சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 18 டிசம்பர், 2021

நகுலன் நாவல்கள் ; சுப்ரபாரதிமணியன் சாகித்ய அகாதமி கருத்தரங்கம் நகுலன் நாவல்கள் : சுப்ரபாரதிமணியன் மிகவும் தனிமைப்பட்ட மனிதராகத்தான் நகுலன் அவர்களை பல சமயங்களில் அவர் வீட்டில் சந்தித்திருக்கிறேன் தனிப்பட்ட மனிதனின் எண்ண உணர்வுகளை தான் அவரின் எழுத்துக்கள் . பிரதிபலித்தன .எழுத்தாளனின் எண்ணங்கள் கூட நவீனன் அல்லது நகுலன் என்ற பெயரில் அனுபவப் பகிர்வுகள். , புத்தகங்கள் படிப்பது அந்தப் புத்தகங்களைப் பற்றி உள்நோக்கி யோசிப்பது, தனிமையில் ஆழந்து போவது அதைப்பற்றி திரும்ப திரும்ப திரும்ப எழுதுவதிலும் சந்திக்கிற மனிதர்களிடம் பேசுவது தான் அவரின் பழக்கமாக இருந்திருக்கிறது அவருடனான சந்திப்பு மற்றும் உரையாடல்கள் எனக்குப் பல முறை நிகழ்ந்திருக்கின்றது திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு செல்கின்ற போதெல்லாம் திருவனந்தபுரத்தின் மும்மூர்த்திகளை சென்று பார்ப்பது வழக்கம் நீலபத்மநாபன் ஆ மாதவன் , நகுலன் என. மற்ற இருவரை சந்திக்கிற வாய்ப்பு குறைந்து போனாலும் நகுலனைச் சந்திக்கிற வாய்ப்பு எல்லா சமயங்களிலும் நிகழும். காரணம் நகுலனின் எழுத்துக்கள் மற்றும் தனிமை பற்றி அக்கறை கொள்ளும் எழுத்தாளர்களும் திரைப்பட இயக்குனர்களும் திரைப்பட ரசிகர்களும் என்று இருக்கும் நண்பர்களில் சில பேராவது அவர் வீட்டுக்கு செல்லலாம் என்ற கருத்தை முன் வைப்பார்கள் .அப்படித்தான் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டியதாயிற்று அவருடனான உரையாடல்கள் எல்லாம் நான் பதிவு செய்ததில்லை அவை பின்நவீனத்துவ பாணியில் அமைக்கப்பட்டது போல் இருக்கும் அந்த உரையாடல்களில் மையமான விஷயம் இருக்காது. சிதறுண்டு போன பல பகுதிகள் இருக்கும். பல சிதறியக் கருத்துக்கள் இருக்கும் .படித்த சில விஷயங்கள் இருக்கும். ஞாபக மறதியாய் திரும்பத் திரும்ப சிலவற்றை சொல்லிக்கொண்டே இருப்பார் .கேட்டுக்கொண்டே இருப்பார். சாதாரண மனிதனின் இயல்பில் அப்படி திரும்ப திரும்ப சொல்வது குடிகாரர்களின் இயல்பு என்று தோன்றும் .அந்த உரையாடல்களின் அம்சங்களை இன்றைக்கு தொகுத்துப் பார்த்தால் பின்நவீனத்துவ பாணியில் ஒரு பிரதி கிடைத்துவிடும் ஒரே முறை அந்த உரையாடலை பதிவு செய்தேன். திருமதி திலகவதி, பெருமாள் முருகன் போன்றோருடன் சாகித்ய அகாடமியின் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்தபோது அது . அவர் வீட்டிற்கு சென்று சந்தித்த உரையாடல்கள் அந்த உரையாடலில் அவர் தெரிவித்த பல கருத்துக்களை பலர் ஏற்றுக் கொள்ள மறுத்த போது அவை பிரசுர வாய்ப்பை இழந்தன. என்னுடைய எழுத்துக்கள் பைத்திய நிழல்கள் என்று அவரே சொல்வர் அதே சமயம் அவருக்கு பிடித்த சுசீலா என்ற கதாபாத்திரம் அவர் மனதின் பைத்திய நிழல் தான் என்று கூட சொல்லுவார். அவர் எப்போதும் கொண்டாட்ட மனப்பாங்கில் இருந்ததில்லை எழுத்துக்கள் பிரசுரமாகாத சூழல்,. புத்தக வடிவம் எடுக்க இயலாத சூழல் இதெல்லாம் அவரை ஒரு தோல்வியுற்ற மனிதராகவே காட்டி கொண்டிருப்பதில் அவர் வார்த்தைகள் இருந்திருக்கின்றன, என்னைப் போன்ற சமூக நிகழ்வுகளையும் சமூகவியல் விஷயங்களையும் எழுதும் ஒருவருக்கு சமூகத்தில் இருந்து தப்பித்து ஒரு வீட்டுக்குள் இருந்து கொண்டு திரும்பத் திரும்ப சில நண்பர்களைப் பற்றி பேசிக் கொண்டும் சில புத்தகங்களைப் பற்றி பேசிக் கொண்டும் இருப்பது வேறுபட்டு தான் தெரிந்திருக்கிறது. .