சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 14 நவம்பர், 2020

Congraulations sithurai மரயானை: சித்துராஜ் பொன்ராஜ் நாவல் ஏறத்தாழ மூன்று முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர். இன்னொருவர் சீனக்காரர் .பள்ளி முகப்பில் குழந்தைகளுக்கான ஐஸ்கிரீம் போன்றவற்றை விற்பவர், இந்த மூன்று பேரும் ஒரு பூ இதழின் அடிப்படை மடிப்புகளாக இந்நாவலில் இருக்கிறார்கள் .இவர்களைத் தாண்டி நூற்றுக்கணக்கான சிங்கப்பூரின்கள் வெவ்வேறு விதமாக இதில் பரிணமித்து ஒரு வனப்புமிக்க பூவை வடிவமைப்பது போல இந்த நாவல் அமைந்திருக்கிறது . பல்வேறு கலாச்சாரமும் மொழித் தன்மையும் வாழ்வியல் சூழலும் கொண்ட இவர்களின் வாழ்க்கையை முன்னிறுத்தி சிங்கப்பூரின் ஓரளவு சரித்திரத்தையும் சிங்கப்பூரின் ஒரு முக்கியப் பகுதியான புக்கிட் பஞ்சாங் பகுதியைப் பற்றியும் விரிவாக சொல்லப்பட்ட ஒரு நாவல் என்று சொல்லலாம் .இதில் வருகிற சுகவனம் கல்வியாளர் ....ஒரு தலைமுறைக்கு உதாரணம். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த குடும்பத்தில் முதலாய் உயர்கல்வியை பெற்றுக்கொண்டவர். .இதனால் அவர் அமைப்புகளின் சேவகர் ...அமைப்புகளும் அவற்றின் விதிகளும் அவரை எளிதில் பயமுறுத்தும் ஆற்றல் வாய்ந்தவை. சுகவனம் போன்றவர்கள் அந்த சமூகத்தை சமூக ஒழுக்கம் என்று அழைப்பார்கள் .சோமசுந்தரம் சுகவனத்தின் பள்ளியில் ஒன்றாக படித்த கணேசனின் தந்தை .கணேசன் இப்போது தாய்லாந்தில் தலைமையகத்தை கொண்டிருக்கும் அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தில் கணினி கட்டமைப்பு பொறியாளராக வேலை செய்பவர் .பள்ளிகளுக்காக சமூகத்தில் பெரிய மனிதர்களிடம் நன்கொடைகள் வாங்கி தருவதில் சோமசுந்தரம் சாமர்த்தியசாலி. பல இந்துக் கோயில்களின் நிர்வாகப் பொறுப்பில் பொறுப்புகளில் இருந்தவர். சுகவனம் ஒருநாள் யாருடையதோ இப்படி வாழ்வதற்கும் மிரட்டலுக்கும் பயந்து அந்த நகரம் தன்னை விழுங்கி செரித்து விடக்கூடும் என்று ஆழமான நம்பிக்கையில் இருப்பவர். பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தபோது சுகவனத்திற்கு டைகர் என்ற ரகசிய பட்டப்பெயர் இருந்தது உண்மையிலேயே தன்னை புரியாத தான பல விஷயங்கள் ஆக்கி வைத்திருக்கின்றன என்று அவர் நினைப்பவர். அவர் பின்னால் இளைஞர்களால் தாக்கப்படுகிறார் அது அவருடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. தன்னை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது உங்களுக்குள்ளேயே காட்டிக் கொடுப்பதை விட மோசமான குற்றம் வேறு எதுவும் இல்லை என்று அவரும் நிற்கிறார் .