சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 18 டிசம்பர், 2021

Kanavu publication new book

என்னுரை…… மகிழ்ச்சி துயரம்..…….சோர்வு உற்சாகம்..……பணிச் சுமை ஓய்வு நேரம்….....என அனைத்துத் தருணங்களிலும் வாழ்வியலின் அதி முக்கிய அம்சமாய் ஆகிவிட்டிருக்கும் ஃபில்டர் காப்பி போன்றது தான் எந்த நேரத்திலும் வாசிக்க உவப்பாக இருக்கும் சிறுகதை!! நறு மணம் நாசியை எட்டும் போதே நாவின் சுவை மொட்டுகள் ஆர்ப்பரித்தெழுந்து ஆவலைக் கிளப்பி விடும் நல்ல ஃபில்டர் காப்பி தயாரிக்க உதவும் தரமான காப்பித்தூள்…….நீர் சேர்க்காத பால்…..அளவான சர்க்கரை……..பதமான சூடு ஆகியவற்றின் நேர்த்தியான இணைப்பு போன்றது தான் சிறுகதை வடிவம்! கதையின் துவக்கம்…..முடிவு… ..கதை நடக்கும் கால அளவு……களம்….உரையாடல் நேர்த்தி…..கதைக் கரு….இவற்றின் பக்குவமான சேர்க்கை ஒரு அழகான சிறுகதையாய் வடிவம் பெறும். . வ.வே.சு ஐயரின் “ குளத்தங்கரை அரச மரம் “ எனும் முதல் தமிழ் சிறுகதைக் காலம் துவங்கி இன்றைய தேதி வரை நவீனத்துவம்…பின் நவீனத்துவம்…யதார்த்தம்….மாய யதார்த்தம்…என இன்னும் ஏதேதோ தன்மைகளுடன் கட்டமைப்பு அநேகநேக மாற்றங்கள் கண்டாலும் அனைத்தும் வந்துடையும் மையப் புள்ளி ஒன்று தான்! சிறுகதை என்பது ஒரு சிறந்த குறும் படம் பார்க்கும் நிறைவைத் தர வேண்டுமென்பது என் பணிவான கருத்து, குறும் படம் என்றதன் காரணம் கதையின் காலப் பிரக்ஞை! கதை நடக்கும் கால இடைவெளி மிகக் குறுகியதாய் இருக்க வேண்டும். கதைப் போக்கில் ஒரு முப்பதாண்டுகள் உருண்டோடின எனக் காலச் சக்கரத்தை விண்வெளி ராக்கெட் வேகத்தில் ஓட்டி விடக் கூடாது. தேவையெனில் அந்த முப்பதாண்டுகள் FLASH BACK ஆக வரலம். ஆனால் கதை துவங்கி முடியும் கால அளவு எவ்வளவு குறுகலோ அவ்வளவு சுவாரசியம்! அடுத்தது கதைக் களம்..! கதை நடக்கும் இடம் குறித்த விவரணை மிக மிக முக்கியம்….அது வீடாக இருந்தாலும்!! அப்படியின்றி வெறும் உரையாடல்களிலேயே கதையை நகர்த்திச் சென்றால் அது ஒரு நாடகம் போல் ஆகி விடும். மேடை நாடகம் கூட அல்ல…..அங்காவது பின்னணியில் காட்சிகளுக்கேற்ப திரைகள் மாற்றப்படும். வானொலி நாடகங்கள் போல் என வைத்துக் கொள்வோமே! மேலும் கதைக் களத்துக்கு முக்கியத்துவம் தருவது வாசகர்களைக் கதையுடன் ஒன்றச் செய்து அவர்களும் அவ்விடத்தில் இருக்கும் பிரமை ஏற்படுத்தும்.. இவையெல்லாம் என் கருத்துகளேயன்றி ஏதோ சிறுகதை வகுப்பறையாக என்னுரை அமைவதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம். மேற்சொன்ன அம்சங்கள் குறித்து கூடுமானவரை என். சிறுகதைகளில் கவனம் கொள்கிறேன். இது என் ஐந்தாம் சிறுகதைத் தொகுப்பு.. மனித உணர்வுகள்..