சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 27 டிசம்பர், 2022
பத்திரிக்கை செய்தி
கல்வித்துறை சார்ந்த நூல்களை எழுதும் திருப்பூர் ந.குமரன் அவர்களுக்கு ” கனவு விருது” அளிக்கப்பட்டது.11/12/22 ஞாயிறு மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற விழாவில் அந்த விருதை வழக்கறிஞர், எழுத்தாளர் சாமக்கோடா ரவி அவர்கள் வழங்கினார், விழாவிற்கு மக்கள் மாமன்ற நிறுவனத் தலைவர் சி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ந.குமரன் அவர்களின் கல்வி சார்ந்த நூல்கள் பற்றி கல்வியாளர் முத்துபாரதி விரிவாக பேசினார். குழந்தைகளின் திருக்குறள் சார்ந்த உரைகளும் அவர்களுக்கு பாராட்டுகளும் அஜந்தா நாராயணசாமி வழங்கினார். கவிதை வாசிப்பும் புத்தக அறிமுகங்களும் நடைபெற்றன.
கனவு விருதைப் பெற்றுக் கொண்ட ந. குமரன் அவர்கள் பேசும்போது சென்னையில் அவர் சில புலனாய்வு இதழ்களில் பணியாற்றிய அனுபவத்தையும் அரசியல் சூழல்களை புரிந்து கொண்டது பற்றியும் கல்வி நூல்கள் எழுதும் அனுபவத்தையும் அவற்றை மாணவர்கள் சரியாக படித்து பயன்பெற வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அவரின் கல்வி நூல்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை முதற்கொண்டு கடன் வசதி வரைக்கும் எல்லா விவரங்களும் தரப்பட்டிருக்கின்றன. அதேபோல சுய முன்னேற்றத்துடன் மாணவர்கள் தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் அவர் அந்த நூல்களில் தகவல்கள் தெரிவிக்கிறார். மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது ந. குமரன் அவர்களுடைய நூல்களாகும். நகுமரன் அவர்களின் கல்வி நூல்கள் பணியை பலர் பாராட்டிப் பேசினர். ஆசிரியைகள், மல்லிகா , மைதிலி மற்ரும் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன் ,.வின்செண்ட்ராஜ், ஆனந்தன், மாரிமுத்து, தங்கவேல், நாதன் ரகுநாதன் உட்பட பலர் உரையாற்றினர்