சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

செவ்வாய், 21 ஜூலை, 2020

பாண்டிச்சேரி பற்றிய  முக்கிய ஆவணம்
கிராவின் வேட்டியும் பிரபஞ்சனின் அப்பாவின் வேட்டியும்
 தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் புதுவை யுகபாரதி –
சுப்ரபாரதிமணியன்
இந்த நூல் ஒருவகையில் பாண்டிச்சேரி பற்றிய  முக்கிய ஆவணம் என்று சொல்லலாம். பெரும்பாலும் இதில் உள்ள கட்டுரைகள் பாண்டிச்சேரி சார்ந்தே உள்ளன என்று சொல்லலாம். பாண்டிச்சேரியின் பண்பாட்டு அடையாளம் பாண்டிச்சேரி சார்ந்த எழுத்தாளருடைய படைப்புகள் பற்றிய கட்டுரைகள், அதிலும் மூத்த படைப்பாளிகள் என்ற வகையில் பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்ஒளி வாணிதாசன், உசேன் போன்றவருடைய படைப்புகள் பற்றிய கட்டுரைகள் ,,பாண்டிச்சேரி சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்புகளின்  செயல்பாடுகள் பாண்டிச்சேரி சமயங்களும் பொதுவுடமை இயக்கங்களும் பற்றியகட்டுரை போன்றவையெல்லாம் மனதில் வரும் போதே இது பாண்டிச்சேரி சார்ந்த ஒரு முக்கிய ஆவணமாக மனதில்  வந்து நிற்கிறது. அதை தவிர சில கட்டூரைகள் மட்டுமே பொதுவான அர்த்தத் தளத்தில் உள்ளன.அவையும் இந்நூலுக்கு உரம் சேர்ப்பவை
 பிரபஞ்சன் தமிழ்நாட்டில் வசித்து வந்தாலும் படிப்பும் வாழ்க்கையும் என்று அவருடைய பெரும்பான்மை காலம் பாண்டிச்சேரியில் இருந்திருக்கிறது..பண்பாடு  என்று ஒன்றுக்கொன்று இணைந்தப்  பண்பாட்டு அடையாளத்தை கொண்டிருந்தார் பிரபஞ்சன் .அப்படியே படைப்புகளில் வழியே இந்திய பிரஞ்ச் தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் கொண்டிருந்தார் என்பதை புதுவை யுகபாரதி நிரூபிக்கிறார்.              கி ராஜநாராயணன் கரிசல் காட்டில் பிறந்தாலும்  வாழ்வின் பின்பகுதியை பாண்டிச்சேரியில் கழித்துக்கொண்டு கொண்டிருக்கிறார். அவருடைய வேட்டி என்ற ஒரு கதை மற்றும் பிரபஞ்சனின்  வேட்டி என்ற ஒரு கதை இரண்டையும் எடுத்துக் கொண்டு இந்த இரண்டு ஆளுமைகள் எப்படி தமிழிலக்கிய சூழலுக்கு பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் .பாரதிதாசனைப் பொருத்த அளவில் தமிழரை எவராலும் அழிக்க இயலாது என்று இறுமாந்து பாவேந்தர் தமிழ் இயக்க குறியீடாக பன்முகத்தன்மை வாய்ந்த படைப்புகளை உருவாக்கி இருப்பதை  ஒரு கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
பாண்டிச்சேரியில் தனது முதுமை காலத்தை கழித்த மா. அரங்கநாதனின்  முத்துக்கருப்பன் என்ற கதாபாத்திரத்தையும் அதன் தனித்தன்மையை பற்றிச் சொல்கிறபோது காவியா சண்முகசுந்தரம் அவர்களுடைய சிறுகதைகளில் வரும் ஆறுமுகத்தை பற்றியும் ஒரு ஒப்பீட்டு அளவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.அரங்கநாதன் முத்துக்கருப்பன் கதாபாத்திரத்தின் மூலமாக குமுகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குமுகத்தை  பார்ப்பவன் ஆனால் .காவியா சண்முகசுந்தரம் - சுந்தரபாண்டியனின் சிறு கதைகளில் காணப்படும் ஆறுமுகம் குமுகத்தோடு  ஊடாடி மனிதஉறவைப் பார்ப்பவன். முத்துக்கருப்பன் புதுகுரலில்  பேசுபவன் ஆறுமுகம் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய குரலில்  பேசுபவன் என்ற வகையில் ஒப்பீட்டுக் காண்பிக்கிறார் .இதில் மலையருவி என்னும் மயக்கும் பெயர்கொண்ட பாவலர் ,ஓடை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர் நான் ஒரு நிரந்தர நாத்திகன் என்று உறுதிமொழி பத்திரம் எழுதித் தந்த பாவேந்தர் வழிவந்த பகுத்தறிவு பாவலர் ,.அவர் எப்படி தன்னுடைய பாட்டு உலகத்தை சிவப்புப் பாட்டை கொண்டு நிரப்பியிருக்கிறார் என்று ஒரு நல்ல கட்டுரை .அருமையாக இருக்கிறது புதுச்சேரியில் பல்வேறு சமூக மக்களை சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் . அந்த மக்களுடைய வாழ்க்கையை அனுபவங்கள் சடங்குகள் சிந்தனைகளோடு அவர்கள் எப்படி பன்முகத்தன்மை வாய்ந்த பரிமாணத்திற்குள் இருந்திருக்கிறார்கள் என்பதை ஒரு கட்டுரை சொல்கிறது
