சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 4 நவம்பர், 2021

"தறி நாடா" -சுப்ரபாரதிமணியன் இலக்கிய வெளிச்சம் தரும் ஆன்மீக தரிசனத்திற்கு வாழ்க்கையில் மிக முக்ய பங்குண்டு. பொதுவாக புனை கதைகளோ, நவீன இலக்கிய படைப்புகளோ நிஜ வாழ்வின் அடிப்படையில் எழுதப்படுபவை என்றாலும் கொஞ்சம் கற்பனை கலந்த வசீகரத்தால் இன்னும் செழுமை பெறுகிறது. நெசவாளர்களின் வாழ்க்கை பற்றின இலக்கிய சித்தரிப்புகள் சங்க காலம் முதற்கொண்டு பல இடம் பெற்றுள்ளன. திரைப்படப் பாடல்களில் உடுமலை நாராயணகவியின் "சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்." பாடல் சட்டென எல்லோரின் நினைவிற்கும் வரக் கூடியதாகும். சோசலிச யதார்த்த வாதத்தை முன் நிறுத்தி எழுதப்பட்ட "பஞ்சும் பசியும்" என்ற தொ.மு.சி. ரகுநாதனின் நாவல் நெசவாளர்களின் போராட்டத்தையும் வாழ்க்கையையும் முன்னிறுத்திய தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கதாகும். நெசவாளர்களின் வாழ்க்கையை விரிவான அளவில் தமிழ் வாசகர்களுக்கு ஆழமில்லாமலிருந்தாலும் கொண்டு சென்றது. கும்பகோணத்தைச் சேர்ந்த எம்.ஷி. வெங்கட்ராமின் "வேள்வித் தீ" நாவலும் நெசவாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிடத்தக்க நாவலாகும். சௌராஷ்டிரிய வகுப்பைச் சார்ந்த எம்.வி. வெங்கட்ராம் சாதாரண நெசவாளர்களையும், கூலி நெசவு செய்பவர்களையும் அதில் உள்ள பலவீனமான பெண்கள் குறித்தும் அந்த நாவலில் எழுதியிருக்கிறார். நான் நெசவாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்றாலும் நெசவாளர் சமூகம் பற்றிய முழு நாவலை எழுதவில்லை என்ற குறை என்னுள் உறுத்திக் கொண்டிருந்தது சமீபத்தில் விலகியுள்ளது. இவ்வாண்டின் இறுதியில் வர இருக்கும் "தறி நாடா" என்ற நெசவாளர்களை மையமாக வைத்த நாவல் அந்த உறுத்தலை விலக்கியுள்ளது. இதுவரை எட்டு நாவல்கள், பதினைந்து சிறுகதைத் தொகுப்புகள் பயண நூல், திரைப்பட நூல்கள், இலக்கியக் கட்டுரைகள் என்று முப்பத்தைந்து நூல்களை வெளியிட்டிருக்கிறேன். இவற்றில் பல சிறுகதைகள் நெசவாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கக் கூடியவை. அவர்களின் வாழ்க்கையின் ஏதோ பகுதிகளை சிலவை சித்திகரிப்பவை. எனது 'மரபு' என்ற 1990ல் வெளிவந்த குறுநாவல் நெசவாளர்கள் போராட்ட காலத்தில் தங்கள் வறுமையைப் போக்க கேரளாவிற்கு அரிசி கடந்த முற்பட்ட வாழ்க்கை நிர்பந்தத்தை மையமாகக் கொண்டது. எனது சாயத்திரை, பிணங்களின் முகங்கள், தேனீர் இடைவேளை ஆகிய நாவல்கள் பின்னலாடை தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை என்றாலும் அவற்றின் சிறு பகுதிகளில் நெசவாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அதிலும் "ஓடும் நதி" என்ற நாவலின் ஒரு பகுதி கோவை மாவட்டத்தின் செகடந்தாளி கிராமத்து நெசவாளர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதாக அமைந்துள்ளது. "ஜீவ ஓட்டமே பிரச்னையாகி விடும்படி பலவாறாக அலைக்கழிக்கப்பட்டு எத்தனையோ விதமான கழிவுகளை கலக்கும் அபாயங்களைக் கடந்து புது வெள்ளமாகப் பெருகியோடும் பெண்ணெனும் நதியின் போக்கை" அந்த நாவலில் சித்தரித்திருந்தேன். துரித கதியில் நிகழும் வாழ்வின் சம்பவங்கள், நிதான கதியில் நடைபோடும் சலிப்பூட்டும் வாழ்க்கை, நன்னீர் சால்களாக சில நட்புகள், கழிவு நீர் பெருக்குகளாக சில உறவுகள். இந்த பயணத்தின் சித்தரிப்பில் கொங்கு கிராமத்துச் சூழல்களையும், நாகலாந்து மலைப்பிரதேசத்தின் மாசற்ற வாழ்க்கையையும், செகந்திராபாத் நகரத்தின் குப்பைகளையும், திருப்பூரின் கழிவுகளையும் நம் வாசிப்பறைக்குள் கொண்டு வருவதை பதிப்பாளரும் குறிப்பிட்டிருந்தார். இதில் திருப்பூர் வாழ்க்கையும், செகடந்தாளி கிராம வாழ்க்கையும் இயைந்த பகுதிகளில் நெசவாளர் வாழ்க்கை இடம் பெற்றிருக்கிறது. நான் தொண்ணூறின் ஆரம்பத்தில் எழுதிய நாவல்தான் "தறி நாடா". அப்போது நான் எபதிய அந்த நாவலின் கைப்பிரதி சமீபத்தில் எதேச்சையாகக் கிடைத்தது. அதை இவ்வாண்டின் இறுதியில் வெளிக் கொணரும் முயற்சியில் உள்ளேன். எழுபதுகளின் இடைப்பகுதியில் நெசவாளர்கள் தங்கள் கூலியை குறைத்ததை எதிர்த்து திருப்பூர் பகுதிகளிலும், கோவை மாவட்டத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்கள், சிறைக்குச் சென்றது, தங்கள் வாழ்க்கை திசை மாறிய ஆவலம், ஜவுளி உற்பத்தியாளர்களின் கடைகளுக்குத் தீ வைத்தது பின்னர் போராட்டம் ஓய்ந்து தொழில் சகஜ நிலைக்கு வந்ததன் பின்னணியில் நெசவாளர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ளேன். நெசவாளர்கள் பற்றிய முழு நாவலை எழுதாத உறுத்தலும் குறையும் இந்த நாவல் வெளியிட்டால் தீரும் என்ற ஆறுதல் எனக்குள் வந்திருக்கிறது. வில்லியம் பாக்னர் என்ற எழுத்தாளர் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். "ஓர் எழுத்தாளர் தான் எழுதுவதோடு ஒரு காலமும் திருப்தியடைவதில்லை. அவர் படைப்பது எப்போதுமே அவர் மனதில் நினைத்திருந்ததை எட்டுவது கிடையாது. சக எழுத்தாளர்களின் எழுத்தை ஒருவர் வென்றால் போதாது. அவரையே அவர் வெல்ல வேண்டும்" என்கிறார். எனக்குள் நானே சுய சமாதானம் கொள்ளவும் நெசவாளர் வாழ்க்கையை விரிவாகச் சொல்லவும் "தறி நாடா" நாவல் அமைந்திருக்கிறது என்பதில் காலத்தின் முன் நான் நிற்கிறேன். விளிம்பு நிலை மக்களான நெசவாளர்கள் வாழ்க்கை குறித்து என்னளவிலான பதிவு என்ற அளவில் திருப்தி கொள்கிறேன்.
சுப்ரபாரதிமணியனின் ” மறைந்து வரும் மரங்கள் - பி ஆர் நடராஜன் சுற்றுச்சூழல் நூல்களை எழுதுவதில் அக்கறை கொண்டவர் சுப்ரபாரதிமணியன். அவரின் சாயத்திரை, புத்துமண் போன்ற நாவல்கள் , சூழல் அறம், மேக வெடிப்பு, மூன்றாம் உலகப்போர் கட்டுரை நூலகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்கள் இதைச் சொல்லும். அந்த வரிசையில் இந்நூல் எழுதிய அனுபவத்தை இப்படிச் சொல்கிறார். : ” பசுமை விகடனின் “ ஒரு நாள் விவசாயி ” நிகழ்ச்சிக்கு மது ராமகிருஷ்ணனின் பொள்ளாச்சி இயற்கை வேளாண்மைப்பண்ணைக்குச் சென்றிருந்த போது காலை, மதியம் உணவு வகைகளை திருவோட்டில் வழங்கினார். நண்பர்கள் ஒரு விதகக்கூச்சத்தால் நெளிந்தனர். பிறகு திருவோடு மரத்தைக் காட்டியவர் இது அழிந்து வரும் மரம் என்றார். அதன்பின்னதான அவருடனான பேச்சில் அழிந்து வரும் மரங்கள் பட்டியலைத் தந்து எழுதச் சொன்னார். சில புத்தகங்கள், இணையதளச் செய்திகள் என் தேடலுக்கு உதவி செய்தன .” இதில் மறைந்து வரும் 30 மரங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.தாவரவியல் செய்திகள் , மருத்துவச்செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இலக்கிய ரீதியான தகவல்கள் இதன் சிறப்பம்சம். சுப்ரபாரதிமணீயன் ஒரு எழுத்தாளர் என்ற வகையில் பல நவீன கவிதைகளை ( நாஞ்சில் நாடன், கல்யாண்ஜி, தேவதேவன் ) மற்றும் சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டுவது வெகு சிறப்பு. உதாரணமாய் சில : இலந்தை பள்ளிப்பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் வெளியே இலந்தைப் பழம் வாங்கி சாப்பிடுவோம். இதன் வரலாறு , வகைகள் விரிவாய் உள்ளது . பூவரசு : பூவரசம் பீப்பி எங்கே? கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே? நடைபழக்கிய நடை வண்டி எங்கே? அரைஜான் கயிறு எங்கே? தென்னை ஓலை விசிறி எங்கே ?பனை ஓலை விசிறி எங்கே ? பல்லாங்குழி எங்கே? கிச்சு கிச்சு தாம்பாளம் எங்கே? தெல்லு விளையாட்டு எங்கே ? கோபிபிஸ் விளையாட்டு எங்கே? சாக்கு பந்தயம் எங்கே? கில்லி எங்கே? கோலிகுண்டு எங்கே? கோலிசோடா எங்கே? இப்படி எங்கே எங்கே என்று கேட்கிற கேள்விகள் இன்று நீண்டு கொண்டே இருக்கின்றன. நம் இலக்கியங்கள் அடையாளப் படுத்திய பாடல் பெற்ற சிறப்புடைய நானூற்றி சொச்சம் மரங்களில் எத்தனை மரங்களை இப்போது உள்ளன. உலகின் தற்போதைய மக்கள் தொகையான 7.2 பில்லியன் எதிர்வரும் 2050-ம் ஆண்டு 9.2 பில்லியனாக உயரும் எனக்கூறுகிறார்கள். நிலம், நீர், காற்று மற்றும் ஏனைய இயற்கை வளங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவதே காரணமாகும். புவி வெப்பமய மாதல், ஆற்றல் பற்றாக்குறை, அதிகப்படியான உணவுத்தேவை, பாதுகாப்பு, மண்வளம், காலநிலை மாற்றம், உயிரினங்களின் அழிவு மற்றும் பருவகால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் போன்றவை தற்கால சூழலின் சவால்களாக திகழ்கிறது.. 2016-ம் ஆண்டு உயர்ந்த அளவில் வெப்பநிலை உலகெங்கிலும் காணப்பட்டது..அனலால் அலறினோம்.80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆற்றல் தேவைகள் நிலக்கரியின் மூலம் பெறப்படுவதால் சூழல் மாசுபாடு அடைவதோடு புவி வெப்பமயமாதலுக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. இந்தியாவில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் உள்ளதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேற்கண்ட சூழல் சவால்களை எதிர்கொண்டு சூழல் மண்டலங்களைக் காப்பதற்கு பல்துறை ஆராய்ச்சி இன்றியமையாததாக விளங்குகிறது. மாசு இல்லாத உலகில் அன்று மனிதர்கள் வாழ்ந்தார்கள். நோய் பயம் இல்லாமல் நீண்ட ஆயுள் பெறமுடிந்தது. காற்று மண்டலத்தில் உள்ள விண்வெளியை வனங்கள் தூய்மைப்படுத்தின. தொழில் புரட்சியின் விளைவால் வனங்களின் அழிவு தொடங்கியது. நெருக்கமான நகரக்குடியிருப்புகள் தோன்றின. கிராமமாயிருந்த இடங்களில் மாநகரங்கள் தோன்றின. அபூர்வமான மரங்களூம் அழிந்து வருகின்றன என்கிறார். அதற்கான விழிப்புணர்ச்சியாய் மறைந்து வரும் சில மரங்கள் பற்றி இத்தொகுப்பு பேசுகிறது. மரங்கள் பற்றி அறிந்து கொள்ள நல்ல நூல் இது.மரங்களின் அவசியம் , அவற்றைப் பேண வேண்டிய அவசியம் பற்றி இந்நூல் சூழல் அக்கறையுடன் பேசுகிறது. ( ரூ 100 என்சிபிஎச் வெளியீடு , சென்னை ) ( பி ஆர் நடராஜன் , தொழிற்சங்கத் தலைவர், தமிழ்நாடு சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமீதி தலைவர் , திருப்பூர் )
கொரானாவில் விளையும் இயற்கை மாற்றம் : கொ.மா.கோ.இளங்கோ மனிதன்,தன் சுயநலத்திற்காகஇயற்கை அறிவியலைவெல்ல விரும்புகிறான். ஒவ்வொருமுறையும்இயற்கை, அவனுக்குச்சரியான பாடம் கற்பித்துக் கொண்டே இருக்கிறது. மனிதனின் பேராசைக்கு சாட்சியாக இப்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கிறது ஒரு பெருந்தொற்று. காட்டுயிர் மூலம் பரவிய கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரர்களுக்குஅவன் இரையாகிக்கொண்டிருக்கிறான். தன் தவறை உணர்ந்து இந்த மனிதகுலம்வருந்துகிறதாஎன்றால் இல்லவே இல்லை. கொரானாதொற்று பாதிப்பு கடந்த ஓராண்டுகாலமாகஉலகம் முழுவதையும்அசைத்துப் பார்க்கிறது. கொரோனா தாக்குதல் மனித குலத்துக்குப்பேரிழப்பு.உள்நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சி, பன்னாட்டு வியாபார முடக்கம், பசி பட்டினி, வேலை இழந்து தவிக்கும்கோடிக்கணக்கானமனிதர்கள், மருத்துவச் சவால் என அதன் பாதிப்பு நீண்டு கொண்டே போகிறது. இன்றளவும்மருந்துகளோதடுப்பூசியையோகண்டுபிடிக்கப்படாததால் உலக நாடுகள் அனைத்தும் உயிர்பலிகொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும், உலக சுகாதார நிறுவனம் வைரஸ் பற்றிய புதுப்புது தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. சமகாலத்தில்நிலவும் இந்த தொற்று பாதிப்புகளைமையமாக வைத்து சுப்பிரபாரதிமணியன் அவர்கள் ‘கொரானாதடுப்பூசி’ என்ற புத்தகத்தை சிறுவர்களுக்காகக் கொண்டு வந்துள்ளார். புகழ், பால்,நிர்மலா,ஆர்த்தி,மீரான்,சரவணன், கீதா,சுந்தரவடிவேல், தேவகி,வியாகுல மேரி, குருமூர்த்தி அண்ணா ,கிரிஜா அக்கா போன்ற கதாபாத்திரங்கள்வழியாக அன்றாட நிகழ்வுகளை, சமூகப் பிணியைநேர்த்தியாகச்சித்தரித்துக்காட்டுகிறார். கணினி தொழில்நுட்பம் படித்துவிட்டு வேலை இழந்து நிற்கும் கிரிஜாஅக்காவின்மாடித்தோட்டம்,பெருநகரச்சிறுவர்களுக்குவிவசாயத்தைப் பற்றிய அறிவைப்புகட்டுகிறது. ‘வேளாண்மை மறந்த குடி வீணாகிப் போகும்’ என்ற உண்மையை சிறுவர்கள் நெஞ்சங்களில்விதைத்தே ஆகவேண்டும். நம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டும். பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய பிள்ளைகள், கடந்த ஆறு மாத காலமாக வீட்டில் முடங்கிக்கிடக்கிறார்கள். மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லை. தனி மனிதனை போலவே அரசும் அரசு இயந்திரம் கூட ஒரு கட்டத்தில் முடங்கிக் கிடந்தது. நாவல் முழுவதிலும்சிறுவர்கள் மத்தியில் நடக்கும் உரையாடல்கள் வழியே மக்கள் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கையையும் அரசியல் குழப்பங்களையும்எதார்த்தமாகசுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் தான் கொரானாகாய்ச்சலுக்கு காரணம், முருங்கை மரம் வீட்டு வாசலில் இருக்கக் கூடாது, வெயில் அடித்தால்காய்ச்சல் பரவாது, பாம்பு சட்டை உரிக்கிறது, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துபெருந்தொற்றைவீரட்டலாம்போன்ற மூடநம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார் . கொரானாகாய்ச்சலுக்குசிகிச்சை என்ற பெயரில் லாபம் அடையும் தனியார் மருத்துவமனைகள், உயர்தர சிகிச்சை உயிர் பாதுகாப்பு என்று சாதாரண மக்களிடமிருந்துபணத்தைச்சுருட்டும்பகல்கொள்ளையைபடம்போட்டுகாட்டுகிறார் . விடுமுறைநாட்களைக் கழிக்க சில ஆன்லைன்விளையாட்டுகளில் தங்களை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கும் சிறுவர்கள் காலப்போக்கில் அந்த விளையாட்டுக்குஅடிமையாகிறார்கள். இறுதியால் சிலர் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்ற செய்திகள் எந்த ஒரு அறிவார்ந்தசமூகத்தாலும்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏனிந்தப்பெற்றோர் தம் குழந்தைகளைகதைகள் வாசிப்பின் பக்கம் திசை திருப்பக்கூடாது என்ற கேள்விகள் நம்முன்எழத்தான் செய்கிறது. கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் நடக்கும் மதத்திணிப்பு,சிறுவர்களுக்குவாசிக்கப்புத்தகம் தருகிறோம் என்ற பெயரில் சிந்தனைகளை மாற்றி மதபோதனை செய்தல், விலையில்லாமுகக்கவசம்பகிர்தலில்உள்ள அரசியல் குழப்பங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் அவலம், ஒரு வேளை உணவுக்காகசாதாரண மனிதன் படும் துன்பம் என எல்லாவற்றையும் ஆவணப்படுத்துவதின் மூலம் எதிர்காலத்தமிழ்ச்சிறுவர்களுக்கு உண்மை செய்திகளைக்கொண்டு செல்ல வேண்டும் அவர்கள் மனதில் மனிதாபிமானம் மேலோங்க வேண்டும் அன்பு நிலைக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் இந்த நாவலின் வழியாக வெட்ட வெளிச்சமாகிறது இறுதியில் கியூபா நாட்டில் நடைமுறை உள்ள இயற்கை விவசாயம்,மாடிவீட்டுத் தோட்டம், காய்கறி செடிகள் வளர்ப்பு போன்றவற்றை விரும்பிப் பின்பற்றும் கிரிஜா அக்கா சிறுவர்களுக்குஅது பற்றி கூடுதல் விவரங்களைத் தருகிறார் படித்த படிப்பை மறந்து, கிடைத்த வேலையை உதறி தள்ளி,கிராமத்து பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைக்கு போகலாம் என்ற எண்ணத்துடன் இருக்கும் கிரிஜா அக்கா போன்றவர்கள்சமுதாயமுன்னேற்றத்தில்சிறிதளவெனும் தோள் கொடுப்பார்கள் என்ற உண்மையை ‘கொரானா தடுப்பு ஊசி’வாசிக்கும் சிறுவர்கள் புரிந்து கொள்வார்கள். கொ.மா.கோ.இளங்கோ -10.10.2020