சமூகம் என்பது சமரசங்களின் கூடாரம். ஆகவே அதனுடன் தொடர்பு வேண்டாம் என்று தன்னைத்தானே சுருக்கி கொண்டவர் . அவர் அப்படி சுருக்கிக் கொண்டதை அவர் எழுத்தில் வடித்திருக்கிறார் அவரின் நிழல்கள் நாவலில் நவீனன் நகுலனுடன் மத்தியிலான உரையாடலாக அமைத்திருக்கிறார். சுசீலா என் மனதின் பைத்திய நிழல். இருபதாம் நூற்றாண்டில் பிரம்மனால் சபிக்கப்பட்டவள் என்று அவரைப் பற்றிய நிறைய சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார் அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டது. குழந்தை பெற்றுவிட்டாள் அவளோடு இருந்த கணங்கள் மிகக் குறைவு .ஆனாலும் அவளை மறக்க முடியவில்லை வாக்குமூலம் நாவலில் சாரதி என்ற நண்பனின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார் வாக்குமூலம் என்ற தலைப்பில் நாவலாக யாரும் படிக்கவில்லை படிக்கப் போவதில்லை என்ற நோக்கத்துடனேயே எழுதியிருக்கிறேன் என்று சொல்லுகிறார் ஒரு உரையாடலை கவனியுங்கள் அருளப்பர்: “ கர்த்தர் உங்கள் உடல் நிலை சீக்கிரம் குணமடைய அருள்புரிவாராக” நவீன்ன் : “ இந்த வியாதி வந்ததே கர்த்தரின் அருளால்தான்” நினைவுப்பாதை நாவலில் இதேபோன்ற வடிவம்தான் ., நகுலன் நவீனன் இருவரும் ஒன்று தானா .இல்லை வேறு வேறு r தான் என்று இரண்டு பக்கமும் சொல்லுவார் .நாவல் எழுதுவது அது பிரசுரம் ஆகாமல் போய் விடுவது என்பது பற்றிய ஆதங்கங்கள் .அவன் இஷ்டப்படி அப்படி ஆவானோ இல்லையோ அவன் மனம் சலித்து கொண்டே தான் இருக்கும் ,அவன் சாதனைக்கு அதுதான் காரணம் ,மனதை அப்படி அடக்கி வைத்திருந்தால் மனதை அடக்கினால் ஒளிய ஒன்றுமே சாத்தியமில்லை என்று சொல்லிக் கொள்வார் இலக்கியம் உரையாடல்களில் புதுமைப்பித்தன், புதுக்கவிதை ,புதுக்குரல் போன்ற விஷயங்கள் திரும்பத் திரும்ப இந்த நாவலில் இருக்கின்றன, சரியான தாடியில் தான் பிரபஞ்ச ரகசியம் ஒளிந்துகொண்டிருக்கும் என்பார் ,,சுசீலா என்ற பெண் தொல்லை தருகிறார் ,,பேய் தொல்லை தருகிறது பைத்தியம் அடிப்படை. எந்த மனிதனும் தன்னை காதலிப்பது போல் வேறு ஒருவரை காதலிப்பது இல்லை ,எழுத்தாளர்கள் இல்லை ,நாம் எல்லோரும் பைத்தியங்கள் ,பைத்தியங்கள் பலவிதம் எழுத்தைப் பற்றி எழுதுவதை நீங்கள் ஒரு முதல் தரமான எழுத்தாளராக இருந்தால் என்ன லாவகமாக கயிறு திரித்து இருக்கிறீர்கள். ,ஒவ்வொரு நாவலையும் எழுதி முடித்த பிறகு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவது போல் தான் என்று ஒரு உணர்ச்சி தோன்றியது என்று இந்த நாவலில் கடைசி வரிகளில் எழுதியிருக்கிறார். நவீனன் டைரி நாவலில் . , யாத்திரை குறுநாவலில் அந்த அனுபவம் இப்படி : நாலணாவுக்குக் கிடைக்கும் பகவத் கீதையைப் போல் இந்த இந்த நாய் விவகாரம்தான் அவனைத் தொடர்ந்து வந்தது என்கிறார். இது நாயா . நாவலா என்ற கேள்வியும் வருகிறது