உறவுகள்….அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கும் இடையறா நிகழ்வுகளினூடே நாம் தரிசிக்கும் அல்லது பெறும் அனுபவச் சிதறல்களின் குவிப்பு தான் சிறுகதையாய் உருப் பெறுகிறது.. என் நான்காம் தொகுப்பான “ வாழ்க்கைக் காடு “ எனும் நூலில் பல கதைகள் .அக் காலக்கட்டத்தில் வெகு மும்மரமாய் நடந்த தெலங்கானாப் போராட்ட விளைவாய் ஆந்திரா…தெலங்கானா இரு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சூழல்களின் பின்னணியில் அமைந்தவை. தவிர சில கதைகள் நான் பயணித்த சில இடங்கள் சார்ந்தவையும்..! இப் புதிய தொகுப்பிலும் தெலங்கானாப் பிரதேசம் சார்ந்த சில கதைகள் இடம் பெற்றுள்ளன…..முற்றிலும் வேறு பின்புலத்துடன்! இதிலும் பயணக் கதைகள் சில உண்டு.. ஒரு கூடுதல் அம்சம்….……இரண்டு மூன்றாண்டுகளாய் முதல் அலை…இரண்டாம் அலை என ஒட்டு மொத்த உலகையும் சுனாமிப் பேரலைகளாய் புரட்டிப் போட்டு அனைத்து நிலைகளிலும் மக்களின் ஜீவாதாரத்தையே கேள்விக் குறியாக்கியபடி நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டுள்ள கொடும் கொரோனா நாம் எழுதும் சமீபப் படைப்புகளில் நம்மையுமறிமால் இணைந்து கொள்வது நிகழ்ந்து வருகிறது.. அவ்வகையில் என் இந் நூலிலும் சில கொரோனாக் கதைகள்! ரயில் தடத்தின் இரு தண்டவாளங்கள் போல் சுய படைப்பு……மொழியாக்கம் என இரு தளங்களிலும் என் படைப்புத் தளம் பயணித்து வருவதால் மொழியாக்கக் கதைகள் குறித்து இங்கு குறிப்பிட வேண்டிய கடமையும் எனக்குள்ளது. எழுத ஆரம்பித்து ஏறக்குறைய இருபதாண்டுகள் ஆகியிருந்த நேரம்….. அப்போது இங்கு பணியிலிருந்த மிகச் சிறந்த படைப்பாளர் திரு.சுப்ரபாரதிமணியன் அவர்கள்..ஒரு நாள்…. “” நீ ஏன் மொழியாக்கப் பணி செய்யக் கூடாது…? தமிழ் தெலுங்கு இரு மொழிகளும் நன்கு அறிந்திருப்பதால் மூன்றாம் மொழியின் அவசியமின்றி தெலுங்கினின்று தமிழுக்கு உன்னால் நேரடி மொழியாக்கம் செய்ய முடியும். அதுவுமன்றி நீயே ஒரு படைப்பாளியாக இருப்பதால் மேற்கொண்ட கதைகளின் மூலக் கூறுகளை அத் தன்மையிலேயே உன்னால் தமிழுக்குக் கொண்டு வரமுடியும்..” எனப் பலவும் எடுத்துச் சொல்லி வெகுவாய் தயங்கிய என்னை வற்புறுத்தி இப் பணியில் ஈடுபடுத்தினார்.. இவ்வளவு வற்புறுத்துகிறாரே என அப்போது சற்றே கடுப்பாக இருந்தாலும் பின்னர் எனக்கே சுயமாய் ஏற்பட்ட ஈடுபாடு……தொடர்ந்து என் மொழியாக்கப் படைப்புகளுக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்…இவையெல்லாம் மிகுந்த மன நிறைவளிக்க இப்போது நன்றியுடன்அவரை நினைக்காத நாளில்லை. இது வரை நான்கு மொழியாக்கச் சிறுகதை நூல்கள் வெளி வந்துள்ளன. கதைக் களங்கள்.. மொழி…..