கனவு இலக்கிய வட்டம்
8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602
திருப்பூரைப் பற்றி
இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள
“ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா
திருப்பூரில் 21/8/16 ஞாயிறு குறும்பட விழா ” கனவு “ சார்பில் நடைபெற்றது .. ( இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட்
பிரதான சாலை, குமரன் வீதி, திருப்பூர் )
திருப்பூரைப் பற்றி
இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள
“ டாலர் சிட்டி “
ஆவணப் படம்,
சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் “ நைரா “ ஆகியவை வெளியிடப்பட்டன. வெளியீட்டில்
பொன்னுலகம் குணா, மானூர் ராஜா, இயக்குனர் ஆர் பி
அமுதன், சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் பங்கு பெற்றனர். மனோகர் தலைமை வகித்தார். ஜோதி
நன்றி கூறினார். சுப்ரபாரதிமணியன் நைரா
நாவல் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை
எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள்
என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி
பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள்.
அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக
வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு கலாச்சார அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது.
அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின்
பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட
இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில்
காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும் சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன..
புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. என்றார். இயக்குனர் ஆர் பி அமுதன் திருப்பூர் பலருக்கு பல விதமான பார்வைகளைத்
தரக்கூடியது. தொழிலாளர் நிலையும், பின்னாலாடை வளர்ச்சியும் பற்றி இந்தப் படத்தில் (
டாலர் சிட்டி 77 நிமிடப்படம் ) சில
விசயங்களை இப்படத்தில் எடுத்துள்ளேன். இது
குறித்த மாறுபட்டப்பார்வைகள் திருப்பூரின் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.
செய்தி: கே. ஜோதி ( கனவு இலக்கிய வட்டத்திற்காக.. )