சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 14 நவம்பர், 2020
விடுதலையை உரத்துப் பாடும் புதுமைக் கவிதைகள்
****
சுப்ரபாரதிமணியன் அவர்களின்
**
மாயாறு - இரு நெடுங்கவிதைகள் ; க.அம்சப்ரியா
****
சுப்ரபாரதிமணியன் என்கிற பெயர் ,நாவலாசிரியராக ,சிறுகதையாளராக ,கட்டுரையாளராகவே சட்டென்று நினைவிற்கு வரும். மந்திரச் சிமிழ் என்ற கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார். வாழ்தலில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளையும் நாவலாக ,சிறுகதையாக ,கட்டுரையாக வடித்துவிட இயலாது. கவிதையாக வெளிப்படுவதற்கென்றே சில அனுபவங்கள் காத்திருக்கின்றன. கவிதையாக உருமாறிய பின்தான் அந்த அனுபவங்கள் பூர்ணத்துவம் அடைகின்றன.
சுப்ரபாரதிமணியன் அவர்களின் அனுபவங்கள் ,கவிதைகளாக வெளிப்பட்டிருக்கிற சூழலிலும் கவிதைகளில் தெறிக்கிற சமூக அக்கறை ,புதுமையின் குரலாக வெளிப்படுகின்றது.
இரு நெடுங்கவிதைகள் என்கிற தனித்துவத்துடன் " மாயாறு" வெளிவந்துள்ளது.
அவர் அனுப்பி வைத்த " பிளிறல்"சிறுகதைத் தொகுப்பினைத்தான் முதலில் வாசித்து முடித்தேன். அதை முடித்த கையோடு கவிதைக்குள் நுழைந்தேன்.
கவிதைகள் முதலில் என்னை எழுது என்கிறது.
நெடுங்கவிதைகள் என்றால் நீள நீளமாகத்தான் இருக்க வேண்டுமா? ஒரே பொருள் குறித்த குறுங்கவிதைகளாக்க் கூட இருக்கலாமே..என்ற வினாவோடுதான் கவிதைகள் துவங்குகின்றன.
ஆதிவாசிக் கவிதைகளாக ,குறைந்தது மூன்று வரிகளிலிருந்து கவிதைகள் வெடித்துள்ளன. ஒவ்வொரு கவிதையும் ,வினாக்களை உருவாக்கும் விதமாக, கூறிய விடையை விசாரிப்பதாக ,பறிக்கப்பட்ட வாழ்வாதாரம், மக்களின் மீது செலுத்தப்படும் அதிகார அத்துமீறல், காட்டு விலங்குகளின் மீதான அக்கறை என்று கவிதைகள் விரிகிறது.
சொற்களின் கட்டமைப்பு; கவிதைகளில் எழுதப்படப் போகிற கருத்திற்கென்று தனியாக வலிந்து சொற்களைத் தேடாமல் ,புதிய சொற்களின் சேர்க்கை ,கவிதையின் இயல்பிற்கேற்று தன்னைத்தானே கட்டமைத்திருக்கிறது.
கவிதைக்குள் வினாக்கள் எழுகின்றன. யாரோவின் வினாக்களுக்கு விடையாகின்றன. சில கவிதைகள் பதிலைத் தேடுகின்றன. சில கவிதைகள் ,யாரிடம் விடைகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
" வெண்மையும் கறுப்பும்; சுற்றுச் சூழல் என்கிற தலைப்பில் அமைந்துள்ள கவிதைகள் இரண்டு வரிகளில் கூட சாட்டையைக் கையில் எடுக்கின்றன. இரண்டு வரிகள் கூட பேசுகின்றன.
இவரின் கவிதையுலகம் ,புறக்கணிப்பட்ட மரங்களை, வனத்தை, அங்கேயே பிறந்து மடியும் பழக்கவழங்கங்களை எடுத்துச் சொல்கின்றன.
மாயாறு - நெடுங்கவிதைகள் ,கவிதைகளில் மாறுபட்ட குரல்..கவிதைகளிலும் முத்திரை பதிக்கிறார் கவிஞர்.
வெளியீடு; கனவு, திருப்பூர்.
9486101003
****
சில கவிதைகள்
**"
1
**
குலதெய்வத்துக்குன்னு ஒரு இடம்
காலம் காலமா இருந்துச்சு
யார் யாரோ வந்து பங்களாகட்டி எல்லாம் அடச்சாச்சு
குலதெய்வம் கோவிலுக்கும் போக முடியில.
ஒத்தை ஆளு போறமாதிரி சின்ன எடமாச்சும் குடுங்க
எங்க குலதெய்வம் நடமாடறதுக்கு
நாங்க அவன் கிட்டே நடந்து போறதுக்கு
***
2
**
சிங்கம் பூனைக் குடும்பம்
சிறுத்தை பூனைக்குடும்பம் அதனதன் புத்தி அதுக்கு
கார்ப்பரேட் கம்பனிக என்ன குடும்பம்
**
3
**
ஒரு மரம் கல்லாக
பல ஆயிரம் வருடங்கள்
ஒரு மரம் விறகாக சில நொடிகள்
**
4
**
பிறகு ஒளி இருந்தது
அவர்களுக்கு
பிறகு = டாலர். அவர்கள்= யாவரும்
***
நூல் பார்வை ; க.அம்சப்ரியா