சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

செவ்வாய், 29 டிசம்பர், 2020

கூட்டு நனவிலி மனம் செயல்படும் போக்குகள் 1967 தாளடி நாவல் : சீனிவாசன் நடராஜன் சுப்ரபாரதிமணியன் பின் நவீனத்துவ படைப்பில் சிதறல்களும் அதன் மூலம் கட்டமைக்கப்படும் கதை அமைப்பும் முக்கியமானது. கட்டுடைத்தலின் இன்னொரு பரிமாணமாய் இதைக்கொள்ளலாம். ஒருவகையில் மையம் இல்லாதது, விளிம்பு நிலை சிதறல்களைக்கொண்டது என்றாலும் ஒருவகை வாசிப்பு அனுபத்தைத்தூண்டும நான் இவ்வகையில் சாயத்திரை நாவல் முதல் புத்துமண் நாவல் வரை பலவற்றில் முயற்சித்திருக்கிறேன். தொடர்ச்சியின்மை அல்லது துண்டுகளின் பரிமாணங்களால் இவ்வகைப்படைப்புகள் நிறைந்திருக்கும் . அதுவும் புத்துமண் நாவலில் இவ்வகை சிதறல்களே கட்டமைக்கப்பட்டிருக்கும் சீனிவாசன் நடராஜனின் இந்த நாவலில் இவ்வகையில் சொற்சித்திரங்கள், மக்கள் மொழி, எழுத்தாளர் மொழி, எழுத்தாளரின் நினைவுகள் ஆகியவை அலைந்து திரிந்து ஒரு வடிவத்துள் வந்துள்ளன. பொதுவுடமை, திராவிட இயக்கங்கள் பற்றிய பல வரலாற்றுக்குறிப்புகள், நிகழ்வுகள் நிறைந்துள்ளன. அந்த இயக்கங்களின் போதாமை பற்றிய ஏக்கங்களையும் அவர்களின் சிதைந்த கனவுகளையும் காட்டுகின்றன. அதிலும் பொதுவுடமை இயக்கத்தின் இன்றைய நிலை அதன் தியாயம், நெடிய சரித்திரம் எல்லாம் உறுத்தக்கூடியதுதான். தியாகங்களைப் புரிந்து கொள்ளாத தமிழ்ச்சமூகம் பற்றியச் சாபங்களையும் அது உள்ளடக்கியது. அதிலும் நிலசீர்திருத்தம் சார்ந்த பொதுவுடமை இயக்கத்தின் போராட்டங்கள் இப்போதும் உறுத்துபவை.நீடிக்காமல் போய்விட்ட, இன்னும் முழுமையாகப் பலனளிக்காமல் போய் விட்ட அதன் பாகங்கள் உண்டல்லவா. தஞ்சை வட்டாரமக்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டவை அவை. 60/70 என்று இந்த நாவலின் தன்மை முடிந்து போயிருந்தால் நன்று. அதைத் தாண்டி 50 ஆண்டுக்குத் தாவி திராவிட இயக்க முதல் அமைச்சர்கள் பற்றியக்குறிப்புகள் தனித்து விடப்பட்டுள்ளன.சமீபத்தில் படித்த இரா.கவியரசிவின் கவிதை நூலில்( நாளை காணாமல் போகிறவர் ) கடலின் அமைதி என்ற கவிதையில் “ ஒரு “ அ “எழுதினால் போதாதா இவ்வள்வு பெரிய கவிதைகள் தேவைதானா என்றன கப்பல்களும் படகுகளூம் “ என்கிறார். அதேபோல் இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் விரித்துக் கொண்டு போய் ஆயிரக்கணக்கானப் பக்கங்களில் ஒரு மெகா நாவலை எழுதிவிடமுடிகிறதோது நடராஜன் எடுத்துக்கொண்டுள்ள இவ்வடிவம் இப்படி சுருக்கியிருப்பது புதுத்த்ன்மையுடன் உள்ளது லூசியன் பிராய்ட், ஆழ்ந்த உறக்க்கம் நிர்வாணம், லண்டலிலிருது வரும் ராமாநாயுடு. செல்வியின் ஆடுமாடுகள். பாப்பாகோவில் கிராமத்து மாரியம்மாள், ராமையாவின் கட்சி பணி, காளியம்மாளின் கருவாட்டுக்கூடை , அல்லி பெண்ணீன் அழகும் தஞ்சை காபி கிளப்பின் தனி மணம் , கோபாலகிருஷ்ணநாயுடுவின் போக்குகள், கீழ்வெண்மணி , சோமசுந்தரம் சாமியாரின் லீலைகள், அண்ணாவின் கொள்கையும்ம் உடல் நிலையும் என்று பல சித்திரங்கள் உருவாக்கிய கூட்டு நனவிலி மனம் தொடர்ந்து நாவலில் இயங்கிக்கொண்டே இருக்கிறது இதன் தொடர்ச்சியான இரண்டாம் புத்தகதையும் எதிர்பார்க்க வைக்கிறது 208 பக்கங்கள் , 230 ரூ பாய் விலை தேனீர் பதிப்ப்கம், ஜோலார்பேட்டை 9080909600