சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 25 நவம்பர், 2015

எழுத்தாளர்கள் இருநாள் முகாம்
----------------------------------
          படைப்பிலக்கியம் மற்றும் சுற்றுசூழல்  பிரச்சினைகள்

எழுத்தாளர்களுக்கான இருநாள் முகாம் திருப்பூர் அலகு மலை  சேவ் பசுமைப்பூங்காவில்  21,22/11/15  ஆகிய தேதிகளில் நடைபெற்றது
21/11/15 அன்று முகாமின் துவக்கவிழாவிற்கு சேவ் இயக்குனர் அலோசியஸ் தலைமை தாங்கினார் . இயக்குனர் அமுதன்  மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளும், அவற்றின் திரைப்பட வெளிப்பாடும் என்றத் தலைப்பிலும்,சுப்ரபாரதிமணியன் தமிழ் நவீன இலக்கியப்போக்குகளில் சுற்றுச்சூழல் அக்கறை ,செந்தமிழ்வாணன் “ தேகமும் யோகமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

* கல்வி ஏற்றத்தாழ்வுகளை   அகற்றி சமத்துவச் சமுதாயத்திற்கு வழி கோலும் அருமையான கருவியாக இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரப்படுத்துகிற, உலகமயமாக்கல் சூழலில் அதை நியாயப்படுத்துகிற சாதனமாக மாறிவிட்டது.இலக்கியம் கல்வியின் முக்கிய பகுதியாகும் என்றார் சேவ் அலோசியஸ்.
*


இலக்கியத்தின் கலை அழகியல் பெரும்சக்தியாக  எழுத்தாளனுள்ளும் அவனின் படைப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வாசகனையும் வாழ்க்கை பற்றிய பார்வையை விரித்துக் கொண்டே போகிறது என்று சொல்லலாம்.இது கேலி விளையாட்டாகவும் புத்திசாலித்தனமாகவும், அனுபவத்திரட்சியாகவும் இலக்கியத்தில் காணக் கிடைக்கிறது.அனுபவத் திரட்சிக்குள் வரும் வாழ்க்கையில் தென்படுபவற்றையும் மனதில் தங்கி விடுபவை இலக்கியப்படைப்புகள் “ என்றார் சுப்ரபாரதிமணியன்.
-----------------------------------------------------------------------------

 தமிழ்க்கவிதையியல் என்றத்தலைப்பில் க.வை.பழனிச்சாமி, நித்திலன்  ஆகியோரும், கவிதையும் அரசியலும்  “என்ற தலைப்பில் கனல்மைந்தனும்,           கவுரவக் கொலைகளும் சாதி மறுப்பும்  “என்ற தலைப்பில்  வழக்கறிஞர் செ.குணசேகரனும் உரையாற்றினர். திரைப்பட இயக்குனர் ஆர் இரவிக்குமார் அவரின் “ இன்று நேற்று நாளை ‘ திரைப்படத்தை முன் வைத்து  தமிழ்சூழலும்  புதிய போக்குகளும் என்ற தலைப்பில் பேசினார்.
22/11/15இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆட்டனத்தி  “ சுற்றுச்சூழலும் பழங்குடிகளும் ‘, கனல் “ புலிகள் சரணாலயமும், பழங்குடிகளின் வெளியேற்ற அரசியலும் ‘ கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பைச் சார்ந்த சு. மூர்த்தி               “ உலகமயமாக்கலில் கல்வித்துறை அடைந்த மாற்றங்களும் கல்வியில் அந்நிய முதலீடும் “, பேரா.மணி “ அழகியல்: அழகு ஏன் அழகாக இருக்கிறது “, இளஞ்சேரல் நாவல் அனுபவம்  “ ., சாரா “ பெண்கள் மேம்பாடும், கல்வி முயற்சிகளும் “  ஆகியத் தலைப்புகளில் உரையாற்றினர்.. முகாமை நிறைவு செய்து வைத்து சேவ் இயக்குனர் அலோசியஸ்  உரையாற்றினார். வேணுகோபால் நன்றியுரை வழங்கினார். கனவு - சேவ் இணைந்து இந்த முகாமை நடத்தின.இருதினங்களில் கீழ்க்கணட குறும்பட, ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு அவை பற்றிய விமர்சனங்கள் , அபிப்பிராயங்கள் முன் வைக்கப்பட்டன. கவிதை வாசிப்பும் , பாடல்கள் பாடலும்  இடம்பெற்றன. இயக்குனர் அமுதன் படங்களின்  திரையிடலை ஒழுங்கமைத்தார்.திரையிடப்பட்ட படங்களின் பட்டியல் :
1.Mercury in mist –doc.On Kodaikanal envi. Issues
2. Highways doc. Dir . Amudan  on highways activites on deve.
 3.Gaon chodah hanin –Doc. North eastern 
4. Omul ( human)   Sf..Dir Drodtloff         
 5. Yaadhum .. doc  –Dir Anwar
6. Final solution doc.Dir Rakesh Sharama 
7.viratnam      sf
8 Three of us Docu –on handihapped      
 9. Kodai  music video dir: sofia asraf,
10 Good story  sf
 11. Ant story – sf-exploitation of children on sex
12.Tawaaz –on muslims -doc
 13. My name is Palaru_ doc Dir .RR Srinivasan
 14.Start Mexico film doc.
 15raththassuvadu –doc on salem prisoners 
16.kasadar karkaa –sf
17.Naalum kilamaiyum sf 
 18.  At the ball of fortune  doc.
19  kadamai,sf
20 Tawaaz –on muslims-doc
21 Yadhum –Dir Anwar on Tamil muslims
22..Start Mexico film-doc
( SF -short film, doc-documentary  )