சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 27 டிசம்பர், 2022

Erode Chandrasekar short stories / சுப்ரபாதிமணியன் நண்பர் சந்திரசேகர் அவர்கள் சக தோழராக, சக ஊழியராக தொலைபேசி தொடர்பு துறையில் கூட இருந்து பணியாற்றியவர். பணியை பொருத்த அளவில் தீவிரமான மதிநுட்பமும், மனப்பயிற்சியையும், உழைப்பும் கொண்டவர், அவ்வப்போது வாசிக்கிற பழக்கமும் அவருக்கு இருந்தது, ஓய்வு பெற்றபின் சக தோழர்களாக இருந்த பல ஊழியர்கள் எப்படிமாறி விட்டார்கள் என்று யோசிக்கிறேன். பலர் ரியல் எஸ்டேட்காரர்கள் என்று ஆகிவிட்டார்கள். சிலர் வட்டிக்குப் பணம் தருகிறார்கள். பிறருக்கு தொழிற்சங்க பணிகள் ஆர்வ மூட்டுகின்றன, பலருக்கு ஓய்வூதிய சங்க பணிகள் உற்சாகமளிக்கின்றன. தொடர்ந்து உழைக்கிறார்கள்.பலர் கோவில்,குளம், ஆன்மீகச்சுற்றுலா என்று பொழுதைக்கழிக்கிறார்கள்.நோய்களுக்கான சரியான மருத்துகளைத் தேர்ந்தெடுப்பதில் பலருக்குச் சிக்கல். இதெல்லாம் இல்லாதவர்கள் பல்செட் உதவியுடன் உணவு உண்டு, தொலைக்காட்சிப் பெட்டிகளில் மூழ்கி சுயநலத்துடன் தங்கள் குழந்தை, குட்டிகள், பேரன் பேத்திகளுடன் எந்தவித மனச் சிக்கலும் இல்லாமல் பொழுதைப் போக்குகிறார்கள்.இவர்களின் கடைசி இலக்கு காசி, ராமேஸ்வரம் என்பதால் எந்தச் சிக்கலும் இல்லை. நண்பர் சந்திரசேகர் இந்த பணி ஓய்வு காலத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய எழுத்துக்கள் எளிமையானவை. சாதாரண மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை... சாதாரண மக்களின் வாழ்க்கையை, எளிமையான மொழியில் தான் எழுத வேண்டும் என்பதில் அவர் திடமாக இருக்கிறார். எளிமையான மொழி மட்டுமல்ல, எளிமையாக எல்லோருக்கும் சென்று வாசிப்பில் சேர வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் அந்த வகையில் தான் இதில் உள்ள கதைகள் எல்லாம் எளிமையான மனிதர்களின் ஆசைகள், சந்தோஷம், மகிழ்ச்சி பெற்றுக் கொள்கிற போதனைகள், அறிவுரைகள், வாழ்க்கைப் பாடங்கள் என்ற வகையில் அமைந்திருக்கின்றன. இலக்கிய பத்திரிகை எழுத்தாளர்களின் சிடுக்கு மொழியும் சிடுக்கான மையமும், சிக்கலான மையங்களும் இல்லாமல் எளிமையான மொழியில் எளிமையான மனிதர்கள் பற்றிய கதைகளை சொல்லிக்கொண்டு போகிறார், அவருடைய நோக்கம் அதிகப்படியான மக்களை வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான். அதற்கான மொழியையும் மையத்தையும் அவர் தேர்ந்தெடுத்து கொள்கிறார். அதற்கான ஊடகப்பகுதிகளையும் தேர்வு செய்து கொள்கிறார் . இந்த பணியில் அவர் தொடர்ந்து இயங்க வேண்டும். அவரின் அனுபவங்களில் நாவல் போன்ற பெரிய தளங்களில் அவர் இயங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன . அதை அவர் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நண்பர் என்ற வகையில் இந்த தொகுப்பு வெளிவருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஓய்வு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் நண்பர்களை என்றும் நேசிக்கிறேன். 0 சுப்ரபாதிமணியன் திருப்பூர்
