மாலு
: நாவல்
சுப்ரபாரதிமணியன்
*மாலு ( மலேசிய வார்த்தை- ரப்பர் மரத்தில் ரப்பர்
பால் இறக்க போடப்படும் கத்திக் கீறல்)
மரண தண்டனக்கு எதிரானக் குரலை -
இடம்பெயர்ந்து சிரமங்களையும், மரண தண்டனையை எதிர் கொள்ளும் மலேசியாவிற்குச் சென்ற
தமிழ் இளைஞர்களை - மையமாகக் கொண்டுள்ளது இந்த நாவல்,. * இந்தியிலும் ஆங்கிலத்திலும் கூட வெளியாகியிருக்கிறது .சுப்ரபாரதிமணியனின் 16
நாவல்களில் இந்த நாவலுக்கு முக்கிய இடம் உள்ளது. திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகம்
வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியனின்
இன்னுமொரு குறிப்பிடத்தக்க நாவல் “ ரேகை “ rs 140
:
இயக்குனர்
ஞான
ராஜசேகரன் ( பாரதி, பெரியார் திரைப்படங்கள் )
சுப்ரபாரதிமணியனின்
மாலு
நான்
இரு முறை மலேசியா சென்றிருக்கிறேன். அந்த நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையை கூர்ந்து
கவனித்திருக்கிறேன்.மலேசியாவைப் பற்றி நான் ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ
அப்படி இந்த நாவல் அமைந்துள்ளது என்பது இந்நாவலின் வெற்றி..மலேசிய தமிழர்கள்
பற்றிய கூரிய பார்வையாக இது பரிமாணம் பெற்றுள்ளது. தமிழ்த் திரைப்படத்தை ஒரு பண்பாடாக ஏற்றுக் கொண்ட
சமூகம் அவர்களில் ஒரு பகுதியினர். அதுவும் பாமரத்தனமான தமிழ் திரைப்படத்தை.
அப்பாசாமி என்ற பெரியவர் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திற்கு வந்து அலைவது, தன் மகன் திருச்செல்வத்திற்கு
மலேசியாவில் வழங்கப்பட்டிருக்கும் மரணதண்டனையை விலக்கக் கோரி, நாவல்
முழுக்க ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இன்னொரு பகுதி சுற்றுலா விசாவில் அங்கு சென்று பணம் சம்பாதிக்கிற
ஆசையில் தங்கி அந்நாட்டு காவல் துறையினரின் பிடியில் இருந்து தப்பித்து ரப்பர்
தோட்டமொன்றில் அடைக்கலமாகிற விக்னேஷ் என்ற இளைஞனின் மனப்போராட்டங்களும்
ஆகும். திருச்செல்வமும்,
விக்னேஷும் நண்பர்கள் .மலேசியாவிற்கு செல்ல ஆசைப்படும் குணசேகரன் என்ற
இளைஞன் மலேசியா பற்றிய நூல்களைப் படிப்பதில் அவனுக்குப் பிடித்ததாய் குறிப்பிடப்படும்
பகுதிகள் இன்னொரு பகுதியாகும்.மலேசிய
தமிழர்களின் வாழ்க்கை, மலேசிய நாட்டு வரலாறு,தமிழர்களின் மனக்குமறல்கள் என்பதன் இலக்கியச் சாட்சியாக அப்பகுதிகள்
அமைந்துள்ளன..ரப்பர்
தோட்ட வீட்டிற்குள் அடைபட்ட
விக்னேஷின் இயங்காதத் தன்மை அவனை மன நோயாளியாக்கும் தனமையில் அலைக்கழிக்கிறது.கனவும், எண்ணங்களும்
சிதிலமாக்குகிறது.சரியான
பதிவேடுகள் இல்லாமல் சிறையில் அடைபட்ட தமிழர்களை அந்நாட்டுச் சிறையில்
பார்த்திருக்கிறேன்.
அடையாளமற்ற மனிதர்கள் அவர்கள். அந்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்கள்
உழைத்திருந்தாலும் தமிழர்கள் அடையாளம் மறுக்கப்படுகிறவர்களாக இருப்பதை இந்நாவல்
காட்டுகிறது.
இதில்
அப்பாசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு தரவே முடிவதில்லை. மனு தர முடிவது சிரமமானதல்ல. பெற்றபின் காரியங்கள் நடக்குமா என்பது சந்தேகமான
வேறு விசயம்.இலக்கியப்பிரதிகள் மூலம் குணசேகரன் கண்டடைவது எதிர்மறையான
விசயங்களாய் இங்கு பதிவாகியிருக்கும் போது அவன் அங்கு செல்ல ஆசைப்படுவதாய் முடிவது
குறையாகச் சொல்லலாம். மலேசிய
தமிழர்களின் வாழ்க்கை இலக்கியப் பிரதிகளில் தமிழகத்தில் காணக் கிடைப்பது
அபூர்வமாகி விட்ட சூழலில் இந்நாவல்
கூரிய சமகாலப் பதிவாகும்.
* பொன்னுலகம் பதிப்பகம் முதல் பதிப்பு 2019