சாவைப்பற்றிஅதிகம்பேசுபவர் ரோகிகள் குறுநாவலில் மருத்துவமனை அனுபவத்தை விரித்திருக்கிறார். சாவுக்குப்பின் என்ன நடக்கப்போகிறது என்ற பயத்தைச் சொல்லிக் கொண்டே போகிறார் அவர் இல்லாத காலத்திலும் என் வாழ்வில் இருந்திருக்கிறார் என்பது போல் சில பாத்திரங்கள் ஹரிகரன் சுப்பிரமணிய ஐயர், , சிவன் என கேசவ மாதவன் , சுசீலா போன்றோர் இந்த நாவலில் அதிகம் இடம் பெறுகிறார்கள். விடுபடுவது சாபமோ என்று தோன்றும். பிரதிபலிப்பின் வசீகரத்தில் இருந்து விடுபட முடிவதில்லை .மூளை சிலந்தி வலை பின்னுவது போல் அவர் சொல்லிக்கொண்டே போகிறார் ஒரே தளத்தில் ஒரே நாவலின அத்தியாயங்களாக அவரின் நாவல்களைப் பார்க்கலாம் சமூகத்திலிருந்து விலகி இருக்கிறார் .அது பற்றிய குறிப்புகளையும் சம்பவங்களும் சில இடங்களில் தென்படுகின்றன .பெரும்பாலும் வெறுமை அவரை ஆக்கிரமிக்கிறது .மற்றவர்கள் மீது அது வெறுப்பைத் தருகிறது. படைப்பு மனதை கொண்டுவருகிறது . பைத்தியம் என்று நினைக்கத் தோன்றுகிறது . தன் எழுத்துப் பாணி முன்னோடியாக சிலரை அவர் பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார் . வர்ஜீனியா வுல்ப், ஜேம்ஸ் ஜாய்ஸ் ஹைடெக்கர் போன்றவர்களின் இருப்பு குறித்த சிந்தனைகள் அவருடைய நாவலில் திரும்பத் திரும்ப வருகின்றன .நவீனன் ஒரு எழுத்தாளன் .நகுலன் ஒரு மனிதனின் புனைப்பெயர் என்று திரும்பத் திரும்பக் குறிப்பிடுகிறார் ..நோய் வசப்படுத்தும் பெருமை சில சமயங்களில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .சில சமயங்களில் ஆசிர்வாதம் தருகிறது.. இந்த உரையாடலில் ஜே கிருஷ்ணமூர்த்தி, பேய், சாவு பற்றிய விஷயங்களை திரும்பத் திரும்ப வருகின்றன வாழ்க்கையை சாட்சி பூதமாக விசயங்களுக்கு ஈடுபடாமல் பார்ப்பதனால் தான் நான் எழுத்தாளன் போலும் என்று சொல்கிறார் ..சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் பார்ப்பது என்பது தத்துவமாகிறது அவருக்கான இடம் என்று எது என்பது பற்றிய பிரகடனமாகும் செய்திகளும் இதில் உண்டு. தனி மனிதனின் வாழ்வில் பிறப்பு மனம் சாவு என்ற மூன்று அறியாத பருவங்களும் மாறாத புதுமையாகவும் இருக்குது, இருக்கின்றன என்கிறார் . அவரே ஒரு புத்தகம் என்பதை அவர் சொல்லிக் கொள்வதிலும் பேசிக் கொள்வதிலும் வெளிப்படுத்துகிறார். .அவரின் சமூகம் சார்ந்த உணர்வுகள் மாபெரும் உலகம் சார்ந்த விஷயங்களை கூட நிராகரிக்க வைத்திருக்கிறது. உதாரணத்திற்கு நவீனன் டைரி நாவலில் ” எதிர்வீட்டில் ஒரு அரசியல் பேராசிரியர் என்னமோ வியட்நாம் பத்தி பேசினா தலை போற விஷயம் மாதிரி தவிக்கிறார் .எனக்கு சிரிப்பு தான் வருது “ என்று குறிப்பிடுவதில் அவரின் அந்த வகை உணர்வுகளின் நோக்கம் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம்.. எதிலும் நம்பிக்கை இல்லை பார்த்துக் கொண்டிருப்பதால் ஞானம் என்கிற அவருக்கு இதுதான் அரசியல் சார்ந்த கருத்த கருத்தாகிறது .