திருமதி பிரேமா நந்தகுமார் அவர்களின் கடிதம் :
அன்புள்ள திரு சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு
நமஸ்காரம்.
நூல்கள், கனவு இதழ்கள் ஆயிரம் விஷயம் தாங்கி வந்துள்ளன. மிக்க
நன்றி. தங்களது பொறுமை
அசாத்தியமானது. ஆதிவாசிக்கவிதைகள்
படிக்கும்போது எப்படி உன்னிப்பாக அனைத்தையும் கவனித்திருக்கிறீர்கள் என்று
ஆச்சரியப்படுகிறேன். "பத்து ருபா வெத்தலைக்கு உங்க கிட்ட கை ஏந்தரம். எவ்வளவு ஏக்கம், வேதனை, இதுதான் வாழ்க்கை என்று அந்த
குமிழிக்குள் முழுகிப்போவது -- என்ன உலகமடா!
இப்பொழுது பணத்தில் புரளும் புரட்டு
மனிதர்களைப்பார்த்து மேலும் வ்யிறு
எரிந்திட வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன.
தாங்கள் இது பற்றி
எல்லாம் நிறைய எழுதி வருவதும், மற்றவர்கள் எழுதுவதை ஊக்குவிப்பதும் மகிழ்ச்சியாக
இருக்கிறது, புது மாதிரியான சிறுவர் கதைகள். என் கணவர் ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி
நடத்தும் ஆறு பள்ளிகளுக்கு Hon.correspondent. இன்று பிரச்சினையே பள்ளிப்படிப்பு
என்று ஆகிவிட்டது.
குகைகளின் நிழலில்
நூலைக் கடைசியாக எடுத்தேன், ஒரு இனிய அதிர்ச்சி!
எனக்கு சமர்ப்பணம் செய்துவிட்டீர்களே!
நான் செய்ததேதும் இல்லையே! உங்கள்
அன்புக்கு மிக்க நன்றி. சரியாக ஐம்பது
ஆண்டுகளுக்கு முன் -- மலாயா சென்றிருந்தேன்.
உலகத்தமிழ் மாநாட்டில் பாரதி பற்றி பேசும் வாய்ப்பு. அதைவிட, ஒரு வார காலம் கி.வ.ஜ'; மு.வ., ஐராவதம் மகாதேவன் போன்ற
வர்களுடன் பழகும் வாய்ப்பு, இதெல்லாம் நினைவில் மலர்ந்தன. செரம்பான் முதலிய சில
இடங்களுக்குப்போய் பேசியது நினைவுக்கு வந்தது.
, ஜெர்மனி,
பிரான்ஸ்
தேசத்தவர்கள் தமிழில் பேசியது எனக்கு
மிகவும ஆச்சரியமாக இருந்தது. நான் ஆந்திராவிலேயே வளர்ந்து, பிகாரில் வாழ்ந்து வந்ததும் ஒரு
காரணம்.
எனக்கு முதுகில் ஏற்பட்ட disc prolapse காரணமாக என்னால் முன்போல்
எழுத முடிவதில்லை. இரண்டு மாதங்கள் படுக்கையிலேயே இருக்கவேண்டியதாயிற்று (இதுவரை
இப்படி ஏதும் எனக்கானதில்லை) டாக்டர் சிரிக்கிறார்: மாமி! "வயசை மறந்துடறேளே! " வீட்டு
வேலை செய்தும், எழுதியும், படித்தும் பழகிவிட்டது. கூடியவரை செய்கிறேன்.
இதுவும் ஒரு பரீக்ஷைதான்! பாஸ் பண்ண முயற்சிக்கிறேன்!
குகைகளின் நிழலில் நான் அறிந்திராத மனிதர்களை,
சம்பவங்களை முன்
வைக்கிறது. அதனால்தான் முதலிலேயே எழுதினேன்:
நீங்கள் அனுப்பிய நூல்கள் ஆயிரம் விஷயம் தாங்கி வந்துள்ளன. அதனால் தங்க்ளது கதைகளைப்படிப்பதும் turns
out to be an education in sociology!
மீண்டும் நன்றி.
அன்புடன்
பிரேமா நந்தகுமார்