புதுச்சேரி நண்பர்கள் தோட்டம்
புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் திங்கள் கிழமை தோறும் காணொளி ஒன்றை
வெளியிடுகிறார்கள். சுவாரஸ்யமாக உள்ளது .இலக்கியம் இணைய தளம் வழியே
என்பதாக..
அதில் புதுவை யுகபாரதி
பலவற்றைப் பற்றிப் பேசுகிறார்.
ஒருவாரம் அவர் வசிக்கும் ஜீவானந்தபுரம் என்ற சிறிய பற்றி ஒரு புதையல் இருந்தது. தோழர் ஜீவாவின் புதுவை அனுபவங்கள், ஜீவானந்தபுரம் சூழல், பெயர்
சூட்டியக் காரணங்கள், அப்பகுதியில்
வசிக்கும் எழுத்தாளர்கள், படைக்கப்படும் இலக்கிய வகைகள் பற்றிப் பேசியுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் இப்படி
எழுத்தாளர்கள், சரித்திர நிகழ்வுகள் , சரித்திர இடங்கள், சுற்றுலா ஸ்தலங்கள்
என்று இவை வாராவாரம் விரிந்து ஒரு நகரம்/ மாநிலம்
பற்றிய விபரங்கள் அபூர்வமானவை.
அதிலும் சமீபத்தில் கேட்டதில் நான் என்பதை முன்னிலைப்படுத்தியும்,
தத்துவச்சிந்தனையாகவும் தந்தது சிறப்பாக இருந்தது . இன்னொரு சுவாரஸ்யமானப் பேச்சு
கபிலனின் திரைப்பாடல்கள் பற்றியது .
பாண்டிச்சேரியின்
பண்பாட்டு அடையாளம் பாண்டிச்சேரி சார்ந்த எழுத்தாளருடைய படைப்புகள் பற்றிய
கட்டுரைகள், அதிலும் மூத்த படைப்பாளிகள் என்ற வகையில் பாரதி, பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ்ஒளி வாணிதாசன்,
உசேன் போன்றவருடைய படைப்புகள் பற்றிய கட்டுரைகள் ,,பாண்டிச்சேரி சார்ந்த பல்வேறு இலக்கிய
அமைப்புகளின் செயல்பாடுகள் பாண்டிச்சேரி
சமயங்களும் பொதுவுடமை இயக்கங்களும் பற்றியகட்டுரை போன்றவையெல்லாம் மனதில் வரும்
போதே இது போன்ற உரைகள் /காணொளிகள் பாண்டிச்சேரி சார்ந்த ஒரு முக்கிய ஆவணமாக மனதில்
வந்து நிற்கிறது. அதை தவிர சில உரைரைகள்
மட்டுமே பொதுவான அர்த்தத் தளத்தில் உள்ளன.அவையும் இந்நூலுக்கு உரம் சேர்ப்பவை
நண்பர்கள்
தோட்டம் என்ற அமைப்பின் செயல்பாடுகள் பெருமை தரத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன.
பல்வேறு இலக்கிய அமைப்பின் செயல்பாடுகள் மூலமாக பாண்டிச்சேரியில் தமிழ் இலக்கியம்
சார்ந்த பார்வை எப்படி இருக்கிறது என்பதை இந்த உரைகள் சொல்கிறது
நண்பர்கள் தோட்டம் என்ற அமைப்பின் நண்பர்கள்
பாராட்டுக்குறியவர்கள்