அந்த அடிபட்ட தருணங்கள் அவருக்கு பல விடயங்களை கொண்டுவருகின்றன. இதற்கு முன்னால் சில தமிழ் இளைஞர்களை சீனர்கள் அடிப்பது பற்றிய குறிப்புகளும் நாவலில் உள்ளன . இவ்வகை வன்முறைகள் முதியோர்ர்க்கு சங்கடமளிப்பவை..சுகவனத்திற்கு வெளிநாடு என்பது மலேசியா தான் .ஆனால் அவரின் மனைவி ஜெயக்கொடி புற்று நோய் காரணமாக இறந்து விடுகிற போது சோமசுந்தரம் அவரை ராமேஸ்வரம் சென்று சடங்குகள் செய்து வருமாறு வலியுறுத்துகிறார். ஆனால் அவர் செல்ல விரும்பினாலும் தாமதமாகிக் கொண்டிருக்கிறசூழல். இந்த நிலையில் சீனக் கிழவர் தான் செய்கிற ஐஸ் விற்கும் தொழிலில் எப்படி தன்னை திருப்தி படுத்திக் கொள்கிறார். வாழ்க்கையின் சதுர விதிகளை மீறிச் சுயநிறைவு , மனநிறைவு கொள்கிறார் என்பதை சுகவனம் அறிகிறார். எளிய மனிதன் கற்றுக்கொடுக்கும் பாடம். அவரின் அன்பான உலகம் கண்டுணர்ந்து ராமேஸ்வரம் சென்று சடங்கு செய்யும் கட்டாயத்தை விலக்கி வைக்கிறார் .. சுகவனத்தின் மனைவி ஜெயக்கொடி பற்றிய முழுமையான சித்திரம் அருமையாக வரையப்பட்டிருக்கிறது. கண்கள் வழியாக அவர் உயிர் போயிருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள் .டாக்டர் வந்து கண்களை மூடினால் போதும் என்று கூட யோசித்து வைத்துக் கொண்டிருக்கிறார் சுகவனம் . வேட்டி கட்டுவதில் கூட அவர் சிரமப்படுகிறா.ர் புத்தக வாசிப்பில் அக்கறை உள்ளவராக ஜெயக்கொடி இருக்கிறார் .அதேபோல இசை சார்ந்தும் நாட்டியம் சார்ந்தும் அக்கறை கொள்பவராக இருக்கிறார். ஆனாலும் இசை கூடங்களில் பணத்தை செலவழித்தால் கதை கந்தலாகி விடுமென்று அவர் கருத வேண்டியிருக்கிறது. ஜெயக்கொடி நடனத்திற்கு போவதில் பல சிரமங்கள். சுகவனமும் ஒரு மாதிரி தடை விதிக்கிறார். அப்படி இல்லாமல் அவரை செல்ல அனுமதித்திருக்கலாம் என்ற குற்றவுணர்வு ஜெயக்கொடி இறந்தபின் சுவ்வனத்தின் இதயத்தில் குறுகுறுக்கிறது. சக்திவாய்ந்த மருந்துகளை கொடுத்து கொஞ்சம் வாழ அனுமதிக்கிற சூழலில் அவரின் புற்றுநோய் நான்காவது கட்டத்தை தாண்டி இருக்கிற காரணத்தினால் சுகவனம் ஜெயக்கொடியைத் துன்புறுத்த விரும்பவில்லை. சிங்கப்பூர் என்ற மாபெரும் நாடு பற்றிய முழுமையான சரித்திர குறிப்புகளும் சூழலும் பல இடங்களில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன .அதுவும் சவுத் பிரிட்ஜ் சாலையிலுள்ள மாரியம்மன் கோயில் மிகவும் பழமையான கோயில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த நாகர்கோவில் கடலூர் தமிழர்களால் கட்டப்பட்டது போன்ற விவரங்கள் முதல்கொண்டு பல விஷயங்கள் இந்த நாவலில் விரிவாக சொல்லப்படுகின்றன .