சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 27 டிசம்பர், 2022
சேலம் பொன் குமார் அவர்களின் சமீபத்திய மூன்று நூல்கள் / சுப்ரபாரதிமணியன்
வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன் கடிதங்கள் :
இந்த தொகுப்பில் முக்கியத்துவம் பெறுவது அதன் வடிவமைப்பாகும். கோடு போட்ட ஒரு நோட்டில் எழுதுவது போல கோடு போட்டபடி அனைத்து பக்கங்களும் திறந்து இருக்கின்றன. அந்த கோடுகளின் மேல் அச்சாக்கம் செய்யப்பட்டு விசேஷமாக இருக்கிறது. முதல் பக்கத்தில் தென்படும் பேனாவும் கண்ணாடியும் கடிதங்களின் குறியீடுகளாகக் கூட அமைந்திருக்கின்றன. இந்த கடிதங்களில் பெரியவர்கள் வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன் போன்றவர்கள் பொன் குமார் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன .அவற்றில் இலக்கிய செய்திகள், இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய நிகழ்வு பற்றிய பகிர்வுகள் இருக்கின்றன. தமிழகத்தின் தமிழ் சூழல் பற்றிய பல்வேறு காலகட்டத்தின் இலக்கியப் பிரதிபலிப்புகளை அவை கொண்டிருக்கின்றன. வெவ்வேறு காலகட்டங்களிலும் இலக்கிய நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கின்றன. இலக்கிய ரசனை எப்படி மாறி இருக்கிறது என்பது அடையாளம் இந்த நூலில் உள்ள கடிதங்கள் ஆகும். அதேபோல வல்லிக்கண்ணன் அவர்கள் பொன் குமார் அவர்களின் தொகுப்பு பற்றி எழுதிய சில கடிதங்கள் மற்றும் பொன்குமார் காலத்தின் குரலாக இருக்கிற தி க. சி ஒரு பார்வை என்ற கட்டுரை போன்றவையும் இடம் பெற்று இந்த நூலை வெறும் கடிதங்கள் என்ற அமைப்பில் இருந்து மாற்றி ஒரு கொலோஜ் வடிவத்தில் கொடுத்திருக்கிறது. கடிதங்கள் எழுதப்படுகிற காலங்கள் போய்விட்டன. ஆனால் அப்படி எழுதப்பட்ட கடிதங்களை பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியம். அப்படி பாதுகாக்கிற எண்ணத்தில் இந்த தொகுப்பு அமைந்திருக்கிறது
பொன்குமாரின் சமீபத்திய கவிதை தொகுப்பு ” தனிமையில் அலையும் ஒற்றைச் சிறகு “ பொன்குமார் நூல்கள் அறிமுகத்தில் தேர்ந்தவர். திறனாய்வாளர், நூல்களின் பாதுகாப்பாளர் ஒரு எழுத்.தாளரின் படைப்புகள் அவரிடம் இருக்கிறதோ இல்லையோ பொன் குமாரிடம் இருக்கும். அதுவும் அவருடைய நூலகத்தில் அவற்றையெல்லாம் எழுத்தாளர் வாரியாக பிரித்து வைத்திருப்பா.ர் அவற்றை தினந்தோறும் முகநூலில் பதிவு செய்வது ஆச்சரியமாக இருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர் பற்றிய நூல்களை தனியாக பட்டியலிட்டு வைத்திருப்பதும் அவற்றை கணினியில் சேமிப்பாக வைத்திருப்பதும் தேவைப்படும்போது அவற்றை பிரசுரிப்பதும் ஆச்சரியம் ஊட்டுகிறது. ஒரே மையத்தைக் கொண்டு கவிஞர்கள் பல வந்திருக்கின்றன அதேபோல பொன் குமார் அவர்கள் தமிழ் கவிதை வடிவத்தில் பல்வேறு விதமான வடிவங்களையும் முயற்சித்தவர். எழுதிக் கொண்டிருப்பவர். அந்த வகையில் நீள்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ உட்பட தனிப்பட்ட மையங்கள் சார்ந்த கவிதை நூல்களையும் எழுதி இருக்கிறார். அப்படித்தான் ஒரே மையம் கொண்ட கவிதை தொகுப்புகள் ஆக குழந்தைகள் பற்றிய அவர் ” இனிது” என்ற தொகுப்பை முன் வெளியிட்டு இருக்கிறார் இப்போது இந்த தொகுப்பில் தனிமை சார்ந்த அனுபவம் உங்களை பதிவு செய்திருக்கிறார். தனிமை என்பது ஒரு மனிதன் தனியாக இருப்பது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பது தான். கூட்டத்தோடு இருக்கிற போதும் அவன் தனிமையாக இருப்பதற்கு காரணம் அவனுடைய உளவியல் தன்மை தான். தனிமை சார்ந்து பல கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். வானத்தோடு இருந்தாலும் நட்சத்திரங்களோடு இருந்தாலும் மனிதர்களோடு இருந்தாலும் தனிமையிலேயே இருக்கிற மனம் பற்றி இந்த நூலில் பல கவிதைகளை சொல்லியிருக்கிறார். அதில் இயற்கை சார்ந்த விஷயங்கள், தனிமையில் எப்படி படுகின்றன என்பதையும் காட்டுகிறார். குடும்ப உறவுகளில் தனிமைப்படுத்தப்படும் மனிதர்களின் மனம் பற்றிய பல அங்க வாய்ப்புகள் இதில் உள்ளன. தனிமையில் இருக்கும் போது நினைவுகளை அசைவு போட்டு கொண்டாடுவதற்கான பல விஷயங்களை இந்த தொகுப்பு கொண்டிருக்கிறது.
இன்னொரு தொகுப்பு ” இறகு என்பது இன்னொரு பறவை “ என்ற தலைப்பில் ஆனது.
இறகில் இருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் பக்க தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது என்ற பிரமளின் கவிதை எல்லோருக்கும் நன்கு தெரிந்தது. பிரமிளின் கவிதைகளை பிரதி எடுத்தது போல தமிழில் உள்ள கவிஞர்களின் கவிதைகளை அவர் பலவற்றை தொகுத்திருக்கிறார் இதில் முன்னுரையில். அவற்றில் கைலாஷ் சிவன், பி வெங்கடாசலம், வைகறை போன்றவர்களின் கவிதைகளை குறிப்பிட்டு சிலாகிக்கிறார், அந்த கவிதை பற்றி சமீப காலத்திய சக எழுத்தாளர்கள் முகநூல் குறிப்புகளில் என்ன விமர்சனமாய் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதை பற்றியும் சிறு குறிப்புகளும் உள்ளது. இறகு என்பது பறவையினுடைய உடம்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் மனிதன் தான் அடையப் போகும் விடுதலைக்கு அந்த இறவு கூட காரணமாக அமையலாம். அந்த வகையில் பறக்கிற இறகோ, மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிற இறகோ அது வந்து சேர்வதற்கான காரணங்களோ என்பதைப் பற்றியெல்லாம் அலசக்கூடிய தொகுப்பு இந்த கவிதைகள்
. பறவைக்கு பாரமாக இருப்பதால் இறக்கி வைக்கப்பட்டது இறகு என்கிறது ஒரு கவிதை. அதே போல மனம் பாரமாக இருப்பதால் இறக்கி வைப்பதற்கு இலக்கியம் ஒரு சுமை தாங்கியாக இருக்கிறது. அப்படி சுமை தாங்கியாக இந்த நூல் அமைந்திருக்கிறது
சமீபத்தில் பொன் குமார் அவர்களின் இந்த மூன்று நூல்களை திண்டுக்கல் வெற்றிமதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இலக்கிய செயல்பாட்டில் இருக்கிற பொன் குமாருடைய முத்திரைகளாக இந்த நூல்கள் அமைந்திருக்கின்றன
சுப்ரபாரதிமணியன்