 பாரதிதாசன் பரம்பரை என்று ஒன்று இருப்பதை பல கவிஞர்கள் மறுத்திருக்கிறார்கள். ஆனால் அவருடைய பரம்பரையில் உள்ள பல்வேறு எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம்  ஒரு கட்டுரையாய் நீண்டப் பட்டியலிடப்பட்டிருக்கிறது .அது பெருமைப்படக்கூடிய பட்டியலாக இருக்கிறது புதுச்சேரி என்னுடைய மண்ணின் மைந்தனாக தமிழ் ஒளி  இருந்திருக்கிறார் அவரின் மே தின பாடல் பற்றிய ஒரு முழு கட்டுரை அவரின் பொதுவுடமை சார்ந்த ஈடுபாட்டையும் தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்வு கொடுத்து அவர் கவிதைகள் விளங்கி இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறது வாணிதாசன் ஒரு குழந்தை பாடலாசிரியராக நிறுவுவதில் ஒரு கட்டுரை வெற்றி பெற்றிருக்கிறது. பல்வேறு சிறுகதை எழுத்தாளர்கள் பாண்டிச்சேரி இருந்தாலும் அதிகம் பேசப்படாத உசேன் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டை மையமாகக் கொண்டு ஒரு கட்டுரை இந்த நூலில் உள்ளது .பாரதிதாசன் வாணிதாசன் தமிழ் ஒளி  போன்ற புகழ் வாய்ந்தவர்கள்  கவிதை இலக்கியத்தைப் போன்று சிறுகதை இலக்கியத்திற்கு  படைப்புகளை அளித்துள்ளார்கள் . பாடல் இலக்கியத்தில் சிறப்பான கவனம் பெற்ற உசேன் அவர்கள் சிறுகதைகளிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார் அந்த முத்திரையை  ஒவ்வொரு கதையாக  எடுத்துக்கொண்டு விரிவாக ஒரு கட்டுரை பேசுவது சிறப்பாக இருக்கிறது. பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற கட்டுரை பன்முகப்பார்வை கொண்டது .பல்வேறு சிந்தனைகளை வெளிப்படுத்துவது அந்த வகையில் அழகியல் பார்வையும் பெண்ணியப் பார்வையும் தமிழியப் பார்வையும் குமுகாயப் பார்வையும் எப்படி கொண்டிருக்கிறது என்பதை பற்றிய கட்டுரையில் பாவேந்தர் பாரதிதாசன் உடைய இன்னொரு முகத்தை காட்டுவதாக இருக்கிறது. அது அரசியல் பகுத்தறிவு சார்ந்த முகமாகவும் இருக்கிறது. தமிழில் சொல்லாட்சியும் தமிழையும் சொல்லாட்சியும் கொண்ட்தாக ஏறக்குறைய வைத்திருந்தாலும் தருகின்ற பொருள் , பாட்டின் தன்மை  வாணிதாசன் உடைய கவிதைகள் ஒரு முக்கிய இடத்தைப் பெறுவதைப் இன்னொரு கட்டுரை சொல்கிறது.
 பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் பாண்டிச்சேரியில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. சாதனைகளை செய்கின்றன அந்த வரிசையில் உள்ள சுமார் 50 இலக்கிய அமைப்புகள் பற்றிய ஒரு கட்டுரை ஆச்சரியம் தருகிறது .காரணம் வெவ்வேறு வகையான கொள்கையும் மற்றும் இலக்கிய ஆர்வம் இருந்தாலும் அவை இலக்கியம் சார்ந்து இப்படி எல்லாம்  இருக்கின்றன என்பது அதில் காட்டப்படுகிறது இது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கிறது .அதிலும் நண்பர்கள் தோட்டம் என்ற அமைப்பின் செயல்பாடுகள் பெருமை தரத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. பல்வேறு இலக்கிய அமைப்பின் செயல்பாடுகள் மூலமாக பாண்டிச்சேரியில் தமிழ் இலக்கியம் சார்ந்த பார்வை எப்படி இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்கிறது
 சுமார் இருபத்தைந்து பல்வேறு வகைப்பட்ட நூல்களையும் 5 குறும்படங்களையும் 4 ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிற புதுவை யுகபாரதி .பாண்டிச்சேரி இலக்கிய முகத்தை இந்த நூலில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்

