சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 18 டிசம்பர், 2021
திருமூர்த்தி மண் ( படுகளம் 2 ) நாவல்
வரலாறுகள் தொன்மங்களாகும்
திருமூர்த்தி மண் ( படுகளம் 2 ) நாவல் / சுப்ரபாரதி மணியன்
வரலாறுகள் தொன்மங்களாகும். தொன்மங்களும் வரலாறாகும்.திருமூர்த்தி மலைப் பிரதேசம் சார்ந்த இரண்டு தொன்மங்கள் இந்நாவலில் உள்ளடங்கி அந்தத் தொன்மக் கதாபாத்திரங்கள் இன்றைய யதார்த்த வாழ்விலும் தென்படுவதை இந்நாவல் சொல்கிறது. திருமூர்த்தி மலையின் நாயகர்களும், உச்சி மாகாளியும் அந்த வகை தொன்மங்களில் நிறைந்திருக்கிறார்கள்
தொன்மங்களைப்போலவே பெண்கதாபாத்திரங்களும் தொன்மங்களாகி படிமங்களாகி நிலைத்து நிற்பவை. அந்த வகையில் இந்த நாவலில் தென்படும் பெண்கள் தாய்மையின் அடையாளமாக இருக்கிறார்கள். உழைப்பின் சிகரங்களாக இருக்கிறார்கள். கல்வி குறித்த உரிமைகளை நிலைநாட்டுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆண்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து விலகிச் செல்பவர்களாக இருக்கிறார்கள்
விவசாயமும் பஞ்சாலையும் திருமூர்த்தி மண்ணின், உடுமலை மண்ணின் அடையாளங்களாக இருந்து பல்வேறு மாறுதல்களை அடைகின்றன. நவீன யுத்திகளும் வியாபாரப்போக்குகளும் விவசாயத்தை விட்டு விவசாயிகளை விலகச் செய்கின்றன். பனியன் உற்பத்தி, பவர்லூம் -– விசைத்தறி நெசவில் ஈடுபடச்செய்கின்றன. நுகர்வு சார்ந்த எண்ணங்கள் பாசப்பிணைப்புகளைத் தவிர்த்து விட்டு உறவுகளிலேயே எதிரிகளாக்கிவிடுகின்றன குடும்ப ஆடம்பரச் செலவுகளால் சில குடும்பங்கள் சிதைகின்றன. சாதிகள் சார்ந்த சார்பும் வேற்றுமையும் மனிதர்களைப்பிரித்துப் போடுகிறது.
மதுரை, திருப்பூர், உடுமலை மக்களின் வாழ்க்கைகளால் இந்த நாவல் நிரம்பி வழிகிறது. தலித்சமூகம் சார்ந்தவர்களின் எழுச்சியும் ஆதிக்கசாதி சார்ந்தவர்கள் கல்வி பெற்று விளங்குவதும், ஆலை சொந்தக்கார்ர்கள் இந்த சாதிய அடுக்குகளில் நிறைந்திருப்பதும் காட்டப்பட்டுள்ளன.
.
