கோவை புத்தக்க் கண்காட்சியில் இறுதி நாளில்
நடைபெற்ற கோவை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் மூன்று நூல்கள்
வெளியிடப்பட்டன.விழாவில் இளஞ்சேரல் வரவேற்றார். பூஅரவீந்திரன் தலைமை உரை
நிகழ்த்தினார். கீழ்க்கண்ட 3 நூல்கள் வெளியிடப்பட்டன.. 1.
சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு ” குகைகளின் நிழலில் “ ( மலேசியா பல்கலைக்கழகம் மற்றும் கலைஞன்
பதிப்பகம் இணைந்து வெளியீட்டது, ) .2
அன்புசிவாவின் 21ம் நூற்றாண்டு நவீன கவிதைகளில் புதியப் போக்குகள் ( ஆய்வு
நூல், காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு ) 3. ஸ்டிப்பன் ஜஸ்வேய்க்கின்
ஆட்கொள்ளப்பட்டவன் ஜெர்மானிய நாவல்: தமிழில் லதா ராமகிருஷ்ணன்( ( புதுப்புனல்
பதிப்ப்கம் , சென்னை வெளியீடு )
சுப்ரபாரதிமணீயனின் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் மலேசியப் பின்னணீல் உள்ளவை.
அவர் பேசியது : ” உலகம் முழுக்க தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள்.
மலேசிய நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உரமாக இருந்தவர்கள் தமிழர்கள். தமிழ் ஆட்சி
மொழியாக அங்கு கவுரவம் பெற்றுள்ளது. தமிழை முதன்மை மொழியாக்க் கொண்ட 540
தாய்த்தமிழ்ப்பள்ளிகள் அங்கு அரசாங்கத்தின் முழு நிதி உதவியுடன் இயங்குகின்றன. அகிலன்
பால்மரக்காட்டினிலே நாவல், எனது மாலு ஆகிய நாவல் ஆகியவை அங்கு சென்று கண்ட மலேசிய அனுபவங்களை நாவல்
வடிவில் கொண்டிருக்கின்றன.அங்கு கணினி தொழில் சார்ந்து வேலை செய்வோர், பல
வியாபாரங்களில் ஈடுபட்டத் தமிழர்கள்,
டூரிஸ்ட் விசாவில் சென்று பணம் சம்பாதிக்கிற ஆசையில் அங்கு முறையற்ற
முறையில் வேலை செய்யும் தமிழர்களின் அனுபவங்களை பல எழுத்தாளர்கள் இலக்கியப்
படைப்புகளீல் பதிவு செய்திருக்கிறார்கள். மலேசிய தமிழர்களின் இலக்கியப் படைப்புகள்
இன்னும் விரிவாய் தமிழகத்தில் ஆய்வுக்கு
எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தமிழகம் மலேசியா இணைப்புப் பாலத்திற்கு அது
அடிப்படையாக அமையும். ”
புதுப்புனல் பதிப்பகம் ரவிச்சந்திரன் தன் பதிப்பக அனுபவங்களைப் பற்றிப்
பேசினார். வழக்கறிஞர் நந்தகுமார், அகிலா, அவைநாயகன், பூபாலன், உட்பட பலர் பேசினர்.
மரபின் மைந்தன் முத்தையா, பேரா.மணி, க.வை.பழனிச்சாமி, சி.ஆர் ரவீந்திரன், சோழநிலா,
அம்சப்ரியா உட்பட பலர் பங்கு பெற்றனர். இளவேனில் நன்றி கூறினார்.