சிறுவர்களுக்குப் பிடித்தமான தடுப்பூசியிது...சுப்ரபாரதிமணியனின் சிறுவர் நாவல் பற்றி - மு.முருகேஷ் குழந்தைகளின் மனவுலகம் கதைகளால் ஆனது. கற்பனை வளமும் சிந்தனைத் திறனும் குழந்தைகளின் கதையுலகைக் கட்டமைக்கின்றன. முதலில் கேள்விகளிலிருந்தே எதையும் கேட்கத் தொடங்குகிறார்கள் குழந்தைகள். தன்னருகே இருக்கும் சக உயிரிடம் (அது மனிதராக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை) பேசுவதென்றால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அருகில் மனிதர்கள் இல்லாவிட்டாலென்ன... கையில் வைத்திருக்கும் பர்பி பொம்மையொன்று போதும், குழந்தைகள் பேசுவதற்கு. யாருமில்லா சூழலிலும் பேசிக்கொண்டிருக்க குழந்தைகளால் முடியும். பல நேரங்களில் அவர்களுக்குப் பதில்கள்கூட தேவையில்லை. அவர்கள் பேசுவதை யாராவது கேட்டுக் கொண்டிருந்தால்கூடப் போதும். எதுவும் பேசாமல் வெறுமனே ‘சும்மா’ உட்கார்ந்திருக்க குழந்தைகள் ஒன்றும் பொம்மைகள் அல்லவே! குழந்தைகள் பேசுகிறார்கள் என்றால் சிந்திக்கிறார்கள் என்று அர்த்தம். கேள்விகள் கேட்கிறார்கள் என்றால் கற்றுக் கொள்கிறார்கள் என்று பொருள். எந்தக் குழந்தைக்கும் யாரும் தாய்மொழியைப் பேசுவதற்கு கற்றுத் தருவதேயில்லை. நாம் பேசுவதைக் கவனிக்கும் குழந்தை, அதுவாகவே பேசக் கற்றுக்கொள்கிறது. தட்டுத் தடுமாறி குழந்தைகள் பேசப் பேச, ஒவ்வொரு நாளும் புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். எப்போதும் கற்றுக்கொள்வதில் குழந்தைகள் பெரியவர்களை விடவும் வேகமானவர்கள், ஆர்வமானவர்கள். நாம் தான் வளர வளர கற்றுக்கொள்வதிலிருந்து மெல்ல விலகி விடுகின்றோம். ‘நாம் வளர்ந்தவர்கள், நமக்கு எல்லாம் தெரியும்’ என்கிற மனநிலை கற்றுக்கொள்வதற்குப் பெரும் தடையாக இருந்து விடுகிறது. குழந்தைகள் இருக்குமிடத்தில் குதூகலத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆடுவதும், ஓடுவதும், குதிப்பதும், பேசுவதும், கேட்பதும் குழந்தைகளுக்கே உரித்தான இயல்பான செயல்பாடுகள். ஒரே இடத்தில் உட்கார்ந்தேயிருக்கும் குழந்தைகள் ‘சவலைப்பிள்ளை’களாகி விடுவார்கள். கால் இடறிப் பள்ளத்தில் விழுந்தெழும் குழந்தைகளே, அடுத்த முறை அந்தப் பள்ளத்தில் விழாதிருக்க கற்றுக் கொள்கிறார்கள். ‘இடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள் விழுந்து எழட்டும்... குழந்தைகள்’ - என்றெழுதிய கவிஞனை நிச்சயம் குழந்தைகள் கொண்டாடவே செய்வார்கள். “ஏம்பா, இந்தக் குருவிகளெல்லாம் எங்கேயிருந்து வந்துச்சு..?” “ஏம்மா, நெருப்பைத் தொட்டா சுடுது..?” “தூங்கும்போது மட்டும் ஏன் காது கேட்க மாட்டேங்கிது..?” என்று குழந்தைகள் கேட்கும் பல கோடி கேள்விகளுக்கு நமக்குப் பதிலே தெரியாது. ஆனாலும் சாமர்த்தியமாய், “சும்மா தொண தொணன்னு பேசாம, அமைதியா கவனி..!” என்று குழந்தைகளின் வாயை அடக்கி விடுகின்றோம். குழந்தைகளைக் கல்வி கற்பதற்காக நாம் அனுப்பும் பள்ளிக்கூடங்களும்கூட இதையே தான் சொல்கின்றன. “கையைக் கட்டு; வாயைப் பொத்து..!” தன்போக்கில் இயல்பாய், வெகு சுதந்திரமாய்ப் பேசிக் கொண்டிருந்த குழந்தை, பள்ளியில் சேர்த்த சில தினங்களிலேயே வாய் மூடி மெளனியாவதை எந்த எதிர்விளைவுமின்றிச் சகித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தை என்ன செய்வது..? குழந்தைகளோடு உரையாடவும், குழந்தைகள் நம்மிடம் நெருங்கி வரவும் நமக்கு கதைகள் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் குறுக்கீடின்றிக் கேட்பதற்கு பெரிய காதுகளும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தை மனம் வேண்டும். குழந்தைகளோடு பேசவும், பழகவும், குழந்தைகளுக்கென்று எழுதவும் குழந்தை மனம் வாய்க்க வேண்டும். அவ்வாறான மனம் படைத்த மனிதர்களாலேயே குழந்தை இலக்கியங்களைப் படைக்க முடியும். நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே, 1847-ஆம் ஆண்டு வங்க எழுத்தாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் எழுதிய ‘வேதாள பஞ்சவிம்ஷதி’ எனும் நூலே குழந்தைகளுக்கான முதல் இந்திய படைப்பென அறியப்பட்டுள்ளது. இவர் குழந்தைகளுக்கென பல கதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் தந்துள்ளார். உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலரும் குழந்தைகளுக்கென்று எழுதியிருக்கிறார்கள். ‘போரும் அமைதியும்’ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், குழந்தைகளுக்காகவும் பல கதைகளை எழுதியுள்ளார். நம் நாட்டின் தேசிய கீதத்தை எழுதிய இரவீந்திர நாத் தாகூர், மகாகவி பாரதியார் என பலரும் குழந்தைகளுக்காகவும் எழுதி இருக்கின்றனர். ’குழந்தைக் கவிஞர்’ என அழைக்கப்பட்ட அழ.வள்ளியப்பாவால் 1950-இல் தொடங்கப்பட்ட ‘குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்’, குழந்தை இலக்கியப் படைப்புகள் மிகுதியாக வெளிவர வழி வகுத்தது. ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தி, சிறந்த சிறுவர் பாடல்கள், கதைகள், நாவல்கள், நாடகங்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெளரவித்தது. கையெழுத்துப் படிகளைப் பெற்று, நூல்களாக்கி வெளியிட்டது. ஆர்.வி என்றழைக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் சிறார்களுக்காகப் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அழ.வள்ளியப்பா, பெ.தூரன், வாண்டுமாமா, ரேவதி, தமிழ்வாணன், பூவண்ணன், கொ.மா.கோதண்டம், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம். ஆயிஷா இரா.நடராஜன் எனப் பலரும் சிறுவர்களுக்கான காத்திரமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். இன்றைக்கு தமிழில் சிறுவர் இலக்கியம் என்பது போதிய அளவில் எழுதப்படவில்லை என்பதே சமூக எதார்த்தமாக உள்ளது. சிறுவர்களுக்கென்றே வெளியான இதழ்கள் பலவும் நின்றுவிட்ட காலமிது. சிறுவர்களுக்கு எழுதுவதென்பது, தன்னைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடும் என்கிற எண்ணமும் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் பல தமிழ் எழுத்தாளர்களின் மனதில் உறைந்துபோய் கிடக்கிறது. இந்தச் சூழலிலிருந்து மீண்டு, சிறுவர் இலக்கியங்களைப் படைத்துவரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் படைப்பிலக்கியத் தளத்தில் தனது காத்திரமான பங்களிப்பினைத் தொடர்ந்து ஆற்றி வருபவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைப்படம் என பல விரிந்த தளத்தில் எழுதிவரும் இவர், சிறுவர் இலக்கியப் படைப்புகளையும் ஆர்வத்தோடு எழுதி வருகிறார். இவர் எழுதிய ‘சாயத்திரை’ நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசினை வென்றதோடு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த கதைகளுக்கு வழங்கப்படும் ‘கதா விருதினை’யும் பெற்றுள்ளார். எழுதுவதோடு நின்றுவிடாமல் களத்திலும் செயல்படும் ஆர்வமிக்க சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கி வருகிறார். திருப்பூரிலுள்ள குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்புப் பணியிலும், பெண்களைச் சுரண்டும் சுமங்கலித் திட்டத்தை ஒழிப்பதிலும், நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். எழுபதுக்கும் மேற்பட்ட பல்துறை நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ‘கனவு’ எனும் இலக்கிய இதழையும் 35 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். எய்டு-இந்தியா குழந்தைகளுக்காக வெளியிட்ட சிறு நூல்களில் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘பள்ளி மறுதிறப்பு’ எனும் கதை நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது. சமீபத்தில் சாகித்திய அகாதெமிக்காக நான் தொகுத்த ‘சிறுவர் நாடகக் களஞ்சியம்’ தொகுப்பில், இந்தக் கதையின் நாடக வடிவத்தைத்தான் நான் பயன்படுத்திக் கொண்டேன். சமூக அக்கறையும், சமூக அநீதிகளுக்கு எதிரான கோபமும் சேர்ந்த கலவையே சுப்ரபாரதிமணியனின் எழுத்துகள். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லோரும் ஊரடங்கினால் வீடுகளுக்குள் அடைப்பட்டுக் கிடந்தோம். கோவிட் - 19 வைரஸ் தொற்றின் கோரத் தாண்டவம் பல்லாயிரம் உயிர்களைச் சூறையாடிச் சென்றுள்ளது. தற்போதுதான் ஊரடங்கிலிருந்து ஒவ்வொன்றாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காலச்சூழலை அப்படியே நம் மனதில் நிறுத்தும் வண்ணமாக ;கொரோனா தடுப்பூசி’ எனும் சிறார்களுக்கான நாவலாகத் தந்துள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். இந்த நாவலை கையிலெடுத்தால் போதும்; கடகடவென எழுத்தோட்டம் நம்மைத் தள்ளிக்கொண்டு போகிறது... தெளிந்த நீரோடையாக. சிறுவர்களுக்கே பிடித்த முழுக்க முழுக்க உரையாடல் போக்கிலான இந்த நாவலில் எல்லாவற்றையும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்... இல்லையில்லை... இந்த நாவலில் வரும் குழந்தைகள். பேசிக்கொண்டேயிருப்பதால் இந்த உயிர்ப்பான குழந்தைகள் நமக்கும் பிடித்துப் போகிறார்கள். “மாடியிலே போய் கைத்தட்டுறாங்க. மாடி இல்லாதவங்க என்ன செய்வாங்க..?” என்கிற அர்த்தம் செறிந்த கேள்விகளோடு தொடங்கும் நாவலில் வரும் புகழ், செல்வி, மீரான், பால், ஆர்த்தி, நிர்மலா என எல்லாக் குழந்தைகளும் நம் வீட்டுக் குழந்தைகளைப் போல நம் மனசுக்கு மிக நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே நிஜமான கதாபாத்திரமான திருப்பூர் பாண்டியன் நகரில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் கிரிஜா அக்காவும் வருகிறார். குழந்தைகளின் கற்றலுக்குத் தடைகள் இல்லாத போது, அவர்கள் தங்களை எந்தச் சூழலிலும் வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்பதை நாவலின் எல்லா இடங்களிலும் நடைபெறுகிற உரையாடல்கள் வழி உணர்த்தியுள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். முகக்கவசம் போடணும், ஏ.சி.யினால் வைரஸ் தொற்று சீக்கிரமாகப் பரவும், கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவணும், ஊரடங்கினால் இயற்கைச் சீரழிவு குறைந்துபோனது, மாடித் தோட்டத்தின் பயன்கள், பாம்பு சட்டையுரித்தல், மத நல்லிணக்கம் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. இடையிடையே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சாட்டைச் சொடுக்குகளும் சரியான இடத்தில் கையாளப்பட்டுள்ளன. கரோனாவின் துயரம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மத்திய - மாநில ஆட்சியாளர்கள் துயருறும் மக்களுக்காக எந்தப் பயனளிக்கும் திட்டங்களையும் இதுவரை அறிவிக்கவில்லை. பெருமுதலாளிகளின் கல்லாக்களை நிரப்புவது பற்றியே கவலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள். 2020 ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மக்கள் அனைவருக்கும் தலா 2 விலையில்லா முகக் கவசங்களை வழங்குவதாக முடிவெடுத்தது தமிழக அரசு. முதல்கட்டமாக, ஜூலை-27-ஆம் தேதி தமிழக முதல்வர் விலையில்லா முகக் கவசங்களை வழங்கி, இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதனை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம்வரை (அக்டோபர்-1) இன்னும் பல கோடி பேர்களுக்கு விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்படவில்லை. இவர்கள் வழங்குவதற்குள் கரோனாவே விடைபெற்றுச் சென்றுவிடும் போலும். இதைப் பற்றிய கேள்வியும் இந்த நாவலினூடே எழுப்பப்பட்டுள்ளது. எங்கெங்கெல்லாமோ சுற்றித் திரியும் உரையாடல், ‘அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேண்டும்’ என்கிற நல்லெண்ணத்துடன் முடிகிறது. இந்த நேரத்தில், கரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும் வீட்டில் இல்லாமல், குழந்தைகளுக்கான கல்விப் பணியை வீடு தேடிச்சென்று செய்த பல நூறு ஆசிரியர்களின் அக்கறையான கல்விப் பணியை நெகிழ்ச்சியோடு நினைவுகூற வைக்கிறது. ’கொரானா தடுப்பூசி’ சிறுவர் நாவல், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான தடுப்பூசி. சிறுவர்களுக்கு மட்டுமல்ல; மூட நம்பிக்கைகள் சமூகத் தொற்றாகப் பரவாமலிருக்க நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையறிந்த தடுப்பூசி. வாருங்கள்... நாம் அனைவருமே வாசிக்கலாம். சிறப்பானதொரு சிறுவர் நாவலைத் தந்திருக்கும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு என் அன்பின் தோழமை கனிந்த வாழ்த்துகள். இன்னும் இன்னுமாய் சிறுவர் இலக்கியங்களைப் படையுங்கள். தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்கு உங்கள் எழுத்துகளும் படிக்கட்டுகளாக அமையட்டும். 1.10.2020 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ மு.முருகேஷ் முதுநிலை உதவி ஆசிரியர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், 124, வாலாசா சாலை, சென்னை – 600 002. செல் : 94443 60421 / 74013 29364 மின்னஞ்சல் : haiku.mumu@gmail.com
காகிதப்பூ : சீனிவாசன் நடராஜன் நாவல் / சுப்ரபாரதிமணியன் ரஜினியாகவே மாறும் ரஜினி ரசிகனும் ஓவியத்தொன்மமாக மாற முயற்சிக்கும் இலக்கிய, ஓவிய ரசிகனும் இந்த நாவலில் முதன்மைக்கதாபாத்திரங்கள். ரஜினி காந்த் போல் ஸ்டிலாக எரியும் சிகரெட்டை தூக்கி எறிந்து வீடு தீப்பற்றிக்கொள்வதும் மரம் வெட்டி கட்சி விவகாரகளுக்காக அதை செலவு செய்வதும் உட்ச பட்சமா செயல்கள். இந்த வகையில் .ரஜினி ரசிகனுக்கு ரஜினி ஒரு எழுத்தாளன் மூலமாகவே அறிமுகம் ஆகிறான் . எழுத்தாளனின் பாக்யம் ( பாலகுமாரன் அந்த எழுத்தாளர்) ரஜினி கட்சி ஆரம்பிக்காத போது உயிரை மாயத்துக்கொள்கிறான் முதலாமவன். இரண்டாமவன் வாழ்க்கையை ரசித்து தொடர்கிறான் வாழ்க்கையின் அபத்தங்களைச் சுட்டிக்காடியபடி. இதில் ஆசிரியரின் சுய சரிதம் சார்ந்தக் குறிப்புகள் முக்கியமானவை. புனைவு இல்லாதத் தன்மையுடன் சரித்திர , அரசியல் விசயங்களின் காலப் பதிவாக இருக்கிறது.. ஓவியனின் அழகியல் பரிபாஷை ( பக்கம் 101 ) மொழி மற்றும் கலை வாழ்வு ( பக்கம் 109 ) குறித்த குறிப்புகள் நல்ல அலைசலாகவும் பல இடங்கள் அமைகின்றன ஓவியர்களின் வாழ்க்கையை சில நாவல்கள் பதிவு செய்திருக்கின்றன.இந்நாவலும் ஓவியமாக உருவெடுக்கிறவனின் பரிமாணமும் அதன் நோக்கமுமாக வெளிப்பட்டிருக்கிறது ரங்குலாகலா போன்ற தெலுங்குத் திரைப்படங்களில் காட்டப்படும் வெகுஜன ரசனை ஓவியன், நவீன ஓவியன் இருவருக்குமான சமகால , வேறுபட்ட உலகங்கள் பற்றிய அம்சங்கள் தமிழில் சொல்லப்படவில்லை இதுவரை காகிதப்பூ தலைப்பு நல்ல குறியீடு. ரஜினி ரசிகனுக்கு மிகவும் பொருத்தம் .வாழ்க்கை பற்றிய அலசலின் போதும் ( பக்கம் 20 ) ஐரோப்பிய கலைப்பாடத்தில் ( பக்கம் 43) மற்றும் ரஜினி ரசிகன் காகிதப்பூ அலங்காரம் செய்கிற தொழில்காரனாக மாறி மணம் வீசாமலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்வது தலைப்பை நியாயப்படுத்தும் நல்ல சமாச்சாரங்கள் பழையகாலத்து ரஷ்ய புத்தகங்களை ஞாபகப்படுத்தும் முழுப்பக்க உள் ஓவியங்கள் , கெட்டியானத் தாள், தயாரிப்பில் அக்கறை இதுவெல்லாம் இந்த நூலுக்கு கனம் சேர்க்கிறது. பின்நவீனத்துவ மொழியில் அக்கறை கொண்ட ஆசிரியரின் இந்த நாவல் நேர் கோட்டுத் தன்மையுடையதே. சமகால விசயங்களை படைப்பு மூலம் அலசும் நாவல் இது . ( ரூ 250 எதிர் பதிப்பகம், பொள்ளாச்சி வெளியீடு ) சுப்ரபாரதிமணியன் 2018 ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டுக்கு இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் சார்பாக சென்ற அனுபவம்
