பூமிக்கு மனிதன் தலைவனா?
மனிதனின் பேராசை இயற்கையைச் சுரண்டி
சூழல்களைத் தொடர்ந்து நாசம் செய்து கொண்டிருக்கிறது .இயற்கை வளங்களை மனிதர்கள்
அதிக உரிமை எடுத்துக் கொண்டு சுரண்டி வருவதும் மனிதனின் பயன்பாட்டிற்காகவே
இருப்பதாக எண்ணிக்கொண்டு செயல்படுவதையும் மறுக்கும்
சூழலியல் கோட்பாட்டை இயற்கையாளர்கள் முன்வைத்து
எழுதியும் போராட்டங்களைத்
தொடர்ந்தும் கொண்டிருக்கிறார்கள் . .
மனிதர்களை மையம்
கொண்டிருக்கிற இந்த வகை அணுகுமுறையை இந்தச் சூழலியல் கொள்கைகள் விமர்சிக்கின்றன.
பூமி மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ளும். தங்களுக்காக இயற்கையை மாற்றி கொள்ளலாம். அது ஒருவகையில் எப்போதாவது பெரிய அளவில் கேட்டை
உருவாக்கும். .அப்படி கேடுகளை உருவாக்கிக் கொண்டு பிறகு மனிதனை பாதுகாத்துக்கொள்ள புது வரையறைகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுவதை
சூழலியல் கொள்கைகள் விமர்சிக்கின்றன..அப்படி பெரிய அளவிலான கேடுகளை உலக அளவில்
இன்றும் கண்டு வருகிறோம்.
அப்படியொரு சூழலியல் கருத்துலகப் போராட்டத்தை “
சாயத்திரை “ நாவல் முதற்கொண்டு
மூன்று நாவல்களும் பத்துக் கட்டுரைத் தொகுப்புகளும் இந்த வகையில் மன எழுச்சியின் வடிவங்களாக இதுவரை
வெளியிட்டுள்ளேன். அதில் இரண்டு நாவல்கள் உயிர்மை வெளியிட்டவை. தண்ணீர்
யுத்தம் போன்ற சூழலியல் கட்டுரைத் தொகுப்புகளை உயிர்மை முன்பு வெளியிட்டுள்ளது.
இந்நூலின் கட்டுரைகள்
பல்வேறு சமயங்களில் எழுதப்பட்டு முக்கிய சுற்றுச்சூழல் சார்ந்த இதழ்களில்
வெளியானவை. என் நூல்களில் அதிக அளவில் விற்பனையானவை சுற்றுச்சூழல் சார்ந்த
படைபுகள் என்பது ஒரு செய்தி .இதை வெளியிடும் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் உயிர்மை பதிப்பக நணபர்களுக்கும் நன்றி. நன்றி
சுப்ரபாரதிமணியன் ,