செல்போன் பூதம் : சிறுவர் கதைகள் ஹாரிங்டன் ஹரிஹரன் --- சுப்ரபாரதிமணியன்
சிறுவர் படைப்புகள்
யதார்த்த்த் தளத்திலிருந்து அடுத்த நிலையாய்
நேர் மறை விடயங்களுக்கும் லட்சிய
வாதத்திற்கும் செல்வது முக்கியமாக எனக்குத் தோன்றும்.
ஹாரிங்டன் ஹரிஹரன் கதைகளில் அதை கண்ணுற்ற
போது மகிழ்ச்சியாக இருந்தது. இத்தொகுப்பில் உள்ள 1. கைபேசியின் அதீதப் பயன்பாடு 2. துரித உணவில் சிறு பொட்டலப்
பயன்பாடுகள் போன்றவை பற்றி சில ஆண்டுகள் முன்னர் நானும் சில கதைகளை எழுதியுள்ளேன் ஹாரிங்டன் ஹரிஹரன் அதே அம்சங்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது சிறப்பாக இருந்தது.உதாரணமாக
கைபேசியின் அதீதப் பயன்பாட்டால் காது
பாதிக்கப்படுவது பற்றியது என் கதை. ஆனால் காது பாதிக்கப்பட்டவர் தன்னம்பிக்கை
கொண்டு வாழ்வில் முன்னேறி முன்மாதிரியாக விளங்குவது ஹாரிங்டன் ஹரிஹரன் கதையின்
சிறப்பு 2. துரித உணவின் கேடுகளை பிராணிகள் கையாண்டு அவை அவற்றைப் புறக்கணீத்து
இயல்பான உணவு நிலைக்குத் திரும்புவது இன்னொரு நல்ல அம்சம்.இவை வகைக்கு இரண்டு.
இதுபோல் யதார்த்தத்தின் கசப்பு நிலையை மீறி
குழந்தைகளுக்கு செய்தியாகவும் அறிவுரையாகவும் பலவற்றை இக்கதைகளின் மூலம் ஹாரிங்டன்
ஹரிஹரன் நிறுவியுள்ளார்.அதை சிறுவர்களுக்கான செய்திகளாய் ரத்ததானம்,
சேமிப்பு, கல்வியின் உயர்நிலை என்றும் பல கதைகளில் கையாண்டிருக்கிறார்..
மண்ணின்
கசடுகளை மீறி மலைப்பகுதிகள் , காட்டுப்பகுதிகள் என்று நுணுக்கமாக
பயணீக்கிறார் இவர். உருவத்தை வைத்து எடை போடும் குணத்தைச் சாடுகிறார். பழையதை மறந்து புதியததற்குப்போக இவரின் கதாபாத்திரங்கள் சொல்வது ,
அவ்வகையில் கதைகள் சொல்வது இவரின்
சிறப்பமசமாகக் கொள்ல்லாம். முதல் கதைத்தொகுப்பிலேயே தனிமுத்திரைக்கு
அக்கறைப்பட்டிருப்பது அவர் நல்ல அனுபவங்களை தனக்குள் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
---( 2019 இதன் விலை ரூபாய் 80, பாவை மதி வெளியீடு ..)-- சுப்ரபாரதிமணியன்