பிச்சிப்பூ : பொன்னீலன் நாவல் :சுப்ரபாரதிமணியன்
பேச்சு வழக்கு இயல்பிலேயே நாவல் முழுக்க சொல்லப்பட்டிருப்பது
சிலருக்குத் தேன். சிலருக்கு பாகற்காய் பொறியல் . அதுவும் கன்யாகுமரி பேச்சு
வழக்கில்.
நீண்ட கால சரித்திரத்தை உள்ளடக்கிய நாவல் 76 பக்கங்கள் தான்..
பிரிட்டிஸ் தர்மம், மனுதர்மத்திற்கிடையே மக்கள் அல்லல்படும் காலம் முதல் சர்க்கார்
உத்யோகம் உயர்சாதிகளுக்கும் மதம் மாறினவர்களுக்குமட்டுமே என்றிருந்த காலம் முதல் இந்நாவல்
தொடங்கி கேரளாவின் வைக்கம் போராட்டத்திற்கு பின்னான பெண்களின் எழுச்சியோடு
முடிகிறது. கட்டுமுட்டான மட்டச்சாதி மனுஷர் உச்சச் சாதி மனுஷர் உட்காரக்கூடிய
நாற்காலியில் உட்காரும் வழக்கறிஞர் நீதிபதி காலமும் வருகிறது.மெல்ல மெல்ல சமூக சீர்திருத்தங்கள்
மீட் அய்யர், வைகுண்டர் என நீள்கிறதும் பிச்சிப்பூ என்ற பெண் பங்கு பெறும்
பெண்களீன் எழுச்சியும் முக்கியமானது. இவ்வளவு நீண்ட சரித்திரத்தை மெக நாவல் கூட ஆக்கியிருக்கலாம். ஆனால்
எல்லாவற்றிலும் சுருக்கம். சிறு சிறு அத்தியாயங்கள் . படிக்க சுவாரஸ்யமும்
இயல்பும் தருகிறது.
( ரூ70, என்சிபிஎச், சென்னை )