ஊர்ஊராக சுற்றுலாத்தலமாகப் போய் வரலாம் என்பதை அவர் மனதில் பதிந்தாலும் அவர் வெளிநாடு எல்லாம் போகும் வாய்ப்பை அமைத்துக் கொள்ளாமல் சிங்கப்பூரை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு இருக்கிறார் .சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து இடம் பெயர்ந்து கதையும் சிங்கப்பூர் ராணுவப்படை உருவாக்கப்பட்டு சிங்கப்பூர் குடிமக்கள் எல்லோருக்கும் அது தேசிய சேவை கட்டாயம் ஆக்கப்படுவதும் அது சார்ந்த சில கதாபாத்திரங்களும் இந்த நாவலில் சரியாக சொல்லப்பட்டிருக்கின்றன, உடல்நிலை மிக சரியாக இருப்பவர்கள் பாவம் செய்யாதவர்கள் தேசிய சேவை நேரத்தில் அவர்கள் முகாமிலேயே கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ராணுவத்தில் நீ என்னவாக போகிறாய் என்ற கேள்வி அங்கு பலர் எழுப்பப்படுகிறது ,சமையல்காரன் ஓட்டுநர் எழுத்தர் என்று பலருடைய கனவுகள் அல்லது விருப்பங்கள் இருக்கின்றன. இந்த வாழ்க்கையையின் ஒரு வகைப் பரிமாணத்தை இந்த நாவல் சொல்கிறது. யாரிடமும் பங்கு போட்டுக்கொள்ள முடியாது குற்ற உணர்வுக்கு ராமேஸ்வரம் தான் பதில் சொல்லக்கூடும் என்பது கூட சுகவனத்தின் கற்பனைக்குள் இருக்கிறது .பல்வேறு மொழிகள் பேசும் மக்களும் கலாச்சார பாதிப்பு உள்ள மக்களும் என்று எந்த ஒரு நாட்டின் தன்மையை பல கதாபாத்திரங்கள் விளக்குகின்றன உதாரணத்திற்கு சுகவனத்தின் மகளான நீலா ஒரு நைஜீரிய கணவானை மணந்து கொள்கிறாள் ஆனால் அவனுடைய நிலையும் வேலையை தக்க வைத்துக் கொள்ளாத முடிவுகளும் அவர்களை அலைக்கழிக்க வைக்கின்றன .இதுபோல குடும்ப உறவை சார்ந்த பல கதாபாத்திரங்கள் சிங்கப்பூர் வாழ்க்கையின் பல கலாச்சார அம்சங்கள் சார்ந்த விஷயங்களை வெளிக்கொணர பயன்பட்டிருக்கின்றன. இந்த நாவலின் களமாக சிங்கப்பூரின் புகிட் பஞ்சங் பகுதி இடம்பெற்று ஒரு இமாலய தன்மையுடன் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ” ரயில் கம்பியைத் தாண்டிவிட்டால் முழு பக்கம் காடுதான் .பெரும் கம்பம் .அங்க வீடு வாங்கு .இல்லைனா குழந்தை பெத்துக்கமாடேன்னு சொல்வது சுத்த முட்டாள்தனம் ” என்று கூட கட்டாயங்கள் எழுகின்றன .அப்படி இருந்த இடம் ஒரு பெரும் நகரமாக பின்னால் மாறிவிடுகிறது. அந்த மாநிலத்தின், நகரத்தின் இயல்பு பற்றி விளக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது சிங்கப்பூரின் பிரதான புக்கிட் தீமா சாலையின் பகுதிகள் உட்பட பல மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கியது சிரமப்படுவது முதற்கொண்டு அந்த பகுதியின் தன்மை உருவாக்குவது நாவலில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது ,நிலவெளி பற்றிய விஸ்தாரண்மாக அது விரிந்திருக்கிறது . சுகவனத்தின் உரையாடல்களும் நட்பும் அவருக்கு சில வழிகளை காட்டுகிற அந்த சீன கிழவனுக்கு போட்டியாக பேரனின் பள்ளிக்கூட முகப்பிலேயே ஐஸ்கிரீம் விற்க அவருக்கு ஆசை வருகிறது .