வெள்ளை பேப்பரை கருப்பாக்கியதிலிருந்து நான் எழுத்தாளர் ஆகிவிட்டேன் என்று சொல்ல முடியாது என்றும் சொல்லிக் கொள்கிறார் தமிழைக் கொல்லும் மொழிக்கலப்பு என்று அவர் ஒரு இடத்தில் சொல்கிறார் அந்த அந்த கலப்பை நாவல்கள் முழுவதும் வைத்திருக்கிறார் அவர் பயன்படுத்தும் ஷைக்கிள், சம்பாஷணை , பிராப்தம் போன்ற வார்த்தைகள் நாவல் முழுவதும் நிறைந்து இருப்பதால் இந்த கலப்பை நாமும் தெரிந்து கொள்ளலாம். சில அத்தியாயங்கள் என்ற தலைப்பிட்டு ஒரு இருபது பக்கங்களில் ஒரு நாவல் நிற்கிறது .மனம் நிற்கிறது மரம் நிற்கிறது என்ற உப தலைப்புகளில் பல உரையாடல்களை பதிவு செய்கிறார் யோசிக்கோணும் என்ற தலைப்பில் இவ்வகை உரையாடல்கள் இருக்கின்றன ஒருவகையான எழுத்தும் சில சமயம் பிராமணப் பேச்சும் இந்த நாவல்களில் நிறைந்திருக்கின்றன ஒரே தளத்தில் என்று பல நாவல்கள் அல்லது தனிப்பட்ட ஒருவனின் வெவ்வேறு அத்தியாய வழிபாடுகள் என்று இந்த நாவல்களை எல்லாம் சொல்லிக் கொள்ளலாம் .அலங்காரம் நீக்கி .அலங்கரித்து போகாமல் அலங்காரம் செய்து அவஸ்தையை எடுத்தல் பதிவு செய்வது என்பது மாதிரி இல்லாமல் இயல்பாக சொல்வது…இப்படி பக்கங்களில் நிரப்பி இருப்பதாய் தோன்றுகிறது மரணம் குறித்த சிந்தனைகள் நவீனன் டைரி இன்னும் பிற குறிப்புகளும காணக் கிடைக்கின்றன . எழுத்தாளர்களை பாத்திரங்களாக வைத்து நாவல் எழுதினார் என்பதுதான் சிறப்பு. அவருடைய படைப்புகள் பிரச்சுரம் பெறுவதில் சிரமப்பட்டார் . .பலவற்றை அவரே பிரசுரிக்க வேண்டியிருந்தது அதனால் ஏற்பட்ட மன சோர்வும் தனிமையும் அவருடைய எழுத்துக்கு பெரிய காரணங்கள் . நான் லீனியர் போஸ்ட்மாடர்னிஸம் என்ற முத்திரையில் ஒட்ட வைத்துப் பார்க்க முடியும் .இலக்கிய விசாரம் வாழ்க்கையின் சாரமே வாழ்வின் ஒரே லட்சியம் என்றும் கொண்டு வாழ்ந்த சில மனிதர்களின் பட்டியில் நகுலனும் இடம் பெறுகிறார் .தமிழ் நாவல் வடிவங்களில் எந்த வகைக்கும் அடங்காமல் இருந்தாலும் நான் மேலே குறிப்பிட்டது போல் சில விசயங்களைக் கொண்டு பின் நவீனத்துவ நாவல் வடிவத்தில் ஒருவகையில் இதை கண்டு கொள்ளலாம் ..கதை சொல்லும் முறையிலும் பேசுவதுபோல் விடைகொண்டு போவதும் அதன் மூலமாக வெளியாகும் ஆசிரியரின் இயல்பான கட்டுப்பாடற்ற கதை சொல்லும் முறையும் ஒரு அழகான வடிவத்தில் கூட கொண்டு வந்து விட முடியும்.. அவருடைய கதாபாத்திரங்களில் சுசிலா போன்றவை அவரே சொல்லுவது போல் அவள் உறுதி பெற்றவள் . நான் உருட்டும் ஜெபமாலை நான் கண்ட தெய்வம் என்று ஆகிறாள். அவரின் தனிமை வெளியில் எல்லாமும் உள்ளது. சுசீலாவும் இருக்கிறாள் நகுலனும் இருக்கிறார் .நாமும் போய் வந்து கொண்டிருக்கிறோம் அந்த மர்மமான அர்த்தமுள்ள தனிமையை இந்த நாவல்கள்வெளிப்படுத்துகின்றன. நகுலன் என்ற புனைப்பயரில் உள்ள மனிதனுக்கும் நவீனன் என்ற படைப்பாளிக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்களின் தொகுப்பாக இவை அமைந்திருக்கின்றன .தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை விளம்பர மாயமானதாக நினைத்தார் . அ.ந்த விளம்பர உலகத்தில் தனக்கு இடம் தேவை இல்லை என்பதையும் அவர் கண்டுகொண்டார் .அதைத்தான் வெளிப்படுத்தினார் நாவல் கள் என்ற வடிவத்தில் . அது ஒரு வகையான நாவல் போக்காகவும் தமிழில் நிலை நின்று விட்டிருக்கிறது SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003 ReplyReply allForward