குழந்தைகள் புத்தகக் கண்காட்சி
காலை பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் …..
ஓவியர் மேட்டுப்பாளையம் தூரிகை சின்ராசு ” ஓவியக்கலையும் இலக்கியமும் “என்ற தலைப்பில் பேசினார். “ எல்லா மொழிகளுக்கும் பொதுவாக விளங்கும் மொழி ஓவியம். அது மனதின் சிறந்த வெளிப்பாடு.. அரசியலோ, சமூக நிகழ்வுகளோ ஓவியம் மற்றும் கேலிச்சித்திரங்கள் மூலம் விமர்சிக்கப்படுவதைப் போல் . எங்கும் வெளிப்பட்டதில்லை.ஓவியம் கலைகளில் மிகவும் முக்கியமானதும் தலைசிறந்ததும் பழமையானதும் கூட . அது எப்போதும் , கணிணி யுகத்திலும் உயிர்ப்போடு இருப்பதற்குக் காரணம் அது இதயத்திலிருந்து வெளிப்படும் நேரடி மொழியாக இருப்பதுதான் “ என்றார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ” குழந்தை இலக்கியம் “ பற்றிப் பேசியது: ” தமிழ் நாவலுக்கு 130 வயதாகிறது .அதில் குழந்தை நாவலுக்கு மிக முக்கியப்பங்கு உள்ளது .கவிதை, பாடல் என்றிருந்த தமிழ் இலக்கியக் போக்கு மேற்கத்திய இலக்கியங்களின் பாதிப்பில் நாவல் வடிவத்தை எடுத்தது. சுதந்திர எழுச்சி வேண்டிய நாவல்கள், திராவிட பகுத்தறிவு கருத்து நாவல்கள், யதார்த்த நாவல்கள்., நவீனத்துவ நாவல்கள் என்று வளர்ந்து இன்று இந்திய இலக்கியத்தின் முக்கிய பகுதியாக தமிழ் நாவல் விளங்குகிறது. விளிம்புநிலைமக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் இன்றைய நாவல்கள் விளங்குவது சிறம்பம்சமாகும்.. அதில் கொங்கு நாவல்களின் பங்கு உலகமயமாக்கலில் பாதிக்கப்பட்ட, நுகர்வு சார்ந்த மக்களின் வாழ்க்கையைச் சரியாகச் சொல்கிறது. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் முதல் இன்றைய நவீன நாவல்கள் வரை மக்களின் குரலாக தமிழ் நாவல் இடம் பிடித்திருக்கிறது. அதிலும் குழந்தை நாவல்களில் கொங்கு நாட்டைச் சார்ந்த பூவண்ணன் போன்றோரும், குழந்தைப்பாடல்களில் கோவையைச் சார்ந்த செல்வகணபதி, அழகுதாசன் போன்றோரும் உயர்ந்த சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். “ என்றார்
ஆசிரியை மோகனப்ரியா நன்றி கூறினார்.
17/8/16 வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. வரும் நாட்களில் ” கதை சொல்லி “ நிகழ்ச்சிகள், பறவைகள் உலகம் காணொளி கண்காட்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ” புத்தக வாசிப்பு “ போன்றவை நடைபெற உள்ளன. சுற்றுச்சூழலாளர் சின்ன சாத்தன்., பின்னல் சவுந்தர பாண்டியன், பாரதி, , செந்தமிழ்வாணன், சு.மூர்த்தி., , மகேந்திரன் , , கராத்தே நாட்ராயன், ஓவியர் மருதபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.பாரதி புத்தகாலயம், என்சிபிஎச்,, என்பிடி போன்ற பதிப்ப்கங்களின் குழந்தை நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
Photos : In Face book : Kanavu Subrabharathimanian Tirupur