சூழலியல் அடிப்படை வாதமும் ,
சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட
சமீபத்திய 2018ன் இரு படங்களும்:
மத வாதத்தை
அடிப்படைவாதம் இன்றைக்க்கு பிரதானமானதாக இந்தியச்சூழலில் பேசப்படுகிற சூழலில்
கலாச்சாரம், பொருளாதாரம் , விஞ்ஞானம் என்று பல
தளங்களிலும் அடைப்படை வாதம் புரையோடிக்கிடக்கிறது. இன்றைய இந்தியச்சூழலில் சூழலியல் என்பது
அரசியல் பொருளாதரத்தோடும், தொழில் வளர்ச்சியோடும் பின்னிப்
பிணைந்திருப்பதைக்காண முடிகிறது. எந்த நாட்டுச் சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது
முக்கியப் பங்காற்றுவது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
தனிநபர் நுகர்வு
என்பது பல சிக்கல்களுக்குக் காரணம். நுகர்வு கலாச்சாரம் உணவுப்பழக்க வழக்கங்களைச்
சிதைத்து விட்டது. புறு நோய் சாதாரண
விசயமாகி விட்டது. இளம் வயது குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த
பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு வந்துள்ள
இரு படங்கள் பற்றி:
‘எ டிரான்ஸ்லேட்டர்’.
க்யூபா நாட்டை
சேர்ந்த இரு சகோதரர்கள் தங்கள் பெற்றோரின் வாழ்க்கையை பதிவு செய்த திரைப்படம்தான் ‘எ டிரான்ஸ்லேட்டர்’.
செர்னோபில் அணு உலை
விபத்தில் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு ரஷ்யாவில் சிகிச்சை பெற் முடியாமல பலர்
க்யூபாவில் உள்ள மருத்துவமனைகள் சிகிச்சைக்கு வந்தனர் . அதில் புற்றுனோயால்
பாதிக்கப்பட்ட சில குழந்தைகளைப் பற்றி இப்படம் பேசுகிறது..
அந்த குழந்தைகளில்
ஒரு குறிப்பிட்ட சிறுமி மற்றும் அவளது தாயாருக்கும், மருத்துவர்களுக்கும்
நடக்கும் உரையாடல்களை மொழி பெயர்க்கும் பணியில் படத்தின் நாயகன் ஈடுபடுகிறார்.பல்கலைக்கழகத்தில்
ரஷ்யன் மொழிப்பிரிவில் பணியாற்றும் அவனுக்கு இந்த வேலை சவாலாகவும் விளங்குகிறது.
அந்தக்குழந்தைகளுடன் ஒன்றிணைந்து
போகிறான். அவர்களின் துயரம் அழுத்திக் கொண்டே போகிறது.இது குடும்பச் சூழலில் அந்நியமாக்கலைக்
கொண்டு வருகிறது. கர்ப்பமான மனைவியையும் சரியாக கவனிக்க முடிவதில்லை. முதல்
குழந்தையை வீட்டில் பராமரிப்பதிலும் சிரமங்கள். வீட்டை விட்டு விளையாட்டாய்
வெளியில் சென்று விடும் குழந்தையை கவனிக்காத்து குற்றமாய் அவன் மீது கவிழ்ந்து
விடுகிறது. இன்னொரு கர்ப்பம் என்பதை அவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதில்லை.
புற்றுனோயால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு கதை சொல்லுவது, ஓவியப்பயிற்சிகள் வெவ்வேறு நடவடிக்கைகளால் அவர்களின் இயல்பு நிலையை
மாற்றுவது முயல்கிறான். குழந்தைகளுக்குத்
தரப்படும் கொடுமையான ஹீமோதரபி சிகிச்சைகள், அவர்களின் உடல் ரீதியான சிரமங்கள் அவனை
பதற்றத்துக்குள்ளும் மனச் சோர்வுக்குள்ளும் தள்ளுகின்றன..தூக்கமின்மை
மாத்திரைகளையும் மதுவையும் நாடச்செய்கிறது. மனைவி பிரிந்து போகிறாள்.
புற்றுனோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சாவு
அவனை வெகுவாக பாதிக்கிறது. மனைவியின் வீட்டிற்குச் சென்று சமரசத்திற்கு முயல்கிறான்.
மாமனாரும் ஒத்துழைப்பதில்லை. அவர்களுடனான சேவையில் காலத்தைத் தள்ளுகிறான்...கிங்
ஆப் கிட்ஸ் என்று அவனுக்குச் செல்லமாய் கிடைக்கும் பெயர் அவனுக்கு ஆறுதல்
தருகிறரது.