கலாச்சாரம்….வாழ்க்கை முறை முதலானவை முற்றிலும் வேறானாலும் எம் மொழியாயினும் மனிதர்களும் ஊர்களும் உறவுகளும் உணர்வுகளும் பிரச்னைகளும்..சமூகக் கூறுகளும் அவை சார்ந்த அனுபவங்களுமான வாழ்வியலின் கண்ணாடிப் பிம்பங்கள் தாமே சிறுகதைகள்! தெலுங்குச் சிறுகதைகளும் அவ்வகையில் தானே அமையும்! ஆனால்….. சொல்லும் உத்திகள்…வடிவ நுணுக்கங்கள் ஒரு குறிப்பிட்ட மொழியிலேயே படைப்பாளருக்குப் படைப்பாளர் வேறுபட்டு தொனிக்கும் போது தெலுங்குப் படைப்பாளர் அணுகு முறையிலும் அந்த வித்தியாசம் இருக்கத் தானே செய்யும்! . குறிப்பாகக் சிறு கதைகளின் அளவு..! தெலுங்கில் கவிதைகளே நீள நீளமாய் இருக்கும். கதைகள் குறுநாவல் போல் பத்து பன்னிரண்டு பக்கங்கள் வரை நீளும். தமிழில் பத்திரிகைப் பிரசுரம் என்று வரும் போது நான்கு அல்லது ஐந்து பக்க அளவிலேயே சிறுகதைகளின் கட்டமைப்பு அமைவதால்..அநேக நல்ல தெலுங்குச் சிறுகதைகள் விட்டுப் போகும் நிலைமை.! ஆனாலும் இயன்றளவில் தரமான சின்னக் கதைகளைத் தேர்வு செய்வதில் முனைப்பு கொள்கிறேன்..அநேகமாக என் ஐந்தாம் மொழியாக்கச் சிறுகதை நூல் அடுத்த ஆண்டில் வெளிவரலாம். துவக்கத்தில் நான் குறிப்பிட்டது போல் ஒரு சிறுகதையின் தாக்கம் சுவையான ஃபில்டர் காப்பியின் ததும்பும் நுரை போல் நினைவுகளில் ததும்பிக் கொண்டே இருக்க வேண்டும். பிரபல எழுத்தாளர் ஆர.வி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் சொன்னார்---- -“ வாசகனை குறைந்த பட்சம் ஒரு நாளாவது ஒரு சிறுகதை பாதிக்க வேண்டும்...பாதிப்பு ஏற்படுத்தாத கதையில் ஜீவனே இல்லை என்றாகிறது” . .கதைகளில் அவர் குறிப்பிட்ட அந்த உயிர்ப்புக்காக என்னால் இயன்றவரை முயன்றுள்ளேன்.இனி வரும் படைப்புகளில் இன்னும் முயல்வேன். இந்த என் ஐந்தாம் சிறுகதை நூல் படைப்புப் பேராளுமை சுப்ரபாரதிமணியன் அவர்கள் மூலம் “ கனவு “ வெளியீடாய் வருவதில் பேருவகை எனக்கு,! அவருக்கு என் நெஞ்சு நிறை நன்றி மீண்டும் மீண்டும்! கதைகளைப் படிக்கும் வாசிப்புப் ப்ரியர்களுக்கு அன்புடன்……….வாழ்த்துகளுடன்…------------ சாந்தா தத், ============== சாந்தா தத் பிறந்த ஊர்.,. காஞ்சிபுரம்.. வசிப்பிடம் ஹைதராபாத். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக எழுத்துப்பணி. தமிழில் சுய படைப்புகள். இருபதாண்டுகளாய் மொழியாக்கப் படைப்புகள்.. (தெலுங்கினின்று தமிழுக்கு) சுய படைப்பு விவரங்கள்---- தமிழில் முதன்மைப் பணி சிறுகதைகள். முன்னூறு கதைகள் வரை பிரசுரம். சமீபமாய் அதிகளவில் கட்டுரைகளும். அவ்வப்போது நேர்காணல்... நூல் திறனாய்வு.!