சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 27 டிசம்பர், 2022
கனவு சுப்ரபாரதி மணியன் அவர்களுடன் ஒரு நேர்காகாணல்
காப்பியன் பெரம்பலூர்
காப்பியன்: வணக்கம், தாங்கள் சமீபத்தில் பெற்றுள்ள விருதுகள் குறித்து சொல்லுங்க
கனவு: மேனாள் மத்திய நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து, தமிழறிஞர்
ஒளவை நடராஜன் போன்றவர்களால் அமைக்கப்பட்ட எழுத்து அறக்கட்டளையின் சார்பாக சிறந்த
நாவலுக்கான விருது, அதாவது என்னுடைய 'அந்நியர்கள் ' என்ற நாவலுக்கு விருது 1 லட்ச
ரூபாய் பணமும் கொடுத்து சிறப்பித்தார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அடுத்து சார்ஜாவில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் கொடுக்கப்பட்ட புக்கிஸ் விருது. இந்த சார்ஜா புத்தகக் கண்காட்சி என்பது அபுதாபி, சார்ஜா, துபாய் போன்ற நாட்டினர் சேர்ந்து நடத்தும்
உலகின் இரண்டாவது மிகப் பெரிய புத்தக கண்காட்சி ஆகும். நானும் என்னுடைய நண்பர்
சின்னராஜும் சார்ஜாவில் வசிக்கும் சிறந்த 30 மலையாள எழுத்தாளர்களின் வரைந்த
ஓவியங்களையும்எடுத்துச் சென்றேன். அங்கு என்னுடைய 'சப்பரம் ' எனும் நாவல்
மொழிபெயர்க்கப்பட்டு (மலையாளம்) வெளியிடப்பட்டது. அந்த நாவலை வெளியிட்ட பதிப்பாளர் என்னை அங்கு அழைத்து இருந்தார். நான் மனைவியுடன் அங்கு சென்று வந்தேன். எனது ஐந்து நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் நான் மலையாள
நாவல்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளேன்.
முன்பு சொன்ன அந்நியர்கள் எனும் நாவல் திருப்பூரில் வசிக்கும் இடம்
பெயர்ந்தவர்களின் வாழ்வை மையமாக கொண்டதாகும். அந்நாவல் ' துளசி' எனும்
வடநாட்டுப் பெண் இடம்பெயர்ந்து திருப்பூரில் வசிக்கிறாள். அவள் தன் வாழ்வில் காதல், குடும்பம்
போன்ற இயல்பான நிகழ்வுகளில் ஏற்படும் இடர்பாடுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்
சொல்லமுடியாத துயரங்களை எடுத்துச் சொல்லகிறது. திருப்பூரில் மட்டும் 10 லட்சம் மக்கள்
இருக்கிறார்கள் என்றால் அதில் 5 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்களின்
வேதனைகள், இன்றைய திருப்பூரின் இன்னொரு முகத்தை அந்நாவல் எடுத்துக்காட்டுகிறது.
காப்பியன்: கனவு இதழ் 36 ஆண்டுகளாக வெளிவருகிறது. இது வெளியிட்டுள்ள சிறப்பிதழ்கள் குறித்து கூறுங்கள்.
கனவு : கனவு இதழ் என்பதே சிறப்பிதழ்தான். அதிலும் குறிப்பாக பல்துறைசார்ந்த
சிறப்பிதழ்களைக் கொண்டு வந்துள்ளேன். ஜெயமோகன் தொகுத்த மலையாளக் கவிதைகள்,
பாவண்ணன் தொகுத்த கன்னட கவிதைகள், அசோகமித்திரன் சிறப்பிதழ், சுந்தரராமசாமி
சிறப்பிதழ்கள், சினிமா சார்ந்த சிறப்பிதழ்கள், இலங்கை சிறப்பிதழ், சிறார் இலக்கியச்
சிறப்பிதழ் போன்ற சிறப்பிதழ்களைக் கனவு வெளியிட்டுள்ளது. மேலும் இலண்டன், ஐரோப்ப்பிய
நாடுகளுக்கு நான் சென்று இருந்தேன். அங்கு வசிக்கும் எழுத்தாளர்கள் குறித்த சிறப்பிதழ்
வெளியிட்டுள்ளேன்.
