சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 30 மார்ச், 2022
.
திருப்பூர் மேகா பிரியதர்ஷினி என்ற எட்டாம் வகுப்பு படிக்கிற மாணவியின் கதைகள் / சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
சிறுவர்களை தமிழில் எழுதவைப்பது சிரமம். கல்வித்திட்டப் பாடம் தாண்டி அவர்கள் சிந்தனை வெளிப்படுத்துவது இன்னும் சிரமம். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் எழுத்துப் பயிற்சியும் கல்வி அக்கறையும் குறைந்துவருகிறது
மேகா பிரியதர்ஷினி எட்டாம் வகுப்பு படிக்கிற மாணவி தொடர்ந்து அவரின் தந்தை எழுத்தாளர் அழகு பாண்டி அரசப்பனுடன் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் .பாடல்கள் பாடுகிறார் கதைகள் சொல்கிறார். இந்த அக்கறை அவரைத் தொடர்ந்து எழுதவும் செய்திருக்கிறது என்பது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது .அழகு பாண்டி அரசப்பன் சிறுகதைகள் எழுதுவதற்கு மேகா பிரியதர்ஷினிதான் காரணம் என்பது தனிக்கதை
சிறுவர் கதைகளில் அவர்களே எழுதும் ஈர்ப்பில் இயல்பில் இனிமையான மொழிநடையும் சின்ன சின்ன விடயங்களும் இருக்கும். அதைத்தாண்டி அவற்றில் பெரியவர்கள் பாதிப்பு என்கிறபோது மிகையான சம்பவங்களும் அதிகமான கற்பனையும் கூட கலந்து விடும்.
அதெல்லாம் இல்லாமல் ரேகா பிரியதர்ஷினி எட்டாம் வகுப்பிலேயே ஒரு தொகுப்பை முழுமையாக எழுதி இருக்கிறார். முதல் கதை மிகவும் முக்கியமான கதை அரவிந்தன் குமாட்டி என்றொரு படம் எடுத்திருக்கிறார் அதில் கிராமத்திற்கு வந்து போகும் ஒரு மந்திரவாதி குறும்பு செய்யும் குழந்தைகளை நாயாக மாற்றி விடுவார் .ஒரு நாயை மறுபடியும் சிறுவன் ஆக மாற்றாமல் அந்த கிராமத்தை விட்டு சென்று விடுவார் அடுத்த ஆண்டில்தான் மீண்டும் வருவார் .அந்த சூழலில் அந்த குழந்தையின் மன இயல்பையும் பெற்றோர்களைப் பற்றியும் அந்தப் படம் சொன்னது . 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம். சம்பந்தமில்லாமல் எனக்கு அந்தப் படம்தான் ஞாபகம் வந்தது .முதல் கதை அந்த மையம் மாதிரி ஒன்று. அருமையான கதை
ஆனால் ரேகா பிரியதர்ஷினி அந்த படமெல்லாம் பார்க்க வாய்ப்பில்லை. மொட்டு, பூக்கள் மலரும் அனுபவம் பற்றிய ஒரு அருமையான கற்பனையை முதல் கதையிலேயே சொல்லியிருக்கிறார். அழகு பாண்டி அரசப்பன் தன் மகளின் கதை எழுதும், கதை சொல்லும் பாதிப்பே தன்னை சிறுகதைகள் எழுதி வைத்ததாக சொன்னது பெருமைப்பட வைத்தது
எந்த வித திடுக்கிடும் சம்பவங்களும் அதிகம் இல்லாமல் இந்த கதைகளை வடிவமைத்திருக்கிறார், ஒரு பயணம் பற்றிய கதையில் அப்படித்தான் எளிமையான விஷயம், மழை சார்ந்த உணர்வுகள் அவரை பிரமிக்க வைத்து இருப்பதை கதையாக எழுதியிருக்கிறார். இன்றைய தலைமுறையில் கடிதம் எழுதுவது, டைரி எழுதுவது போன்றவை மறந்து விட்ட சூழலில் அவற்றின் முக்கியத்துவத்தை சில கதைகள் உணர்த்துகின்றன. சிறுவர்கள் பெரும்பாலும் பேய்கதைகளையும், திகில் கதைகளை விரும்பி கேட்கிறார்கள். சிறுவர் இலக்கியத்தில் இவ் வகைக் கதைகள் நூல்கள் நிறைய வருகின்றன. ஆனால் ரேகா பிரியதர்ஷினி மூடநம்பிக்கை கற்பிதம் பற்றியக் கட்டுடைப்பை சரியாகவே தன் கருத்தை கதைகளில் வைத்திருக்கிறார் அழகு செயலில்தான் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார், திருடு போவது, மாணவர்கள் அதில் ஈடுபடுவது போன்றவற்றில் இருந்து அவர்களை மாற்றுப் பாதைக்கு செல்ல வேண்டிய செலுத்தவேண்டிய அக்கறையும் அவரின் கதையில் இருக்கிறது, பிளாட்பாரத்தில் வசிக்கும் சிறுமிக்கு சட்டென மறுவாழ்வு கிடைக்கிறது, அது லாட்டரி சீட்டு பரிசு கொடுப்பது போலத்தான்,, ஆனால் அவ்வகை நேர்மறையான கற்பனைகூட சிறப்பாகத்தான் இருக்கிறது, தாவணி போடப்பயந்து பள்ளிக்கு போகாமல் இருந்த பாட்டியை பற்றிக் கதை எழுதுவதும் பிளாட்பார சிறுமி குறித்து கதை எழுதுவதும் ஆச்சரியப்படுத்துகிறது யூ டியூப் பார்த்துச் சமையல் செய்யும் போக்கு, அவற்றை விமர்சனம் செய்வது கிண்டல் செய்வது என்பதும் நல்ல விஷயமாக இருக்கிறது. வெற்றி பெற முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற சிறுவர்க்கான அறிவுரைகளும் சரியாக கதைகளாக வந்திருக்கின்றன. அவர்கள் தரும் அறிவுரை பெரியவர்களை கவனத்திலெடுத்து அக்கறை கொள்ளச் செய்திருக்கிறது. அதை இந்த கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.
வார்த்தைகள் மூலம் கட்டமைக்கப்படும் சிறுவர் உலகம் எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது அந்த மகிழ்ச்சியை தொடர்ந்து மேகா பிரியதர்ஷினி தன் படைப்பு செயல் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் செய்துவருவதை கவனித்திருக்கிறேன். அவர இத்தொகுப்பின் மூலம் இப்படி வெளிபட்டபோது பெரிய சாதனையாகப்படுகிறது வாழ்த்துவோம்
சுப்ரபாரதிமணியன் திருப்பூர்