” இளைஞர்களுக்கு திசை காட்டி நல்ல இலக்கியம் “
பொன்னீலன் உரையில் “ மனிதர்களில் படைப்பாளிகளும்
கலைஞர்களும் ஒளிந்திருக்கிறார்கள். சமூக உணர்வுள்ளவர்கள் சமூக மனிதர்களின்
நிலையைப் பெறுகிறார்கள். எழுத்தாளனால் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க
முடியாது. சமூகத்திற்காக எவன் அழுகிறானோ
அவனே எழுத்தாளன் ஆகிறான். . சமூக அதிர்வுகளின் வெளிப்பாடே படைப்பும் இலக்கியமும்.
சமூக அதிர்வுகளைக் கண்டு கொள்ள இன்றைய
இளைஞர்கள் நவீன இலக்கியம் படிக்க வேண்டும். அது அவர்களுக்கு திசைகாட்டியாக
அமையும் “ என்றார்
” பொன்னீலன் 80 “
“ தோழர் எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் 80 வயதையொட்டி வாழ்த்தும்
பாராட்டும்” நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது . சுப்ரபாரதிமணியன், எம். இரவி
ஆகியோர் அவரின் படைப்புகள் குறித்துப் பேசினர் .
ஏற்புரை
நிகழ்த்தினார்: தோழர் பொன்னீலன் அவர்கள் .
தலைமை : தோழர் பி ஆர். நடராஜன் ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம் )
ஆவணப்படம் அறிமுகம் :
“ புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்தா
துரை. மாலிறையனார் “ புதுவை யுகபாரதி
இயக்கம்
கீழ்க்கண்ட நூல்கள் அறிமுகம் : துருவன் பாலா, காதர் நிகழ்த்தினர்
முனைவர் தே ஞானசேகரனின் ” தந்தை இல்லாத என் வீட்டு முற்றம் ” கவிதை நூல்
-முனைவர் ஆர்.கார்த்திகேயனின் நான்கு நூல்கள் ( திரைப்பாடம், நம் மக்கள் நம் சொத்து,
வேலையைக்காதலி,மனசு போல வாழ்க்கை )
* மற்றும்...பாடல்கள் , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் தொடர்ந்தன..
நன்றியுரை: தோழர் சண்முகம் ( தலைவர் , க இ பெ. மன்றம் )
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம்...திருப்பூர் 2202488