சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 12 மே, 2019

இளைஞர்களுக்கு வழிகாட்டும் இலக்கியம்
உலகமயமாக்கலுக்கு முன்பு பொதுமக்கள்  ஒன்றுகூட சந்தர்ப்பங்கள்  இருந்தன. சேர்ந்து செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. இப்போது தொலைக்காட்சி, . ஊடகங்கள் மக்களைப் பிரிக்கின்றன. முன்பு தீவிரமான  தொழிற்சங்கங்கள் இருந்தனஎழுத்துக்களிலும் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. பின்பு உலகமயமாக்கல் காலத்தில் சமூகத்தில்  தனிநபர் சார்ந்த கோபம், உணர்வு, தனிமை பற்றிய படைப்புகள் வந்தன.இப்போது மீண்டும் பழையபடி சமுதாயம் சார்ந்து வாழ்க்கை மாற்றம் குறித்த இலக்கியங்கள் வருகின்றன.. . கலைஞர்கள் கதை எழுதலாம், கற்பனை செய்யலாம். ஆனால் சமுதாயத்திலிருந்துதானே தரவுகள் வர வேண்டும்.சமுதாயத்திலிருந்தே இலக்கியம் வருகிறது. அது எந்தக்காலத்திலும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் “ என்றார் எழுத்தாளர் இரா.முருகவேள் ஞாயிறு அன்று திருப்பூரில்   நடைபெற்ற  ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை & அன்னையர் தின விழாவில் கலந்து கொண்டு பேசும் போது குறிப்பிட்டார். 
கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம் 12/5/19 ஞாயிறு ,. எம்கேஎம் ரிச் ஹோட்டல், ராயபுரம் பிரதான சாலை, ஸ்டேட் பாங்க் காலனி அருகில், திருப்பூரில் நடைபெற்றது. எம்கேஎம் ரிச் ஹோட்டல்  உரிமையாளர் எம்கேஎம் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். .தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன்  ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) வரவேற்புரை :தோழர்  சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ). பயிலரங்கங்கள் நடைபெற்றன .சிறுகதை பயிலரங்கம் ( இரா.முருகவேள், சுப்ரபாரதிமணியன் நடத்தினர் .)., கவிதை பயிலரங்கம் ( நறுமுகை தேவி,சுபசெல்வி நடத்தினர்) பாடல்கள் பயிலரங்கம் ( துருவன் பாலா, துசோபிரபாகர் நடத்தினர் ) கனல்   “ அரசியல் கவிதைகள் “ என்றத் தலைப்பிலும்., சிவதாசன் மரபுக்கவிதையும் ஓசையும் என்றத் தலைப்பிலும்  உரையாற்றினர்  
அன்னையர் தினththaiththaithத்தை முன்னிட்டு சுப்ரபாரதிமணியன்   ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த “ பெண்களும் தொழிற்சங்கங்களும் :என்ற நூலினை  munnittu எழுத்தாளர் இரா.முருகவேள்  வெளியிட பேராசிரியை சுபசெல்வி munniபெற்றுக்கொண்டார்.( இதை திருப்பூர் சேவ் அமைப்பு வெளியிட்டுள்ளது .) கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்கள் கலந்து கொண்டு கவிதை, கதை எழுதுவது பற்றிக் கற்றுக் கொண்டனர்.மகிழ்ச்சியடைந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.
செய்தி: பி ஆர் நடராஜன் ( செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.)  ( 94434 27156 ),