சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 மார்ச், 2022

மாணவர் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து எழுதிய சிறார் நூல் / சுப்ரபாரதிமணியன் சமீபத்தில் திருப்பூரைச் சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மேகா அவர்களின் சிறாவர் கதைகளை படித்து ஒரு முன்னுரை எழுதினேன். இப்போது இன்னொரு மாணவர் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து எழுதிய சிறார் நூல் பற்றி எழுதுவதும் இன்னொரு விதமான மகிழ்ச்சியாக இருக்கிறது கொரானா காலகட்டத்திற்குப் பிறகு குழந்தைகளின் எழுத்துத் திறனும் வாசிப்ப திறனும் சிதறடிக்கப்பட்டு இருக்கிறது குழந்தைகளின் எழுத்து பயிற்சியும் இல்லாமல் அல்லது குறைந்து போய்வட்டது. இந்த சூழலில் குழந்தைகள் தங்கள் அனுபவங்களை கதைகளாக எழுதுவது அவர்களுக்கு மொழி சார்ந்த பயிற்சியாகவும் இருக்கும். தங்களடைய அனுபவத்தை விரித்துக்கொண்டு போவதற்கான முயற்சியாக இருக்கும் முன்பெல்லாம் குழந்தைகள் கதைகள் என்ற பெயரில் பெரிய பெரியவர்கள் தான் அதிகம் எழுதுவார்கள். ஆனால் இன்று குழந்தைகளே நிறைய எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் அவையெல்லாம் இன்னும் பெரிய விரிந்த பரப்பிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் பாடப் புத்தகங்களைத் தாண்டி மொழி பயிற்சிக்காக எழுதுவதும் கதை அனுபவத்தை விரித்துக்கொண்டு போவதும் வாசிப்பும் மிகவும் அவசியம் எனப்படுகிறது .இந்த சூழலில் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து இந்த தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார் .அது ஆரோக்கியமான கதைகளாக இருக்கிறது என்பது மகிழ்ச்சி . விலங்குகள் பறவைகளை வைத்துக் கொண்டுதான் நீதிகளை அறிவுரைகளை சொல்ல வேண்டும் என்று இல்லை அப்படி சொல்வதில் இருக்கின்ற கற்பனை வளமும் முக்கியமானது ஆனால் இன்றைக்க சமூகத்தில் குழந்தைகள் பெண்கள் பெற்றோர், கல்வி பற்றியும் முக்கியமாகச் சுற்றுச்சூழல் பற்றியும் நமக்கு உள்ள பார்வை வெவ்வேறு வகைகளில் குழந்தைகளிடம் வெளிப்படுகிறது அப்படித்தான் அவர்கள் அதை எல்லாம் கவனித்து இன்றைக்கு எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கான மொழி என்பது குழந்தைகள் எழுதும்போதுதான் வசப்படும் அதைத் திரும்பத் திரும்ப படிக்கிறபோது பெரியோர்களுக்கும் வசப்படும் அப்படித்தான் எளிமையான மொழியில் சச்சினும் கதை சொல்லிக் சரிதாவும் இந்த நூலை எழுதி இருக்கிறார்கள்.நவீன தமிழ் இலக்கிய பங்களிப்பில் குடும்பமே ஈடுபடுவது அல்லது குழந்தைகளின் பங்கேற்புடன் பெரியவர்கள் ஈடுபடுவது என்பது மிக முக்கியமானது. அப்படித்தான் நான் சச்சின் உடைய பங்களிப்பையும் அவனுடைய பங்களிப்பையும் சரிதா ஜோவுடன் கவனிக்கிறேன். இவற்றில் சிறுவர்களுக்கான கற்பனை வளம் சிறப்பாக இருக்கிறது மேகத்தை பார்த்து வெள்ளைக்கிளி என்றும் வெள்ளை யானை என்றும் அவர்களால் மகிழ்ச்சி அடைய முடிகிறது. கனவுகளைப் பற்றி பல தகவல்கள் பெரியோர்களால் சொல்லப்படும். ஜாதக குறிப்புகளும் தினசரி கேலண்டர் குறிப்புகளும் நிறைய கிடைக்கும். ஆனால் அந்த கனவுகள் என்பது என்ன என்பதைப் பற்றிய ஒரு விஞ்ஞானப் பார்வையை ஒரு கதை சொல்கிறது. இயற்கை சூழலும் வாழ்வும் என்றைக்கும் மனிதனை இயல்பாக இருக்க வைக்கும். ஆனால் இன்றைக்கு சூழல் மாறிவிட்டது இயற்கையிலிருந்து நாம் வெகுவாக தள்ளி இருக்கிறோம் அதனால் நிறைய சிரமப்படுகிறோம் அதில் இந்த கொரானா தொற்று முக்கியமானதாகும். நமக்கு எல்லாமே கிடைத்து விடுகிறது .ஆனால் இயற்கையோடு இணைந்த அனுபவங்கள் கிடைப்பதில்லை அப்படித்தான் மலர்களிலிருந்து தேனை எடுத்துக் கொள்ள வண்ணத்துப்பூச்சி விரும்புகிறது. நேரடியாக அதற்கு கிடைக்கும் தேன் என்பது அதற்கு தேவையில்லாமல் இருக்கிறது இந்த அனுபவம் மனிதனுக்கும் மிகவும் பொருத்தப்பட உள்ளதாக இருக்கிறது. இந்த கதைகளில் உரைநடைத் தன்மை என்பதை மீறி பேச்சுவழக்கில் கதைகளை எழுதியிருப்பதும் இன்னும் வாசகர்களை ஈர்ப்பு ஆக்குகிறது எல்லா உயிர்களுக்கும் இருக்கும் இயல்புகள் மனிதர்களைப்போல முக்கியமானவை என்று இக்கதைகள் சொல்லுகின்றன .காதலர் தினம் பற்றிய பல்வேறு விளக்கங்கள் இருந்தாலும் அன்பு நேசம் இவற்றை மையமாகக் கொண்ட காதலர் தினம் பற்றிய கதைகளும் கூட தனித்தன்மை பெற்று இருக்கின்றன. மழை என்ற அனுபவத்தை அல்லது நல்ல காற்றை அனுபவிப்பது அல்லது இயற்கை சூழலை வெளிக்காட்டுவது என்பதெல்லாம் மனிதனை இலகுவாகிவிடும் அப்படித்தான் இந்த சிறுகதைகள் நம்மைகை பிடித்து அழைத்துச் சென்று பல இடங்களைக் காட்டுபவை பல்வேறு விஷயங்களில் தவறான புரிதல்களைச் சுட்டிக்காட்டும் . கற்ற குழந்தைகளை வசீகரிக்கும் இந்த கதைகளை சரிதாவும் அவர் மகனும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள். சுப்ரபாரதிமணியன் திருப்பூர