அதற்கு முன் பேரனுடன் ஒரு தடவையாவது கால்பந்து விளையாடணும் என்று கூட சொல்லிக் கொள்கிறார் .நிலம் சார்ந்த அனுபவங்கள் ஒரு மனிதனை எப்படி நிர்ணயம் செய்கின்றன என்பதை பழைய புக்கிட் பஞ்சாங் பகுதியும் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளும் அவை சார்ந்த சரித்திர குறிப்புகளும் அவற்றுடன் தொடர்புடைய மனிதர்களின் முகங்களும் கதைகளும் சுகவனதுக்குள் இருக்கிற போது அதை சுமந்து கொண்டு தெரிகிறார் ,அது அவருக்கு சுகமாக இருக்கிறது ஒருவகையில் ஒரு சிறுகதை ஆரம்பிக்கிற இடம், அதுவே முடிகிற இடம் என்று ஒரே களத்தை வைத்துக்கொண்டு இந்த நாவல் முன்னும் பின்னுமாக நகர்கிறது அல்லது ஒரு குறுநாவல் தன்மையில் ஆரம்பமும் முடிவும் நிலை பெறுகின்றன. ஆனால் இவற்றுக்கு 300 பக்க நாவலில் நாவல் தன்மையை கொண்டு வந்திருப்பது சித்தராஜின் சித்து விளையாட்டாக இருக்கிறது .ஒரு நாவல் என்பது பெரிய கால அளவை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையை எல்லாம் இந்த நாவல் தகர்த்து கால அளவை மீறி மனிதர்கள் பற்றிய சித்தரிப்புகளும் அவர்களின் வாழ்வை முழுமையாகத் தரிசனமாகக் கொண்டு வந்துவிட முடியும் என்பதை இந்த நாவலில் சித்துராஜ் நிரூபித்து இருக்கிறார். ஏதோ ஒரு வடிவத்தை எடுத்துக் கொண்டு உணர்வுகளால் நிரப்பும் எழுத்தாளன் போட்ட முடிச்சை அவிழ்க்கிற முயற்சியில் ஏதேதோ வித்தை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த வித்தையில் கொஞ்சம் மகிழ்விக்கவும் வேண்டியிருக்கிறது. அந்த முடிச்சுகள் அவிழும் பருவங்களால் இந்நாவலின் நிலம் அமைந்திருக்கிறது. எழுத்தாளனுக்குள் அமிழ்ந்து கிடக்கும் மகிழ்ச்சி, இருட்டு சோகம் என்பதெல்லாம் பிரதிபலிக்கும் பிம்பங்களாக கதாப்பாத்திரங்கள் நடமாடுகின்றன பலரின் நிழல்களாக... இதிலும் நிழலும் இருட்டும் மனித வாழ்வின் சாரம்சங்களைக் கோடிட்டுப் போகிறது. இதற்கு முந்தின இவரின் ” விளம்பர நீளத்தில் ஒரு மரணம் ”என்ற நாவலில் சிங்கப்பூரின் பன்முக கலாச்சார தன்மையை அடிப்படையாகக்கொண்ட மேல்தட்டு மக்களுடைய வாழ்க்கையை சொன்ன விதத்தில் சிக்கல்களும் சிடுக்கும் நவீனத்துவமும் என்று அமைந்திருந்தது .ஆனால் இந்த நாவலில் மிக எளிமையான கதைசொல்லல் மூலமாக வேறொரு இடத்தை சித்துராஜ் அடைந்திருக்கிறார் .இது திரும்பவும் . தொடர்ச்சியாகவும் எழுதி கை சுகம் காணக்கூடிய நாவலாசிரியரின் சிறப்பான இடமாக அமைந்திருக்கிறது 300 பக்கங்கள் ரூ .280 வம்சி வெளியீடு திருவண்ணாமலை