சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 30 மார்ச், 2022
தீபன் என்ற தீவிரமானத் திருப்பூர் குரல்
சுப்ரபாரதிமணியன்
இளம் நண்பர் ரா. தீபன் அவர்கள் விளிம்பு நிலை மக்கள் பற்றிய வாழ்க்கையை கூர்ந்து பார்ப்பதிலும் அவர்கள் சார்ந்த வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற எண்ண நடவடிக்கைகளும் கொண்டு நெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர் .அதன் ஆதாரமாக மார்க்சிய தத்துவத்தின் மீது அக்கறை கொண்டு தத்துவார்த்த நூல்களை தொடர்ந்து படிக்கவும் மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயலும் நடவடிக்கைகளும் கொண்டவர்.
அந்த வகையில் அவரின் எண்ண எழுச்சிகளை சிறு சிறு கவிதைகளாக அவ்வப்போது எழுதி வெளியிட்டிருக்கிறார்.. தொகுப்பாகவும்,பின்னர் அந்தக் கவிதைகள் ஒரு நூலாய் வந்திருக்கிறது .அதன் தொடர்ச்சியாக உரைநடைக்கும் நுழைந்தவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் .அந்தக் கதைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது .
வழக்கம் போல் அவரின் அக்கறை கவிதைகள் ஆனாலும், சிறுகதைகள் ஆனாலும் அது சாதாரண மக்கள் பற்றியதாகவே இருக்கிறது, அவர் எழுதும் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளில் கூட விளிம்புநிலை மக்களுடைய வாழ்க்கை பற்றியும் அவர்களின் போராட்டங்களைப் பற்றியும் அவர்களுக்கான விடுதலை பற்றியும் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருப்பவர் அந்த மாதிரியான திரைப்படங்களை தேடி பார்ப்பவர். குறும்படங்களும் வெளியிட்டுள்ளார்
இந்த நூலில் கதை மாந்தர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்கள் .சாதிய, வர்க்க வேறுபாடுகளும் சாதிய அடுக்குகளும் சக மனிதனை எப்படி அந்நியப்படுத்துகிறது என்பது பற்றிய அக்கறை இந்தக் கதைகளில் இருக்கிறது. அப்படித்தான் சேரியில் வாழக்கூடிய ஒரு சாதாரண கழிவுநீர் சார்ந்த தொழிலை செய்யக்கூடிய ஒருவனைப் பற்றிய வாழ்க்கையையும் அவன் மனைவி காவேரியையும் ஒரு கதையில் பாத்திரங்களாக கொண்டுவந்திருக்கிறார் .ஆண்டான் அடிமை பிரச்சனை எப்படி ஊறிப் போயிருக்கிறது என்று அந்த கதையை ஆரம்பிக்கிறார் .கணவன் இறந்த போன பின்னால் அவள் மீது வைக்கிற பாலியல் சீண்டல்கள், தினசரி வாழ்க்கையை சிரமங்கள் பற்றி விரிவாகச் சொல்கிறார் .அவள் தற்காலிகமாக வேலை செய்த ஒரு நிறுவனத்தில் ரசாயன பொருட்கள் தலையில் கொட்டிப்போக பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள் தொழிலாளர் சங்க தலைவர் அந்த நிறுவனத்திலிருந்து கொஞ்சம் பணம் பெற்று விலகிக் கொள்கிறார். அவர் மாறி மாறி வேலைக்கு முயல்கிறார் அவர் வேறு வேலை கூட செல்ல முடியாத சிரமங்களையும் கடைசியில் எல்லோரும் அலட்சியப்படுத்தும் தூய்மைப் பணியாளர் பணிக்கு செல்ல வேண்டிய நிலையும் சொல்லப்பட்டிருக்கிறது கணவனின் தொழில் சார்ந்த விஷயங்களும் அதேபோன்ற ஒரு இடத்திற்கு வந்து சேர்வதும் எதேச்சையாக நிகழ்ந்ததாக இருந்தாலும் அவர்களுக்கு விதிக்கப்பட்டது அதுதான்.
ஒரு எழுத்தாளனின், கவிஞனின் முயற்சிகளில் அவன் ஏமாற்றப்படுவதை ஆட்டோ கவிஞர் என்ற கதையில் சொல்லியிருக்கிறார், எனக்கு தெரிந்த சில இலக்கியவாதிகளையும் அந்தக் கதைகளில் கண்டேன் தஸ்கான் என்ற கதையில் பழைய பொருள்களை சேகரிப்பதும் அதன் மூலமாக படுக்கையில் கிடக்கும் அம்மாவை காப்பாற்றுவதும் அவனுக்கு நிர்ப்பந்தமாக இருக்கிறது. அவனின் கனவு ஒரு சொந்த மிதிவண்டி. அது கூட கிடைப்பதில்லை .அம்மா இறந்து போகிறாள் கைகளில் இருந்த பணமெல்லாம் கரைந்து போக அவனுக்கு திருட்டுப் பட்டம் கட்டி அவனிடமிருந்த மிதிவண்டி பறிக்கப்பட்டு விடுகிறது. இது போன்ற விளிம்புநிலை மக்களின் ஆதாரமாக இருக்கிற சிறுசிறு விஷயங்களும் அவர்களை விட்டு நழுவிப் போவதை இது போன்ற கதைகளில் சொல்கிறார்.