காப்பியன் : கனவு இதழ் குறித்தும் அதன் வாசகர்கள் குறித்தும் கூறுங்கள்.
கனவு: கனவு இதழ் 800 பிரதிகள் அச்சடிக்கிறேன். 100 பேர் சந்தாதாரர்கள். ஒரு இதழ்
வெளியிட ரூ 10,000 ஆகிறது. என்னுடைய சுயவிருப்பத்தின் பேரின் பல லட்சரூபா செலவு
செய்து வருகிறேன். இது ஒரு பெரிய இடர்பாடுதான். முடிந்த வரை இதனைத் தொடர்ந்து செய்வேன்.
தொடக்க காலத்தில் ஐதிராபாத்தில் (ஆந்திரா) வசிக்கும் பொழுது அங்கு இருக்கும்
தமிழர்களின் கடைகளுக்கு கனவு இதழை எடுத்துச் செல்வேன். பலர் அதனை வரவேற்க்கவில்லை.
சிலர் ' கனவு ' இதழை வாங்கி மாட்டுவர்கள். இது எல்லாம் யாரு சார் வாங்குவாங்க. பாலஜோதிடம், ஜோதிடம், கனவு நிவர்த்தி போன்ற புத்தகம் இருந்தா குடுங்க என்பார்கள். சிலர்
வாங்கிச் செல்வர், கடைகளில், மற்ற புத்தகக் கண்காட்சிகளில் சிலரிடம் கெஞ்ச்சித்தான் அங்கு
விற்பனைக்கு வைக்க முடிந்தது.
காப்பியன் : கனவு சிற்றிதழ் மூலம் வளர்ந்த எழுத்தாளர்கள் குறித்து?
கனவு: கனவு இதழால் வளர்ந்த எழுத்தாளர்கள் என்று கூறமுடியாது. பலருக்கு மேடை
அமைத்து கொடுத்துள்ளது கனவு. எழுத, திறனாய்வு செய்ய பலருக்கும் கனவு பயன்பட்டுள்ளது.
நான் என்னுடைய படைப்புகளை கடந்த சில ஆண்டுகளாகத்தான் எழுதி வருகிறேன். ஜெயமோகன் போன்றவர்கள் இதில் முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறார்கள். காவியா பதிப்பகம் கனவில் வந்த 700 பக்க சிறந்த படைப்புகள் (சிறுகதைகள்) தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
அடுத்து 50 சிறுகதைகள் தொகுப்பு ஒன்று வெளியிட்டுள்ளோம்.
காப்பியன்: கனவு வெளிமாநிலம், வெளிநாடு என செல்கிறதா ?
கனவு: கனவு தொடக்க காலத்தில் வெளிநாடு சென்றது. இப்போது இல்லை. அங்கு சென்றால் எடுத்துச்செல்வேன். வெளிமாநில வாசகர்கள் சிலருக்கு அனுப்பிவைப்பேன்.
இலங்கைக்கு சில காலம் இதழ் சென்றது. புலம் பெயர்ந்த தமிழர்களிடையே (வெளிநாடு) கனவு ஓரளவு அறிமுகமாகி உள்ளது. இப்பொழுது தமிழ்நாட்டு வாசகர்கள்தான் அதிகம்பேர் வாசித்து வருகிறார்கள்.
காப்பியன்: படைப்புகளைக் கனவுக்கு அனுப்பி, அதில் இடம்பெறாது தவித்த படைப்பாளிகள்
அல்லது வருத்தப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்களா?
கனவு: இருக்கிறார்கள். கவிதை சிறுகதை அனுப்புவார்கள். அது எனக்கு பிடித்து இருந்தால்
வெளியிடுவேன். அதற்காக வருத்தப்பட்ட வாசகர்கள் நிறையபேர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள். ஆனால், யாரும் வருத்தப்பட்ட கனவு வாசகர் வட்டம் என்று அமைப்பாக
திரளவில்லை. (சிரிப்பு)
காப்பியன்: கனவு சிற்றிதழின் நோக்கம் சுருக்கமாக?