50 வருட உடுமலைப்பிரதேசத்தைச் சார்ந்த சுமார் 40 கதாபாத்திரங்களின் வாழ்வியல் அனுபவங்கள் ஊடுபாவாக இந்த நாவலில் விளங்குகின்றன . ( அந்தக்கதாபாத்திரங்களின் கோட்டுருவங்களைகொண்டு அவர்களை உயிர்பித்திருக்கிறார் ஓவியர் ஜீவா )பள்ளிபுரத்தில் கூத்தம் பூண்டி ஆத்தாளின் கூட்டுக்குடும்பம் இதன் மையம். கவுண்டர்களின் விவசாய பின்னணி ஆலைக்குச் சொந்தமான சோமுத்தேவரின் குடும்ப தடங்கள் , எளிய மக்களாய் கிண்று வெட்டுவதிலிருந்து கரும்புவெட்டு வேலை வரைக்கும் பல தரப்பட்ட சாதாரண மனிதர்களின் அனுபவங்கள் இதிலுள்ளன. ஜீவனுள்ள , மிகை எதுவும் இல்லாத அனுபவங்கள். அவை சொல்லப்பட்ட முறையில் எந்த இலக்கியச் சொக்கட்டான் விளையாட்டும் இல்லாமல் யதார்த்த பாணியின் உச்ச எழுச்சியைத் தொடுபவை
வில் அம்பு எடுத்து ஆடும் படுகள நிகழ்ச்சி போல் பல பழிவாங்கல்கள். நாவலின் இறுதியில் அப்படியானப் பழி வாங்குமெண்ணத்தில் கொலை செய்து விடுகிறவன் நல்லவன்தான் . ஆனல் சூழலும் பழிவாங்கும் எண்ணங்களும் அவனைச் சிறைக்கு அனுப்பிவிடுகிறது .கனகவேல் போன்ற மக்களுக்காகப்பாடுபடும் நல்லவர்கள் எதிர்பாராத வித்ததில் உடல் நலிவடைந்து மக்களிடமிருந்து மறைந்து போகிறார்க்ள் பங்காளிகளின் உறவும் பகைமையும் கண்ணாமூச்சி ஆடும் வித்தைகளை பல சம்பவங்கள் மூலம் சொல்கிறார் . இந்த விதத்தில் அவை ஊர் சனியன்கள் . இதைத் தவிர ஊர் சனியன்களாக பல விசயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது . முரடுத்தனத்தில் ஒவொரு சாதியும் ஒன்றை மிஞ்சிக்கொள்ளும் சம்பவங்கள். கிணறு வெட்டு போன்றவை மிக முக்கியத்திருப்பங்களாக அமைகின்றன. கிணற்று விவசாயம் போய் போரிங் போட்டு தண்னீர் எடுப்பதும் முக்கியமாகி விடுகிறது , திருமூர்த்தி அணை மக்களின் பாசம் சார்ந்த நடவடிக்கைகள் சில சமயங்களில் பொய்த்துப் போகின்றன,
திருமணத்திற்குள்ளேயே பெண்களை முடக்கிப்போடுவது சாதாரணமாக அமைந்து விசித்திரமானதாகத் தென்படுகிறது..குழந்தை பாக்யம் இல்லாத பொன்னி வரதனை சகித்துக்கொண்டு வாழ்கிறாள்.தென்னை மரம் பட்டுப்போவதைப்போல் ராஜேஸ்வரி, வெங்கிட்டம்மாள் போன்றோரின் காதலும் திருமணமும் தடைபடுகின்றது. படித்துக்காதலித்து தோல்லியில் மயங்குகிறவர்கள். படிக்காமலும் தோல்வியில் மயங்குகிறவர்கள் என்று விதவிதமாய் மனிதர்கள் . ராஜி மற்றும் வெங்கிட்டாம்மாவை எங்காவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று பலரும் துடித்து பல முயற்சிகளை எடுக்கிறார்கள். பழனியம்மாள் கருப்பாயம்மாள் போன்ற முதியவர்கள் குடும்பப் பெருமையையும் பெண்களையும் காப்பாற்றும் முயற்சியில் படிமச் சித்திரங்களாகுகிறார்கள்.மனச்சிதைவுக்குள் சாதாரணமாக்ஆளாகக் கூடிய சூழல்கள் .இந்நிலையில் அரங்கன் போன்ற மன நல மருத்துவர்கள் உலாவும் முன்மாதிரியாக இருக்கும் மன நல மருத்துமனைகள் நல்லச் சித்திரங்களாக இந்நாவலில் கண் முன்னால் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
வறண்டு போகும் திருமூர்த்தி அணை கூட ஒரு படிமமாக நிலைபெறுகிறது அது நிலம் சார்ந்த படிமமாக இல்லாமல் மனிதர்கள் சார்ந்த உருவவியலாக அமைகின்றன. அணை சுருங்கி ஏழைகளின் குளம் குட்டை சிறுத்துப்போகிறது. கிராமமக்களுக்கு குடி நீர் வேண்டும். விவசாயத்திற்கு அணைத்தண்ணீர் விவசாயத்திற்கு வேண்டும்.. இதெல்லாம் கிராமத்தின் இளைய தலைமுறையினரை திருப்பூர் பனியன் தொழிலுக்கும், விசைத்தறிக்கும் துரத்தும் விசயம் முக்கியமானதாக உள்ளது.
