சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 12 மே, 2019

சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில்  வளர வேண்டும்
மைசூரில் வசிக்கும் எழுத்தாளர் ராமன் முள்ளிப்பள்ளம்  திருப்பூரில் நடந்த தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசும் போது இப்படிக் குறிப்பிட்டார்:
இன்று இலக்கியம் பெரும் கார்ப்பரேட்டுகள் தீர்மானிப்பதாக இருக்கிறது. டிஜிட்டல் சிந்தனைகள் மனித மூளையை மழுங்கடிப்பதாக இருக்கிறது. இன்று இலக்கியச் சந்தை கேளிக்கை தரும்  விடயங்களையேத் தருகிறது. இன்றைய தலைமுறை  கைபேசிகள், தொலைக்காட்சி தரும் கேளிக்கைகளீல் மூழ்கிக் கிடக்கிறது. சமூக பொறுப்புணர்வுகளைத் தரும்  அநீதியோடு சமரசம் செய்யாத  எழுச்சி மிகு உணர்வுகளைத் தரும் நல்ல இலக்கியம் உரூவாக்கப்படுவதும் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பதும் பெரிய சவாலாக உள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாகவி பாரதியார்  கொடுத்தக் கவிதைகளூம் பாடல்களும் தேசபக்தி எழுச்சியை மக்கள் மத்தியில் ஊட்டியதாக இருந்தது. அது உதாரணம். இளைஞர்களின் இலக்கிய மையங்கள் பல இன்று முன் வந்து தரும் இலக்கியப்படைப்புகளான கவிதைகள், சிறுகதைகள் , நாவல்கள் உரிய சிறப்பு தரப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.  சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில்  வளர வேண்டும். இதுவே புதிய, நல்ல இலக்கியங்களுக்கு வழிவகுக்கும். பெரும் இலக்கியங்கள் பல நாடுகளில் , பல கலாச்சாரங்களில்  பலமுறை கடந்த காலங்களில் அடிப்படை சமூக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன . அரசியல், அதிகார மாற்றத்திற்கான முன்னோடி இலக்கியம். சமூக மாற்றத்தினை பதிவு செய்யும்  இலக்கியம் மக்களீன் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது  
( ராமன் முள்ளிப்பள்ளம் நாவல் “ அம்மா தொட்டில் “   ruரூ 320 சஞ்சீவி பதிப்பகம், சென்னை வெளியீடு 8322079600 )

சசிகலா  வெளியிட துருவன் பாலா பெற்றுக் கொண்டார் .
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
* மே    மாதக்கூட்டம் ..5/5/19. ஞாயிறு மாலை.5 மணி..                     பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்., நடைபெற்றது.தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன் 
( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )வரவேற்புரை :தோழர்  சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )மாமேதை  காரல் மார்க்ஸ் பிறந்த தின சிறப்புரையை பி ஆர். நடராஜன்  நிகழ்த்தினார் :
*   நூல்கள் வெளியீடு :
சுப்ரபாரதிமணியன் “ மூன்று நதிகள் “ சிறுகதைத் தொகுப்பு ( துசோ பிரபாகர் வெளியிட பாரதி வாசன் பெற்றுக் கொண்டார் )
இரா.முத்து நாகு ( நாவல் “ சுளுந்தீ “ ) கலந்து கொண்டார்
ராமன் முள்ளிப்பள்ளம் நாவல் “ அம்மா தொட்டில் “ ( சசிகலா  வெளியிட துருவன் பாலா பெற்றுக் கொண்டார் )
கா சு. வேலாயுதம்  “ சிட்டு செல்போன் 2.0.  “கட்டுரைத் தொகுப்பு தொகுப்பு (மருத்துவர் முத்துசாமி  வெளியிட பி ஆர். நடராஜன்   பெற்றுக் கொண்டார் )
* நூல்கள் அறிமுகம் .:   , மருத்துவர் முத்துசாமி,            பின்னல் “ சவுந்திரபாண்டியன், பொறியாளர் இரவிக்குமார்.  பங்குபெற்றனர் கவிதைகள் வாசிப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி, அருணாசலம், சிவதாசன் பங்கு பெற்றனர்
மற்றும்...பாடல்கள்  , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்  நடைபெற்றன. வெண்மனி நடராஜன் நன்றி கூறினார் .
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488






திருநங்கையர்கள் கூட்டத்தில் அவர்கள் எழுப்பிய சில கேள்விகள்             ( L திருப்பூர் கணக்கம்பாளையம் , நெருப்பரிச்சல் பகுதியில் மட்டும்  200 திருநங்கைகள் வசிக்கின்றனர் . திருப்பூரில் ஏகதேச்ம் 500 பேர் இருக்கி )
* எங்கலை மணந்து கொள்ளூம் சில ஆண்கள் எங்களிடம் இருப்பதைப் பிடிங்கிக் கொண்டு துரத்தி அவமானப்படுத்துவதிலிருந்து எங்களைக் காப்பாறிக் கொள்வது எப்படி
*நாங்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க முடியுமா
* எங்களுக்கு கோவிலுக்குப் போக அனுமஹ்டி கிடைப்பதுஇல்லை . ஏன்
* பேருந்தில் எங்களுக்கென்று தனி இருக்கைகள் ஏன் தரப்படுவதில்லை( ஊனமுற்றோருக்கும் தனி இருக்கைகள் உள்ளன ). தனிக்கழிப்பறைகள் ஏன் கட்டப்படுவதில்லை
*  மற்ற மாநிலங்களில் 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ரூ 1000 உதவித் தொகை தரப்படுகிறது. தமிழக்த்தில் தரப்படுவதில்லையே
* மிரட்டி பணம் வசூலிப்பவர்கள், சாலையில் செல்லும் போது பாலியல் நோக்கில் துன்புறுத்துபவர்கள், விடுதியில் தங்க வேண்டியிருந்தால் அறை தர மறுப்பவர்கள் பற்றி புகார் செய்யலாமா
* குடும்பச் சொத்தில் எங்களுக்கும் பங்கு கிடைக்குமா
* அரசு விழாக்களுக்கு எங்களை பேச, கலைநிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை ஏன்.
* எங்களுக்கு தங்க வீடு வேண்டும். வாடகைக்குக் கிடைப்பதில்லை,அரசு சுமார் 6000 வீடுகள் ஏஏழைகளூக்குத்தர கடுகிறார்கள். மற்றவர்களுக்கு 30 வருடங்களுக்கு மாதம்  300ரூ  வீதம் கட்டினால் போதும். திருநங்கைகள் முன்பணமாக 80, 000 ரூபாய் கட்டவேண்டும்  என்று கட்டாயப்படுத்துவது ஏன்

* திருநங்கைகளுக்கு என் கேள்வி : திருப்பூரில் இடம் பெயர்ந்தத் தொழிலாளர்கள், பல மாநிலத்தினர் லட்சக்கணக்கணக்கில் பின்னலாடைத் தொழிலில் வேலை செய்கிறர்கள்.நீங்கள் அதில் பயிற்சி பெற்று வேலை செய்ய முயலாததற்குக் காரணம் என்ன. பாலியல், பிச்சை எடுப்பதில் நீங்கள் சொகுசாய் இருக்க ஆசைப்படுவதாய் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே. உங்களை மாற்றிக் கொள்ளக் கூடாதா .....