வெகுஜனப் பத்திரிகைகள் இலக்கிய இதழ்கள் இரு பிரிவுகளிலும் படைப்புகள் பிரசுரம். இது வரை வெளிவந்த சுய படைப்பு நூல்கள்.. 6. சிறுகதை நூல்கள்.. 4 கட்டுரை நூல்கள்... 2 மொழியாக்கப் படைப்பு விவரங்கள்... இருநூறுக்கும் மேற்பட்ட சிறு கதைகள். ஏறக்குறைய முன்னூறு கவிதைகள். மொழியாக்க நூல்கள்------ நாவல் சிறுகதை... கவிதைகள் என மொத்தம் பன்னிரண்டு நூல்கள்.! இவற்றில் நான்கு சாகித்திய அகாடமி நூல்கள். சுய படிபபுகளுக்கான பரிசுகள்.. விருதுகள்--- லில்லி தேவசிகாமணி விருது.{கோவை) இராஜாஜி அறக்கட்டளை விருது (சென்னை ) பகவதி அறக்கட்டளை விருது (திண்டுக்கல் ) திருப்பூர் தமிழ் சங்க விருதுகள். . இலக்கியச் சாரல் விருது.. லேடீஸ் ஸ்பெஷல் விருது... உரத்த சிந்தனை விருது,. நியூ செஞ்சுரி புத்தக நிலைய விருது.. (எட்டயபுரம்).. கோதராஜு விருது (ஹைதராபாத் ) தாரைப்புள்ளிக்காரர் விருது (சேலம்) சக்தி விருது (திருப்பூர்) தவிர பல்வேறு பத்திரிகைகப் போட்டிகளில் பரிசுகள்,, நிறை இலக்கிய அமைப்பின் அசோகமித்திரன் விருது சாரபாய் " எழுத்தரசி " பட்டம்... " கோடை மழை " எனும் சிறுகதை அமுதசுரபி இதழ் போட்டியில் பரிசு.. ..அம் மாதச் சிறந்த சிறுகதை என இலக்கியச் சாரல் அமைப்பின் தேர்வு... தமிழ்நாடு கல்வித் திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் பாடநூலில் இடம் பெற்றது.., ... கல்லூரிப் பேராசிரியர் ஒருவரால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது... கலைஞர் பதிப்பகம் வெளியிட்ட 2020-21 சிறந்த படைப்புகள் தொகுப்பு க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.. எனப் பல சிறப்புகள் பெற்றுள்ளது. மொழியாக்கப் படைப்புகளுக்கான விருதுகள்.. பரிசுகள் விவரங்கள்---- தாஸ்னா விருது (கோவை) திருப்பூர் தமிழ் சங்க விருது.. மொழிபெயர்ப்பாளர் சங்க விருது (சென்னை) நல்லி-திசைஎட்டும் விருது... தமிழ் இலக்கியப் பெருமன்ற விருது (சேலம்) தமிழ்நாடு சிற்றிதழ் சங்க விருது.. அறந்தாங்கி நாராயணன் விருது.. மற்றும் ஹைதராபாத் தமிழ்.. தெலுங்கு அமைப்புகளின் விருதுகள் பிர விவரங்கள்..... ஹைதராபாத்திலிருந்து வெளி வரும் தமிழ் காலாண்டிதழ் "நிறை" யின் ஆசிரியர். " திசை எட்டும்" மொழியாக்க இலக்கிய காலாண்டிதழ் இணை ஆசிரியர் குழுவில் தெலுங்குப் பிரிவுக்காக..... "கதைசொல்லி" இதழ் ஆலோசகர் குழுவில் ஒருவர். .. பிரபல எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி அவர்களின் " இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு " எனும் மா பெரும் திட்டத்தின் லுங்குப் பிரிவுக்காக மொழியாக்கப் பணி. ----------+-----------