Kanavu 101 issue சீனிவாசன் நடராஜன் சிந்தனா முறையின் வெளிப்பாடு – புதினம். மிக நீண்ட பாரம்பரியம் உடைய திராவிடமொழிக் குடும்பத்தில் 'தமிழ்' தொன்மையானது. நமக்கு மிக சுலபமாக கையாளக்கூடியவடிவத்தில்வாசகனுக்கானவிஷயங்களைஎளிமையாகச்சொல்லக்கூடிய வகையில் ஓர் இலக்கிய வடிவம், வகைப்பாடு நமக்குத் தேவையாக இருந்திருக்கிறது.அதன் பொருட்டே நாம் மொழியில் சில மாற்றங்களை அல்லது சில மீறல்களை காலம் காலமாகபரிசோதித்துப் பார்த்திருக்கிறோம். அப்படி தொடர்ச்சியாகசெய்து பார்க்கப்பட்ட வடிவம், உரைநடை. மீறல்களிலிருந்து நாம் புதிய வகைப்பாடுகளைக் கண்டடைந்திருக்கிறோம் அல்லது நமது வசதிகளுக்காக மொழியை எளிமையாகஎழுதிப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளலாம்.தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் நமக்கு நாவல் வகைமை கிடைத்திருக்கிறது. நாவல்குறித்துத் தேடிப் பார்க்கலாம். 'நாவல்லஸ்' என்ற லத்தீன் சொல்லிலிருந்து விரிந்த வடிவமே 'நாவல்' எனச் சொல்கிறார்கள். நாம்,'நாவல்' என்று தொடங்கி 'நவீனம்' எனவும் பின்னர் 'புதினம்' என்றும் அழைக்கிறோம். பதினாறாம்நூற்றாண்டிலிருந்து'நாவல்'எனும்சொல்பழக்கத்தில்இருக்கிறது.கொலம்பியாகலைக்களஞ்சியத்தில்இதற்கானக்குறிப்பு வருகிறது. 'உரைநடையில்அமைந்தகதை'என்பதுஇதன்பொருள்.'உணர்ச்சி,எண்ணம்,செயல்,அவற்றைவிளக்கிஎடுத்துரைக்கும்தன்மையைக்கொண்டஉரைநடையில்அமைந்தநீண்டகதை'என்றும்சொல்கிறார்கள். 1876-ஆம் ஆண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்' தமிழில் வெளிவந்த முதல் நாவலாகக் கருதப்படுகிறது. இராஜம் ஐயர் எழுதிய 'கமலாம்பாள் சரித்திரம்', மாதவையா எழுதிய ''பத்மாவதி சரித்திரம்' இரண்டும் அதன் சம காலத்தவை. 1890-ஆம்ஆண்டுசித்திலெப்பைமரைக்காயர்எழுதிய'அசன்பேசரித்திரம்'இலங்கையில்வெளிவந்தமுதல்நாவலாகச் சொல்லப்படுகிறது. எம்.வி.வெங்கட்ராமனின் 'உயிரின் யாத்திரை' குறுநாவல் வகைக்கு ஒரு சான்றாகச் சொல்லலாம். வை.மு.கோதைநாயகி அம்மாள் பெண் நாவலாசிரியர்களில் முதன்மையானவர். ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றவர்கள் ஆங்கில துப்பறியும் நாவல்களைத் தழுவி துவக்ககாலத்தில்தமிழில் நாவல்கள் எழுதினார்கள். அந்த காலகட்டத்தில், கல்கி, இராஜம்கிருஷ்ணன், அகிலன் போன்றவர்கள் சமூக நாவல்களை எழுதினார்கள். மு.வரதராசனாரின் 'கரித்துண்டு' நாவலும் அவ்வகையைச் சாரும். க.நா.சு(கந்தாடை நாராயணன் சுப்பிரமணியம்), சிதம்பர சுப்ரமணியம், எம்.வி.வெங்கட்ராமன், சி.சு.செல்லப்பா, தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் தீவிர நாவல் செயல்பாட்டாளர்களாக முன் நிறுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு தமிழ் நாவல் வகைமையில் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் புதியவகைமையை உருவாக்கி தமிழ் நாவல்களுக்குத் தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் 'சுந்தர ராமசாமி' என்று சொல்லலாம். சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள், குழந்தைகள் ஆண்கள் பெண்கள் இரண்டும் தமிழின் முதன்மையான பரிசோதனை நாவல்கள் என்று போற்றப்படுகின்றன. வட்டாரம் சார்ந்து எழுதப்படும் புதினங்கள் தற்காலத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை அவர்களுடைய வட்டார மொழியில் எழுதப்படுவது என்று இவ்வகைமையை எடுத்துக்கொள்ளலாம். நாகம்மாள், அறுவடை இவ்விரண்டு நாவல்களும் ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய வட்டார நாவல்களுக்கு உதாரணமாகும். தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன், தோட்டியின் மகன் போன்ற நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.மொழிபெயர்ப்புநாவல்களுக்குஇதை உதாரணமாகச்சொல்லலாம். அதைப்போல பிறமொழி நாவல்களைத் தழுவி எழுதப்படும் நாவல்களுக்கு உதாரணமாக மறைமலை அடிகள் எழுதிய 'குமுதவல்லி' அல்லது 'நாகநாட்டரசி' எனும் நாவலைச் சொல்லலாம். ( இவ்விடத்தில் தழுவல் நாவல்கள் வேறு மொழிபெயர்ப்பு நாவல்கள் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.) தமிழ் நாவலாசிரியர்களில் தி.ஜானகிராமன் தனித்து குறிப்பிடத்தக்கவர். அவருடைய மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, செம்பருத்தி போன்றவை இன்றும் கொண்டாடப்படுகின்றன. மேலும் இவை, உளவியல் சிக்கல்களை கலாச்சார அடையாளங்களோடு அழகியல் மிளிரும் வகையில் எழுதப்பட்ட நாவல்கள் ஆகும். லா.ச.ராமாமிர்தத்தின்'அபிதா' நாவல் நனவோடை நாவல் அமைப்பிற்கு சிறந்த உதாரணமாகும். தமிழில் நாவல் வகைமை தோன்றியதற்கும் அயல் மொழியில் நாவல் வகைமை தோன்றியதற்கும் இரண்டு வேறுபாடுகளைப் பொருத்திப் பார்க்கலாம். தமிழ் உரைநடை தோன்றியதற்கு செய்யுள் வடிவம் பண்டிதமொழியாகஇருந்ததுஒருகாரணம்.தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அதில் செய்யுள்களும் கவிதைகளும் இருந்தன. 1800 கள் வரையிலும் அது மாதிரியான செய்யுள் வடிவமே இருந்தது என நாம் அறிவோம். அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை போன்றவை இல்லாமல் மக்கள் மொழியில் எழுதுவதும் வாசகர்கள் அதை புரிந்து கொள்வதும் என்ற இயல்பில் கையாளப்பட்ட வடிவம் உரைநடை என்றும், அயல் மொழியில் நாடகத்தின் வடிவத்தில் ஏற்பட்ட சலிப்புத்தன்மை அல்லது புதிய வடிவத்தை தோற்றுவிக்க நினைத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதார்த்தம், மாய எதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் அதன் பண்புகள், வகை பிரித்துப் பார்க்கப்படுகின்றன. இராஜம் கிருஷ்ணனின் 'குறிஞ்சித் தேன்' மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அவர்கள் மொழியிலேயே பேசக் கூடியது. 'கரிப்பு மணிகள்' தூத்துக்குடி அருகில் வாழும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. சு.தமிழ்ச்செல்வியின் 'அளம்'அப்படியான கீழத் தஞ்சையின் உப்பள தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசக்கூடிய ஒருநாவலே. கீழத்தஞ்சைவட்டாரம் சார்ந்த'நல்லநிலம்'பாவைச்சந்திரன் எழுதியது. சி.எம்.முத்து, கார்ல் மார்க்ஸ் கணபதிபோன்றவர்களும்தஞ்சைவட்டார மொழியிலேயே எழுதுகிறார்கள். இதை நான் மைக்ரோஅல்லதுநானோவெர்நாகுலர்என்று வகைப் பிரிக்கிறேன். ஒரு வட்டாரத்தின் உள்ளே இருக்கக்கூடிய மிக குறிப்பிட்ட ஒரு பகுதியைச் சார்ந்த ஒரு வழக்கு மொழி இருக்கும். அம்மொழியிலேயே நாவலின் வடிவமும் அதன் போக்கும் இருந்தால் அதை நாம் நானோ அல்லது மைக்ரோ வெர்னாகுலர் என்று குறிப்பிடுகிறோம். உதாரணமாக,கீழை.கதிர்வேலன்பேசும்பொழுது நாம் கவனித்து கேட்டிருந்தால், அது தஞ்சை வட்டாரத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்துநாகப்பட்டினத்திற்குள் இருக்கக்கூடிய பேச்சுமொழியாக இருப்பதைபுரிந்துகொள்ளலாம். கீழையூர் மற்றும்சில ஊர்களில் வழக்கில் இருக்கக்கூடிய மொழியில் அவர் பேசுவதுநாகப்பட்டினத்தில்இருந்து அவர் சிங்கப்பூரில் குடியேறி பலவருடங்கள்ஆன போதும்வட்டார மொழிஅவரிடம் மாறிவிடவில்லை. அந்தக் குறிப்பிட்ட வட்டார வழக்கு, தஞ்சாவூர் என்றவட்டாரத்திற்குள்ளேஇருக்க கூடியகீழத்தஞ்சைவட்டாரத்தினுடைய தனித்த அடையாளம். இதை தஞ்சாவூர்பகுதிகளில் வாழ்பவர்கள்சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். கும்பகோணம் அருகில் அந்தபேச்சுவழக்குவேறாகவும் தஞ்சாவூர் பகுதிகளில் வேறாகவும் பட்டுக்கோட்டை அறந்தாங்கி புதுக்கோட்டை பகுதிகளில் வேறாகவும் இருக்கும். திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம் பகுதிகளில் அவ்வழக்கு மொழிவேறாக இருக்கும். எனவே தஞ்சை என்பதை ஒரு வட்டாரம் என்று வைத்துக்கொண்டால் அதற்குள்ளேயே தனித்தனியான வழக்கு மொழிகள் வெவ்வேறாக இருக்கும். அதையே நாம் நாவல்களுக்கும் ஒரு புதிய வகைப்பாடாக சொல்ல வேண்டி இருக்கிறது. இது எல்லா வட்டார மொழிகளுக்கும் பொருந்தும். உதாரணமாக, கொங்கு வட்டாரத்தில் சண்முகசுந்தரம் எழுதி இருந்தாலும் அதனை பெருமாள்முருகன் வெரோன்றாக பெரிதும் கையாள்கிறார். கேரளா என்று நாம் எடுத்துக் கொண்டால் வட கேரளம் தென் கேரளம் என ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை உணர முடியும். ஒரிசாவிலும் இதை நாம் பார்க்கலாம். இதனை ஒருவகைமாதிரியாக முன் வைக்கிறோம். பொன்நீலனின்'கரிசல்', கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்', ஹெப்சிபா ஜேசுதாசின் 'புத்தம் வீடு' ஆகியவை வட்டார நாவல்களுக்கு ஓர் உதாரணம். தஞ்சை பிரகாஷின் 'கரமுண்டார் வீடு' சமூக நாவல்களில் தனித்தன்மை மிக்கது. இந்நாவல் முற்றிலும் வேறு ஒரு மொழியில் இருக்கும். ஏனென்றால் அவர் கத்தோலிக்க கிறிஸ்தவராக இருந்து, பெரிய பெரிய அதிகாரிகளின் கலாச்சாரம், பண்பாடு, மொழியில் வளர்ந்தவர். அந்த பின்புலத்திலிருந்து எழுதியிருப்பார். அவர் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை மொழியிலும்செய்து காட்டியிருப்பார்.'மீனின் சிறகுகள்' நாவலைப் படித்தால் தெரியும். ஒட்டுமொத்தமாக தஞ்சை நிலப்பரப்பில் அவரை பொருத்திப் பார்க்க முடியாது. அதனால் சின்ன சின்ன வகைப்பாடுகளில் அதற்குள்ளேயே சிலவகைப்பாட்டில் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆறுமுக நாவலர் உரையாசிரியராக பேச்சு மொழியில் உரைநடையை அமைத்தார். அவர் மறைந்த 1879 ஆம் ஆண்டிற்குசற்றுமுன்னே முதல் உரைநடை நாவலும் வெளிவந்தது, ஒருதற்செயல். 'புதினம்' என்ற நாவல் இலக்கியத்தைப் பற்றி தொல்காப்பியத்தில் தேடினால், "பாட்டிடை வைத்த குறிப்பி னாலும் பாவிடை எழுந்த கிளவியானும் பொருளோடு புணர்ந்த நகைமொழி யானும் பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழி யானும் உரைவகை மொழியே நான்கென மொழிப" எனும் ஒரு குறிப்பு இருப்பதை நாம் எடுத்துக் கொள்ளலாம். சிலப்பதிகாரத்திலேயே உரைநடை ஆரம்பித்ததாக சில தமிழறிஞர்கள் நமக்கு எடுத்துரைக்கிறார்கள். சேஷய்யங்கார், நாவல் முன்னுரையில்"இது பொய்ப்பெயர் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்" என்று குறிப்பிடுகிறார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நாவலின் முன்னுரையில் நாவலை "வசன காவியம்" என்று குறிப்பிடுகிறார். ஆர்.எஸ்.நாராயணசாமி ஐயர் "இனிய இயல்பான நடையில் சாதாரணமாய் யாவரும் அறியும் வண்ணம் பிரகிருதியின் இயற்கை அமைப்பையும் அழகையும் அற்புதங்களையும் ஜன சமூகங்களின் நடை, உடை, பாவனைகளையும், மனோ, வாக்கு, செயல் என்னும் திரிகாரணங்களாலும், மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள எண்ணிறந்த வித்தியாசங்களையும் பிரத்தியட்சமாய் உள்ளபடி கண்ணாடி மேல் பிரதிபிம்பம் காட்டுவதே நாவல்" என்று சொல்கிறார். தமிழ் நாவல்இலக்கியத்தைமூன்றுகட்டங்களாகபிரித்துக் கொள்ளலாம். மாயூரம்வேதநாயகம்பிள்ளைகாலத்திலிருந்து1910 வரை முதல் காலகட்டம் என்றும் அதில்எஸ்.எம்.நடேசசாஸ்திரி, பி.ஆர்.ராஜம்ஐயர், சு.வை.குருசாமிசர்மா, ஆ.மாதவையாமுதலியோரைமுதல் காலகட்டமாகச்சொல்லலாம். இரண்டாம் காலகட்டம் 1940 வரை. மூன்றாம்காலகட்டம் 1940 இல்தொடங்கி இன்றுவரை எடுத்துக் கொள்ளலாம். கிட்டத்தட்ட மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு பிறகான என்றுதான் நாம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அங்குதான் தீவிரத்தன்மை, வணிகம் என்று எழுத்து இரண்டாகப்பிரிகிறது. நாம் தீவிரத்தன்மைஎன்றபோக்கில் நின்று இதைப் பேசிப் பார்க்கலாம்.ஜெயகாந்தனின்' ஒருமனிதன் ஒருவீடுஒருஉலகம்', லெட்சுமியின் 'பெண்மனம்','மிதிலா விலாஸ்', இந்திராபார்த்தசாரதியின் 'குருதிப் புனல்', பாமாவின் 'கருக்கு', வண்ணநிலவனின்'கடல் புறத்தில்', சுகுமாரனின் 'பெருவலி', ஆதவனின்' என்பெயர் ராமசேஷன்', கரிச்சான்குஞ்சுவின் ' பசித்தமானுடம்'இப்படி இந்தபட்டியலின்நீளம்வெகுஅதிகம். அசோகமித்திரன், சு.சமுத்திரம், விட்டல் ராவ், தமிழவன், நாஞ்சில்நாடன், தோப்பில்முகமதுமீரான், தேவகாந்தன், சுப்பிரபாரதிமணியன், பாவண்ணன், இமயம், கோணங்கி, சாரு நிவேதிதா, சு.வேணுகோபால், ஜோடிகுரூஸ் என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். பா.சிங்காரம், நகுலன், சா. கந்தசாமி, ஜி.நாகராஜன், சம்பத், பூமணி, பிரேம் ரமேஷ், ராஜ் கெளதமன், சோபாசக்தி, யூமாவாசுகி, பா. வெங்கடேசன் என்றும் பட்டியலிடுவார்கள். இதில் தீவிரத்தன்மை எழுத்துக்குள் யாரெல்லாம் செயல்பட்டிருக்கிறார்கள், நாவலை புதிய கோணத்தில் அணுகியிருக்கிறார்கள், புதிய கதையாடல்களை கருத்துக்களை சொல்லிப் பார்த்திருக்கிறார்கள் என்றகோணத்தில்இப்பட்டியலை எடுத்துக்கொள்ளலாம்.இராஜம் கிருஷ்ணன் மக்களிடம் நேரடியாக பேசுவதுபோல் அமைத்துக் கொண்டிருப்பார். அதைப் போலஎம்.ஜி.சுரேஷ் கோட்பாடுகளுக்காக நாவல்கள் எழுதினார். சுப்ரபாரதி மணியனின் நாவல்களும் கோட்பாடு சார்ந்த நாவல் முயற்சியே. இப்படி, தமிழ் நாவல் உலகில் பலபுதுமைகள்நடந்தேறியிருக்கின்றன. கிருத்திகாவின் நாவல் உலகம் நேரடிகளஆய்வின்மூலம்எழுதப்பட்டது. 'நேற்றிருந்தோம்', 'புகை நடுவில்'போன்றவைஅவருடைய குறிப்பிடும் படியான நாவல்கள். இராஜாஜியின்'திக்கற்ற பார்வதி'வாசிக்கப்பட வேண்டிய நாவல். வணிகஎழுத்துக்குஒருபட்டியல் போட்டால்அதில் கல்கி, சாண்டில்யன், தேவன், நா.பார்த்தசாரதி போன்றவர்களைச்சொல்லலாம். கொத்தமங்கலம்சுப்பு வணிகஎழுத்தில்குறிப்பிடத் தக்கவர். அவருடைய 'தில்லானா மோகனாம்பாள்'புதினம் வணிகஎழுத்தில்பிரபலமாகப்பேசப்பட்டது. பிற்காலத்தில் சாவி, பாலகுமாரன், சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, ரா.