zOOZZoom
நேற்று என் உரையில் .
செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன்
அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,மாபூமி
போன்ற திரைப்படங்கள்,தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத் பற்றின விபரங்களை
மனதில் விதைத்திருந்தன. வெளிமாநில தமிழ்ச்சஙகளின் செயல்பாடுகளை ஓரளவு இலக்கிய
இதழ்களின் செய்திகள் மூலம்
அறிந்திருந்தேன். அதற்கு முன் நாலைந்து ஆண்டுகளாக எனது சிறுகதைகள், கவிதைகள்
கணையாழி, தீபம், தாமரை இலக்கிய இதழ்களில்
வெளிவந்திருந்தன. தமிழ் புத்தகக்கடைகள், தமிழ் அமைப்புகள் , தமிழ் அன்பர்களைத்
தேடும் முயற்சியில் ஆரம்பத்தில் வெகுவாக ஈடுபட்டேன். நிஜாம் ஆட்சி காலத்தலைநகரான ஹைதராபாத், பிரிட்டிஸாரால்
ராணுவ நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செகந்த்திராபாத்
நகரங்களின் முக்கிய இடங்களைச் சுRRRற்றிப்பார்த்தggggg பின்பு ஒரு வகை தனிமையே
மிஞ்சியது. மோண்டா மார்க்கெட் வீதி மேனன்
கடையில், செகந்திராபாத் தொடர்வண்டி நிலைய
எதிர் கடைகளில் சபரிமலை உபாயங்கள் விற்கிற அளவு தமிழ் வெகுஜன இதழ்கள் விறுவிறுப்பாக
விற்றன. அமுதசுரபி, கலைமகளுமே அதிக பட்ச இலக்கிய இதழ்களாக செகந்திராபாத்
தமிழர்களால் கருதப்பட்டன. செகந்திராபாத் பிள்ளையார் கோவில், கீஸ் ஹைஸ்கூல்
ஆகியவற்றில் தென்பட்ட பிராமணர்கள் அந்நியப்பட்டவர்களாகவே இருந்தனர். செகந்திராபாத்
ரயில்வேதுறையில் ஏகப்பட்ட தமிழர்கள் இருப்பது செய்தியாகவே இருந்த்து. அவர்களுடன்
பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. கீஸ் ஹைஸ்கூலில் நடக்கும் வருடாந்திர
பிரமாண்ட ராமநவமி விழாக்கள் சபா நாடகங்களையும், பிராமண கலாச்சாரத்தையும் அவர்களின்
நேசத்தையும் பறைசாற்றின.கண்டோன்மெண்ட்களில் ராணுவத்துறையினரின் பிரிவுகளில்
பணியாற்றும் தமிழர்களின் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களும், த்மிழ் மீதானப்
பற்றும் அவர்கள் ராமநவமியினருக்கு எதிர்வினையாகவும் இருந்தன. தொடர்வண்டி
நிலையப்பகுதிகளிலும், கிளார்க் டவர் பார்க், கண்டோன்மெண்ட் கார்டன்
பூங்காக்களிலும், திவோலி அஜந்தா திரையரங்குகளில் தமிழ்த்திரைப்படங்கள்
திரையிடல்கள் போதும் தமிழர்களைக் காண முடிந்தது.உஸ்மானியா பல்கலைக்கழக
தமிழ்த்துறையினர் பழமைவாதிகளாக இருந்தனர். ஆனால் அவர்களுடனான நெருக்கம் இல்லாத
சமயத்தில் ஆந்திர மாநிலத் தமிழர் பேரவை
அமைப்பினர் ஆசுவாசம் தந்தனர்.அவர்களில் கிருஸ்ணசாமி மட்டுமே ஓரளவு இலக்கிய
உணர்வு கொண்டவராவார்.மற்றவர்கள் திராவிடக்