மீசையும் தோள்த்துண்டும் கொங்கு மனிதர்களின் நல்ல பெருமைகுரிய அடையாளங்கள்.அவை தரும் கற்பிதங்களை பல இடங்களில் பலப் பிரச்சினைகளின் அலைசலாகக் காணலாம்
நல்ல சாப்பாட்டைச் சொல்லும் போது கொங்கு பிரதேசத்தில் “ ஒணத்தியானப் பலகாரம் “ என்பார்கள். அது போல் நல்ல இலக்கிய விருந்தாய் ஒணத்தியானப் பலகாரமாய் இந்நாவல் அமைந்துள்ளது .
எல்லோருக்கும் பெயர் இருக்கும் போது திராவிடக்கட்சித்தலைவருக்கு மட்டு இல்லாமல் இருக்கிறது பகுத்தறிவு சார்ந்த இயக்கங்களின் ஊடுருவல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு பல அடையாளங்களாய் பல சுவடுகள் உள்ளன. அவை திராவிட அரசியலின் பங்காய் விளங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது.
விதைக்குள் மரம் ஒளிந்திருப்பதை நாம் நம்பியாக வேண்டும். அது போலத்தான் பள்ளிபுரம் என்னும் சிறு கிராமத்தில் ஒளிந்தும் வெளிப்படையாகவும் நடைபெறும் நிகழ்வுகளையும் நாம் நம்பியாக வேண்டும் என்ற ஆசிரியரின் கூற்று நாவலின் ஆசிரியரால் ஓர் இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி நம்பியாக வேண்டிய அல்லது நம்பும் வகையிலான சம்பவங்களின் தொகுப்பாகவே இந்த நாவல் அமைந்துள்ளது . ” அயலார் படையெடுப்பால் வெல்லக்கட்டித்தமிழின் பல் பிடுங்கப்ப்ட்டு தமிழ் அவியல் தழைக்கிறது. கூட்டு வழிபாடுகள் போய்ச் சாதி வழிபாடுகள் செவிப்பறைக் கிழிக்கின்றன “ என்றக் குர்றை நினைவுபடுத்த பல செய்திகளை இந்த நாவல் உள்ளடக்கியிருக்கிறது.
நவீன இலக்கிய சார்ந்த வறட்சி கொண்டது உடுமலைப்பகுதி . ஆனால் உடுமலைப்பிரதேசத்து மக்களின் வாழ்க்கையை முந்தைய படுகளம் நாவலின் தொடர்ச்சியாகக் கொண்டு வந்திருப்பதில் அம்மண்ணின் வளமையான அனுபவங்களைப் பதிவு செய்ததில் முக்கியப் பங்கு ப. க. பொன்னுசாமி அவர்களுக்கு இந்த இரு நாவல்கள் மூலம் நிரைவேறுகிறது . நெடுஞ்சாலை விளக்குகள் போன்ற பிற களங்களைச் சார்ந்த அவரின் நாவல்கள் இன்னும் வேறு திசைகளில் கலங்கரை விளக்காய் வெளிச்சம் காட்டுபவை என்பதையும் குறிப்பிட வேண்டும்.கொங்கு இலக்கியத்தின் இன்னுமொரு மணிமகுடன் எனலாம்
( Rs 500/ pages 620 > NCBH Chennai )
ReplyForward