யோகம் இருக்கிறது : சுப்ரபாரதிமணியன்
லண்டன் வாழ் பத்மநாப ஐயர் அவர்கள் சில மாதங்களுக்கு முன்னால் கனவு
இதழில் வெளிவந்த குந்தவை அவர்களின் சிறுகதை பிரதி ஒன்றை கேட்டு செய்தி
அனுப்பியிருந்தார் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் கனவு 35 ஆண்டுகளாக வெளிவருகிறது அதன் பிரதிகள் எந்த
ஒழுங்கமைப்பும் இல்லாமல் வீட்டில் கலவையாக கிடந்தன எனவே குந்தவையின் சிறுகதையை
கடமைகளில் தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது, சமீபத்தில்தான்
கண்டுபிடித்தேன் அவர் கனவு இதழில் 1999இல் கனவின் பத்தாம் ஆண்டின் ஒரு இதழில் வல்லைவெளி என்ற ஒரு
சிறுகதையை எழுதியிருக்கிறார் .
அவரின் “ யோகம் இருக்கிறது “ என்கிற சிறுகதை தொகுப்பு என்
பார்வையில் படும்படி இந்த இடைவெளியில் பலமுறை இருந்தது புரட்டியும்
பார்த்துவிட்டேன் ஆனால் அதில் வந்திருக்கிற கதைதான் கனவில் இருக்கிறது என்பதை நான்
உடனடியாக மனதில் கொள்ள முடியவில்லை கனவில் கிடைத்த பின்னால் மறுபடியும் அந்த யோகம்
இருக்கிறது தொகுப்பை பார்த்தேன். அதில் வெளிவந்த இதழ்கள் என்று தொகுப்பின்
கதைகளைப்பற்றி குந்தவை அவர்கள் சொல்லும் போது கனவில் வந்த வல்லைவெளி என்ற சிறுகதையும் அந்தத்
தோப்பில் சேர்த்திருக்கிறார் சமீப மாதங்களில் பல முறை அந்த தொகுப்பை பார்த்து
இருந்தாலும் இதை கவனித்ததில்லை மனதில் பதிந்து விட இல்லை ஆனால் இன்றைக்கு கனவு இதனை தேடிக்
கண்டுபிடித்த போது யோகம் இருக்கிறது தொகுப்பும் ஞாபகம் வந்தது
இப்படி சில விசித்திரமான விஷயங்கள் அவ்வப்போது நடந்து விடுகின்றன
.யோகம் இருக்கிறது என்ற தொகுப்பில் அந்த வல்லைவெளி சிறுகதை
இருக்கிறது. அது யுத்த பூமியில் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் பீதியும் அதை
மனதில் எடுத்துக் கொள்கிற ஒரு சிங்கள நாட்டின் குடிமகன் உடைய பதற்றமும் சரியாக
பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த யோகம் இருக்கிறது தொகுப்பில் இருக்கிற
பெரும்பான்மையான கதைகள் இப்படித்தான் இந்த பூமி சார்ந்த மக்களின் பதற்றத்தை
கொண்டிருக்கின்றன. அந்த யுத்த பூமியை விட்டு வெளியேறுவது குறித்து சிந்திக்க
முடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள். வெளியேறிய மக்கள் பற்றிய திருப்தியும்
பெருமூச்சும் இருக்கிறது. அந்த மண்ணில் இருந்து கொண்டு துயரப்படும் மக்களின்
வாழ்க்கையை அந்த சிறுகதை தொகுப்பு முழுக்க சொல்கிறது என்று சொல்லலாம் .
புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் சார்ந்த மக்களின் அனுபவங்கள்
துய்ரமானவை. அவை மிதி வெடி என்றத்தலைப்பில் சொல்லப்படுகின்றன.
