சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 18 டிசம்பர், 2021
அந்நிய மனிதர்களும், அந்நியமாதலுமான சாந்தாதத்தின் மனிதர்கள்
சாந்தா தத் அவர்களின் சிறுகதைகளின் உலகம் மத்தியதர வர்க்க மனிதர்கள் மற்றும் கொஞ்சம் விளிம்பு நிலை மனிதர்கள் என்று இருக்கும். மத்திய வர்க்கத்து மனிதர்களின் வாழ்வியலில் இருக்கும் சிக்கல்களும் பகிர்வுகளும் அவரின் படைப்புகளில் பெரும்பான்மையான கதைகளின் மையமாக இருக்கிறது அவர் பயணங்கள் பற்றி அதிகம் எழுதி இருக்கிறார் வெவ்வேறு சூழ்நிலைக்கு செல்கிற போது அங்கு இருக்கிற நிலவியல் சார்ந்த விஷயங்களையும் சுற்றுலா அம்சங்களையும் அனுபவங்களையும் பல கதைகளில் முன்பே பதிவு செய்திருக்கிறார் .அவ்வகை பதிவுகளை இந்த கதைகளில் கூட வாரணாசியை, டார்ஜிலிங் முதற்கொண்டு பல ஊர்கள் பற்றிய விவரங்களோடு நாமும் தெரிந்து கொள்ள முடிகிறது
காதல் பற்றி ஓரிரு கதைகளாவது இவரின் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கும் .அந்த வகையில் இந்த தொகுப்பில் இரண்டு காதல் கதைகள் இடம் பெற்று இருக்கின்றன.ஹலீம் என்ற நிஜாம் கால ஸ்பெஷல் பற்றிய சுவை முதல் கதையில் நிறைந்திருக்கிறது நானும் அதைச் சுவைத்திருக்கிறேன். அந்த சுவை போலவே அவரின் அந்த கதையும் சுவாரஸ்யமாக இருக்கிறது .அதில் மின்சார குழம்பு என்று ஒரு வார்த்தையை மின் வெளிச்சத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார் .அது புதிதாக இருந்தது அது போல பல புதிய வார்த்தைகளை அவரின் கதைகளில் இடையில் காணமுடியும்.
இன்னொரு கதையில் காசியில் எதையாவது விடனும் என்று காதலை விட வேண்டி இருக்கிற சூழ்நிலை உள்ள சிலரை காட்டுகிறார். சாந்தா த்த்திற்கு கிரிக்கெட்டின் மீது பைத்தியம் உண்டு அந்த பைத்தியத்தை அவர் அதற்காக செலவிடும் நேரம் மற்றும் முகநூல் போன்றவற்றில் அவற்றைப் பற்றி எழுதுகிற வேகம் இவற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம் .அந்த கிரிக்கெட் அனுபவங்கள் இதில் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது .
பண்டிகைகள், தொன்மங்கள் போன்றவற்றில் உள்ளார்ந்த அர்த்தங்களும் சமகால தேடல்களும் அவருடைய கதைகளில் இருந்து கொண்டே இருக்கும். அந்தவகையில் இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் போனாலு , பத்கmமா போன்ற பண்டிகைகள், தொன்மங்கள் அமைந்திருக்கின்றன . அவற்றின் நீட்சியாய் மனிதர்களையும் இக்கதைகளிலும், இங்கும் பார்க்கிறோம்
குழந்தைகள் கேட்கும் கேள்விகள் எப்போதும் நம்மை பயப்பட வைக்கும் அல்லது குறுகுறுக்க வைக்கும் அப்படித்தான் வேலைக்காரிக்கு ஏன் தனி பிளேட் என்று வெள்ளந்தியாய் குழந்தை கேட்கிறது. குழந்தைகளின் மனநிலை சார்ந்த பல்வேறு கதைகள் இவற்றின் ஊடாக தெரிகின்றன.
கொரானாகாலத்தில் உறவுகளின் பிணங்களை நடுத் தெருவில் விட்டுவிட்டும் கைவிட்டு செல்கிறவர்கள் பற்றிய கதை இருக்கிறது இதைத் தவிர சாதாரண காலங்களில் தங்களால் கைவிடப்பட்டு அனாதைகள் ஆனோர் , ., திக்கற்றவர்கள் போன்ற பல மனிதர்களை இங்கே சந்திக்கிறோம். சாந்தாத்தின் கதைகளில் உறவினரும் நண்பர்களும் சந்திப்பது அதிகம் இருக்கும் அந்த சந்திப்பின்போது நடைபெறும் உரையாடல் மற்றும் பரிமாறிக்கொள்ளும் உணவு வகைகள் பற்றிய பல செய்திகள் இருக்கும் . சங்கிலி பறிப்பு போன்றவற்றில் மனதை இழக்கும் பெண்கள் நல்ல காலம் செய்யும் வாய்ப்பு நம்மை தேடி வராது நாம்தான் உருவாக்க வேண்டும் என்று சொல்லிக்கொள்வதில் ஆறுதல் அடைகிறார்கள் .அதுவும் அந்த கோதுமை சங்கிலி சிறப்புடையதாகும்
வீடுகளில் செய்யப்படும் உணவு வகைகள் பற்றிய பல்வேறு குறிப்புகள் இந்த கதைகளில் பல பகுதிகளில் இருக்கின்றன .உணவு சமைக்கும் முறைகள் பற்றியும் ஆந்திரா தெலுங்கானா பகுதியில் சமையல் முறைகள் பற்றியும் பல்வேறு விவரங்களை இந்த கதைகளில் இருந்து நாம் பெற முடியும் .நோய் என்பதும் இந்த கதைகளில் பெரும்பாலும் பேசப்படுகிற அம்சமாக இருக்கிறது. ஒலி ஒளியாய் உடல்வலி என்று ஒரு வரி கூட இந்த கதைகளில் தென்பட்டது. பலவகையான மாந்தர்கள் நோயான உடலுடன் அலைகிறார்கள் இந்த நோய் தன்மையை பல கதைகளை நாம் கண்டு கொள்கிறோம் .அதுவும் கொரான சார்ந்த நோய் பல மனிதர்களை சிதைக்கிறது .ஆம்புலன்ஸ் கிடைக்காமல் செத்துப் போனவர்கள் பற்றிய மனைவிகளின் சோகம் இருக்கிறது. வேலை இல்லாத நிலையில் பசியால் செத்தவர்களை எண்ணி நொந்து போகிறார்கள் சிலர் கொரானா வைரஸ் காலத்தில் மக்கள் முடங்கிக் கிடந்தாலும் கிரிக்கெட் டிக்கெட் விற்றுப் போகிற விஷயமும் நடக்கிறது. எளிமையான வரிகளில் நோய்க்கூறுகள் தன்மையை பல கதைகள் விரித்துக் கொண்டு போகின்றன. வேற்று மாநில சூழல் சார்ந்த விவரிப்பும் அந்த மனிதர்களின் அந்நியமாதலும் இந்த தொகுப்பில் முக்கிய விஷயங்களாக இடம்பெற்றிருக்கின்றன ஆறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் சாந்தா தத். இந்த தொகுப்பின் மூலம் அவற்றின் தொடர்ச்சியான அனுபவங்களை சிறுகதைகளாக முன்வைத்திருக்கிறார் .பாராட்டுக்கள்
சுப்ரபாரதிணியன் 9486101003