்பு கடந்த ஓராண்டுகாலமாகஉலகம் முழுவதையும்அசைத்துப் பார்க்கிறது. கொரோனா தாக்குதல் மனித குலத்துக்குப்பேரிழப்பு.உள்நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சி, பன்னாட்டு வியாபார முடக்கம், பசி பட்டினி, வேலை இழந்து தவிக்கும்கோடிக்கணக்கானமனிதர்கள், மருத்துவச் சவால் என அதன் பாதிப்பு நீண்டு கொண்டே போகிறது. இன்றளவும்மருந்துகளோதடுப்பூசியையோகண்டுபிடிக்கப்படாததால் உலக நாடுகள் அனைத்தும் உயிர்பலிகொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும், உலக சுகாதார நிறுவனம் வைரஸ் பற்றிய புதுப்புது தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது.
சமகாலத்தில்நிலவும் இந்த தொற்று பாதிப்புகளைமையமாக வைத்து சுப்பிரபாரதிமணியன் அவர்கள் ‘கொரானாதடுப்பூசி’ என்ற புத்தகத்தை சிறுவர்களுக்காகக் கொண்டு வந்துள்ளார்.
புகழ், பால்,நிர்மலா,ஆர்த்தி,மீரான்,சரவணன், கீதா,சுந்தரவடிவேல், தேவகி,வியாகுல மேரி, குருமூர்த்தி அண்ணா ,கிரிஜா அக்கா போன்ற கதாபாத்திரங்கள்வழியாக அன்றாட நிகழ்வுகளை, சமூகப் பிணியைநேர்த்தியாகச்சித்தரித்துக்காட்டுகிறார். கணினி தொழில்நுட்பம் படித்துவிட்டு வேலை இழந்து நிற்கும் கிரிஜாஅக்காவின்மாடித்தோட்டம்,பெருநகரச்சிறுவர்களுக்குவிவசாயத்தைப் பற்றிய அறிவைப்புகட்டுகிறது. ‘வேளாண்மை மறந்த குடி வீணாகிப் போகும்’ என்ற உண்மையை சிறுவர்கள் நெஞ்சங்களில்விதைத்தே ஆகவேண்டும். நம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டும்.
பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய பிள்ளைகள், கடந்த ஆறு மாத காலமாக வீட்டில் முடங்கிக்கிடக்கிறார்கள். மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லை. தனி மனிதனை போலவே அரசும் அரசு இயந்திரம் கூட ஒரு கட்டத்தில் முடங்கிக் கிடந்தது. நாவல் முழுவதிலும்சிறுவர்கள் மத்தியில் நடக்கும் உரையாடல்கள் வழியே மக்கள் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கையையும் அரசியல் குழப்பங்களையும்எதார்த்தமாகசுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் தான் கொரானாகாய்ச்சலுக்கு காரணம், முருங்கை மரம் வீட்டு வாசலில் இருக்கக் கூடாது, வெயில் அடித்தால்காய்ச்சல் பரவாது, பாம்பு சட்டை உரிக்கிறது, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துபெருந்தொற்றைவீரட்டலாம்போன்ற மூடநம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார் .
கொரானாகாய்ச்சலுக்குசிகிச்சை என்ற பெயரில் லாபம் அடையும் தனியார் மருத்துவமனைகள், உயர்தர சிகிச்சை உயிர் பாதுகாப்பு என்று சாதாரண மக்களிடமிருந்துபணத்தைச்சுருட்டும்பகல்கொள்ளையைபடம்போட்டுகாட்டுகிறார் .
விடுமுறைநாட்களைக் கழிக்க சில ஆன்லைன்விளையாட்டுகளில் தங்களை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கும் சிறுவர்கள் காலப்போக்கில் அந்த விளையாட்டுக்குஅடிமையாகிறார்கள். இறுதியால் சிலர் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்ற செய்திகள் எந்த ஒரு அறிவார்ந்தசமூகத்தாலும்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏனிந்தப்பெற்றோர் தம் குழந்தைகளைகதைகள் வாசிப்பின் பக்கம் திசை திருப்பக்கூடாது என்ற கேள்விகள் நம்முன்எழத்தான் செய்கிறது.
கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் நடக்கும் மதத்திணிப்பு,சிறுவர்களுக்குவாசிக்கப்புத்தகம் தருகிறோம் என்ற பெயரில் சிந்தனைகளை மாற்றி மதபோதனை செய்தல், விலையில்லாமுகக்கவசம்பகிர்தலில்உள்ள அரசியல் குழப்பங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் அவலம், ஒரு வேளை உணவுக்காகசாதாரண மனிதன் படும் துன்பம் என எல்லாவற்றையும் ஆவணப்படுத்துவதின் மூலம் எதிர்காலத்தமிழ்ச்சிறுவர்களுக்கு உண்மை செய்திகளைக்கொண்டு செல்ல வேண்டும் அவர்கள் மனதில் மனிதாபிமானம் மேலோங்க வேண்டும் அன்பு நிலைக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் இந்த நாவலின் வழியாக வெட்ட வெளிச்சமாகிறது
இறுதியில் கியூபா நாட்டில் நடைமுறை உள்ள இயற்கை விவசாயம்,மாடிவீட்டுத் தோட்டம், காய்கறி செடிகள் வளர்ப்பு போன்றவற்றை விரும்பிப் பின்பற்றும் கிரிஜா அக்கா சிறுவர்களுக்குஅது பற்றி கூடுதல் விவரங்களைத் தருகிறார்
படித்த படிப்பை மறந்து, கிடைத்த வேலையை உதறி தள்ளி,கிராமத்து பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைக்கு போகலாம் என்ற எண்ணத்துடன் இருக்கும் கிரிஜா அக்கா போன்றவர்கள்சமுதாயமுன்னேற்றத்தில்சிறிதளவெனும் தோள் கொடுப்பார்கள் என்ற உண்மையை ‘கொரானா தடுப்பு ஊசி’வாசிக்கும் சிறுவர்கள் புரிந்து கொள்வார்கள்.
கொ.மா.கோ.இளங்கோ -10.10.2020