பல கதைகளில் மருத்துவமனைகளில் விளிம்பு நிலை மக்கள் படும் சிரமங்களையும் அவர்களுக்கு சரியாக மருத்துவ உதவி கிடைக்காத விஷயத்தையும் விமர்சனமாக வைக்கிறார் .ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த ராசப்பன் பற்றி கூட இவரால் எழுத முடிகிறது. வேறு வேலை இல்லை. கொஞ்சம் சொத்து இருக்கிறது இந்த சொத்தை பிடுங்கிக் கொள்ள பெரிய கூட்டமே இருக்கிறது சொத்துடமை என்பது எல்லா பகுதியிலும் மனித உயிர்களை, உறவுகளை பிரிக்க விஷயமாக இருக்கிறது இந்த கதையிலும் அதுதான் ராசப்பனுக்கு நிகழ்கிறது அவன் சாதாரணமானவன் அவனை இன்னும் சாதாரணமானவன் என்று அலட்சியப்படுத்தும் சமூகமும் சொத்துரிமை பற்றிய கேள்வியும் இந்த கதைகளில் அடங்கியிருக்கிறது
மண்டபம் போன்ற கதைகளில் இருக்கிற குறியீட்டுத் தன்மை மிக முக்கியமானது. மண்டபம் கதையில் நடக்கிற விஷயங்களை ஒரு கூட்டுக்குடும்பத்தில், பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்கிற ஒரு காம்பவுண்டில், கோவிலிலோ அல்லது பொது இடத்திலோ எங்குமே நடக்கக் கூடியதுதான் அதனால்தான் அதை ஒரு குறியீடு என்று சொன்னேன், அங்கு நடக்கின்ற வர்க்க முரண்பாடு விஷயங்கள், சாதிரீதியான சுரண்டல்கள் சாதி நிலையிலிருந்து சாதாரண மக்களை பார்ப்பது எல்லாம் சரியாக வெளிப்படுகிறது ஆனால் அவர்கள்தான் உழைப்பின் அடிப்படையாக இருப்பரைச் சிறப்பாக சொல்கிறார் .இந்த மண்டபம் போன்ற குறியீடுகளை இந்த கதைகளில் பலவற்றில் காணலாம்.
இவரின் பார்வையில் இன்றைய சுற்றுச்சூழல் கேடும் அதிலிருந்து மக்கள் மீள வேண்டிய அவசியமும் தொடர்ந்து காணப்படுகிறது அப்படித்தான் மரம் சார்ந்த ஒரு கதை .இயற்கை வாழ்க்கையை நேசிக்கிற ஒரு மனிதர் ஒரு மரத்தினை பாதுகாக்க வேண்டிய எண்ணம் அவருக்கு ஏற்படுகிறது ஆனால் அந்த மரத்தை சுற்றி நடக்கிற சமூகவிரோத செயல்களை விரிவாகச் சொல்கிறார் .இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ வேண்டிய மனிதன் இதுபோன்ற இயற்கை செல்வங்களை சுரண்டுவது, தவறாக பயன்படுத்துவது அடையாளமாக இந்த கதை செல்கிறது ரசாயனப் பொருட்களை ஊற்றி அந்த மரம் பட்டு போக செய்ய வைக்கிறார்கள் .இடி விழுந்து தீ பிடித்துக் கொள்கிறது இந்த நிலைய பார்க்க அவனுக்கு மனம் சிரமமாகி விடுகிறது சாவு வரைக்குமான பயத்தையும் கொடுத்திருக்கிறது.
பெரும் நகரம் சார்ந்த கிராமிய வாழ்க்கை கதாபாத்திரங்களை இந்த சிறுகதைத் தொகுப்பில் நாம் காணலாம் அந்த மனிதர்களெல்லாம் எல்லோருக்கும் பரிச்சயமானவர்கள். அவருடைய பிரச்சனைகளை நாம் கூர்ந்து கவனிப்பது இல்லை ஆனால் தீபன் போன்ற எழுத்தாளர்கள் சமூக நடவடிக்கைகளில் அக்கறை கொண்டவர்கள். கூர்ந்து கவனிக்கிறார்கள். அதன்மூலம் விளிம்புநிலை மக்கள் பற்றிய விடுதலைக் குரலை மெலிதாக எழுப்புகிறார்கள். இந்த முயற்சி முக்கியமானதாகத் தோன்றுகிறது காரணம் 12 மணி நேரம் /15 மணி நேரம் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இவ்வகை மனிதர்களைக் கூர்ந்து பார்த்து அவர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற அவரின் அக்கறை இது போன்ற படைப்புகளை தொடர்ந்து உருவாக்கும் வேகத்தைக் கொண்டிருக்கும்
திருப்பூர் மாவட்டம் போன்ற பகுதிகளில் படைப்பாளிகள் சிறப்பாக உருவாகிக் கொண்டிருப்பதின் அடையாளமாய் இன்றைய இளைய தலைமுறையில் தீபன் அவர்கள் விளங்குகிறார். அவரின் இன்னொரு அழுத்தமானத் தடமாக அவரின் சிறுகதைகளும் அமைந்திருக்கின்றன வாழ்த்துக்கள்
சுப்ரபாரதிமணியன்