Short story/ uyirmmei issue Nov. 2022 சுப்ரபாரதிமணியன் துபாய் முருங்கை கை நிறைய தீபா முருங்கைக்கீரையைப் பறித்துக் கொண்டு நின்றது அவளும் அதனுடன் ஒன்றி போய் விட்டது போல் இருந்தது .ஒரு சிறு இலையாகி விட்டாள். ஒல்லியாக உருவம் சிறுத்திருந்தது. “என்ன இவ்வளவு ‘ “ இன்னைக்கு பொறியில் இதுதான். தினமும் மட்டன் ,மீன் போட்டு அலுத்துப் போச்சு .அதுதான “ “தேவையான அளவு எல்லாம் கிடைச்சதா “ பூங்காவில் நடைபயிற்சியை முடித்திருந்தார்கள் .நடை பயணப் பாதையில் ஸ்டார்ட் என்று எழுதப்பட்டு ஓர் இடம் இருந்தது. அப்படி என்றால் பினிஷ் என்ற ஓர் இடமும் இருக்கும் அல்லவா “ அதுவும் இருக்கும் பெரியம்மா.” “ அது ரெணடுக்கும் இடையில எவ்வளவு தூரம் ” “முக்கால் கிலோமீட்டர் ” “அப்போ நீ காலையில தினமும் மூணு கிலோமீட்டர் .நடக்கிறியா” “நாலு .சுத்து சுத்தறேன். ஆமா…. ஆமா மூணு கிலோ மீட்டர் இருக்கும் “ மல்லிக்கு மார்பின் மீது துணி ஒன்றை கூட போட்டுக் கொள்ளாமல் இப்படி நடப்பது சிரமமாகத்தான் இருந்தது அப்படித்தான் பெண்கள் அந்தப் பூங்காவில் நடந்து கொண்டிருந்தார்கள். மேல் மாராப்பு எதுவும் போடவில்லை. முழங்கையில் முக கவசத்தை மாற்றியிருந்தார்கள். மார்பை மூடாதத் துணிகள் முழங்கையை மூடியது போல் அது இருந்தது. வெளிநாட்டுக்காரப் பெண்கள் மார்பு பிளவுத் தெரியத்தான் நடந்து கொண்டிருந்தார்கள் ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் என்று.சிலர் காதுகளில் மின் இணைப்பிலான சாதனங்களைச் செருகி இருந்தார்கள் அவர்களில் பருத்த தொடைகள் வேகத்திற்கு ஈடு கொடுத்து கால்கள் இயங்கிக்.கொண்டிருந்தன .கராத்தே பயிற்சி போல் கை கால்களை வீசி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த பெண்ணும் மார்புப் பிளவு வெளித்தெரிவது பற்றி அக்கறை படாமல் தான் இருந்தாள். அவளின் பயிற்சியாளர். நடுத்தர வயது வெள்ளைத்தோல் ஆள் .தலை.மயிர் கருத்து தான் இருந்தது . அவர் மார்பு பிளவில் அக்கறை கொள்ளவில்லை மல்லிக்கு பெரிய வட்டத்தில் நான்கு முறை தீபாவைப் போல் சுற்றுவது சிரமமாகத்தான் இருந்தது .அவள் வயது அப்படி. ஒரு வெளி சுற்று அப்புறம் இன்னொரு முறை சுற்றி இன்னொரு சிறு வட்டம் என்று சுற்றிக் கொள்கிறாள். இந்தியாவிலிருந்து .இங்கு வந்து பத்து நாட்களாய் அப்படித்தான். “ மூன்று கிலோமீட்டர் .நமக்கு சிரமம் ” தீபாவளியை முன்னிட்டு இந்தியர் வீடுகள் என்று தெரிகிறமாதிரி .