சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 27 டிசம்பர், 2022
வாழ்த்துகிறேன்.
கோவை பூ சா கோ கலை கல்லூரியில் முதுநிலை கணிதம் படித்தேன். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கணிதம் படித்தேன். மற்றும் அங்கு அந்த காலத்து பியூசி கூட திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்தேன். உள்ளூர் கல்லூரி என்பதால் எப்போதும் அந்த கல்லூரி தமிழ் துறையுடன் தொடர்பில் இருப்பேன். சென்றாண்டில் கூட மாணவருக்காக வகுப்பெடுப்பதற்காக பலமுறை சென்றிருக்கிறேன். நல்ல அனுபவமாக அமைந்தது.
.
தமிழ் துறை சார்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆர்வம் எடுத்துக் கொண்டு பல நிகழ்ச்சிகளை சென்றாண்டு நடத்தினார்கள். அதில் தீபன் போன்ற உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய கருத்தரங்குகள் பற்றிச் சொல்லலாம்.
. என் திருப்பூர் மையமான படைப்புகள் பற்றி ” திருப்பூரியம் “ என்றொரு கருத்தரங்கையும் அவர்கள் நடத்தினார்கள். நானும் அந்த மாணவர்களின் படைப்புகளை தொகுத்து மின்னூல் ஒன்றை ” கனவு” சார்பாக வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளின் போது நான் விஜயராஜ் அவர்களை சந்தித்து இருக்கிறேன். கவனித்திருக்கிறேன். அவர் இந்த கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துகிற போது ஆர்வத்துடன் பங்கு பெறுவார். சமூக ஊடக விஷயங்களில் அக்கறை கொண்டு தீவிரமாக இருப்பார். நவீன படைப்புகள் பற்றி அவ்வப்போது பேசுவார். இப்போது அவர் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த கவிதை தொகுப்பும் வெளியிடுகிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் ஈடுபாடும், அக்கறையும் பாராட்டும்படி இருக்கிறது., அவருடைய கவிதைகளில் குடும்ப உறவுகள், அவரைச் சுற்றியுள்ள உறவுகள், இயற்கை சார்ந்த விஷயங்கள் பற்றி எல்லாம் மிகவும் கவலைப்படுகிறார். எந்த சிக்கலும் இல்லாமல் எளிய மொழியில் அவற்றையெல்லாம் எழுதுகிறார். கவித்துவமாய் பல விஷயங்கள் அவர் மனதில் இருந்து கழிகின்றன.
திருப்பூர் கல்லூரியில் படிக்கிற மாணவர்களில் பெரும்பகுதியினர் பகுதி நேர வேலையாக பின்னலாடைத் துறை சார்ந்த வேலையை செய்கிறார்கள். படிப்பு முடிந்த பின்னால் அவர்களுக்கு வேலை தேடுவது சிரமமாக இல்லை. அதில் தீவிர அக்கறை எடுத்துக் கொள்வதில்லை .அவர்கள் கற்ற பின்னலாடை தொழில் சார்ந்த மீண்டும் இயங்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் விஜயராஜ் அவர்களுக்கு பின்னலாடை துறை சார்ந்த வேலை அனுபவங்கள் இருந்தால் கூட, அவர் கல்வியும், மேல் படிப்பும் மிக முக்கியம் என்று கருதி பின்னலாடை துறை சார்ந்த வேலைகளை ஓரளவு புறந்தள்ளிவிட்டு மேல் படிப்பு சார்ந்து தொடர்ந்து இயங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதில் பல இடையூறுகளை கண்டறிந்து அதில் இருந்து மீண்டு தொடர்ந்து வருகிறார். இந்த வகையில் பல மாணவர்களுக்கு நான் இதுவரை சொன்ன அறிவுரைகளில் பின்னலாடைத் துறைகளுக்குள்ளே மட்டும் இருந்து விடாதீர்கள். அது சாதாரண தொழிலாளி ஆக்கிவிடும். அதிலிருந்து மீள்வதற்காக வேறு படிப்பு முயற்சிகளும் வேறு வேலை முயற்சிகளும், படைப்பிலக்கியத்தில் அக்கறையும், வாசிப்பில் அக்கறையும் இருந்தால் வாழ்க்கை இன்னொரு புதிய திசை காட்டும் என்ற அறிவுரையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
விஜயராஜ் அவர்களுடைய முயற்சிகள் அந்த வகையில் இருக்கிறது. தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இருந்து விடுவிக்கிறவை.அவை தன்னுடைய தனி தன்மையுடையதாகக் கருதுகிறார். அந்த வகையில் அவருடைய இந்த கவிதை தொகுப்பு முயற்சிகள் ஆரம்பகாலப் படிக்கட்டுகள் என்று சொல்லலாம்.
தீவிரமான வாசிப்பும், எழுத்து பயிற்சியும் அவரை கவிதை மட்டும் அல்ல, வேறு உரைநடை இலக்கியம் சார்ந்தும் நிறைய சாதனைகளை செய்ய வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது, அந்த வகையில் அவருடைய இந்த கவிதை முயற்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, தொடர்ந்து அவர் சாதனைகளை புரிய இது ஒரு சிறு ஆரம்பமாக இருக்கிறது, அவரை வாழ்த்துகிறேன்.
சுப்ரபாரதி மணியன், திருப்பூர்