புதுச்சேரி நண்பர்கள் தோட்டம்
நண்பர்கள்
முகக்கவசத்தைத்டை தூக்கி எறிந்து விடுவது போல் முகசவரம் செய்து
கொண்டு யுகபாரதி காட்சியளிப்பது நல்லவிசயம்.
தந்தை யார்., கதை என்பது என்ன , கல்வி என்பது என்ன என்பவை பற்றிய
அவர் தரும் வரையறைகள் அற்புதம். நல்ல தத்துவச்சிந்தனைகளைகளாகவும் அமைகின்றன.
ஓடி விளையாடு பாப்பா சொன்ன
பாரதி, தலைவாரிப்பூச்சூடி.. சொன்ன பாரதி தாசன், ஆகியோரின் சிகரங்களை சின்னப்யலே
சேதி கேளடா மூலம் தொட்ட பட்டுக்கோட்டை ,,இவர்கள் மூலம் கவித்துவம் அதன் சமூக
அக்கறையில் புடம் பெற்றதை சிறப்பாகவே விளக்குகிறார்.
வாழ்க்கை ஒரு பூங்காடு. குழந்தைகள் வண்ணப்பூக்கள் என்று ஆரம்பித்து
குழந்தைகள் உலமும் அரூபமான குழந்தைகள் உலகமும் ஒன்று என்று மெய்ப்பித்தலில் அவரின்
கற்பனையும் நிதர்சனமும் வளம் பெறுகின்றன.
குழந்தைகளைக் கொண்டாடச் சொல்கிறவராகி விட்டார் யுகபாரதி . குழந்தைகளைக்
கொண்டாடச் சொல்கிறவராகி விட்டார்கள் புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் நண்பர்கள்.
தோட்டம் திங்கள் கிழமை
தோறும் காணொளி ஒன்றை வெளியிடுகிறார்கள். சுவாரஸ்யமாக உள்ளது .இலக்கியம் இணைய தளம் வழியே என்பதாக..