இருந்தவைகளில் விளக்கு அலங்காரங்கள் பளிச்சென்றுத் தெரிந்தன . கடந்து போன சிறு குழந்தையை பார்த்துக் கையசைத்தாள். எந்த நாட்டுக்காரியோ.அக்குழந்தையை சக்கர வண்டியில் வைத்து நடத்திக் கொண்டிருந்த வயதான பெண்ணின் நடை அவ்வளவு பரிச்சயமில்லை .அவளின் பருத்த தொடைகள் ஒன்றுடன் ஒன்று உரசி நடக்க சிரமம் தந்தது போல் நடந்து கொண்டிருந்தாள். மல்லி கை அசைப்பதைப் பார்த்து முதியவள் வண்டியை நிறுத்தினாள். அவர்களுக்கான இடைவெளி இரண்டடி தான் இருந்தது முதியவள் குழந்தையின் வலது கையை பிடித்து அசைக்க செய்தாள் மல்லி முகம் மலர்ந்து சிரித்தாள். அவளின் முகத்தில் இருந்த சிறு கோடுகள் அந்த சிரிப்பில் மறைந்து போயின ,அவளின் மார்பில் இருந்து எழுந்த வலது கை அசைந்து மகிழ்ச்சியைக் காட்டியது நேற்றைக்கு அப்படி சக்கர வண்டியில் குழந்தையை தள்ளிப் போய்க்கொண்டிருந்த இளம்பெண் வசம் இருந்த குழந்தையைப் பார்த்து கையசைத்தாள் குழந்தையும் எங்கோ பார்த்தபடி இருந்தது அந்தப் பெண்ணும் கண்டு கொள்ளவில்லை “ அந்தப் பொண்ணு இந்தியரா இருக்கணும்” “ எப்படி சொல்றீங்க பெரியம்மா ” “ மரியாதை தந்து சிரிக்கணும். அது கூட அந்தப் பொண்ணுக்குத் தோணலே. பேபி சிட்டிங்க்காக வந்தவளாக இருப்பா “ ”சரியா அடையாளம் கண்டுட்டே பெரியம்மா .ஆமா எனக்கு அறிமுகம் இருக்கு ” மல்லி துபாய் வந்து பத்து நாட்கள் ஆகிறது . நேரம் என்றக் கணக்கில் ஒன்றரை மணிநேர இடைவெளி அவளுக்கு சிரமம் தருவதாக இருந்தது . எல்லா அட்டவணையையும் மாற்ற வேண்டியிருந்தது. காலையில் பத்து மணிக்கு டிபன் தருவாள் தீபா. இந்திய நேரம் பதினொன்றரை. பதினொன்றரை மணிக்கு எந்த காலத்தில் சாப்பிட்டிருக்கிறாள் சாப்பாடெல்லாம் ஒன்பது மணிக்கு முடித்து விடுவாள், இங்கு வந்த பின் நேரம் தெரியவில்லை. துபாய் நேரத்தினை வீட்டில் இருக்கும் சுவர்க்கடிகாரம் எப்போதும் காட்டிக்கொண்டிருந்தது.. அவளின் கைபேசியில் இந்திய நேரமே இருந்து கொண்டிருந்தது. எப்போதும் இரவில் பத்து மணிக்கே தீபா கணவர் சாப்பிடும் பழக்கம். அப்படி என்றால் இந்திய இரவு நேரம் பதினொன்றரை மணி நேரம்..அல்லது ஒன்பது மணியா ; இதுவே பத்து நாளைக்கு பிறகு இந்தியா சென்றபின் பழக்கம் ஆகி விட்டால் என்னவாகும். நினைக்க பயமாகத்தான் இருந்தது. எல்லாம் தாறுமாறாகப் போகும். திசை மாற்றும் மாற்றங்கள். மல்லிக்கு கிளைகளை இழந்துவிட்டு மூளியாக பூங்காவில் இருக்கும் பேரீச்ச மரங்களைப் பார்க்கவும் பயம் ஏற்படுவது உண்டு.. துபாய் என்றால் பேரிச்சை மரங்கள் சாலைகளிலும் பேரிச்சம்பழம் கொட்டிக்கிடக்கும் என்று அவள் நினைத்திருந்தாள் அப்படி எதுவும் காணோம் .