  தான் பிறந்த மண்ணுக்கும் மொழிக்கும் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்னும் தீராக்காதல் கொள்கையும் சிந்தனையும் கொண்டு தொடர்ந்து தனித்த தமிழில் பேசி தனித்தமிழ் எழுதிவருபவர்  யுகபாரதி என்று சுந்தரமுருகன் அவர்கள்  அணிந்துரையில் அறிமுகப்படுத்துகிறார் .எழுத்தாளர்கள் உள்ளூர் வரலாற்றை அறிந்து கொள்வது ரொம்ப முக்கியம் .பொதுவுடைமை என்பது ஏற்றத்தாழ்வற்ற எல்லோரும் ஓர் குலம் என்ற  எண்ணமும் எல்லாவற்றுக்கும் உழைப்பே மூலதனம் என்று கூறுகிற உயர்ந்த சிந்தனை என்ற விளக்கம்  புதுமொழி ரகசியம் பற்றி சொல்கிறார் .தமிழ் தேசியமும் பொதுவுடைமை இயக்கமும் அவை சார்ந்த ஆழமான புரிதலோடு யுகபாரதி இந்தக்  கட்டுரை  நூலை எழுதி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் தமிழ்மொழி, பாண்டிச்சேரி இலக்கியம் ,பாண்டிச்சேரி படைப்பாளிகள் குறித்து ஒரு முக்கிய பெரிய  ஆவணத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை சொல்கிறது இந்நூல் . ( வெளியீடு காவ்யா பதிப்பகம் ரூபாய் 230... 220 பக்கங்கள் )
சுப்ரபாரதிமணியன்..ஒரு எழுத்தாளனின் கோரிக்கைகள் .. மீண்டும் வடமாநிலத் தொழிலாளர்களை வரவேற்று கை நீட்டி அழைக்கும் தொழிலதிபர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் ;;

1
தமிழ்நாட்டு இளைஞர் களுக்கு வேலை முன்னுரிமையைத் தாருங்கள்.தமிழர்களைப் புறக்கணிக்காதீர்கள். மகாராஷ்டிரா போல் சட்டமாக்குங்கள்.