கி.ரங்கராஜன், சுஜாதா போன்றவர்களைச்சொல்லலாம்.பொழுதுபோக்குஅல்லதுவணிகஎழுத்தில்வாசிக்க வேண்டிய நாவல்கள் என்று பார்த்தால், உமாசந்திரனின்'முள்ளும் மலரும்', ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', புஷ்பா தங்கதுரையின் ' ஒருஊதாப்பூகன் சிமிட்டுகிறது', இந்துமதியின்' தரை இறங்கும் விமானங்கள்', சாவியின் ' வாஷிங்டனில்திருமணம்', தேவனின்' மிஸ்டர்வேதாந்தம்' என்று ஒருபட்டியலைச்சொல்லலாம். குறிப்பாக நூற்றாண்டுகளாய் எழுதப்பட்டு வரும் புதின எழுத்தாளர்களுள் ஜெயமோகன், பெருமாள் முருகன் ஆகியோர் தவிர்க்க இயலாதவர்கள். ஏனென்றால் இருவரும் வெவ்வேறு கருத்தாக்கத்தில், அறம் வேண்டும் என்று சொல்வது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பார்த்தால் மக்கள் வாழ்வுஎன்று, பெருமாள் முருகன். இன்றைய காலகட்டத்தில் ஷர்மிளாசயித், சல்மா, அ.வெண்ணிலா, சைலஜாபோன்றவர்கள் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.செந்தில் குமார், அபிலாஷ் சந்திரன், 'சுளுந்தி' எழுதிய முத்து நாகு துவங்கி, சரவணன் சந்திரன், கார்த்திக் பாலசுப்ரமணியன், விநாயக முருகன், கார்ல் மார்க்ஸ் கணபதி போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.நான் வாசித்த வரையில் என்னுடையபுரிதலின்வழிமாணவர்களாகியஉங்களுக்கு நாவல் வாசிப்பு, வரலாறு என்பதைச்சுருங்கச்சொல்லிப் பார்த்திருக்கிறேன். கதை சொல்லல் என்பதுதமிழின்எழுத்துமொழிக்கு முந்தையச்செயல். எழுத்தாணிபிடித்து எழுதியவர்கள்ஓலைச் சுவடியில்புள்ளி வைத்தால் ஓட்டை விழுந்து விடும் என்பதற்காகபுள்ளி இல்லா எழுத்துஇருந்தகாலமும் உண்டு. பைபிள்கதைகள் காகிதத்தில்அச்சடிக்கப்பட்டபிறகு தமிழ் மொழியின்உரைநடைவேறுவடிவம் பெற்றது. இப்படிஉரைநடையில், கட்டுரை, நாவல், சிறுகதைஎன்றவடிவங்கள்,கூறல் என்றமுறையிலிருந்துஎழுத்துஎன்றமுறைக்கு வடிவம் பெற்ற பிறகு, நாவல் பலவடிவச்சோதனைகளைசெய்து பார்த்திருக்கிறது.நாவல் எழுதுவதுபற்றிஎன்னுடையஅனுபவத்தைஉங்களோடுபகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். லைப்ரரியன்எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த ஊர்தான் என்னுடைய ஊர். ஊரில்லைப்ரரி இருந்தது ஆனால் இன்று அது அரசு கட்டிடத்தில் இயங்குகிறதா எனத்தெரியவில்லை. வாடகை கொடுக்காமல் அவ்வப்போது இடத்தை மாற்றிக் கொண்டு புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு சில புத்தகங்கள் தெருவில் கிடந்ததைக் கூடப் பார்த்திருக்கிறேன். இவ்வாறு பல நிகழ்வுகள் ஊரில்நடந்தேறி இருக்கிறது. எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த ஊரிலேயே அன்று அரசு கட்டிடத்தில் நூலகம் இல்லை. இப்பொழுது இருக்கிறதா என தெரியவில்லை. அந்த நூலகத்தில் தான் புத்தகம் அடுக்கி கொடுத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகங்களை படிக்கவும் ஆரம்பித்தோம். அப்பொழுதுதான் புத்தகம் எழுதுபவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கம்யூனிச இயக்கத்திலிருந்து இரண்டு நபர்கள் கதை எழுதுவதைப்பற்றிபேசிக்கொண்டிருப்பார்கள், நாங்கள் கேட்டுக் கொண்டிருப்போம். சில வருடங்களுக்குப் பிறகு நான் 11ஆம்வகுப்போ 12ஆம் வகுப்போ படிக்கும் பொழுது எல்லோருக்கும் வருவது போல எனக்கும் காதல் வந்தது, அப்பொழுது நானும் கவிதை எழுதினேன்.அப்படித்தான் நான் காதல் கவிதைகளில் தொடங்கினேன். பின்னாளில் 1991- இல்அக்கவிதைகளைத் தொகுத்து'நோட்புக் கவிதைகள்' என்று வெளியிட்டேன். இவ்வாறாகஎன்னுடையதனிப்பட்டநாட்கள் போய்க்கொண்டிருந்த காலகட்டத்தில் திருப்புமுனையாக,ஜேஜேசில குறிப்புகள் வாசித்த பிறகு, சுந்தர ராமசாமியை சந்திப்பதற்கு நாகர்கோவிலுக்கு டிக்கெட் எடுத்து கவிஞர் ரவி சுப்ரமணியத்தையும் உடன் வரச் சொல்லி அழைத்தேன். அவர் என்னைக் கடுமையாகத் திட்டினார்."'காகங்கள்' தொகுப்பு வந்துள்ளது. அதை வாங்கி படித்துவிட்டு வா!" என்று கூறினார். நான் சிறுகதைகளில்பெரிதும் ஆர்வம் இல்லாதவனாகஇருந்தேன். இருப்பினும்'காகங்கள்'புத்தகங்களை வாங்கி வந்தேன்.ஒருநாளில்படித்துமுடிக்கக்கூடியபுத்தகம்அல்ல,மிகப்பெரியது. ஒருவழியாக 'காகங்கள்' தொகுப்பை படித்து முடித்து விட்டேன். மிகவும் சுவாரசியமாக இருந்தது மேலும் சுராவை எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவரை நாவல்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நான் முதன்முறையாக ஒரு சிறுகதைத் தொகுப்பை படித்தேன். பின்னர் இருவரும் சுந்தர ராமசாமியைச் சந்திக்க நாகர்கோவிலுக்கு இரயிலில் பயணப்பட்டோம். அவரது வீட்டிற்கு சென்றபோதுதான் தெரிந்தது, நாங்கள் வந்த இரயிலுக்கு எதிர் ரயிலில் சுந்தரராமசாமி கோயம்புத்தூருக்குப் பயணப்பட்டு இருக்கிறார் என்று. பின்னர் இருவரும் நாகர்கோவிலை சுற்றி பார்த்துவிட்டு ஊர் திரும்பினோம். பிறகு ஒருநாள் கடிதம் போட்டுவிட்டு அவரை சென்று சந்தித்தோம். சுந்தர ராமசாமி, ரவி சுப்பிரமணியத்திடம் நாவல் எழுதுங்கள் என்று சொன்னார். இதுகுறித்து வெகுநேரம் கலந்துரையாடினார்கள். பிறகு, நான், சுந்தர ராமசாமி, ரவி சுப்பிரமணியம் மூவரும் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு நாகர்கோவிலைச் சுற்றிப் பார்த்தோம். அது ஒரு மகிழ்ச்சியான தருணம். அச்சமயம் நான் ஒரு ஓவியன் மட்டுமே, ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு மட்டும் வெளியிட்டிருந்தேன். சிறிது காலம் கழித்து, எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தேன். பலஆண்டுகளுக்குப் பிறகு நான் பார்த்த அல்லது எனக்குத் தெரிந்த மரணங்கள் குறித்து எழுதலாம் என ஆரம்பித்து 'விடம்பனம்' நாவலை எழுதினேன். விடம்பனத்தை அடுத்து'தாளடி', 'காகிதப்பூ' என இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறேன். இதற்கிடையில் பல கட்டுரைகளும் எழுதி, அவை 5 கட்டுரைத் தொகுப்புகளாக வந்திருக்கிறது.'நம்மோடுதான்பேசுகிறார்கள்','அச்சப்படத்தேவையில்லை', 'கனவுவிடியும்','புனைவு','கலை அல்லதுகாமம்'என்பன அவற்றின்தலைப்புகள். நாவல் எழுதுவது தொடர்பாக என்னிடம்தெளிவுஇருந்தது. துவக்க காலத்தில் இருந்தே எழுத்துப் பயிற்சிஇருந்ததால், நான் எழுத வந்தபோதுசுலபமாக இருந்தது. வெங்கட்சாமிநாதன் டெல்லியில் ஓய்வு பெற்று மெட்ராஸில் மடிப்பாக்கத்தில் குடிவந்த நாளிலிருந்து அவர் மெட்ராசில் இருந்து பெங்களூர் சென்ற நாள் வரை தினமும் சாயங்காலம் அவருடன்தான் என்னுடைய பொழுதுகள் கழிந்தன.அது எனக்கு மிகப் பெரியபயிற்சியாக இருந்தது. மாணவர்களாகிய நீங்கள், மனதில் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ அதை நாவல் என்றோ கதை என்றோ கவிதை என்றோ நினைக்காமல் தொடர்ச்சியாக தினமும் ஒரு பத்து பக்கம் எழுதிக்கொண்டே இருங்கள். அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஓராண்டு கழித்து அதனை எடுத்துக்கொண்டு உங்களுக்கு தெரிந்த நண்பர், உங்கள் ஊரில் இருக்கும் எழுத்தாளர், உங்களுடைய பள்ளியில் உடன் பயில்பவர்கள், வேலை பார்க்கும் இடத்தில் எதிர் வீட்டில் யாரிடமாவது கொடுத்து படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அதன் பிறகு முடிவு செய்யுங்கள் எது வேண்டும் எது தேவை எது தேவையில்லை எது கதையாக உள்ளது எது கதையாக இல்லை எது கவிதையாக உள்ளது எது கவிதையாக இல்லை என்று முடிவு செய்யுங்கள். என்னுடையவாழ்க்கையில்தொடர்ச்சியாகபயணம் செய்து வந்திருக்கிறேன். பயணம் எனக்கு பலஅனுபவங்களைத் தந்திருக்கிறது. அனுபவத்தின்வழிநின்றும், வாசிப்பின்முதிர்ச்சிவழிநின்றும் நம்முடைய சிந்திக்கும் திறன் செயல்படுகிறது. முதலில் எதைப் பார்க்கிறோம், எதை உள் வாங்குகிறோம், எதை எழுத நினைக்கிறோம், அதற்கு எந்தக் கருவியை பயன்படுத்துகிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் சிறுகச்சிறுக காட்சியை மொழியாக மாற்றும் கலையை கற்றுக் கொள்வீர்கள். வடிவம் குறித்ததெளிவுஏற்படுவதற்கு மொழியில்ஆழ்ந்த பயிற்சிஇருக்க வேண்டும். மொழியை புரிந்துகொள்வதற்குவாசிப்புஅனுபவம்கைகொடுக்கும். இதனைக் கொண்டு மொழியைக் கையாளும்செய்நேர்த்தியைஅடையலாம். அதில்படைப்பாற்றல்மிகுந்துகாணப்பட, மாணவர்களின்சிந்திக்கும் திறன்சார்ந்தபயிற்சிதேவை. சிந்தனாமுறையும் செய்நேர்த்தியும்இரண்டறக் கலந்து, மொழிஎன்னும்கருவியின்வழிவெளிப்பட்டால், அதை படைப்பு எனக் கொள்ளலாம்.நேரடிபயிற்சியில்சந்திக்க இயலாமையால் உங்களிடம் சுருங்கச்சொல்லி விளக்க முயற்சித்திருக்கிறேன். நம்பிக்கையோடு செயல்படுங்கள்.புதியபடைப்பாளர்களைக்காணஆவலோடு காத்திருக்கிறேன். ( சீனிவாசன் நடராஜன்.
சாத்கர் அரிசிக்கா நாவல்: சிந்து சீனு ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் மனிதர்களின் உலகில் எதிர் எதிரான இணைகளின் வகையினர் நிறைந்து காணப்படுகிறார்கள். அன்புக்கு எதிரானது அன்பு இல்லாதது என்றில்லாமல் அதிகாரத்துவம் என்பதே முன் நிற்கிற இந்த அதிகாரத்துவம் கொண்ட மனிதர்களை முரணாக எப்போதும் தன் படைப்புகளில் முன் நிறுத்துபவர் சிந்து சீனு அவர்கள். சுற்றுச்சூழலை மனதில் வாங்கிக்கொண்டு ஓரளவு இயற்கையோடு இணைந்து வாழ ஆசைப்படும் சாமான்ய மனிதர்களையும் அந்தச்சூழலைக் கெடுக்கும் அதிகாரம் மிகுந்த மனிதர்களையும் அவர் இந்நாவலில் காட்டுகிறார். முந்தைய நாவலில் சாதாரண மனிதன் ஒருவன் வாழ்க்கைக் காற்று அடித்துச் செல்லும் திசையில் செல்லும் சருகுகள் போல் அடித்துச் செல்லப்படும் நிகழ்வுகளால் ஒருவனைக்கதாநாயகனாக்கியிருந்தார், இந்த நாவலில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்ற சூறாவளி தூக்கி அடித்துத் துரத்தும் மனிதர்களை அவர் வாழும் பகுதியை மையமாகக் கொண்டு சொல்கிறார். சமூக பொருளாதார , அரசியல் சூழல்களில் சிந்து சீனு தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பதன் அடையாளமாய் இந்த நாவலின் நிகழ்வுகள் இருக்கின்றன. பல கதாபாத்திரங்களுடன் பல நிகழ்வுகளுடன் சிந்து சீனு அவர்களை சம்பந்தம் கொண்டுப்பார்க்கலாம். சாதீய அடுக்கு நிலை தரும் புறக்கணிப்பும் அதிகாரமும் வன்முறையும் விளிம்பு மனிதர்களை சாதாரணக்குடிநீர் பிரசினைக்காக உடலால் சிரமம் தந்து மருத்துவமனைக்கு அனுப்புகையில் அவர்களோடு சேர்ந்து பலரும் அலைகிறார்கள்.இன்னொரு புறம் நாவல் முழுக்க சுற்றுசூழல் பிரச்சினைகள் காரணமாக சக மனிதர்கள் சிதைந்த உடலோடும் வியாதிகளோடும் அலைவதுதான் இந்த நாவல். “ ஒவ்வொரு நாளும் பிணத்தின் முகத்தில் முழிக்கும் சூழல் “ என்று இதில் வரும் கதாபாத்திரம் ஓர் இடத்தில் சொல்கிறது. நச்சு கலந்த வேதியப்பொருட்கள், கழிவுகள், தோல் தொழிற்சாலை, வஜ்ஜிரத் தொழிற்சாலை, பீடிக்கம்பனிகள் என்று பலவித விசயங்கள் மனிதர்களை நடமாடும் பிணங்களாக்குகின்றன. நாவலில் அடிக்கடி வந்து போகும் குட்டி யானை என்ற வாகனம் போல் சாவின் குறியீடாக எருமைகளும் நிறைந்திருக்கின்றன செழுமையைபறிகொடுத்து நிற்கும் அந்த பூமியின் ஒரு பகுதியை வளமாக்கி அந்த மண்ணில் விளைந்த அரிசியை ஊரே சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் வெளிநாடு போய் படித்து விட்டு வரும் நாயகி ( அவளும் விளிம்பு நிலைப்பெண்தான், எதேச்சையாகக் கிடைத்த வெளிநாட்டுப்படிப்பு வாய்ப்பு அவளை வெளிநாட்டிலேயே தங்கி இருக்க வற்புறுத்தினாலும் சொந்த ஊருக்கு வந்து மக்களுடன் இணைந்து வாழ்கிறவள்) பூமியை மகளாக சுவீகாரம் செய்து கொண்டு தாயாகி அவளின் கண் எதிரே மலடான அந்தப்பகுதி மண்ணை என் வம்சம் என் வாரிசு என்று நினைத்து மீண்டும் வளமையான பூமியாக்கும் நேர்மறைக்கனவு நிறைவேறுவதை இந்நாவல் சொல்கிறது. அதிகாரம் ஒருவனிடமோ, சமுதாயத்தின் ஒரே மட்டத்திலோ இருப்பதில்லை அது பொருட்கள், மனிதர்கள் கருத்துக்கள் ஆகியவற்றின் வழியாக பண்பாட்டில் திரும்பத்திரும்ப சுற்றி வருவதை அந்தப்பகுதியின் வரலாறு, தொன்மங்கள், செய்திகள் மூலம் காட்டுகிறார். சமகால வரலாற்றை எழுதுவதென்பது நிகழ்வுகளை மட்டும் சொல்லாமல் அவற்றை விமர்சிக்கவும் பகுப்பாய்வு செய்யும் முறையில் கதையாடலை அமைத்திருக்கிறார் சிந்து சீனு. நாவலுக்குறிய விரிவான வர்ணனைகள் தவிர்க்கப்பட்ட உத்தி வாசகனை தொடர்ந்து வாசிக்க ஏதுவாகலாம் எந்த வரலாறும் அக வய நிலையிலிருந்தும் விலகியிருக்க முடியாது.அது பண்பாட்டு அசைவுகளாக மாறியிருப்பதை சிந்து சீனுவின் படைப்புகள் தொடர்ந்துக் காட்டுகின்றன. KANNAVU MAGAZINE’ / International Tamil magazine Editor : SUBRABHARATHIMANIAN
புதுச்சேரி இலக்கிய நண்பர்கள் பற்றி முன்னர் பல சமயங்களில் நான் எழுதிய 20 கட்டுரைகளை 9 புதுச்சேரி இலக்கிய நண்பர்கள் பற்றி முன்னர் பல சமயங்களில் நான் எழுதிய பல கட்டுரைகளைக்கண்டபோது அவற்றை ஒரு தொகுப்பாக்க எண்ணம் வந்தது..சிலபடைப்புகளையும் சேர்த்துக் கொண்டேன். இணைதளத்திலிருந்து நன்றியுடன் எடுத்துப் பயன்படுத்தி உள்ளேன்..பாண்டிச்சேரி பற்றிய ஒரு வகை ஆவண நூலாக இது வடிவமைக்கப்பட்டு விட்டது இப்படி ..பிரபஞ்சன், மா. அரங்கநாதன் உள்ளிட்டப் படைப்பாளிகள் பற்றி நான் எழுதியவை கிடைக்காமல் போனது வருத்தமே தந்தது, இதில் இடம் பெற்றப் படைப்பாளிகள் : சுந்தரமுருகன்/ புதுவை யுகபாரதி/ராஜ்ஜா/இரா. சம்பத்/. சொ. சேதுபதி/ கி. நாச்சிமுத்து/ பி என் எஸ் பாண்டியன்/ என் ராஜசேகர்/ ரா.ரஜினி/ கி ராஜநாராயணன்/ க.பஞ்சாங்கம்/ பிரதிபா ஜெயச்சந்திரன்/ etc ( முகநூலில் போட வேண்டாம் . பிறகு பார்க்கலாம். ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பவும் ) ஒரு குத்துப் பருக்கை : சுப்ரபாரதிணியன் அழகு பாண்டி அரசப்பன் சிறுகதைகள் வட்டார வழக்கு இலக்கியம் சார்ந்த புறக்கணிப்பு மனம் பலருக்கு உண்டு .பொதுவான இலக்கிய வகை அம்சங்களில் அக்கறை கொண்டவர்களுக்கு இந்த வட்டார வழக்கு கசப்பாகவே இருக்கும் ஆனால் அவற்றில் இருக்கிற ஜீவனும் மொழிசார்ந்த உள்ளடக்கமும் அந்த வட்டார மக்களின் வாழ்விலும் கவனிக்கப்பட வேண்டியதாகும் அந்த வகையில் இந்தத் தொகுப்பில் அழகு பாண்டி அரசப்பன் தன்னுடைய கதைகளை தேனி வட்டார மொழி சார்ந்தும் அனுபவம் சார்ந்தும் முழுமையாக உள்ளடக்கி வைக்கிறார் தன் கதைகளில் . தன் பெயரை போடுகிற போது தன் சொந்த கிராமம் முத்துலாபுரம் என்று குறிப்பிடுவது கூட அவரின் சிறப்பாக இருக்கும் என்று சொல்லலாம் அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் முழுக்க தேனி பகுதி மக்களின் வட்டார வழக்கும் வாழ்வியலும் அவர்களுடனேயே நிறைந்திருக்கிறது அந்தப் பகுதி மனிதர்களின் வாழ்க்கையை சரியாகவே சொல்லி இருக்கிறார் 25 ஆண்டு காலம் அந்த ஊரில் வாழ்ந்தவர். பிறகு திருப்பூருக்கு இடம்பெயர்ந்து வந்து பனியன் தொழிலாளியாக இருந்தவர். இப்போது தேனீர் கடை நடத்தி வருகிறார் ஆனால் 25 ஆண்டுகாலம் அந்த ஊரில் வாழ்ந்த அனுபவங்களும் அந்த மனிதர்கள் சார்ந்த உணர்வுகளும் சரியாக உள்வாங்கிக் கொண்டு இந்த கதைகளை படைத்திருக்கிறார் . இந்தியச்சமூகம் என்பது சாதியப் படிவங்களால் ஆனது. சாதியில்லாமல் ஒரு மனிதன் வாழ்வதில்லை. மதத்தை விட சாதி என்னும் நிறுவனம் கிராமங்களில் புரையோடிக்கிடப்பதை பல கதைகளில் உள்ளீடாகக் கொள்ளலாம்.அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை அதிலும் பெண்மணிகள் சார்ந்த சித்திரங்கள் அபாரமானவை .புது மணப்பெண் ஊர் கிணற்றில் சென்று நீ எடுக்கிற சம்பவம் முதல் கதையில் பதிவாகியிருக்கிறது அந்த கிணற்று நீரில் தான் அவளின் முதலிரவு பால் கலந்து இருக்கிறது என்ற குறிப்பு கதை முடிகிறபோது அந்த கிராமத்து நீரை அருந்துகிற அனுபவம் ஏற்பட்டு விடுகிறது . தெய்வங்களின் வடிவமும் குணமும் அவை சார்ந்த சமுகத்தின் தேவைகளையொட்டி அமைந்திருப்பதை இந்தக் கதையில் இடம் பெறும் சடங்கு சம்பிரதாயங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. குடிகார கணவன் சம்பாதிப்பதை எல்லாம் குடிப்பதற்காகவே செலவிடுகிறான். ஆனால் அவன் மீது அவனின் மனைவி அக்கறை கொண்டவள் .அவன் எப்போது வருவான என்று இரவு நேர நேரத்தில் சூடாக சோறு செய்து காத்திருக்கிற அவளைப் பற்றிய ஒரு அற்புதமான சித்திரம் தினக்கூலி கதையில் இருக்கிறது ..தண்டட்டி கதையில் வரும் கிழவி, முதிய வயதான அவள் அவளின் தண்டட்டி எப்படியோ அடமானம் போகிறது ஆனால் அதை மீட்டெடுக்க அவள் நிறைய முயற்சிகள் எடுத்துக் கொள்கிறாள் .ஆனால் அந்த தண்டட்டி குடிகார கணவனின் போதை பழக்கத்திற்கு போகிற போது அவள் நிலையழிந்து போகிறாள் அவளின் சாவு கூட அதன் பொருட்டே நிகழ்ந்துவிடுகிறது , பூர்வீக வீடு கதையில் வரும் பெண்மணி ரசித்து காப்பி குடிப்பது ஆகட்டும் அவள் வாழ்வை அமைத்துக் கொள்வது ஆகட்டும் மிக அற்புதமான உழைப்பால் நிறைந்திருக்கிறது ஆனால் அந்த வீட்டில் அவள் இறந்து போக வீட்டிலுள்ள மரக்கட்டைகள் கூட பணம் ஆகின்றது பிள்ளைகளுக்கு.. .அங்கிருந்த அவரை கால் பந்தல் காணாமல் போகிறது அடுப்பங்கரை உடைந்து போகிறது சிவந்த மண் பானைகளும் காணாமல் போகின்றன .சிதைந்து கூரை இல்லாமல் விடிந்தும் விடியாமல் மழைக்கும் வெயிலுக்கும் வாசனை மாறாமல் குப்பைக்கீரை செடி வளரும் ஒரு விஷயத்தை அழகிய கவிதை போல் சொல்லியிருக்கிறார் .கிராம மனிதர்களை பற்றி சொல்லுகிற போது அவர்களைப் பற்றிய விவரங்கள் துல்லியமாக விவரிக்கப்பட்டு இருக்கின்றன .வியாபாரி துண்டு போட்டு பேரம் செய்கிற வித்தையை சொல்கிறபோது அந்த பேரத்தில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகையான வழக்குச் சொற்களும் அவை சார்ந்த அர்த்தங்களும் ஆச்சரியப்படுத்துகின்றன பல கதைகளில் உரையாடல் பலமாக இருக்கிறது. அந்த உரையாடல் முழுக்க ஜீவனுள்ளது. திருப்பமும் பல கதைகளின் உள்ளீடாக இருக்கிறது மாடு விக்கிறவன் ஆடு விற்பனைக்கு போகிற சாசகம் கூட அப்படித்தான் . தேனி சார்ந்த மக்களின் வரலாறும் பல தொன்மங்களும் கதைகளின் ஊடாக சாதாரணமாகவே இடம்பெற்றிருக்கின்றன அப்படித்தான் முத்துலாபுரம் ஊரிலிருந்து இடம்பெயரும் மக்கள் பற்றிய ஒரு வரலாறும் நந்தி சிலை பற்றியத் தொன்மமும் முக்கியமானவை .குழந்தைகளின் உலகமும் கல்வித் தரமும் பல கதைகளில் வந்துபோகின்றன .படிக்காத பையன்களை அடித்து சிரமப்படுத்தும் ஆசிரியர்களிடம் மனிதாபிமான மனம் மேலோங்கி நிற்கிறது ஆசிரியரின் முயற்சி டீக்கடை வேலையில் சேர்த்துவிட அந்த பையனின் மனம் ஒரு வகையில் விடுதலை கொள்கிறது என்பது முதல் மேஜை போன்ற கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது மனிதர்களைப் போலவே அருவமான பொருட்களும் கவித்துவத்துடன் மாறிவிடுகின்றனர். அப்படித்தான் உப்போடை வீடு மற்றும் பூசாரி வீடுகள் அமைகின்றன .அழகு பாண்டி அரசப்பன் காட்டும் மனிதர்கள் அன்பானவர்கள் ..நேசத்தில் மிகுதியானவர்கள் .. அஞ்சாதவர்கள்.. மைக் டெஸ்ட் மணி முதல் பல மனிதர்களை அவர் இப்படித்தான் காட்டுகிறார் .இந்த மனிதர்கள் மத்தியில் ஏற்படுகிற உறவுகளைப்பற்றி கடைசிக் கதை சொல்கிறது அப்பனும் மகனும் உட்கார்ந்து பேசுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறது . அவர்களின் வாழ்க்கை பற்றி நிறைய சொல்கிறார் அவர் தேநீர் கடையை அண்மைக்காலத்தில் நடத்தி வருகிறார் .அந்த கடையில் நடக்கும் விசயங்களை அடையாளமாக இரண்டு கதைகளில் விவரித்திருக்கிறார் . ஒரு கதையில் வெளியூர் ஆளுக்கு வேலை வாங்கி தருகிற மனிதாபிமான செயல் இன்னொரு கதையில் தேனீர் கடை எப்படி பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை எண்ணங்களை பிரதிபலிக்கும் இடமாக மாறி இருக்கிறது என்பதை நுணுக்கமாக சொல்லியிருக்கிறார் . டீக்கடை பெஞ்ச் என்பது எல்லோர் மனதிலும் உருவாக்கும் சித்திரங்கள் நமக்குச் சகஜம் .சிறுகதை நோக்கில் அல்லாமல் இயல்பாக எழுதப்பட்டு இருந்தாலும் சில கதைகளில் அவை முடிகிற கவித்துவ எண்ணங்களால் அவை சிறப்பு பெறுகின்றன ..திருடன் வந்து போகிறான் ஊரில் மக்களின் இயல்பு பின்னர் எப்படி இருக்கிறது ,நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பது பற்றிய சித்திரம் இந்த வகையில் சொல்லலாம் ,அதேபோல உரையாடலில் இடம்பெறுகிற மனிதாபிமான செல்வங்களான மனிதர்களும் அவர்களின் இயல்புகளும் மிகத்துல்லியமானவை. அதை வெளிப்படுத்த உபயோகப்படுத்தும் சொற்கள் விசேசமானவை .அப்படி பேச்சுப் புழக்கத்தில் இருக்கிற சொற்கள் ஆச்சர்யமூட்டுகின்றன அவையெல்லாம் அகராதிக்குள் பொதிந்து வைக்க வேண்டியவை .தேனி மண்ணை சின்னவயதிலிருந்து சுவைத்த மனிதன் கதைகள்சொல்லிச் சொல்லி திளைக்கிற கதைகள் இவை மைக் டெஸ்ட் மணி கதையில் விவரிக்கும் குலுக்க அல்லது குலுக்கை தானியங்களை சேமிக்கிற இடமாக இருக்கிறது அப்படித்தான் தேனி மக்களின் அனுபவங்களையும் பேச்சுவழக்கு உணர்வுகளையும் அழகு பாண்டி அரசப்பன் குலுக்கையாக மாறி எவ்வளவோ விஷயங்களை சேமித்து வைத்திருக்கிறார் அவையெல்லாம் தமிழுக்கு இனியும் வரமாகத்தான் இருக்கப்போகிறது ரூபாய் 150 கவிநிலா பதிப்பகம் திருப்பூர்
திருப்பூரியம் - ரவிவாமணன் அன்பிற்குரிய தோழரும், கொங்குநாட்டின் சமகால சிறந்த படைப்பிலக்கிய வாதிகளில் ஒருவருமான திரு. சுப்ரபாரதிமணியன் 34 ஆண்டுகளாக கனவு' சிற்றிதழை இலக்கியதரமுடன் வெளியிட்டு வருகின்றார். அவருடைய படைப்பிலக்கியப் பணிகள் மிகவும் பிரமிப்பூட்டுகின்றன. பதினேழு நாவல்கள், சிறுகதை, கவிதை, கட்டுரைத் தொகுதி சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தில் அனைத்துப் பரிமாணங்களிலும் முத்திரை பதித்தவர். மலேசியப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘பெண்மை' எனும் நூலாக வெளியிட்டுள்ளார். பார்வைக்கூர்மையும், கூர்தலறமும் சமுதாய அக்கறையும் கொண்ட எழுத்துப் போராளி சுப்ரபாரதிமணியன். அவருடைய அண்மைக்காலப் படைப்புகளான தேநீர் இடைவேளை மற்றும் நைரா' ஆகிய இரண்டு நாவல்களையும் வாசித்தேன். "தேநீர் இடைவேளை" வழக்கமான நாவல்களிலிருந்து மாறுபட்ட வடிவம் கொண்டுள்ளது. கடித இலக்கிய வகையை சார்ந்தது. இதன் முன்னோடிகளாக அறிஞர் அண்ணா அவர்களையும் பேராசிரியர் மு. வரதராசனார் அவர்களையும் குறிப்பிடலாம். ஆனால் சுப்ரபாரதிமணியனின் களமும், கருதுகோளும் கதை மாந்தர்களும் அவர்களின் வாழ்வியல் சூழலும் சமகாலம் சார்ந்த பிரச்சினைகளின் பதிவுகளாக விளங்குகின்றன. கோவை மாநகரத்தில் இயங்கி வந்த பல நூற்பாலைகள் நலிவுற்று மூடப்பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அவற்றின் நில மதிப்புகள் பல மடங்கு உயர்ந்ததும் அதில் முக்கியக் காரணமாகும். ஆதனால் அவை பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூர், பல்லடம் சுற்று வட்டாரங்களில் புதிதாக நிறுவப்படுகின்றன. நூற்பாலைத் தொழிலாளர்களை, குறிப்பாக இளம்பெண் தொழிலாளர்களை, நவீன கொத்தடிமைகளாக வளைத்துப் போடும் “சுமங்கலித்திட்டம்” எனும் கவர்ச்சியைக் காட்டி மயக்குகின்றன. நூற்பாலை நிர்வாகங்கள். மூன்றாண்டுகள், ஐந்தாண்டுகள், வரை இளம் பெண்களை ஒப்பந்தக்கூலிகளாக்கி, வசிப்பிடம் (தங்கும் விடுதி) இலவசம், உணவு, இலவசம் - சில நூற்பாலைகளில் சலுகை விலையில் உணவு என்று வாக்குறுதிகள் தந்து பணியமர்த்து கிறார்கள். பணி முதிர்வடைந்து ஒப்பந்தம் முடியும் போது திருமணத்திற்கு உதவ கணிசமான சேமிப்புத் தொகை வழங்கப்படும் என்கின்றன. ஆலை நிர்வாகங்கள். அதுவரையிலும் குறைந்த கூலிக்கு அதிக நேரம் அவர்கள் உழைத்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே நூற்பாலைகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த தொழிலாளிகள், மேற்பார்வையாளர்களும் கூட வேலையிழப்பின் காரணமாக இந்த நவீன நூற்பாலைகளில் ஒப்பந்தக் கூலிகளாகத் தஞ்சமடைகிறார்கள். இந்த நவீன நூற்பாலைகள் ஒப்பந்தக் கூலி தொழிலாளர்களின் வசிப்பிடமாக “கொட்டகை”களை அமைந்துள்ளன. ஒரு வகையில் பார்த்தால் இதுவுங்கூட கறிக்கோழிகள் அல்லது கொட்டகைகளில் ஆடு வளர்க்கும் இடங்கள் போன்றது தான். இந்த கொட்டகை வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதைப் புனைவுகளின்றி எதார்த்தமான நிலையில் பதிவு செய்கிறார் சுப்ரபாரதிமணியன். "கொட்டகை வாழ்க்கையில் தொழிலாளர்களிடையே சாதி, மதம் கடந்த மலரும் காதல், வடிகால் தேடும் காமம், நுகர்வுக் கலாச்சாரத்தால் விளையும் பொருள் வயப்பட்ட கடன்கள், அவர்களை அழைக்கும் கடமைகள், துரோகங்களும், தோல்வி களும், பரிசளிக்கும் தற்கொலைகளும், அழுத்தும் பணிச்சுமைகள் வாட்டும் தனிமைத் துயரங்கள் மற்றும் எதிர்காலம் பற்றிய கனவுகள் ................ நிச்சயமற்ற எதிர்கால இருட்டைப் பற்றிய பயங்கள் ....... இப்படி ஒவ்வொரு எழுதாத கடிதங்களும் எழுதப்பட்ட வாழ்க்கைத் துயரங்களின் கதைகளாக விரிகின்றன நாவலில். மானுட உறவுகள் மகத்தானவை. வெறும் பொருள் தேடலுக்காகவும் நுகர்ச்சிக்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்டன அல்ல. அவை மனிதர்க்கிடையேயான பந்தம், பாசம், அன்பு, நன்றி, கடமை போன்றவற்றால் பிணைக்கப்பட்டவை. ஆனால் பொருள் தேடியாக வேண்டிய அழுத்தங்களுக் கிடையில் உணர்வுகளையும் உறவுகளையும் கட்டமைத்துக் கொள்ளும் அனுபவங்களே வாழ்க்கையை முன்னெடுக்கின்றன. அந்த முன்னெடுப்புகளே போராட்டங்களாக வடிவமாற்றம் அடைகின்றன. மாந்தர்களின் - குறிப்பாக நூற்பாலைத் தொழிலாளர்களின் "கொட்டகை வாழ்க்கையை வெகு நேர்த்தியாக படம் பிடித்துள்ளது இந்த... ‘தேநீர் இடைவேளை' நாவல். பின் நவீனத்துவ, முதலாளித்துவ சுரண்டல்களை பிரதிபலிக்கிற எதார்த்த வாத இலக்கிய வடிவம் இந்த நாவல். இருத்தலியலின் கூறுகள் இதில் தென்படுகின்றன எனலாம். சென்ற தலைமுறைக் கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜுவா, பாலதண்டாயுதம், பார்வதி கிருஷ்ணன், கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் போன்ற தன்னலமற்ற போராளிகள் குறித்தும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பஞ்சாலை நூற்பாலைத் தொழிலாளர்களின் உறுதி மிக்க போராட்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் தோழர் கே. ரமணி, தோழர். பூபதி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் பங்களிப்பையும் சிலையாக கோவையில் திரு. ராமசாமி அவர்களைப் பற்றியும் சின்னியம்பாளையம் போராளிகள் தூக்கு தண்டனை பெற்ற தியாகத்தையும் இணைத்திருந்தால் ஒரு சார்பு தன்மையற்ற முழுமையான பஞ்சாலைத் தொழிலாளர் போராட்ட வரலாற்றுப் பதிவாகவும் சிறந்து விளங்கியிருக்கும் என்பது என் கருத்து. திருப்பூரியம்: இயம் என்ற சொல்லுக்கு இயம்புதல், செல்லுதல் என்று பொருள்படும். இசம் என்ற சொல்லுக்கு திருப்பூரின் கொள்கை, லட்சியம் அல்லது இயக்கம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். சுப்ரபாரதிமணியனின் முந்தைய நாவல்களான சாயத்திரை, தறிநாடா , முறிவு ஆகிய நூல்கள் திருப்பூர் பின்னலாடை விசைத்தறி பெண் தொழிலாளர்கள் பிரச்சினைகளையும் வாழ்க்கையையும் பற்றி பேசுகின்றன. ஆனால் முறிவு "தேனீர்” இடைவேளை" நூல்களைத் தொடர்ந்து வெளிவந்த “நைரா” முற்றிலும் நவீனமான பிரச்சினைகளை அலசுகிறது. இந்தியாவின் குறிப்பிடத்தக்க நகரங்களில் ஒன்றாக திருப்பூர் விளங்குவதற்குக் காரணம், பலநூறுகோடி டாலர் அன்னியச் செலவாணியை அது ஈட்டித் தருகிறது என்பதுதான். ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிற "அன்னதாதா”வாக வளர்ந்துள்ளது. திருப்பூர் என்பது ஒரு தனியான ஊரல்ல. பல கிராமங்களின் இணைப்பும், தொகுப்புமே திருப்பூர் எனப்படுகிறது. தேனீக்கள் அடைகிற தேன்கூடு திருப்பூர் பின்னலாடை நகரமான திருப்பூரின் பூர்வீகத் தொழில் பருத்தி விளைவித்தல், பருத்தியை நூலாக்குதல். நூலைக் கொண்டு கதர், கைத்தறி நெசவு நெய்தல் இப்போது அதன் பரிணாம வளர்ச்சி விசைத்தறிக் கூடங்களாகவும், நூற்பாலைகளாகவும், பின்னலாடை, ஆயத்த ஆடை தொழிற்கூடங்களாகவும் விரிவடைந்துள்ளது. இந்த மாபெரும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரின் இன்றைய நிலை என்ன? சந்தித்து வரும் பிரச்சினைகள் என்னென்ன என்று பேசுகிறது ‘நைரா' நாவல். வெளி மாவட்டங்களிலிருந்ம், வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்களும், ஏற்றுமதி வணிகர்களும் திருப்பூரை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். இப்போது வெளிநாட்டவர்களான - ஆப்பிரிக்க நைஜீரியர்கள் அதிக அளவில் திருப்பூருக்குள் சிறுவணிகர்களாக வந்து தங்க ஆரம்பித்துள்ளனர். அவர்களின் வருகையால் உள்ளூர் தொழிலாளர்கள், சிறு பின்னலாடைத் தொழில் முனைவோர், சிறு வணிகர்களிடையே ஒருவிதமான அசூயை ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மக்களில் சிலருக்கு நைஜீரியர்களைப் பிடிப்பதில்லை. அவர்களின் முரட்டுத் தோற்றம், கன்னங்கரிய நிறம், கரடுமுரடான போக்குகள், கலாச்சார வேறுபாடுகள் காரணமாக பதட்டமும் மோதல்களும் ஏற்படுகின்றன. உள்ளூர் பின்னலாடை வியாபாரிகள், நைஜீரியர்களைத் தங்கள் போட்டியாளர்களாகக் கருதுகிறார்கள். நைஜீரியர்களுக்கு வீடுகள், கடைகள் போன்றவற்றை வாடகைக்கு விடுவதில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவுகின்றன. உள்ளூர் மக்களை விட நைஜீரியர்களுக்கு வாடகைக்கு வந்தால் இரண்டு மடங்கு வாடகை கிடைக்கும் என்பதால் வீடு, கடை உரிமையாளர்கள் அதை விரும்புகிறார்கள். ஆனால் நைஜீரிய இளைஞர்களால் கலாச்சார சீர்கேடுகள் உண்டாகின்றன. நம்முடைய இளம்பெண்களை நைஜீரிய வாலிபர்கள் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். பெண் தொழிலாளிகளைக் காதலில் வீழ்த்துகிறார்கள். பின்னர் நாட்டை விட்டுப் போய் விடுகிறார்கள். திரும்ப வருவதில்லை. அவர்களிடம் தங்கள் இளமையைப் பறி கொடுத்த அபலைகள் நிராதரவாக நிற்கிறார்கள். அவர்களோடு