பாலைவனத்தில் அப்படி கொட்டிக்கிடக்கலாம் , அங்கு தண்ணீர் இல்லை அங்கு நன்றாக வளர்ந்தது இங்கு ஏன் இந்த சொட்டு நீரை உள்வாங்கி கொண்டு வந்து பேரீச்சம் பழங்களைக் கொட்டவில்லை. ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு ;பேரிச்சம்பழங்கள் அவள் இங்கு பார்த்த சூப்பர் மார்க்கெட்டுகளில் கொட்டிக் கிடக்கின்றன . விதவிதமானப் பாக்கெட்டுகளில். அவையெல்லாம் இந்த மரங்களின் அடியில் ஏன் கொட்டிக் கிடக்கவில்லை மல்லிக்கு ஆச்சரியமாக இருந்தது .தீபாவிடம் அவள் கேட்கவில்லை அவள் கேட்டு தெரிந்து கொள்ள நூற்றுக்கணக்கானவை இருந்தது. அதில் இதுவும் ஒன்று அந்த பேரிச்சை மரங்களையெல்லாம் வளர்கையில் கிளைகளை வெட்டி தள்ளி இருப்பார்களாம் .பக்கவாட்டில் அவை வளரவிடாமல் தடுத்து ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது போல் இருக்கிறதே அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள நூற்றுக்கணக்கான கேள்விகள் இன்னும் இருந்தன. பல கேள்விகளைக் கேட்கவும் செய்திருந்தாள். சிட்டுக்குருவிகள் அதிகமாகத்தான் அவள் நடைபயிற்சி போகும் பூங்காவில் காணப்படும். இந்தியாவில் இந்த சிட்டுக்குருவிகள் அதிகம் காணப்படுவதில்லை இப்போதெல்லாம்.. அவை எல்லாம் இங்கு வந்து விட்டதா.அக்குருவிகள் சற்றுப் பருத்து தான் காணப்படுகின்றன .புறாக்களும் காக்கைகளும் கூட அதிகமாக இருக்கின்றன பூங்காவில் எந்தக் குறையும் இல்லை அவை பறக்க, நடமாட என த் தனி காலி இடங்களும் இருந்தன அவை உட்கார்ந்து இளைப்பாற தனிமரங்களும் இருப்பது போல் நடனாடின. மரங்கள் தனி அழகுடன் இருந்தன. இப்பகுதியில் நிறையப் பூங்காக்கள் இருந்தது ஆச்சரியமாக இருந்தது மல்லிக்கு .வெளிநாட்டினர் அதிகம் அங்கு இருப்பதால் அதிகப் பூங்காக்கள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள். தீபா திருமணம் செய்து கொண்டு வந்தபின் இந்த இரண்டு ஆண்டுகளில் பெரியம்மாவை வரச்சொல்லி பல முறை கேட்டுவிட்டாள் அதனால் மல்லி தனியாகத்தான் விமானம் ஏறி வந்தாள் கொரானா சடங்குத் தளர்வு வந்தபின் கிளம்பிவிட்டாள். இரண்டாம் அலை ஓய்ந்தது. மூன்றாம் அலை பற்றிய பயங்களைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.பயணத்திற்கு நாற்பத்தெட்டு மணி நேரம் முன்பு ம் அவ்வப்போதுக் கிளப்பிக்கொண்டேயிருந்தார்கள் . விமானப் பயணத்திற்கு முன் கொரானா பரிசோதனை எடுக்க வேண்டும் என்றார்கள் . நாற்பத்தெட்டு மணி மணி நேரத்தில் தீபாவளி வந்துவிடும் .பரிசோதனை செய்யும் சோதனைச் சாலைகளின் பட்டியலில் அரசு மருத்துவமனை இருந்தது ஆனால் அங்கு பரிசோதனை முடிவு சொல்ல குறைந்தது மூன்று நாட்களாகும் என்றார்கள்.அங்கும் பரிசோதனை முடிவுகள் பெற காசு கொடுத்துதான் ஆகவேண்டும் . அரசுப் பட்டியலில் இருந்த தனியார் பரிசோதனை நிலையம் ஒன்றுக்குச் சென்று விசாரித்தாள். தீபாவளியை முன்னிட்டு விடுமுறை என்றார்கள்.