2.சரியான கூலி..,  தங்குமிடம் கேட்பதை கொச்சைப்படுத்தாதீர்கள்

3.அரசு வேலை வாய்ப்பு துறை மூலம் பதிவு செய்து அவர்களுக்கும் வேலை தரவும்

4 எல்லாத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை தரவும்

5.தொழிற்சங்கங்கள் பிற மாநில தொழிலாளர் வருவதையும் வேலை செய்வதையும்   கண்காணிப்பு செய்து முறைப்படுத்த வேண்டும்

6 வேலை வாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு  முக்கியத்துவம் தாருங்கள் .

7. மத்திய பிரதேசம் ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா குஜராத்திலும் இவ்வாறு உள்ளது ஜனவரி 5 20 20 அன்று தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் அவர்கள் இப்படியொரு சட்டம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
8.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் நேரடியாக வட இந்தியர்களைப் புகுத்துவது போல் தமிழக அரசும் வட இந்தியர்களை புகுத்துவதை கடுமையாக கண்டிக்கிறோம்
9
ஒரே தொழில் ஒரே வேலை ஒரே சம்பளம் என்பதை நடைமுறைப்படுத்தி பெண்களையும் வாழ வைக்க வேண்டும். தற்போது கொத்தடிமை முறை தான் உள்ளது

10. கொரானா காலத்தில் வேலை இருகிறது என்ப்தற்காய் பாதுகாப்பில்லாமல் தொழிலாளர்களை வேலைக்கு வைத்து நோயின் பிடியில் மாட்ட வைக்காதீர்கள்