இடம்பெயர்ந்த சூழலிலும்சடங்குகளைக் கடைப்பிடிக்கும் இலங்கைத்
தமிழர்கள் பர்றிய ஒரு கதையும் உள்ளது. இடம்பெயர்ந்த சூழலில் இந்த விசித்திரப்போக்குகள்
பற்றி மண் புதிது பயண அனுபவத் தொகுப்பில் ஒரு கட்டுரை நானும் எழுதியுள்ளேன். அதை
ஒரு கதையில் பதிவு செய்திருக்கிறார் இப்பை. “ சட்டென்று சுப்ரபாரதி மனீயன்
நினைவுக்கு வந்தார். அவரும் இப்ப்டி ஒரு வீடியோ ரேப்பைப் பார்த்து இருப்பாரென்ற
எண்ணம் ஓடி வந்த போது வெட்கமாக
இருந்தது “
பீல்டு வொர்க் என்ற கதிஅயில் வரிக்கு வரி ஆங்கில வார்த்தைகளை
அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் .அவ்வகைப்பயன்பாடு உண்மைதான் . ஆனால் ஒரு
கதைக்குள் இப்படி கொண்டு வருவது
நெருடலாகவேப் படுகிறதுர்
குந்தவையின் கதைகள் இரண்டு தசாப்த கால தமிழிலக்கியத்தின் உண்மையான
வரலாறு இலக்கியம் என்றால் என்ன. வாழ்க்கையின் பதிவு தான் வரலாற்று இலக்கியமாகவும்
உயர்த்தும் குந்தவையின் யோகம் இருக்கிறது தொகுப்பு உதாரணம் . பூமியை விட்டு அலறி
அடித்துக் கொண்டு வெளியேறாது மண்ணின் நேசத்துடன் மக்கள் துயரங்களை பங்கிடும்
உறுதியாய் வாழ்ந்த நேர்மை .ஆனால் குந்தவையின் கதைகள் இரண்டு தசாப்த கால தமிழ்
இலக்கியத்தின் உண்மையான வரலாறாக பதிவாகின்றன .இலக்கியம் என்றால் என்ன வாழ்க்கையின்
பதிவு தான் வரலாற்றினை இலக்கியமாகவும் உயர்த்தும் குந்தவையின் யோகம் இருக்கிறது
அதில் முக்கியமானவை .
அரசு பிரச்சாரம் செய்யும் பேரினவாதம் எவ்வாறு சாதாரண பொது
மக்களையும் பாதித்துள்ளது என்பதை இக்கதைகள் சித்தரிக்கின்றன என்று எஸ்
பொன்னுத்துரை அவர்கள் இந்தக் கதைகளைப் பற்றிச் சொல்கிறார் .
இந்தக் கதைகளைப் பற்றி எழுதிய நல்ல அனுபவத்தை குந்தவை அவர்களும்
வெளிப்படுத்தியிருக்கிறார் .இலக்கியங்களில் ஆழ்ந்த அனுபவம் இல்லாமல் எழுதப்பட
முடியாது என்ற இவான் சினிமாவின் கருத்துக்கு ஒத்துப்போவதாக என் கதைகள் இருக்கின்றன.
எனக்கு மிக தெரிந்தவர்களின் அனுபவங்களிலிருந்தும் என் சொந்த மண் பெற்ற
அனுபவங்களிலிருந்து வந்தவை இக்கதைகள். மூச்சடைக்கும் பழக்கங்களில் இருந்து தப்பி
இன்னும் எங்கள் யாழ்ப்பாணம் ஜீவ ஓட்டத்தால் நாட்டத்தைக் கொண்டு இருப்பதையும் அது
சரி தவறுகளை நேரில் பார்த்த உணர்வு நோக்குடன் பதிவுகளாக பதிந்து வைக்கிறேன் என்று
முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்
2002இல் இந்த தொகுப்பு வெளிவந்தபோது அவர்
கையெழுத்திட்டு எனக்கும் பிரதியை அனுப்பி இருக்கிறார் .
கனவில் வந்த கதையையும் அதே
கதையில் தொகுப்பின் இருப்பதையும் எதேச்சையாக கண்டுபிடிக்கும் விசித்திரத்தை
தெரிந்து கொண்டேன்
சமீபத்தில் ஓவியர் சந்துரு அவர்கள் இப்படித்தான் தொலைபேசி செய்து அவரின் கவிதைகள் வந்த கணவு இதழ்கள்
தேவை என்று சொன்னார். அதையும் முயற்சி செய்து பார்த்தேன் இதுவரை கிட்டவில்லை .ஏதாவது
ஒரு கட்டத்தில் அந்த கனவு இதழ்கள் கிடைக்கும்.
கனவு இதழ்களில் ஓவியர் சந்துரு அவர்களின் கவிதைகளை
யாராவது பார்க்க நேரிட்டால் எனக்கோ அவருக்கோ அனுப்பி வைக்கலாம் தாமதமாக செய்தியோ மகிழ்ச்சியோ
பகிர்ந்து கொள்வதைவிட விரைவில் பகிர்ந்து கொள்வது நெருக்கமானதாக இருக்கும் .
சுப்ரபாரதிமணியன்