பழகும் உள்ளூர் இளைஞர்கள் கஞ்சா, அபின், பிரவுன்சுகர், மரியுவானா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகின்றனர். கடும்வேகத்தில் வாகனங்களை ஓட்டி நைஜுரிய இளைஞர்கள் விபத்துக்களை உண்டாக்குகிறார்கள். மக்கள் அச்சத்துடன்தான் செல்ல வேண்டியிருக்கிறது”. இப்படிப்பல குற்றச்சாட்டுக்கள் பழிகளை எதிர்தரப்பு அடுக்குகின்றது. ஒரு நைஜீரிய இளைஞன் மேல் காதல் வயப்பட்ட ஒரு தமிழ்ப்பெண்ணையும் அந்த நைஜுரிய இளைஞனையும் சுற்றிப் பின்னப்பட்டுள்ள நாவல் ‘நைரா'. நைரா என்பது நைஜீரிய நாணயம் இதில் 'நைரா' என்பதை ஒரு குறியீட்டுச் சொல்லாக சுப்ரபாரதிமணியன் கையாண்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவும் அதன் மக்களும் உள்நாட்டு ஆயுதப் போராளிக்குழுக்களால் எப்படி யெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உள்நாட்டுப் போர்கள் நைஜீரியப் பொருளாதாரத்தை எவ்விதம் பாதிப்பிற்குள்ளாக்கி யுள்ளது என்பது குறித்தெல்லாம் அலசுகிறது சுப்ரபாரதி மணியனின் உலகளாவிய மானுடநேயம். இப்போதைய திருப்பூரின் பொருளாதாரம் மிகவும் பலவீனமாயுள்ளது. அதற்குச் சில முக்கிய காரணங்கள் உள்ளன. முதன்மையானது......... திருப்பூரின் ஏற்றுமதிகள் குறைந்து போயிருப்பதும், புதிய ஏற்றுமதிகளுக்கான கிராக்கியில்லாததும் தான். நாணய மதிப்பு அதன் தொடக்கம் எனலாம். அடுத்து 'நிஷிஜி' எனப்படும் மத்திய அரசின் புதிய 'விற்பனை மற்றும் சேவை வரிவிதிப்பு'. திருப்பூரின் தலைமேல் இறங்கிய இடி என்றே சொல்லலாம். உள்நாட்டுப்பருத்தி விளைச்சல் பாதிப்பு, பருத்தி இறக்குமதி பற்றாக்குறை இவற்றால் மூலப் பொருட்களின் விலையேற்றம். வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான், சீனா, மாலத்தீவு, மலேசியா போன்ற நாடுகளின் ஆயத்த ஆடைப்போட்டி. ஏற்கனவே வங்கிகளிலும், பிறநிதி நிறுவனங்களிலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், தொழிலாளர்களுக்கு கூலி, கொடுக்க முடியாமலும்......... உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை விற்க இயலாமலும் விழிபிதுங்கி நிற்கிறார்கள் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள். பின்னலாடை, நூற்பாலை, விசைத்தறி மற்றும் அவைச் சார்ந்த துணைத் தொழில்கள், தொழில்முனைவோர்கள் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். தொழிற்கூடங்கள் மூடப்படுகின்றன. தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கிறார்கள். வெளியூர்களிலிருந்து திருப்பூருக்குக் குடி பெயர்ந்தவர்கள் வருவாயிழப்புகளைத் தாக்குப் பிடிக்க இயலாமல் திருப்பூரை விட்டு வெளியேறுகிறார்கள். புதிய தொழிலாளர்கள் திருப்பூரை நோக்கி வருவது பெரிதும் குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் தவித்த திருப்பூருக்கு வாய்த்த சாபமாயிருந்தது. அதன் உப்புத்தண்ணீர்தான். இப்போது அதுவே அதன் சாயத்தொழிலுக்கும், சலவைப் பட்டறைத் தொழிலுக்கும் வாய்த்த வரமாகிவிட்டது. இதன் வளர்ச்சிகள் நலிவுற்றிருக்கும் இந்தச்சூழலில் அன் பொருளாதாரத்தை, வணிகத்தை கைதூக்கிவிட வேண்டிய மாநில அரசோ, மத்திய அரசோ எவ்வித வரிச்சலுகைகளா கடன் தள்ளுபடி உதவிகளோ, குறைந்த பட்சம் வங்கிக் கடன்களுக்கு வட்டி குறைப்பு சலுகைகளோ தருவதில் மெத்தனமாகவும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. திருப்பூரின் பின்னலாடைத் தொழில்வளம் விசைத்தறித் தொழில் நூற்பாலைகளின் செயல்திறன் பெருகப் பெருக அதன் பொருளாதார வளங்களும் பெருகின. ஆதனால் மாநில, மைய அரசுகளும் பலனடைந்தன. இந்த மாற்றங்களும், கடமைப்பு வளங்களும் சட்டென ஒரே நாளில் நிகழ்த்தப்பட்ட மாயமந்திர தந்திரங்களல்ல. பல்லாயிரம் மனிதத் தேனீக்களின் உழைப்பின் பலனும் பலமும் ஆகும். திருப்பூர் எனும் கொங்கு நாட்டுச் சிற்றூரை பெரும் தொழில் கேந்திரமாக, வணிகமையமாக, பலநூறு கோடி டாலர் அந்நியச்செலவாணி ஈட்டித்தரும் பெருநகராக உருவாக்கியதின் பின்னணியில் உழைப்பும், முனைப்பும் கொண்ட கொங்கு நாட்டு மக்களின் ஆற்றல் அடங்கியுள்ளது. இந்த பெருநகரத்தின் நிகழ்காலம் சோதனைகளும், சவால்களும் நிறைந்ததாக இருந்ததாலும் குன்றாத மன உறுதியும் தன்னம்பிக்கையும், சுறுசுறுப்பும் மிக்க திருப்பூர் மக்கள் சரிவுகள், தோல்விகளிலிருந்து மீண்டெழும் ‘போனிக்ஸ் பறவைகள்' என்று தோழர் சுப்ரபாரதி மணியன் ‘தேநீர் இடைவேளை', 'நைரா', 'சாயத்திரை' நாவல்களில் அழுத்தமாகப் பதிவிட்டுள்ளார். இவருடைய நாவல்கள் வெறும் புனை கதைகளல்ல. தன்னோடு பயணிக்கிற ரத்தமும் சதையுமான சகமனிதர்களின் வலிகளையும் அன்பையும் மகிழச்சியையும், இழிவுகளையும், அவலங்களையும், வெளிப்படுத்தும் அச்சு அசலான எழுத்தோவியங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திருப்பூர், எண் திசைகளையும் நூலிழைகளால் பிணைக்கும் பட்டாம்பூச்சிகளின் பூந்தோட்டம், வலசைவரும் தொழிலாளிப் பறவைகளின் சரணாலயம் நொய்யல் நதியில் மீண்டும் புதுவெள்ளம் விரைவில் கரைபுரளக் காண்போம்.
புதுச்சேரி இலக்கிய நண்பர்கள் பற்றி முன்னர் பல சமயங்களில் நான் எழுதிய 20 கட்டுரைகளை 9 புதுச்சேரி இலக்கிய நண்பர்கள் பற்றி முன்னர் பல சமயங்களில் நான் எழுதிய பல கட்டுரைகளைக்கண்டபோது அவற்றை ஒரு தொகுப்பாக்க எண்ணம் வந்தது..சிலபடைப்புகளையும் சேர்த்துக் கொண்டேன். இணைதளத்திலிருந்து நன்றியுடன் எடுத்துப் பயன்படுத்தி உள்ளேன்..பாண்டிச்சேரி பற்றிய ஒரு வகை ஆவண நூலாக இது வடிவமைக்கப்பட்டு விட்டது இப்படி ..பிரபஞ்சன், மா. அரங்கநாதன் உள்ளிட்டப் படைப்பாளிகள் பற்றி நான் எழுதியவை கிடைக்காமல் போனது வருத்தமே தந்தது, இதில் இடம் பெற்றப் படைப்பாளிகள் : சுந்தரமுருகன்/ புதுவை யுகபாரதி/ராஜ்ஜா/இரா. சம்பத்/. சொ. சேதுபதி/ கி. நாச்சிமுத்து/ பி என் எஸ் பாண்டியன்/ என் ராஜசேகர்/ ரா.ரஜினி/ கி ராஜநாராயணன்/ க.பஞ்சாங்கம்/ பிரதிபா ஜெயச்சந்திரன்/ etc ( முகநூலில் போட வேண்டாம் . பிறகு பார்க்கலாம். ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பவும் ) ஒரு குத்துப் பருக்கை : சுப்ரபாரதிணியன் அழகு பாண்டி அரசப்பன் சிறுகதைகள் வட்டார வழக்கு இலக்கியம் சார்ந்த புறக்கணிப்பு மனம் பலருக்கு உண்டு .பொதுவான இலக்கிய வகை அம்சங்களில் அக்கறை கொண்டவர்களுக்கு இந்த வட்டார வழக்கு கசப்பாகவே இருக்கும் ஆனால் அவற்றில் இருக்கிற ஜீவனும் மொழிசார்ந்த உள்ளடக்கமும் அந்த வட்டார மக்களின் வாழ்விலும் கவனிக்கப்பட வேண்டியதாகும் அந்த வகையில் இந்தத் தொகுப்பில் அழகு பாண்டி அரசப்பன் தன்னுடைய கதைகளை தேனி வட்டார மொழி சார்ந்தும் அனுபவம் சார்ந்தும் முழுமையாக உள்ளடக்கி வைக்கிறார் தன் கதைகளில் . தன் பெயரை போடுகிற போது தன் சொந்த கிராமம் முத்துலாபுரம் என்று குறிப்பிடுவது கூட அவரின் சிறப்பாக இருக்கும் என்று சொல்லலாம் அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் முழுக்க தேனி பகுதி மக்களின் வட்டார வழக்கும் வாழ்வியலும் அவர்களுடனேயே நிறைந்திருக்கிறது அந்தப் பகுதி மனிதர்களின் வாழ்க்கையை சரியாகவே சொல்லி இருக்கிறார் 25 ஆண்டு காலம் அந்த ஊரில் வாழ்ந்தவர். பிறகு திருப்பூருக்கு இடம்பெயர்ந்து வந்து பனியன் தொழிலாளியாக இருந்தவர். இப்போது தேனீர் கடை நடத்தி வருகிறார் ஆனால் 25 ஆண்டுகாலம் அந்த ஊரில் வாழ்ந்த அனுபவங்களும் அந்த மனிதர்கள் சார்ந்த உணர்வுகளும் சரியாக உள்வாங்கிக் கொண்டு இந்த கதைகளை படைத்திருக்கிறார் . இந்தியச்சமூகம் என்பது சாதியப் படிவங்களால் ஆனது. சாதியில்லாமல் ஒரு மனிதன் வாழ்வதில்லை. மதத்தை விட சாதி என்னும் நிறுவனம் கிராமங்களில் புரையோடிக்கிடப்பதை பல கதைகளில் உள்ளீடாகக் கொள்ளலாம்.அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை அதிலும் பெண்மணிகள் சார்ந்த சித்திரங்கள் அபாரமானவை .புது மணப்பெண் ஊர் கிணற்றில் சென்று நீ எடுக்கிற சம்பவம் முதல் கதையில் பதிவாகியிருக்கிறது அந்த கிணற்று நீரில் தான் அவளின் முதலிரவு பால் கலந்து இருக்கிறது என்ற குறிப்பு கதை முடிகிறபோது அந்த கிராமத்து நீரை அருந்துகிற அனுபவம் ஏற்பட்டு விடுகிறது . தெய்வங்களின் வடிவமும் குணமும் அவை சார்ந்த சமுகத்தின் தேவைகளையொட்டி அமைந்திருப்பதை இந்தக் கதையில் இடம் பெறும் சடங்கு சம்பிரதாயங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. குடிகார கணவன் சம்பாதிப்பதை எல்லாம் குடிப்பதற்காகவே செலவிடுகிறான். ஆனால் அவன் மீது அவனின் மனைவி அக்கறை கொண்டவள் .அவன் எப்போது வருவான என்று இரவு நேர நேரத்தில் சூடாக சோறு செய்து காத்திருக்கிற அவளைப் பற்றிய ஒரு அற்புதமான சித்திரம் தினக்கூலி கதையில் இருக்கிறது ..தண்டட்டி கதையில் வரும் கிழவி, முதிய வயதான அவள் அவளின் தண்டட்டி எப்படியோ அடமானம் போகிறது ஆனால் அதை மீட்டெடுக்க அவள் நிறைய முயற்சிகள் எடுத்துக் கொள்கிறாள் .ஆனால் அந்த தண்டட்டி குடிகார கணவனின் போதை பழக்கத்திற்கு போகிற போது அவள் நிலையழிந்து போகிறாள் அவளின் சாவு கூட அதன் பொருட்டே நிகழ்ந்துவிடுகிறது , பூர்வீக வீடு கதையில் வரும் பெண்மணி ரசித்து காப்பி குடிப்பது ஆகட்டும் அவள் வாழ்வை அமைத்துக் கொள்வது ஆகட்டும் மிக அற்புதமான உழைப்பால் நிறைந்திருக்கிறது ஆனால் அந்த வீட்டில் அவள் இறந்து போக வீட்டிலுள்ள மரக்கட்டைகள் கூட பணம் ஆகின்றது பிள்ளைகளுக்கு.. .அங்கிருந்த அவரை கால் பந்தல் காணாமல் போகிறது அடுப்பங்கரை உடைந்து போகிறது சிவந்த மண் பானைகளும் காணாமல் போகின்றன .சிதைந்து கூரை இல்லாமல் விடிந்தும் விடியாமல் மழைக்கும் வெயிலுக்கும் வாசனை மாறாமல் குப்பைக்கீரை செடி வளரும் ஒரு விஷயத்தை அழகிய கவிதை போல் சொல்லியிருக்கிறார் .கிராம மனிதர்களை பற்றி சொல்லுகிற போது அவர்களைப் பற்றிய விவரங்கள் துல்லியமாக விவரிக்கப்பட்டு இருக்கின்றன .வியாபாரி துண்டு போட்டு பேரம் செய்கிற வித்தையை சொல்கிறபோது அந்த பேரத்தில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகையான வழக்குச் சொற்களும் அவை சார்ந்த அர்த்தங்களும் ஆச்சரியப்படுத்துகின்றன பல கதைகளில் உரையாடல் பலமாக இருக்கிறது. அந்த உரையாடல் முழுக்க ஜீவனுள்ளது. திருப்பமும் பல கதைகளின் உள்ளீடாக இருக்கிறது மாடு விக்கிறவன் ஆடு விற்பனைக்கு போகிற சாசகம் கூட அப்படித்தான் . தேனி சார்ந்த மக்களின் வரலாறும் பல தொன்மங்களும் கதைகளின் ஊடாக சாதாரணமாகவே இடம்பெற்றிருக்கின்றன அப்படித்தான் முத்துலாபுரம் ஊரிலிருந்து இடம்பெயரும் மக்கள் பற்றிய ஒரு வரலாறும் நந்தி சிலை பற்றியத் தொன்மமும் முக்கியமானவை .குழந்தைகளின் உலகமும் கல்வித் தரமும் பல கதைகளில் வந்துபோகின்றன .படிக்காத பையன்களை அடித்து சிரமப்படுத்தும் ஆசிரியர்களிடம் மனிதாபிமான மனம் மேலோங்கி நிற்கிறது ஆசிரியரின் முயற்சி டீக்கடை வேலையில் சேர்த்துவிட அந்த பையனின் மனம் ஒரு வகையில் விடுதலை கொள்கிறது என்பது முதல் மேஜை போன்ற கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது மனிதர்களைப் போலவே அருவமான பொருட்களும் கவித்துவத்துடன் மாறிவிடுகின்றனர். அப்படித்தான் உப்போடை வீடு மற்றும் பூசாரி வீடுகள் அமைகின்றன .அழகு பாண்டி அரசப்பன் காட்டும் மனிதர்கள் அன்பானவர்கள் ..நேசத்தில் மிகுதியானவர்கள் .. அஞ்சாதவர்கள்.. மைக் டெஸ்ட் மணி முதல் பல மனிதர்களை அவர் இப்படித்தான் காட்டுகிறார் .இந்த மனிதர்கள் மத்தியில் ஏற்படுகிற உறவுகளைப்பற்றி கடைசிக் கதை சொல்கிறது அப்பனும் மகனும் உட்கார்ந்து பேசுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறது . அவர்களின் வாழ்க்கை பற்றி நிறைய சொல்கிறார் அவர் தேநீர் கடையை அண்மைக்காலத்தில் நடத்தி வருகிறார் .அந்த கடையில் நடக்கும் விசயங்களை அடையாளமாக இரண்டு கதைகளில் விவரித்திருக்கிறார் . ஒரு கதையில் வெளியூர் ஆளுக்கு வேலை வாங்கி தருகிற மனிதாபிமான செயல் இன்னொரு கதையில் தேனீர் கடை எப்படி பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை எண்ணங்களை பிரதிபலிக்கும் இடமாக மாறி இருக்கிறது என்பதை நுணுக்கமாக சொல்லியிருக்கிறார் . டீக்கடை பெஞ்ச் என்பது எல்லோர் மனதிலும் உருவாக்கும் சித்திரங்கள் நமக்குச் சகஜம் .சிறுகதை நோக்கில் அல்லாமல் இயல்பாக எழுதப்பட்டு இருந்தாலும் சில கதைகளில் அவை முடிகிற கவித்துவ எண்ணங்களால் அவை சிறப்பு பெறுகின்றன ..திருடன் வந்து போகிறான் ஊரில் மக்களின் இயல்பு பின்னர் எப்படி இருக்கிறது ,நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பது பற்றிய சித்திரம் இந்த வகையில் சொல்லலாம் ,அதேபோல உரையாடலில் இடம்பெறுகிற மனிதாபிமான செல்வங்களான மனிதர்களும் அவர்களின் இயல்புகளும் மிகத்துல்லியமானவை. அதை வெளிப்படுத்த உபயோகப்படுத்தும் சொற்கள் விசேசமானவை .அப்படி பேச்சுப் புழக்கத்தில் இருக்கிற சொற்கள் ஆச்சர்யமூட்டுகின்றன அவையெல்லாம் அகராதிக்குள் பொதிந்து வைக்க வேண்டியவை .தேனி மண்ணை சின்னவயதிலிருந்து சுவைத்த மனிதன் கதைகள்சொல்லிச் சொல்லி திளைக்கிற கதைகள் இவை மைக் டெஸ்ட் மணி கதையில் விவரிக்கும் குலுக்க அல்லது குலுக்கை தானியங்களை சேமிக்கிற இடமாக இருக்கிறது அப்படித்தான் தேனி மக்களின் அனுபவங்களையும் பேச்சுவழக்கு உணர்வுகளையும் அழகு பாண்டி அரசப்பன் குலுக்கையாக மாறி எவ்வளவோ விஷயங்களை சேமித்து வைத்திருக்கிறார் அவையெல்லாம் தமிழுக்கு இனியும் வரமாகத்தான் இருக்கப்போகிறது ரூபாய் 150 கவிநிலா பதிப்பகம் திருப்பூர்
