கனவு இலக்கிய வட்டம்
8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602
திருப்பூர் : டாலர் சிட்டி ஆவணப்படம்
இயக்குனர் ஆர்.பி. அமுதன் ..
விமர்சனம் 1:
தலித் பிரச்சினைகள் பற்றி முகத்தில் அடிக்கிற மாதிரி பல படங்கள் எடுத்த நீங்க
இவ்வளவு மேம்போக்கா திருப்பூரைப் பத்தி ஏன் படம் எடுக்கணும். தொழிலாளி, முதலாளி,
தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வெச்சு சமரசமா
இயங்கற ஊர்லே, இதுலே நீங்களும் சமரசம் பண்ணீட்டீங்களா
3. காலாவதியான மார்சியம்,
காணாமல் போன காந்தியம் .. இதையெல்லாம் தூக்கி பிடிச்சிருக்கீங்க ..துக்கம்..தூக்கம் .
4., பனியன் தொழிலாளி வீட்டு கண்ணாடிப்புட்டி
மீன் , முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன்... கேட்பாரற்று கிடக்கும் நெசவுப் பாவடிக் கற்கள்... அபாரமான
குறியீடுகள்.... அபாயமான குறியீடுகள்.
5. கூட்டுக் களவணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாதத் தொழிலாளி, சுரண்டலுக்கு பேர் போன முதலாளி, சந்தா
வசூலிக்கிற தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதா குறிக்கோள்.எல்லாரும் சேந்து பண்ற திருப்பூர் கூட்டுகளவணித்தனத்தே நாசுக்கா சொல்லீட்டீங்க.
6. சேரிக திருப்பூர்லே வளர்ந்திட்டே இருக்கு. பின்னலாடையிலே சுமங்கலித்திட்டக் கொடுமை வந்திருச்சு. வட
மாநில பெண்கள் வார இறுதிகள்லே விபச்சாரத்துக்கு பயன் படற நிலை.இதியெல்லா சொல்லாமா
திருப்பூரைப் பத்தி படம் என்ன வேண்டிக்கிடக்கு....குணா
7. பாரீசின் சொகுசுத்தனம், ஆப்ரிக்காவின் வறுமை திருப்பூர்லே இருக்கு. இந்தப்
படத்திலெ இதெல்லா இல்லே. திருப்பூரைப் பத்தின வெறும் அறிமுகம்.
8. திருப்பூரைப்பத்திச் சொல்றப்போ மோடியில வந்து ஏன் முடியணும். மோடி
காய்ச்சல் உங்களுக்கும் இருக்கு.. நேரடியான படமல்ல..முழுமையில்லாத படமல்ல.
9. motivateபண்ற படம். Quiet, subtle
பார்வை. . converted
audience, non-converted audienceக்கான யுத்தம் திருப்பூரைப் பத்தின
விமர்சனம் இல்லை.
10. பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத்தொழிலாளி, பவர்லூம் தொழிலாளிகளோட பார்வை
இருக்கு. தமிழ் டப்பிங் பார்த்து மகிழ்ச்சியா இருக்கறதா ஒரு சின்னத்திரை வசனம்
வருது. அதுதா திருப்பூர் உள்ளூர் வாசிகளின் அற்பமான நிலைமை.
11. கபாலி இயக்குனர் பா. ரஞ்சித் பார்வையிலே தலித் அம்சம் இருக்கும்,
உங்களதும் தலித் பார்வை, விளிம்பு நிலைப் பார்வை இருக்கும். அது இதிலெ மிஸ்ஸிங். ஆனாலும் கபாலி சொல்றது
மாதிரி மகிழ்ச்சி.
12. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்ட கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச்
சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்
விசைத்தறி மனதை உறுத்துகின்றன. ( போராட்ட கால கஞ்சித் தொட்டி சம்பவங்கள் பேச்சில்லாமல்
பலவற்றை உணர்த்தி போகின்றன ) நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர்
முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது
13. தொழிற்சங்கங்களின் பலவீனத்தை
இப்படி அப்பட்டமா சொல்லியிருக்க வேண்டாமே துரோகியே