zOOZZoom

நேற்று என் உரையில் .
செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான  சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,மாபூமி போன்ற திரைப்படங்கள்,தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத் பற்றின விபரங்களை மனதில் விதைத்திருந்தன. வெளிமாநில தமிழ்ச்சஙகளின் செயல்பாடுகளை ஓரளவு இலக்கிய இதழ்களின்  செய்திகள் மூலம் அறிந்திருந்தேன். அதற்கு முன் நாலைந்து ஆண்டுகளாக எனது சிறுகதைகள், கவிதைகள் கணையாழி, தீபம், தாமரை  இலக்கிய இதழ்களில் வெளிவந்திருந்தன. தமிழ் புத்தகக்கடைகள், தமிழ் அமைப்புகள் , தமிழ் அன்பர்களைத் தேடும் முயற்சியில் ஆரம்பத்தில் வெகுவாக ஈடுபட்டேன். நிஜாம்  ஆட்சி காலத்தலைநகரான ஹைதராபாத், பிரிட்டிஸாரால் ராணுவ நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செகந்த்திராபாத் நகரங்களின் முக்கிய இடங்களைச் சுRRRற்றிப்பார்த்தggggg பின்பு ஒரு வகை தனிமையே மிஞ்சியது. மோண்டா மார்க்கெட் வீதி  மேனன் கடையில்,  செகந்திராபாத் தொடர்வண்டி நிலைய எதிர் கடைகளில் சபரிமலை உபாயங்கள் விற்கிற அளவு தமிழ் வெகுஜன இதழ்கள் விறுவிறுப்பாக விற்றன. அமுதசுரபி, கலைமகளுமே அதிக பட்ச இலக்கிய இதழ்களாக செகந்திராபாத் தமிழர்களால் கருதப்பட்டன. செகந்திராபாத் பிள்ளையார் கோவில், கீஸ் ஹைஸ்கூல் ஆகியவற்றில் தென்பட்ட பிராமணர்கள் அந்நியப்பட்டவர்களாகவே இருந்தனர். செகந்திராபாத் ரயில்வேதுறையில் ஏகப்பட்ட தமிழர்கள் இருப்பது செய்தியாகவே இருந்த்து. அவர்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. கீஸ் ஹைஸ்கூலில் நடக்கும் வருடாந்திர பிரமாண்ட ராமநவமி விழாக்கள் சபா நாடகங்களையும், பிராமண கலாச்சாரத்தையும் அவர்களின் நேசத்தையும் பறைசாற்றின.கண்டோன்மெண்ட்களில் ராணுவத்துறையினரின் பிரிவுகளில் பணியாற்றும் தமிழர்களின் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களும், த்மிழ் மீதானப் பற்றும் அவர்கள் ராமநவமியினருக்கு எதிர்வினையாகவும் இருந்தன. தொடர்வண்டி நிலையப்பகுதிகளிலும், கிளார்க் டவர் பார்க், கண்டோன்மெண்ட் கார்டன் பூங்காக்களிலும், திவோலி அஜந்தா திரையரங்குகளில் தமிழ்த்திரைப்படங்கள் திரையிடல்கள் போதும் தமிழர்களைக் காண முடிந்தது.உஸ்மானியா பல்கலைக்கழக தமிழ்த்துறையினர் பழமைவாதிகளாக இருந்தனர். ஆனால் அவர்களுடனான நெருக்கம் இல்லாத சமயத்தில் ஆந்திர மாநிலத் தமிழர் பேரவை  அமைப்பினர் ஆசுவாசம் தந்தனர்.அவர்களில் கிருஸ்ணசாமி மட்டுமே ஓரளவு இலக்கிய உணர்வு கொண்டவராவார்.மற்றவர்கள்  திராவிடக் கழகத்தின் சார்பான தீவிர அக்கறையாளர்களாக இருந்தனர்.இலக்கிய சார்புக்குத் துணையாக யாரும் இல்லாத ஏக்கத்தில் திரிந்தபோது தென்பட்ட சில நண்பர்களோடு உள்ளூர் படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற அக்கறையில் கனவு இதழை  ஆரம்பித்தோம். அதற்கு முன்னோடியாக பம்பாய் தமிழ்ச்சங்கத்தின் ஏடு, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க கேரளத்தமிழ் ஆகிய இதழ்கள் இருந்தன.அங்கு நான் சென்று இரண்டாண்டுகளுக்கு மேலாகியிருந்தது. ஹைதராபாத் செகந்திராபாத் இரட்டை நகர தமிழர்களின் முகமாக அது இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசையாக  இருந்த்து. முதல் இரண்டு இதழ்களில் உள்ளூர் படைப்பாளிகளின் சுமாரான கவிதைகள், சுமாரான சிறுகதைகள், துணுக்குகள், உள்ளூர் தமிழர்களின் மனக்குமறல்கள் என் வெளிப்படுத்தினோம். படைப்பு ரீதியான சமரசமோ, நவீன இலக்கிய அக்கறையின்மையோ, நானே பணம் முதலீடு செய்கிற அலுப்போ எல்லாம் சேர்ந்து கனவை தமிழ்நாட்டுப் படைப்பாளிகளுக்கான இதழாக்கி தமிழகத்திலிருந்து படைப்புகளை பெறச்செய்தது..சென்னையில் தீபம் திருமலை அச்சாக்கத்தில் உதவி புரிந்தார். உள்ளூர் படைப்பாளிகளுக்கான உள்ளூர் பக்கங்கள் என்ற பகுதி பின் இணைப்பாகத் தொடர்ந்து கொண்டிருந்த்து.  கன்வு இலக்கிய வட்டத்தின் மாதக்கூட்டங்களை கண்டோன்மெண்ட் கார்டன் பூங்கா, க்ளாக் டவர் பார்க் என்று நடத்தினேன். டெக்கான் கிரானிக்கல் போன்ற பத்திர்ரிக்கைகளில் கனவு  இலக்கிய வட்டச் செய்தி நடக்கும் நாளில்  இன்றையச் செய்திகளில் இடம் பெற்று கவனத்தை ஈர்ர்க்கும். கி.ரா, ஜெயந்தன், அசோகமித்திரன் என்ற வகையில் ஒவ்வொரு படைப்பாளிகள் பற்றின அறிமுகமாக அவர்களின் நூல்கள் பற்றின அறிமுகமாகவும் படைப்பு வாசிப்பு நிகழ்ச்சிகளாகவும் அவை அமைந்தன. பங்கு பெறுபவர்களில் சிறந்த உரைக்கும் படைப்பிற்கும் கனவிற்கு வரும்  நூல்களைப் பரிசாக தருவேன். ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கினை அடையும் நண்பர்கள் கூட்டம்.கனவின் படைப்புத்தரம் உள்ளூர் நண்பர்களுக்கு  சிரம்மாக இருந்தாலும் அதை கவனத்துடனே பார்த்து வந்தார்கள். கனவு  செகந்திராபாத்தின் நாலைந்து புத்தக்க் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்றாலும் விற்பனையாகாமல் கிடக்கும். ஆயிரக்கணக்காணோனோர் தமிழர்கள் கூடும் மேற்ச்சொன்ன நிகழ்ச்சிகளின் போது கெஞ்சிக் கூத்தாடி ஒரு மேஜை மீது கனவு இதழ்களைப் பரப்பி வைப்பேன். கனவா, அதன் பலன் உண்டா, இலக்கியமெல்லா யார் படிப்பாங்க, என்னமோ தமிழ்நாட்டை விட்டு வெளி….