கனவு: பதிய புதிய படைப்பாளிகளை உருவாக்குவது, அணிகளுக்கு மேடையமைத்துக்
கொடுப்பது என்பது இதன் இலக்கு, கனவில் இடதுசாரி கருத்துகள், தமிழ்த்தேசிய மரபு சார்ந்த
கருத்துக்கள் அதிகம் இடம் பெறும்.
காப்பியன்: தங்களை வளர்த்த எழுத்தாளர்கள் யார் யார்?
கனவு : இப்படி குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது. நானே படித்து படித்து எழுதி
வளர்ந்தேன் எனக்கு கிடைத்த கதா விருது, சிறந்த தாவனுக்கான தமிழக அரசு விருது,
தமிழ்ச்செம்மல் விருது போன்றவைகள்தான் என்னை வளர்த்து வருகின்றன.
காப்பியன்: கனவுக்கு செலவு செய்வதை உங்கள் குடும்பத்தினர் பார்க்கும் பார்வை ?
கனவு: கனவுக்கு பணம் செலவு செய்வது தேவையில்லா செலவு என்றுதான் பார்க்கிறார்கள். என்னுடைய சுயவிருப்பம் இதில் அதிகம் பங்காற்றுகிறது. நானும் புலி வாலைப் பிடித்த கதையாக தொடர்கிறேன். புலி வால் என்னை விட்டுச் செல்லும் வரை விடாமல் பிடிக்க முயல்கிறேன். (சிரிப்பு)
காப்பியன்: அடிப்படையில் கணக்கு படித்த நீங்க எழுத வந்த கதை...
கனவு : நான் கோவை பூ.சா.கோ கல்லூரியில் எம்.எஸ்சி (கணக்கு) படித்தேன். அப்பொழுது புதுவெள்ளம் என்று மாணவர் இதழ் வந்தது. அதில் சில கவிதைகள் எழுதினேன். வெளிவந்தது. எனக்கு தமிழ்ப்பற்று, படைப்பாற்றல் தொடக்கம் அதுவே எனலாம். நாங்க ஒரு நெசவாளர் குடும்பம். எங்க குடும்பத்தில் எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளிகள் என்று யாரும் இல்லை. நான், என் முயற்சியால் படைப்பாளியாக மாறியுள்ளேன். இந்த தமிழ்ச் சமூகம்தான் என்னை வளர்த்து எடுத்தது.
காப்பியன்: கனவு இதழின் எதிர்கால செயல்திட்டம் குறித்து...?
கனவு : காசு கொஞ்சம் அதிகம் கிடைத்தால், அதிக பக்கங்களில் கனவு வெளியிடலாம்.நன்கொடை எதுவும் வருவதில்லை.பென்சன் காசை அதிகம் செலவு செய்ய முடிவதில்லை. புது சந்தா அபூர்வம். இலவசப்பிரதிகள் தான் அதிகம்.
மேலும், விரிவாகச் செய்தால் புதிய படைப்பாளிகளை உருவாக்கலாம் என்ற ஒரே ஒரு செயல்திட்டம்தான்
இருந்து வருகிறது. என் மூச்சு உள்ளவரை, என்னால் இயங்க முடியும் எனும் நிலை வரை கனவு
சிற்றிதழை வெளியிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாசகர்கள், சிற்றிதழ் ஆர்வலர்கள்,
தமிழ்நாடு அரசு, இந்திய ஒன்றிய அரசு போன்றவை இதுபோன்ற சிற்றிதழ்களுக்கு ஊக்கம்
கொடுத்தால் கனவு இதழ் மட்டுமல்ல பல்வேறு சிந்தனைகள் சார்ந்த இதழ்கள் வளரும். படைப்பாளிகள் சுதந்திர
படைப்பாளிகளாக வலம் வருவர். ( 03.10.2022 )