சுப்ரபாரதிமணியன்..ஒரு எழுத்தாளனின் கோரிக்கைகள்
.. மீண்டும் வடமாநிலத் தொழிலாளர்களை வரவேற்று கை நீட்டி அழைக்கும்
தொழிலதிபர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் ;;
1
தமிழ்நாட்டு இளைஞர் களுக்கு வேலை முன்னுரிமையைத்
தாருங்கள்.தமிழர்களைப் புறக்கணிக்காதீர்கள். மகாராஷ்டிரா போல் சட்டமாக்குங்கள்.
2.சரியான கூலி.., தங்குமிடம் கேட்பதை கொச்சைப்படுத்தாதீர்கள்
3.அரசு வேலை வாய்ப்பு துறை மூலம் பதிவு செய்து அவர்களுக்கும்
வேலை தரவும்
4 எல்லாத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை தரவும்
5.தொழிற்சங்கங்கள் பிற மாநில தொழிலாளர் வருவதையும்
வேலை செய்வதையும் கண்காணிப்பு செய்து
முறைப்படுத்த வேண்டும்
6 வேலை வாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள் .
7. மத்திய பிரதேசம் ஆந்திரா கர்நாடகா
மகாராஷ்டிரா குஜராத்திலும் இவ்வாறு உள்ளது ஜனவரி 5 20 20 அன்று தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத்
அவர்கள் இப்படியொரு சட்டம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார் அதை உடனடியாக
அமல்படுத்த வேண்டும்
8.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் நேரடியாக
வட இந்தியர்களைப் புகுத்துவது போல் தமிழக அரசும் வட இந்தியர்களை புகுத்துவதை
கடுமையாக கண்டிக்கிறோம்
9
ஒரே தொழில் ஒரே வேலை ஒரே சம்பளம் என்பதை
நடைமுறைப்படுத்தி பெண்களையும் வாழ வைக்க வேண்டும். தற்போது கொத்தடிமை முறை தான்
உள்ளது
10. கொரானா காலத்தில் வேலை இருகிறது
என்ப்தற்காய் பாதுகாப்பில்லாமல் தொழிலாளர்களை வேலைக்கு வைத்து நோயின் பிடியில்
மாட்ட வைக்காதீர்கள்