ஹைதராபாத் மைய நாவல்கள் –சுப்ரபாரதிமணியன் உரை
6/7/20 மாலை 6 மணி

ஜீம் சந்திப்பு 8468450368
நைரா மற்றும் மாலு நாவல்கள்- வாசிப்பு அனுபவம்.

வித்யா அருண், சிங்கப்பூர்

வணக்கம். சிங்கப்பூரில் வசித்து வருகிறேன். சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதிவருகிறேன்.காரிகாவனம் தொகுப்பில் என்னுடைய சிறுகதையும் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் உங்களுக்கு, ஒரு வாசகியாய் என் அனுபவத்தைப்பகிர எண்ணுகிறேன்.

உங்களின் மாலுவும், நைராவும் ஒரே நேரத்தில் வாசிக்கக் கிடைத்தன.

நைரா:

ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி எப்படித் திருப்பூரை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருந்தீர்கள்.

அரசியல், மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் வேகமாக வளரும்  ஊரில் அந்த ஊரின் கடைநிலை  மனிதர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயம், மாட்டுக்கறிக்கென இருக்கும் கூட்டம் என்று பலவற்றையும் தொட்டிருக்கிறது இந்த நாவல். பள்ளிகளில் சமசீர் கல்விக்கான புத்தகங்கள் இல்லை என்பதுகூட விடப்படவில்லை.
எனக்கு எப்படி இத்தனை விஷயங்களை ஒரே புத்தகத்தில் கோர்த்தீர்கள் என்பது அதிசயமாக இருந்தது.

நைரா என்ற சொல் எனக்குப்புதிது. முதல் அத்தியாயத்தில் ரயில் நிலையத்தில் கறுத்தப்பனையாக நிற்கும் நைஜீரிய மனிதனின் அறிமுகம் நன்றாக இருந்தது.

நம் ஊரில் விற்கும் சிவப்பழகு பொருட்களின் விளம்பரங்கள் வெள்ளைத்தோலை விரும்பும் மனதைத்தானே வெட்டவெளிச்சப்படுத்திக்காட்டுகின்றன.

