கனவு இலக்கிய வட்டம்
8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602
குழந்தைகள்
புத்தகக் கண்காட்சி பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் ஒரு வாரம் நடந்ததையொட்டி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி
” சுற்றுச்சூழலைக் காப்போம் “ என்ற
தலைப்பில் நடந்ததற்கான பரிசளிப்பு விழா பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் புதனன்று நடைபெற்றது. திருப்பூர்
வடக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறுப் பள்ளிகளின்
210 பேர் ஓவியப்போட்டியில் பங்கு பெற்றனர். சிறந்த எட்டு மாணவர்களுக்குப்
பரிசுகள் வழங்கப்பட்டன. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பரிசுகளை வழங்கினார். மனோகர்
முன்னிலை வகித்தார். கண்ணன் தலைமை தாங்கினார்.
கூத்தம்பாளையம் முருகு மெட்ரிக்குலேசன் பள்ளி, பூலுவபட்டி ஏவிபி
மெட்ரிக்குலேசன் பள்ளி , பாண்டியன்நகர் அரசு உயர்நிலைப்பள்ளி , பாண்டியன்நகர்
தாய்த்தமிழ்ப்பள்ளி, ராஜீவ் காந்தி நகர் சாரதா வித்யாலயா பள்ளிகளைச் சார்ந்த எட்டுப்பேர் பரிசுகளைப்
பெற்றனர்.ஓவியக்கலையின் உயர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கிருஷ்ணகுமாரி நன்றி
கூறினார். குழந்தைகள் புத்தகக் கண்காட்சி சார்ந்த அனுபவங்களை மாணவர்கள்
பகிர்ந்து கொண்டனர்.
செய்தி : ஆ . ரூபா