சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 7 மார்ச், 2017

சுப்ரபாரதிமணியனின் “  முறிவு நாவல்   : கா.ஜோதி
-----------------------------------------------------------

 பெண்கள்  என்ற குழந்தை உழைப்பாளிகள் :
       சுப்ரபாரதிமணியனின் நாவல்களில் பெண்ணிய அம்சங்களை நுணுக்கமாக்க் காணலாம் . இதிலும் முத்துலட்சுமி என்ற பெண் தொழிலாளி மூலம் அந்த அம்சங்கள் வெளிப்படுகின்றன. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம் போன்றவற்றில்  சலுகைகள் என்ற பெயரில் திட்டமிட்ட சுரண்டல் எப்படி நிகழ்கின்றன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. நிலவுக்கு ஓரமாய் ஒற்றைப்பனையொன்று சூட்டுகோலாய் நின்று கொண்டிருந்தது என்ற உவமை போல் அந்தப் பெண் நாவலில் விளங்கிகிறாள். வறுத்த விதைகள் முளைக்குமா .நாம் வறுத்த விதைகள் என்று அவர்களே நொந்து கொள்கிறார்கள்.

சுமங்கலித்திட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல இளம் பெண்கள் பற்றி மேரியின் டைரிக்குறிப்பு என்ற வகையில்  இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதே சமயம் முத்துலட்சுமி  என்ற இளம் பெண்ணின் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து வந்து வாழும் வாழ்க்கை விரிவாகப்பதிவாக்கியுள்ளது.அவர் அதிகப்படியான வேலை, சோர்வு,மனஅழுத்தத்தால் கை ஒன்று இயந்திரத்தில் சிக்கி  வெட்டுப்பட்ட பின் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். அதன் பின் அவளின் அலைக்கழிப்பும் இறுதியில் நம்பிக்கையாய் இருப்பது பற்றியும் நாவல் சொல்கிறது. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம், கண்மணித்திட்டம், தாலிக்குத்தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை ., திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்து சென்று தஙக வைப்பது போன்று ஐந்து வருடத்திற்கு மேல் வேலைவாங்குகிறார்கள். தாலிக்குத் தங்கம் தருகிறோம். திருமணத்திற்கு பணம் தருகிறோம் என்று பெரும்பாலும் மோசடிகளாக இருக்கிறது.அப்படி அந்தக் குறிப்பிட்ட  காலம் முடிவதற்குள் தப்பித்து காலோடிந்து கை ஒடிந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர். இரண்டு அரை லட்சம் பெண்கள் இந்நிலையில் தமிழகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ஒரு பெண்தான்

  இந்நாவலின் கதாநாயகி. டைரிக்குறிப்பில் உள்ள பெண்கள் தவிர மனதை பாதிப்பது பெனாசீர் என்ற பெண். பழகும் பெண்கள் மில் புரோக்கர்களாக இருப்பார்களோ என்ற பயத்தில் நடுங்கிறாள். பழகும் ஆண்கள் வேறு வகை புரோக்கர்களாக இருப்பார்களோ என்ற பயத்தில் நடுங்கிறாள். கை வெட்டுப்பட்டதில்  அவளது வாழக்கை ஆதாரமே பாதிக்கப்படுவதாக எண்ணுகிறாள்.  வெட்டுப்பட்ட கையை மொண்ணை என்றே நாவலில் குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது. அதை முடம் அல்லது ஊனம் என்று சொல்லியிருக்கலாம். ஊனமுற்ற பெண் என்று குறிப்பிட்டிருக்கலாம்.வேம்பு என்று இன்னொரு பெண்ணின் பெயர் சொல்லப்பட்டிருப்பதை ண்களின் கசப்பு வாழ்க்கை சார்ந்தக் குறியீடாகவே சொல்லலாம்.  கசப்பில்தான் இந்நாவலும் மிதக்கிறது  வட்டார மொழிக்கு இடம் இல்லாமல் இயல்பாக கதை எழுதும் எழுத்தாளுமை வேறுபாடு இதில் தெரிகிறது.

இந்த நாவலில் அழுக்கு என்ற வார்த்தை பல இடங்களில் அதிகமாய் பயன்படுத்தப்படிருக்கிறது. அழுக்கடைந்த குடோனில் சிலந்தி வகைகள் சடைசடையாய் தொங்குவது போல் பறவைகளின் எச்சங்களும் கூடுகளும் இருப்பது போல் அழுக்கு நாவலில் அப்பியிருக்கிறது.  .பெண் தொழிலாளர்கள் பற்றிய முக்கிய பதிவு இந்நாவல்.இது பஞ்சாலைப் பெண்கள் பற்றிச் சொல்ல்ப்பட்டாலும் பல பிரிவுகள் , பல தொழிற்சாலைகளில்  வேலை செய்யும் பெண்களின் நிலையைத் தான் சொல்கிறது என்று சொல்லலாம்,. சுப்ரபாரதிமணீயனின் கூரிய பார்வையாலும் வாழ்க்கை பற்றிய  கருத்துக்களாலும் சாதாரண உழைக்கும் பெண்கள் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானதாக இது விளங்குகிறது.

பெரும்பாலும் இதில் உள்ள பல பெண்கள் குழந்தை உழைப்பாளிகள் என்ற வகையில்  18 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதால் குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கைகளைப் பற்றியே இந்நாவல் பேசுகிறது என்றும் சொல்லலாம். அதே சமயம் பெண்ணியம் பேசும் நாவல் என்றும் சொல்லலாம். .( ரூ 90  உயிர்மை பதிப்பகம் , சென்னை )
----  கா.ஜோதி
                                                                                                                      
 ‘