சோவியத்
ரஷ்யாவிலிருந்து அதிபர் கோர்பச்சேவ் க்யுபாவிற்கு வருகை தரும் காட்சியில் துவங்குகிறது
திரைப்படம்.இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட போது சிகிச்சைக்காக கியூபா வந்து
சென்றவர்கள் பற்றிய மைக்கல் மூரின் ஆவணப்படமும் கியூபா மக்களின் கருணை
உள்ளத்தையும் மருத்ஹ்டுவ சிகிச்சையில் கியூபாவின் தரத்தையும் சொல்லியிருந்தது.
இயக்குநர்கள்
ரோட்ரிகோ& செபாஸ்டியன்.இப்படத்தின் கதாநாயகனின் மகன்கள்
அணு உலைக்கு எதிரான
ஒரு முக்கியக்குரலை இப்படம் எழுப்புகிறது..
வுமன் அட் வார்:
சுற்றுச்சூழலுக்கு எதிராக பெரும் தொழிற்சாலைகள் அமைதலுக்கு எதிரான ஒரு குரலை
இப்படம் அழுத்தமாகத் தெரிவிக்கிறது. இய்ற்கையை வழிபடும் இந்தியத் தத்துவங்களுக்கு
மத்தியில் அதை நாசமாக்கும் போக்கும் தொடர்கிறது. இயறகையை அழிக்கிற செயல் என்பது
முதலாளித்துவ வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கிறது.
இதையும் ஒரு முக்கிய அரசியல் படமாகக் கொள்ளலாம்.இசை இயக்குனர் ஹாலா ( வயது 49 ) அய்ஸ்லேண்ட் மலைப்பகுதியில் அமைந்த
மிகப் பெரிய அலுமினியத் தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு கேடாய் இருப்பதை எதிர்க்கும்
விதமாய் மின் இணைப்பை வெவ்வேறு வகைகளில் துண்டித்து விடுவதையும் அதைக்
காவல்துறையினர் கண்டுபிடிக்காமல் திணருவதும் சுவாரஸ்யம்.. ஹாலாவுக்கு மலை மகள்
என்ற பெயரும் இருக்கிறது. அதை அவர் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் அல்லவா.அதீத
மின்பயன்பாடு, சுற்றுச்சூழல் கேடும் பல குறிப்புகளால்
பட்த்தில் காட்டப்படுகிறது. சீனர்கள் அப்பகுதியில் மீண்டும் முதலீடு செய்ய
மறுப்பது அரசையும் காவல் துறையையும் எரிச்சல் ஊட்டுகிறது.அவ்வப்போது
மின்துண்டிப்பை ஹாலா செய்வதும்
காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து தப்ப அவர் செய்யும் முயற்சிகளும் பதைபதைக்க
வைப்பவை.. உக்ரேனில் இருந்து ஒரு நல்ல செய்தியும் ஹாலாவுக்கு வருகிறது, அவளின் குழந்தைத் தத்தெடுப்பிற்கு வரும் கடிதம் அவளுக்கு ஆசுவாசம்
தருகிறது. தாய்மையை உணர ஒரு சந்தர்ப்பம் என்றே நினைக்கிறார்.அங்கிருந்து தப்பிக்க
நினைக்கிறாள். அவரின் இன்னொரு சகோதரி ஆஷாவுக்கு யோகாவில் ஈடுபாடு, அவர் இந்தியாவில் மகரிஷி ஆசிரமத்திற்கு இரண்டாண்டுகள் சென்று தங்கும்
ஏற்பாட்டில் இருக்கிறார். ஆன்மீகத் தளத்திலும் உள்னோக்கிய சிந்தனிஅயிலும் அவரின்
தேடல் இருந்து கொண்டே இருக்கிறது.. அவரின் சுவற்றில் இருக்கும் காந்தி, நெல்சன் மண்டேலா படங்கள் ஹாலாவுக்கு ஆதர்சமாகி பல செயல்களுக்கும் தூண்டுகிறது. ராபின்ஹிட் பாணியில் ஹாலாவின்
செயல்பாடுகளும் அமைகின்றன. ஹாலா தப்பிப்பதற்கு ஆஷா உதவுகிறார் தன்னை அவராக
காவல்துறையினரிடம் ஒப்படைத்துக்கொண்டு .. பெரும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு
கேடாய் இருப்பதை ஒரு ஆட்டிடையன் கூட காவல்துறை பெருத்த வாகனங்களைக் கொண்டு மலைப்பகுதியில் ஹாலாவைத் தேடும்போது தன்
ஆட்சேபணையைத் தெரிவிக்கிறான்.அது போன்ற ஆட்சேபணைக்குரல்களால் நிரம்பியிருக்கிறது இப்படம்.
ஹாலாவின் செயல்களுக்கு ஒத்துசைவாய் உக்ரேன் இசைக்குழு ஒன்று அவ்வப்போது படத்தில்
வந்து போவது பல குறியீடுகளின் தொகுப்பாக இருக்கிறது.