கலைஞர்
செய்திகள் தொலைக்காட்சி ’’எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ திருப்பூர்
* ஆனந்த விகடனில் வெளிவந்த என் ஒரு கேலிச்சித்திரத்தை சுப்ரபாரதிமணீயனிடம்
காட்டினேன். அவர் பிற கார்டூன்களையும் கொண்டுவரச்சொல்லி மத்திய அரிமா சங்கத்தில்
ஒரு வாரம் ஒரு கண்காட்சி நட்த்திய போது பலர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அங்கு
சுப்ரபாரதிமணியன் குறும்படங்கள், உலக்த்திரைப்படங்கள்
திரையிட்டு வந்ததைத் தொடர்ந்தேன். என்
கலைப்பயணம் திருப்பூர் சபாபதி புரம் மத்திய
அரிமா சங்கத்தில் தொடங்கியது
முண்டாசுப்பட்டி
- ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் ராம்குமார் உரையில்
* நொய்யலில் உப்பு அளவு 17000 ஆக இருந்தது ,முன்பு . இப்போது 900 க்கு குறைந்து விட்டது. திருப்பூர் பனியன்
உற்பத்தியாளர்களின் இவ்வகை சேவை சிறப்பானது. சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி
மைய நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி உரையில்
*
திருப்பூர்
நொய்யல் சீராகுமா.. கவலை குறைந்தது. திருப்பூர் ஏற்றுமதி யாளர்களின் சமீபத்தில்
நடவடிக்கைகளால் என்றார் ராம்குமார்
* தொழில் வளர்ச்சியில் அறியமையால்தான்
சுற்றுச்சூழல் கேடும் நொய்யல் மாசுபாடும் ஏற்பட்டது. அதை சீர்செய்து வருகிறோம்..
கிளாசிக் போலோ சிவராமன் உரை.
* ..சுற்றுச்சூழலா. வளர்ச்சியா. . என்
உரை...வனத்துக்குள் திருப்பூர் அமைப்பிற்கு விருதை வழங்கினேன்.
கலைஞர்
செய்திகள் தொலைக்காட்சி ’’எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ என்ற பிரமாண்ட
நிகழ்ச்சியை தமிழகத்தின் முக்கிய நகரங்களிலெல்லாம் நடத்த திட்டமிட்டுள்ளது.
முதல்
நிகழ்ச்சி தொழில் நகரமான திருப்பூரில் 27/12 /19 lநடைபெற்றது.
ஐ.கே.எப்.ஏ அரங்கில் .
இதில்
பாப்பீஸ் நிறுவனத் தலைவர் சக்திவேல், திரைப்பட
வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், கிளாஸிக் போலோ
இயக்குநர் சிவராம், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர்
கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட திருப்பூரின் முன்னோடிகள் உரையாற்றினர் .
மேலும், திருப்பூருக்கு பல்வேறு வகைகளில் புகழ் தேடித்தருவோரை
கவுரவிக்கும் வகையில், தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், ’’வனத்திற்குள் திருப்பூர்’’ என்கிற சூழலியல் அமைப்பு, லக்ஸ் பின்னலாடை நிறுவன இயக்குநர் ராகுல் டோடி, முண்டாசுப்பட்டி - ராட்சசன் ஆகிய திரைப்படங்களின்
இயக்குநர் ராம்குமார், தடகள வீரர் தருண் அய்யாசாமி ஆகியோருக்கு
விருதுகள் வழங்கப்பட்டன..
இந்த
நிகழ்ச்சியில் திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவ - மாணவியரின் கண்கவர் கலை
நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது..
Reply
Forward