தோழர் எஸ் ஏ காதர் மற்றும் திருப்பூர் நாடக முயற்சிகள் -சுப்ரபாரதிமணியன் திருப்பூர் பகுதி நாடக முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தோழர் எஸ் ஏ காதர் அவர்களிடம் அவரின் நாடக அனுபவங்களை எழுதச்சொல்லி பல முறை வலியுறுத்தினேன். அவரின் பல படைப்புகளில் திருப்பூர் பகுதி நாடக முயற்சிகள் பற்றியக் குறிப்புகள் உள்ளன.இந்நூலில் அதை விரிவாக சொல்லியிருக்கிறார். இது ஒரு நல்ல பதிவு. எண்பதுகள் வரை இயங்கிய பல நாடகக்குழுக்கள் பற்றிய அரியத்தகவல்கள் இதில் உள்ளன. தோழர் எஸ் ஏ காதர் அவர்களின் பள்ளி நாடக முயற்சிகள் முதல் ( எட்டு வயதில் முதல் நாடக அனுபவம் அவருக்கு ) எண்பதுகளில் இருந்த நாடக முயற்சிகள் வரை விரிவாகவேச் சொல்லியிருக்கிறார். நான் சிறு வயதில் வசித்து வந்த பகுதி சார்ந்த வரலாற்றின் சிறு பகுதியாகவும் இந்த நாடக முயற்சிகள் உள்ளன. நாடகம் நடத்தச் சிரமப்பட்டது, நாடகக் கலைஞர்களின் இயல்புகள், குடும்பச்சூழல் உட்பட பல விடயங்களை நினைவில் கொண்டு எழுதி இருக்கிறார். தோழர் எஸ் ஏ காதர் அவர்களின் கட்டுரை முடிகிற இடத்தில் நவீன நாடகப்போக்கு ஆரம்பித்ததைக் கீழேக்குறிப்பிட்டிருக்கிறேன் * நாடகத்தில் ஈடுபாடு கொண்ட ஆழ்வைக்கண்ணன் அவர்கள் பல உரைகளில் நாடகம் என்பது ” போலச் செய்தல்” என்பதாய் குறிப்பிட்டிருக்கிறார். நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கை.. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் என்கின்றனர் மரபாளர்கள்.. தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார். 'நாவில் வந்ததைப் பாடுவோம் நாடகம் தினம் ஆடுவோம் நாங்கள் சிறுவர் எங்கள் பிழையை நீங்கள் பொறுப்பீர் நாளுமே' எனப் பாடிக்கொண்டே சிறுவர்களை தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அவர் மேடையேற்றியபோது, தமிழ் நாடக உலகம் புதிய பரிணாம வளர்ச்சிக்குத் தயாராக இருந்தது. தமிழ் நாடகக் கலையை இவருக்கு முன், இவருக்குப் பின் என்று பிரிக்கலாம். அந்த அளவுக்குத் தமிழ் நாடகங்களில் இவரது பங்கு அளவிட முடியாதது. வள்ளி திருமணம், பவளக் கொடி, வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, இராம இராவண யுத்தம், சித்திராங்கி விலாசம் என, அவர் தந்த நாடகங்கள் பல இன்னும் மேடையேறிக் கொண்டிருக்கின்றன. அவர்தான், தமிழ் நாடக முதன்மை ஆசிரியர், தமிழ் நாடக விடிவெள்ளி எனக் கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களைத் தொடர்ந்து நாடக மரபு வலுப்பெற்றது.. எண்பதுகளில் எங்கள் அனுபவம் இப்படி இருந்தது : . பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை. இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள் நடத்தப்பட்டன. இவற்றை ஆரம்பத்தில் நானும், பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் . நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . இவற்றில் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை. எஸ் ஏ பாலகிருஷ்ணன் நாடகங்களை இவ்வாண்டில்தான் நான் கனவு பதிப்பகம் மூலம் “ மறு விசாரிப்பு “ என்ற நாடக நூலை வெளியிட்டுள்ளேன். இவ்வாண்டில் சிறுவர்களுக்கான என் நாடக நூல் “ பசுமைப்பூங்கா “’ வும் வெளிவந்திருக்கிறது என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும் “ மணல் வீடு “ என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற “ பசுமை எனும் தாய்மை “ என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு “ என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும் பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன. இவற்றில் ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் “ நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின் “ வயிறு “ , , , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “அறந்தை நாராயணனின் மேற்பார்வையிலும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது எண்பதுகளின் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன, ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றன. அந்த வகையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாதக் கூட்டங்களில் அரசியல் கவிதைகளை தோழர் எஸ் ஏ காதர்-தனி நபர் நடிப்பு - மோனே ஏக்டிங்க் வகையில் நாடகமாக்கினார் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்அண்மை கால மாவட்ட மாநாட்டில் தோழர் எஸ் ஏ காதர், ஸ்ரீநிதியின் பங்கேற்பில் மதம் என்ற நாடகம் நடைபெற்றது. கோவை திலீப்குமாரின் சிறு நாடகமும் அம்மாநாட்டில் அரங்கேறியது . (தோழர் எஸ் ஏ காதர் 25க்கும் மேற்பட்ட முழு நீள மேடை நாடகங்களை 70,80 களிலும் எழுதி இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் வயது 72. இன்னும் நாடக ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். அவர் இரு நாவல்கள் உட்பட சில நூல்களை வெளியிட்டுள்ளார் . மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன. இவற்றையெல்லாம் பதிவு செய்யும் இந்தத் தருணம் மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது. அந்த மகிழ்ச்சியில் தோழர் எஸ் ஏ காதர் அவர்களுடன் நானும் பங்கேற்கிறேன் அவர் தொடர்ந்து நாடக முயற்சிகளில் பங்குபெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவிக்கிறேன்.இந்த நூலில் குறிப்பிடும் விரிவான செட் நாடக அமைப்பிலிருந்து விலகி எளிமையான புரசீனியம் தியேட்டர் , வீதி நாடகங்களை நடத்தும் வாய்ப்புகளை இனியும் இலக்கியக்கூட்டங்களில் அவர் ஏற்படுத்திக்கொள்வார் என நம்புகிறேன். அது நாடக உலகிற்கு பெரும் கொடையாக அமையும் இந்தத் திருப்பூர் முயற்சிகளில் ஆழ்வைக்கண்ணனும் சேர்ந்து கொள்கிறார். திருப்பூர் குமரன் நாடகமுயற்சிகள் அதில் ஒன்று . அதன் நாடகப்பிரதி தற்போது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்து மாவட்ட மைய நூலகங்களில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ,பள்ளி கல்லூரி மேடைகளில் மாணவர்களை வைத்து நாடகமாக நடத்தியும், நடித்தும் காட்டி உள்ளார்.. . 2004 இல் நடைபெற்ற திருப்பூர் குமரன் நூற்றாண்டு விழாவில் இந்த நாடகம் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகள் அனைவரையும் அமர வைத்து அவர்கள் முன்பாக இந்த நாடகம் நடித்துக் காட்டப்பட்டது அனைவரின் வரவேற்பு பெற்றது. தமிழக அரசு சார்பில் நடைபெற்ற குமரன் நூற்றாண்டு விழா வில் பள்ளி மாணவர்களை வைத்து நாடகத்தை அரங்கேற்றப்பட்டது இதன் தொடர்ச்சியாக அவர் என் “ பசுமைப்பூங்கா “ சிறுவர் நாடக நூலில் உள்ள நாடகங்களையும் எளிமையான நாடகங்களாக்கியிருக்கிறார். இந்த அவரின் நாடகமுயற்சிகளுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்
திருப்பூர் நாடக முயற்சிகள் –சுப்ரபாரதிமணியன் அந்திமழை நாடகச் சிப்பிதழ் பல சுவையானக் கட்டுரைகளைக் கொண்டிருந்தது. திருப்பூர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது எண்பதுகளில் எங்கள் அனுபவம் இப்படி இருந்தது : . பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை. இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள் நடத்தப்பட்டன. இவற்றை ஆரம்பத்தில் நானும், பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் . நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . இவற்றில் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை. எஸ் ஏ பாலகிருஷ்ணன் நாடகங்களை இவ்வாண்டில்தான் நான் கனவு பதிப்பகம் மூலம் “ மறு விசாரிப்பு “ என்ற நாடக நூலை வெளியிட்டுள்ளேன். இவ்வாண்டில் சிறுவர்களுக்கான என் நாடக நூல் “ பசுமைப்பூங்கா “’ வும் வெளிவந்திருக்கிறது என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும் “ மணல் வீடு “ என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற “ பசுமை எனும் தாய்மை “ என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு “ என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும் பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன. இவற்றில் ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் “ நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின் “ வயிறு “ , , , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “அறந்தை நாராயணனின் மேற்பார்வையிலும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது எண்பதுகளின் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன, ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றன. மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன.
வியட்நாம் சுப்ரபாரதிமணியன் இந்திய சோவியத் கலாச்சாரக்கழக நண்பர்களுடன் வியட்நாம் சென்று வந்த அனுபவத்தை இந்த நூலில் எழுதியிருக்கிறார். சுப்ரபாரதிமணியன் இந்திய சோவியத் கலாச்சாரக்கழக நண்பர்களுடன் வியட்நாம் சென்று வந்த அனுபவத்தை இந்த நூலில் எழுதியிருக்கிறார். அவரின் பிற பயண நூல்கள்: * மண்புதிது ( ஐரோப்பா, இங்கிலாந்து பயண அனுபவம்), ” எட்டு திக்கும்” “ ஓ.. மலேசியா ” “ அண்டை வீடு “ “ பாலின பேத வன்முறையும் பங்களாதேஷ் அனுபவங்களும் “ . 18 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 80 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர் .. ” சாயத்திரை “ என்ற சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய நாவலுக்கான தமிழக அரசின் பரிசு, சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய “., கதா விருது “ உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர். அவரின் நாவல்கள் ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளன.சமீபத்தில் எழுத்து அறக்கட்டளையின் 2020ஆம் ஆண்டிறகான சிறந்த நாவலுக்காக 1 லட்சம் ரூபாய் விருது பெற்ற அவரின் நாவல் “ அந்நியர்கள் “ Rs 75 . Niveditha Publications Chennai published
தோழர் தேனரசன்: சுப்ரபாரதிமணியன் ” வாசலிலே மரண நெடி வாழ்ந்ததை மனத்திரையில்…. தன்னை இழந்துலகு பெறும் தத்துவத்தின் ஞானம்.. ..ஓ” தோழர் தேனரசன் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் இருந்தபோது பல சமயங்களில் அவரின் இந்த கவிதை வரிகளை மனதில் கொண்டுவந்திருக்கிறேன் சென்ற ஆண்டு இரண்டு வானம்பாடி இயக்கக் கவிஞர்களைச் சந்தித்தேன் .ஒருவர் சக்திக் கனல். மெலிந்த உடல் ஆனால் திடமான மன பலம் . உடல்நலக்குறைவு எதுவுமில்லை உற்சாகமாக இருந்தார். சந்தித்த இன்னொருவர் தோழர் தேனரசன் .அவரின் உடல்நலக்குறைவு மனதில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது “ இந்த மழை போதாது இன்னுமிது பொழியட்டும் “ என்று கவிதை காட்டும் வாழ்க்கையாகட்டும், வாழ்க்கை அனுபவம் ஆகட்டும் எல்லாவற்றையும் வரவேற்றவர் உடல்நலக்குறைவால் தொடர்ந்து இருந்தது உறுத்திக்கொண்டே இருந்தது தமிழ் கவிதையில் அந்நிய உலோக வாசனை கமழும் சூழலில் நம் மண் வாசனையை முழுக்க “ மண் வாசலில் ”கொண்டுவந்தவர் . ” மழை விழுந்தால் சேறாகும் அது மண்வாசனை ” என்று சொன்னவர் ஆனால் நோய் விழுந்து அவருடைய உடல் சேறாகி விட்டது என்பதை பல சமயங்களில் கண்டிருக்கிறேன் “ நான் எந்த நான்” என்று அவர் கவிதையில் கேட்பார் அந்த தத்துவ விசாரத்தை அவர் என்றும் மனதில் கொண்டிருந்தார் ஆனால் மனிதநேயத்துடன் கவிதையையோ மனிதர்களையோ அணுகுவதுதான் அவருடைய சிறந்த பாதையாக இருந்திருக்கிறது .அதுவே அவரின் “ நானாக ”விளங்கியிருக்கிறது “ வியப்புகளின் விளிம்பு எல்லை ஆனந்தங்களின் பரிபூரணம் அனுபவங்களின் மகோன்னதம் “ என்று கவிதையை வரித்துக் கொண்டவர் தொடர்ந்து நாங்கள் எல்லாம் எழுதிக் கொண்டிருப்பதை பற்றிச் சொல்லுகிற போது ஆனந்தம் கொள்வார் .அப்படி அவர் ஆனந்தம் கொள்வதற்கே நிறைய எழுத வேண்டும் என்று எனக்கு தோன்றும். “ நில்லும் எனக்கினி நேரமில்லை நீண்ட வழி போக வேண்டும் அம்மா ”என்ற அவரின் ஒரு கவிதை சொல்வது எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருந்திருக்கிறது . அந்த நீண்ட வழியை காட்டியவராகத்தான் தோழர் தேனரசன் இருந்தார், “ காலம் என்னைக் கவிஞனாய் சமைத்தது கவிதைகளால் நான் ஒரு காலத்தை விதைத்துவிட்டேன் “ என்று சொன்னவர். புதிய எழுத்தாளர்களின் தலைமுறையில பலர் கவிதை வித்துக்களை தூது விட்டு சென்றிருக்கிறார் . பொள்ளாச்சி இளம் கவிஞர்கள் பட்டாளமே அதற்கு அடையாளம் “வந்துபோகும் சுகதுக்கங்கள் அலை போல வாழ்க்கைக் சத்தியமாய் நிற்கும் கடல் போல” என்று கவிதையில் சொன்ன தோழர் தேனரசன் ”காணும் இயற்கையை கேட்கப் பழகியதால் கணக்கில்லாத ஞானம் கைவசமாகும் ” என்று வழி காட்டியவர் .அந்த ஞானத்தை கவிதை இயக்கம், பள்ளி செயல்பாடுகள், சமூக அக்கறைகளில் தொடர்ந்து காட்டியவர் மரண பிச்சை என்ற அவர்களுடைய கவிதை ஒன்றில் இடம் பெற்றிருக்கிற எலும்புக்கூடு தோற்றம்தான் அவரைப் பற்றிய நினைக்கிற கடந்தப் பல ஆண்டுகளில் மனதில் வந்து நின்றது ”பச்சை அரும்புக்கு பாடம் ஆகிறதே “ என்று மரணத்தைப்பற்றி சொல்லியிருப்பார். கொரானா தொற்று காலத்தில் அப்படி ஒரு மரணம் அவருக்கு வாய்த்தது என்பது நினைத்துப் பார்க்கையில் சங்கடம் தருவதாக இருக்கிறது ”இந்த மழை போதாது இன்னும் இது பொழியட்டும் ” என்ற ஆசையை நாம் இலக்கிய தளத்தில் விதைத்துக் கொண்டு இருப்போம். அது அவருக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும்
வணக்கம். இன்று என் வாழ்வில் ஓர் இனிய நாள். எழுத்தாளர் திருமிகு சுப்ரபாரதிமணியன் அவர்கள் தன் கனவு மெய்நிகர் சந்திப்பினைத் தொடர்ந்து நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இன்று அதில் என் படைப்பு அனுபவம் குறித்துப் பேசுவதற்கு நாலைந்து வாரங்களுக்கு முன்பே கேட்டார். மகிழ்ச்சியோடு சம்மதம் சொன்னேன். அடுத்து உங்களின் படைப்புகள் பற்றி அவற்றின் அட்டைப் படங்களை அனுப்பச்சொன்னார். செய்தேன். சந்திப்பு நிகழும் விவரத்தைச் சொல்லி கூகுள் மீட் விவரங்களைத் தந்தார். எல்லாவற்றையும் அவர் முறையாக செய்தது எனக்குப் பிடித்திருந்தது. நான் இப்படித்தான் ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டால் அதைப் பார்த்துப்பார்த்து ஒழுங்காகச் செய்வேன். சொன்னபடி நிகழ்வு இன்று 6 மணிக்குத் தொடங்கிவிட்டது. இந்நிகழ்வில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த (தற்போது சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றும்) கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள், நான், மற்றும் சுபசெல்வி (நாவலாசிரியை) பேசுவதாக இருந்த வரிசையில் என்னை முதலில் பேசச் சொன்னார்கள். மனந்திறந்து என் படைப்பு அனுபவம் பற்றிப் பேசினேன். மன நிறைவாக இருந்தது எனக்கு. கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களைப் பற்றிப் பல்லாண்டுகளாகக் கேள்விப்பட்டிருந்தாலும் இன்றுதான் இந்த இணைய நிகழ்வில்தான் நேரில் பார்த்தேன். அருமையான குரல். அருமையான கவிதைகள். அருமையான வாசிப்பு. அத்தனை ஆர்வமுடன் தன் கவிதைக்கான அனுபவத்தைப் பகிர்ந்தார். இன்னொரு வியப்பான செய்தி என் புகைப்படக்கவிதைப்போட்டியில் வெளியாகும் சில கவிதைகளைத் தன் மக்கள் மனம் இதழில் அவ்வப்போது பிரசுரம் செய்த ரகசியத்தைச் சொன்னார். தொடர்ந்து புகைப்படக்கவிதைகளை அனுப்பச்சொன்னார் தன் இதழில் பிரசுரம் செய்வதாகக் கூறியுள்ளார். எத்தனை மகிழ்ச்சியானது இது. FB Thanjavur Harani சுபசெல்வியின் படைப்பு அனுபவம் எளிமையாகக் குழந்தையின் அசைவுகளைப்போல அழகாக அமைந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தூரிகை சின்னராஜ் ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் அழகாகத் தொகுத்துப் பாராட்டினார் FB Thanjavur Harani நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தூரிகை சின்னராஜ் ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் அழகாகத் தொகுத்துப் பாராட்டினார் FB Thanjavur Harani . நல்ல குரல். அப்புறம் இடையில் நல்ல கருத்துரைகள் பரிமாறப்பட்டன. ஒரு மனநிறைவான நிகழ்வு. அன்பின் நன்றிகள் சுப்ரபாரதிமணியன் சார்.