கழகத்தின் சார்பான தீவிர அக்கறையாளர்களாக இருந்தனர்.இலக்கிய சார்புக்குத் துணையாக
யாரும் இல்லாத ஏக்கத்தில் திரிந்தபோது தென்பட்ட சில நண்பர்களோடு உள்ளூர்
படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற அக்கறையில் கனவு இதழை ஆரம்பித்தோம். அதற்கு முன்னோடியாக பம்பாய்
தமிழ்ச்சங்கத்தின் ஏடு, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க கேரளத்தமிழ் ஆகிய இதழ்கள்
இருந்தன.அங்கு நான் சென்று இரண்டாண்டுகளுக்கு மேலாகியிருந்தது. ஹைதராபாத்
செகந்திராபாத் இரட்டை நகர தமிழர்களின் முகமாக அது இருக்க வேண்டும் என்பது எங்கள்
ஆசையாக இருந்த்து. முதல் இரண்டு இதழ்களில்
உள்ளூர் படைப்பாளிகளின் சுமாரான கவிதைகள், சுமாரான சிறுகதைகள், துணுக்குகள்,
உள்ளூர் தமிழர்களின் மனக்குமறல்கள் என் வெளிப்படுத்தினோம். படைப்பு ரீதியான
சமரசமோ, நவீன இலக்கிய அக்கறையின்மையோ, நானே பணம் முதலீடு செய்கிற அலுப்போ எல்லாம்
சேர்ந்து கனவை தமிழ்நாட்டுப் படைப்பாளிகளுக்கான இதழாக்கி தமிழகத்திலிருந்து
படைப்புகளை பெறச்செய்தது..சென்னையில் தீபம் திருமலை அச்சாக்கத்தில் உதவி
புரிந்தார். உள்ளூர் படைப்பாளிகளுக்கான உள்ளூர் பக்கங்கள் என்ற பகுதி பின்
இணைப்பாகத் தொடர்ந்து கொண்டிருந்த்து.
கன்வு இலக்கிய வட்டத்தின் மாதக்கூட்டங்களை கண்டோன்மெண்ட் கார்டன் பூங்கா,
க்ளாக் டவர் பார்க் என்று நடத்தினேன். டெக்கான் கிரானிக்கல் போன்ற
பத்திர்ரிக்கைகளில் கனவு இலக்கிய வட்டச்
செய்தி நடக்கும் நாளில் இன்றையச்
செய்திகளில் இடம் பெற்று கவனத்தை ஈர்ர்க்கும். கி.ரா, ஜெயந்தன், அசோகமித்திரன்
என்ற வகையில் ஒவ்வொரு படைப்பாளிகள் பற்றின அறிமுகமாக அவர்களின் நூல்கள் பற்றின
அறிமுகமாகவும் படைப்பு வாசிப்பு நிகழ்ச்சிகளாகவும் அவை அமைந்தன. பங்கு
பெறுபவர்களில் சிறந்த உரைக்கும் படைப்பிற்கும் ” கனவி”ற்கு வரும் நூல்களைப் பரிசாக தருவேன். ஒற்றை
இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கினை அடையும் நண்பர்கள் கூட்டம்.கனவின்
படைப்புத்தரம் உள்ளூர் நண்பர்களுக்கு
சிரம்மாக இருந்தாலும் அதை கவனத்துடனே பார்த்து வந்தார்கள். கனவு செகந்திராபாத்தின் நாலைந்து புத்தக்க் கடைகளில்
விற்பனைக்குக் கிடைக்கும் என்றாலும் விற்பனையாகாமல் கிடக்கும். ஆயிரக்கணக்காணோனோர்
தமிழர்கள் கூடும் மேற்ச்சொன்ன நிகழ்ச்சிகளின் போது கெஞ்சிக் கூத்தாடி ஒரு மேஜை
மீது கனவு இதழ்களைப் பரப்பி வைப்பேன். கனவா, அதன் பலன் உண்டா, இலக்கியமெல்லா யார்
படிப்பாங்க, என்னமோ தமிழ்நாட்டை விட்டு வெளி….
ஹைதராபாத் மைய நாவல்கள் –சுப்ரபாரதிமணியன் உரை
6/7/20 மாலை 6 மணி
ஜீம் சந்திப்பு 8468450368