கெலுச்சி போன்ற ஆண்கள், பெண்களைப் படி, நல்ல வேலைக்கு போ என்று உற்சாகப்படுத்துபவர்காளாக இருந்தாலும், அவர்கள் சிவகாமி போன்றவர்களுக்கு ஒருவித அபசகுனம் தானே .
நம்மவர் அத்தனை கருப்பாகவும், கெலுச்சி போன்றோர் நம் தமிழர்களின் சராசரி நிறத்திலும் இருந்தால், இந்தக்காதலுக்கு ஒரு தடையும் இருந்திருக்காது இல்லையா?

ஒரு கதைசொல்லியாக, அங்கங்கே டைரிக்குறிப்புகளாக இந்தியாவையும், நைஜீரியாவையும் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, அங்கிருந்த தலைவர்கள், அவர்களைப்பற்றிய விமர்சனங்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.
நைஜீரியா என்ற நாட்டைப் பற்றி ஓரளவு அறிமுகம் உங்கள் நூலின் வாயிலாகக்கிடைத்தது. அங்கும் முருகன் கோயில்களும், தமிழ் பேசும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்குப்புது செய்தி .

நான் அமெரிக்காவில் ஒரு சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். கென்யா நாட்டிலிருந்து ஓரிருவர் என்னோடு வேலைப்பார்த்தனர். வெள்ளை இன மக்களைவிட, நம் தமிழ் சமூகத்தோடு அவர்களால் தங்களது, எண்ணங்களையும், கலாச்சாரம் தொடர்பான பகிர்தலையும் எளிதில் செய்ய முடிவதாக எனக்குத்தோன்றுகிறது.
இந்தியாவில் தான் அகதிகளாகட்டும், வேலைக்கென வரும் வெளிநாட்டவர் ஆகட்டும், பயமின்றி இருக்கமுடியும். இந்த நிலை மற்ற நாடுகளில் நிச்சயம் நடக்காத ஒன்று தான்.
காட்சிப்படுத்தும் போது  ஒரு வழிச்சாலையில் மனிதத்தலைகளை நட்டுவைப்பதாக சொல்வதும், மிதிவண்டியில் வருபவரை அதிசயமாகப்பார்க்கும் பார்வையாக ரசிக்கவைத்திருந்தீர்கள்.

ஆயத்த ஆடைகள் தயாரிக்கும்போது வரும் உபரித்துணிகளை அடுப்பெரிக்கப் பயன்படுத்தினால்  புற்று நோய் வரும் என்பது உங்களின் நூல் வாயிலாக அறிந்துகொண்ட புதியத்தகவல். சாக்கடையாக, சாயத்தநீராக மாறி விட்ட நொய்யலை மீட்டெடுப்பது எப்படி?

சுமங்கலித்திட்டம் பற்றி பல வருடங்களுக்கு முன்னர் நீயா நானாவில் ஒரு பெண் பேசினார். அவர் நேர்முகமாக அதில் பாதிக்கப்பட்டிருந்தார். கிறிஸ்துவின் சடலம் உயிர்தெழலற்று அழுகிக்கிடப்பது போல இருக்கிறது இந்த தேசம். சரி தான்!. எத்தனை நன்னீர் ஊற்றுகள் இருந்தாலும், குடிக்க சுத்தீகரிக்கப்பட்ட நீர் தானே இன்றைய நிதர்சனம்.

கடைசி ஒரு சில அத்தியாயங்களில் மட்டும் மூட்டைப்பூச்சி, கைத்தடி போன்றவை மூலமாக காட்சிகள் நகர்வது தனியாகத்தெரிந்தது.

மொத்தத்தில் இது ஒரு நல்ல வாசிப்பு அனுபவம்!.சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளரின் முக்கிய படைப்பு .ஆட்சியாளர்கள் யோசிக்க நிறையவிஷயங்கள் இருக்கின்றன. சுமங்கலி திட்டம், பள்ளிமாணவர்கள் குடிக்க ஆரம்பிப்பது இப்படிப்பல. இவற்றில் முக்கியமான ஒன்று- வெளி நாட்டிலிருந்து வருவோர் எப்படி நம் சமூகப்பாதுகாப்பைப் பாதிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்பது. கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ள பெண்பிள்ளைகள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கு, அங்கு வரும் அதிக அளவிலான வெள்ளையின வெளிநாட்டவரும் முக்கியக்காரணம்.

