புத்தாண்டு திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 52ம் சிறப்புச் சந்திப்பு
திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 52 ம் புத்தாண்டு சிறப்புச் சந்திப்பு புதன் மாலை , செரீப் காலனி வாழ்க வளமுடன் இல்லத்தில் நடைற்றது
, நேசனல் சில்கஸ்,
நேசனல் புத்தக நிலையம் உரிமையாளர்
அருணாசலம் தலைமை தாங்கினார்..
” உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும்,
வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள்.. வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு கலாச்சார அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின்
புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில்
அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர்
கொள்ளும் அனுபவங்கள் இலக்கியத்தில், நாவல்களில் காட்டப்பட்டுள்ளன.
அவை இடம் பெயர்வு இலக்கியங்கள் .உள்ளூர் மக்களின் அதிர்ச்சி
அனுபவங்களும் கூட. எப்படியும் சிக்கல்கள் சார்ந்த
வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய்
பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில்
வாழும் மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின்
வழியே பார்க்கும் பார்வையும் இடம்பெயர்ந்த இலக்கியங்களில்
இடம்பெற்று வருகிறது .” என்று சுப்ரபாரதிமணியன்
குறிப்பிட்டார்
சுப்ரபாரதிமனீயன் “ இடம் பெயர்வு இலக்கியம் “ என்ற தலைப்பிலும் ,
தொழிலதிபர் ரவி “ பயணத்தால்
விரியும் வாழக்கை அனுபவங்கள்” என்ற தலைப்பிலும் அவரின் சமீபத்திய
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா பயண அனுபவம் பற்றியும் , கண்ணதாசன் கவித்துவம் பற்றி
ரெத்தினமும் பேசினர் .நடராஜ் செட்டியார் ஜிவல்லர்ஸ் லோகநாதன், நீறணி பவளக்குன்றன்,
பசுமை ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர்
...லட்சுமணன் நன்றி கூறினார்
.