கனவு கல்வி விருது கனவு கல்வி விருது கல்வித்துறையைச் சார்ந்த படைப்பிலக்கியத்தில் அக்கறை கொண்ட ஆசிரியர்களுக்கு மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிறு நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்டது. எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி விருதை அளித்தார். நாமக்கல் நாதன் , பேரா பிரவிணா, கணிதம் பழனிவேல், பொன் சண்முகசுந்தரம், ஜெரோஷா, பேரா . கோமளசெல்லி உட்பட பலர் விருது பெற்றனர், விழாவுக்கு சி.சுப்ரமணியம் தலைமை தாங்கினார், சுப்ரபாரதிமணீயன், ஆழ்வைக்கண்ணன், துசோ பிரபாகர், அழகுபாண்டி அரசப்பன், செம்பருத்தி விஸ்வாஸ் உட்பட எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். கவிதைகள் வாசிப்பும் உரைகளும் நிகழ்ந்தன. இந்த விருதிதைனை கனவு இலக்கிய வட்டம் அளித்தது.
புதியநூல் வெளியீடு ” சிலைகள் என்பது காக்கைகள் எச்சமிட இருக்கும் இடம் போலில்லாமல் அந்த சிலைகளில் இருக்கும் மகான்களின் சிந்தனைகள் , எண்ணங்கள் நட்டைமுறைப்படுத்தலில் அவர்களுக்கு கவுரவம் கிடைக்கும்.திருப்பூரில் அமைய உள்ள தமிழன்னை சிலைக்கு என்னாலான முயற்சிகளையும் உதவியையும் செய்வேன்” என்று திரு . க. செல்வராஜ் ( திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர்- தெற்கு ) சுப்ரபாரதிமணியனின் புதியநூல் ” தொலைக்காட்சி ரிமோட் “ சிறுவர் கதைகள் வெளியீட்டுப் பேசும்போது குறிப்பிட்டார்,. நூலை தனியார் காப்பீட்டுக்கழக அதிகாரி குமார் , எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ஆகியோர் பெற்றுக்னொண்டனர் 29/10/21 மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு அருகில், திருப்பூர் தலைமை : திரு .சி சுப்ரமணியம் ( மக்கள் மாமன்றம்) தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ( ஓய்வு ) குமார் சிறப்புரை ஆற்றினார் : “ ஆட்சிமொழியிலும் தமிழ் இங்கு தொடர்ந்து அலுவலக ரீதியாக நடைமுறைப்படுத்தப்படுவது இப்போது தமிழ் நாட்டில் ஆரோக்யமானது . எழுத்தாளர்களை கவுரவப்படுத்த பல விருதுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழில் அர்ச்சனைக்கான ஆணை அமல்படுத்தப்படுகிறது. எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணை நடைமுறைப்படுத்தப்படுவது சமூக சீர்திருத்த நடவடிக்கையாகும், நீதிமன்ற மொழியாக தமிழ் அமல்படுத்தப்பட வேண்டும் “ என்றார் மக்கள் மாமன்றம் நிர்வாகிகள் ராஜா, பாண்டியராஜன், மற்றும் லயன் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்கள் என பலர் திரண்டு கலந்து கொண்டனர் / சுப்ரபாரதிமணியன் 94861 01003 )
திருமூர்த்தி மண் ( படுகளம் 2 ) நாவல் வரலாறுகள் தொன்மங்களாகும் திருமூர்த்தி மண் ( படுகளம் 2 ) நாவல் / சுப்ரபாரதி மணியன் வரலாறுகள் தொன்மங்களாகும். தொன்மங்களும் வரலாறாகும்.திருமூர்த்தி மலைப் பிரதேசம் சார்ந்த இரண்டு தொன்மங்கள் இந்நாவலில் உள்ளடங்கி அந்தத் தொன்மக் கதாபாத்திரங்கள் இன்றைய யதார்த்த வாழ்விலும் தென்படுவதை இந்நாவல் சொல்கிறது. திருமூர்த்தி மலையின் நாயகர்களும், உச்சி மாகாளியும் அந்த வகை தொன்மங்களில் நிறைந்திருக்கிறார்கள் தொன்மங்களைப்போலவே பெண்கதாபாத்திரங்களும் தொன்மங்களாகி படிமங்களாகி நிலைத்து நிற்பவை. அந்த வகையில் இந்த நாவலில் தென்படும் பெண்கள் தாய்மையின் அடையாளமாக இருக்கிறார்கள். உழைப்பின் சிகரங்களாக இருக்கிறார்கள். கல்வி குறித்த உரிமைகளை நிலைநாட்டுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆண்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து விலகிச் செல்பவர்களாக இருக்கிறார்கள் விவசாயமும் பஞ்சாலையும் திருமூர்த்தி மண்ணின், உடுமலை மண்ணின் அடையாளங்களாக இருந்து பல்வேறு மாறுதல்களை அடைகின்றன. நவீன யுத்திகளும் வியாபாரப்போக்குகளும் விவசாயத்தை விட்டு விவசாயிகளை விலகச் செய்கின்றன். பனியன் உற்பத்தி, பவர்லூம் -– விசைத்தறி நெசவில் ஈடுபடச்செய்கின்றன. நுகர்வு சார்ந்த எண்ணங்கள் பாசப்பிணைப்புகளைத் தவிர்த்து விட்டு உறவுகளிலேயே எதிரிகளாக்கிவிடுகின்றன குடும்ப ஆடம்பரச் செலவுகளால் சில குடும்பங்கள் சிதைகின்றன. சாதிகள் சார்ந்த சார்பும் வேற்றுமையும் மனிதர்களைப்பிரித்துப் போடுகிறது. மதுரை, திருப்பூர், உடுமலை மக்களின் வாழ்க்கைகளால் இந்த நாவல் நிரம்பி வழிகிறது. தலித்சமூகம் சார்ந்தவர்களின் எழுச்சியும் ஆதிக்கசாதி சார்ந்தவர்கள் கல்வி பெற்று விளங்குவதும், ஆலை சொந்தக்கார்ர்கள் இந்த சாதிய அடுக்குகளில் நிறைந்திருப்பதும் காட்டப்பட்டுள்ளன. . 50 வருட உடுமலைப்பிரதேசத்தைச் சார்ந்த சுமார் 40 கதாபாத்திரங்களின் வாழ்வியல் அனுபவங்கள் ஊடுபாவாக இந்த நாவலில் விளங்குகின்றன . ( அந்தக்கதாபாத்திரங்களின் கோட்டுருவங்களைகொண்டு அவர்களை உயிர்பித்திருக்கிறார் ஓவியர் ஜீவா )பள்ளிபுரத்தில் கூத்தம் பூண்டி ஆத்தாளின் கூட்டுக்குடும்பம் இதன் மையம். கவுண்டர்களின் விவசாய பின்னணி ஆலைக்குச் சொந்தமான சோமுத்தேவரின் குடும்ப தடங்கள் , எளிய மக்களாய் கிண்று வெட்டுவதிலிருந்து கரும்புவெட்டு வேலை வரைக்கும் பல தரப்பட்ட சாதாரண மனிதர்களின் அனுபவங்கள் இதிலுள்ளன. ஜீவனுள்ள , மிகை எதுவும் இல்லாத அனுபவங்கள். அவை சொல்லப்பட்ட முறையில் எந்த இலக்கியச் சொக்கட்டான் விளையாட்டும் இல்லாமல் யதார்த்த பாணியின் உச்ச எழுச்சியைத் தொடுபவை வில் அம்பு எடுத்து ஆடும் படுகள நிகழ்ச்சி போல் பல பழிவாங்கல்கள். நாவலின் இறுதியில் அப்படியானப் பழி வாங்குமெண்ணத்தில் கொலை செய்து விடுகிறவன் நல்லவன்தான் . ஆனல் சூழலும் பழிவாங்கும் எண்ணங்களும் அவனைச் சிறைக்கு அனுப்பிவிடுகிறது .கனகவேல் போன்ற மக்களுக்காகப்பாடுபடும் நல்லவர்கள் எதிர்பாராத வித்ததில் உடல் நலிவடைந்து மக்களிடமிருந்து மறைந்து போகிறார்க்ள் பங்காளிகளின் உறவும் பகைமையும் கண்ணாமூச்சி ஆடும் வித்தைகளை பல சம்பவங்கள் மூலம் சொல்கிறார் . இந்த விதத்தில் அவை ஊர் சனியன்கள் . இதைத் தவிர ஊர் சனியன்களாக பல விசயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது . முரடுத்தனத்தில் ஒவொரு சாதியும் ஒன்றை மிஞ்சிக்கொள்ளும் சம்பவங்கள். கிணறு வெட்டு போன்றவை மிக முக்கியத்திருப்பங்களாக அமைகின்றன. கிணற்று விவசாயம் போய் போரிங் போட்டு தண்னீர் எடுப்பதும் முக்கியமாகி விடுகிறது , திருமூர்த்தி அணை மக்களின் பாசம் சார்ந்த நடவடிக்கைகள் சில சமயங்களில் பொய்த்துப் போகின்றன, திருமணத்திற்குள்ளேயே பெண்களை முடக்கிப்போடுவது சாதாரணமாக அமைந்து விசித்திரமானதாகத் தென்படுகிறது..குழந்தை பாக்யம் இல்லாத பொன்னி வரதனை சகித்துக்கொண்டு வாழ்கிறாள்.தென்னை மரம் பட்டுப்போவதைப்போல் ராஜேஸ்வரி, வெங்கிட்டம்மாள் போன்றோரின் காதலும் திருமணமும் தடைபடுகின்றது. படித்துக்காதலித்து தோல்லியில் மயங்குகிறவர்கள். படிக்காமலும் தோல்வியில் மயங்குகிறவர்கள் என்று விதவிதமாய் மனிதர்கள் . ராஜி மற்றும் வெங்கிட்டாம்மாவை எங்காவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று பலரும் துடித்து பல முயற்சிகளை எடுக்கிறார்கள். பழனியம்மாள் கருப்பாயம்மாள் போன்ற முதியவர்கள் குடும்பப் பெருமையையும் பெண்களையும் காப்பாற்றும் முயற்சியில் படிமச் சித்திரங்களாகுகிறார்கள்.மனச்சிதைவுக்குள் சாதாரணமாக்ஆளாகக் கூடிய சூழல்கள் .இந்நிலையில் அரங்கன் போன்ற மன நல மருத்துவர்கள் உலாவும் முன்மாதிரியாக இருக்கும் மன நல மருத்துமனைகள் நல்லச் சித்திரங்களாக இந்நாவலில் கண் முன்னால் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. வறண்டு போகும் திருமூர்த்தி அணை கூட ஒரு படிமமாக நிலைபெறுகிறது அது நிலம் சார்ந்த படிமமாக இல்லாமல் மனிதர்கள் சார்ந்த உருவவியலாக அமைகின்றன. அணை சுருங்கி ஏழைகளின் குளம் குட்டை சிறுத்துப்போகிறது. கிராமமக்களுக்கு குடி நீர் வேண்டும். விவசாயத்திற்கு அணைத்தண்ணீர் விவசாயத்திற்கு வேண்டும்.. இதெல்லாம் கிராமத்தின் இளைய தலைமுறையினரை திருப்பூர் பனியன் தொழிலுக்கும், விசைத்தறிக்கும் துரத்தும் விசயம் முக்கியமானதாக உள்ளது. மீசையும் தோள்த்துண்டும் கொங்கு மனிதர்களின் நல்ல பெருமைகுரிய அடையாளங்கள்.அவை தரும் கற்பிதங்களை பல இடங்களில் பலப் பிரச்சினைகளின் அலைசலாகக் காணலாம் நல்ல சாப்பாட்டைச் சொல்லும் போது கொங்கு பிரதேசத்தில் “ ஒணத்தியானப் பலகாரம் “ என்பார்கள். அது போல் நல்ல இலக்கிய விருந்தாய் ஒணத்தியானப் பலகாரமாய் இந்நாவல் அமைந்துள்ளது . எல்லோருக்கும் பெயர் இருக்கும் போது திராவிடக்கட்சித்தலைவருக்கு மட்டு இல்லாமல் இருக்கிறது பகுத்தறிவு சார்ந்த இயக்கங்களின் ஊடுருவல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு பல அடையாளங்களாய் பல சுவடுகள் உள்ளன. அவை திராவிட அரசியலின் பங்காய் விளங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது. விதைக்குள் மரம் ஒளிந்திருப்பதை நாம் நம்பியாக வேண்டும். அது போலத்தான் பள்ளிபுரம் என்னும் சிறு கிராமத்தில் ஒளிந்தும் வெளிப்படையாகவும் நடைபெறும் நிகழ்வுகளையும் நாம் நம்பியாக வேண்டும் என்ற ஆசிரியரின் கூற்று நாவலின் ஆசிரியரால் ஓர் இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி நம்பியாக வேண்டிய அல்லது நம்பும் வகையிலான சம்பவங்களின் தொகுப்பாகவே இந்த நாவல் அமைந்துள்ளது . ” அயலார் படையெடுப்பால் வெல்லக்கட்டித்தமிழின் பல் பிடுங்கப்ப்ட்டு தமிழ் அவியல் தழைக்கிறது. கூட்டு வழிபாடுகள் போய்ச் சாதி வழிபாடுகள் செவிப்பறைக் கிழிக்கின்றன “ என்றக் குர்றை நினைவுபடுத்த பல செய்திகளை இந்த நாவல் உள்ளடக்கியிருக்கிறது. நவீன இலக்கிய சார்ந்த வறட்சி கொண்டது உடுமலைப்பகுதி . ஆனால் உடுமலைப்பிரதேசத்து மக்களின் வாழ்க்கையை முந்தைய படுகளம் நாவலின் தொடர்ச்சியாகக் கொண்டு வந்திருப்பதில் அம்மண்ணின் வளமையான அனுபவங்களைப் பதிவு செய்ததில் முக்கியப் பங்கு ப. க. பொன்னுசாமி அவர்களுக்கு இந்த இரு நாவல்கள் மூலம் நிரைவேறுகிறது . நெடுஞ்சாலை விளக்குகள் போன்ற பிற களங்களைச் சார்ந்த அவரின் நாவல்கள் இன்னும் வேறு திசைகளில் கலங்கரை விளக்காய் வெளிச்சம் காட்டுபவை என்பதையும் குறிப்பிட வேண்டும்.கொங்கு இலக்கியத்தின் இன்னுமொரு மணிமகுடன் எனலாம் ( Rs 500/ pages 620 > NCBH Chennai )
மூன்று நதிகள் / சிறுகதைத் தொகுதி / வெளியீடு 2018 சுப்ரபாரதிமணியன், ஜீரோ டிகிரி ப்ப்ளிகேசன்ஸ், I st floor,JMB motorcycles , 55 (7), 6th avenue, Annanagar west . சென்னை 40 Ph. 8925061999