அந்நிய செலவாணி என்று மட்டும் யோசிக்காமல், மொத்தமாக யோசித்து செயல்படாவிட்டால், இந்தியாவின் முதலுக்கு மோசம் வந்துவிடும்.

மாலு :

நைராவை போலவே பெயர் புதிது. சொல்லுக்கான பொருள் முதலில் எனக்குத் தெரியவில்லை. திரு.சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் தான் மலேசிய வரலாற்றை எனக்கு அறிமுகம் செய்தது. உங்களின் இந்த படைப்பில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களான விக்னேஷும் , அப்பாசாமியும் இணைகோடுகளாகக் கதையை நகர்த்தி செல்கின்றனர். எங்கும் அவர்கள் சந்திக்கவில்லை.
உங்களின் யுக்தியாக நான் இந்தப்படைப்பிலும், மலேசியா பற்றிய தகவல்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தரப்பட்டிருந்ததைக்கவனித்தேன்.

பெ. ராஜேந்திரன்- தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம் சொன்னதாக வரும் கருத்து:
இங்கு படைக்கப்படும் இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும் மலேசியர்கள் அறியாமல் இருப்பார்கள். ஆனால், தமிழ் நாட்டினரையும், அங்கு படைக்கப்படும் இலக்கியத்தையும் நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்.
இந்தச் செய்தி என்னை யோசிக்க வைத்தது.
மலேசியர்கள் பன்னிரண்டு வயது வரை மட்டுமே தாய்மொழி படிக்கும் வாய்ப்பை பெற்றவர்கள். அவர்களின் சவால்கள் முற்றிலும் வேறானவை.
தமிழ் நாட்டிலிருந்து எழுதுபவரை விட, தம் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள மலசியத்தமிழர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கிறது.

லங்காட் நதிக்கரை, ப.சிங்காரத்தின் புயலில் ஒரு தோணி, The Bridge on the River Kwai என அரவமிருப்பவர்கள் மேலும் படிக்க என விரித்துச்சொன்னது மிகவும் உதவியாக இருக்கிறது.
தமிழர்கள் தம் தொழிலில் முன்னேற முடியாமல் இருப்பது ஏன் என்ற யோசனை எல்லாருக்கும் இருக்கும்.
அதை யோசனையாக நிறுத்தாமல், தர்க்கரீதியாக பதில் சொல்ல முனைந்திருப்பது சிறப்பு.
புற உலகம் என்று வரும்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நீட்டி எழுதிய அளவில், மலேசியாவிலிருக்கும் விக்னேஷை சுற்றிய உலகம் காட்சிகளாக கண்ணில் விரியும் அளவில் சொல்லப்படவில்லை. அங்கங்கே தெரியும் கிளைக்கதாபாத்திரங்களான கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எப்படி போலீஸ்க்கு பயந்து மூஞ்சூர் போல உடலைகுறுக்கி அமர்கிறார்கள் என்பது, அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்வோரின் பயத்தைக்காட்டியது.

எத்தனை முறை எச்சரித்தாலும் எனக்கு நடக்காது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வெளிநாடுகளில் ஏமாறுவோரும் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

  பினாங்கு, மலாக்கா, ஜோஹோர் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். கடைநிலை வேலைகளில் தமிழர்கள் அதிகம் இருப்பதைக்கண்கூடாகப்பார்க்க முடிகிறது.

உங்களின் புத்தகங்கள் விரித்துரைக்கும் சராசரி மக்களின் வாழ்க்கை போராட்டங்களும், அவற்றை சுற்றி இருக்கும் அரசியலும், நம்மை சுற்றியுள்ள உலகை புதிய கோணத்தில் அவதானிக்க வைக்கின்றன.

நன்றி
வித்யா அருண்