முடியாவிட்டால் கோவைக்கு தான் செல்ல வேண்டும் .தனியார் மருத்துவமனைகளில் பனிரெண்டு மணி நேரத்தில் தருகிறார்கள் அரசாங்க மருத்துவமனைக்கு சென்றால் மூன்று நாட்கள் என்பது எப்படி,, அங்கு விசேஷமான கருவிகள் இல்லையா ஏன் தாமதம் செய்கிறார்கள் என்பது அவளுக்குச் சங்கடமாக இருந்தது. நாற்பத்தெட்டு மணி நேரத்தில் அவளுக்கு பரிசோதனை முடிவு தெரியவில்லை என்றால் அவள் தவித்துப் போய் விடுவாள் என்பது தெரிந்தது இந்த த் தனியார் மருத்துவமனைகள் ,பரிசோதனை நிலையங்கள் பெரும் பணத்தைக் கறந்து விடுவார்கள் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அவள் வற்றிப் போன கறவை மாடுதான். வேறுவழியில்லாமல் வெங்கடாசலம் சொல்லி கருப்புப் பிள்ளையார் கோயிலில் விசாரித்தாள். எனக்கு வேற யார் இருக்காங்க நீ தான் கேட்டு சொல்லனும் என்றாள் மல்லி தனிக்கட்டை தான். .கணவன் நாற்பத்தைந்து வயதில் குடித்து இறந்த பின்னால் அவளுக்கு வருகிற இரண்டு வீடுகளின் வாடகை த் தொகையில் ஜீவித்து வந்தாள். வெங்கடாசலம் தான் எல்லாவற்றுக்கும் உதவி செய்வான். அப்படித்தான் பரிசோதனை குறித்து என்ன செய்வது என்று தெரியாமல் அவனிடம் சொன்னதால் அவனும் கோவையில் கேட்டு விட்டு சொன்னான் ” தீபாவளி அன்னைக்கு லேப் இருக்குமாமா... லீவ் நாள்னாலே… ஆனா டைமிங் இன்னும் முடிவு பண்ணல. பண்டிகை நாள். அதனாலே முழுசா இருக்காது. ஆனா இருக்கும் .இன்னும் நேரம் முடிவான முடிவு பண்ண பிறகு கேட்டு தெரிஞ்சுக்கோங்க” ” நாப்பத்தெட்டு மணி நேரத்துக்குள் டெஸ்ட் எடுக்கணும் அதுக்கு மேல போயிருச்சுனா பலசமயங்களில் ரிப்போர்ட் பிரயோஜனம் இல்லாம போயிடும் அதனால நாப்பத்தெட்டு மணி நேரத்துக்குள்ள எடுக்கிறது நல்லது ” கோவை செல்ல வேண்டும் என்றால் தீபாவளியன்று மறுபடியும் வெங்கடாசலத்தை தொல்லை செய்ய வேண்டும் இல்லை என்றால் வேறு யாரையாவது கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் . தீபாவளி அன்றைக்கு அப்படி பயணம் வர யார்தான் விரும்புவார்கள். பலகாரமும் வெடியுமாய் பொழுதைக்கழிப்பார்கள். உள்ளூரிலும் தீபாவளி விடுமுறை குறித்து தீர்மானம் செய்ய முடியாது .அதனால் எதுவும் சொல்லவில்லை என்றார்கள் . மனசுக்குள் பட்டாசுகள் பயத்தில் வெடித்துக் கொண்டிருந்தன அவளுக்கு. நல்லவேளை எழுபத்திரெண்டு மணி நேரம் இருக்கிறபோது திருப்பூர் தனியார் பரிசோதனை அலுவலகத்திற்குச் சென்று அவள் கேட்டாள். தீபாவளி அன்றைக்கு .லீவு ..இல்ல வாங்க எடுத்துக்கலாம் என்றார்கள் .ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்பது பெரிய தொகையாகத் தான் இருந்தது அப்படித்தான் தீபாவளிக்கு பெயருக்கு கொஞ்சம் தலையில் கொஞ்சம் எண்ணை வைத்துக் குளித்துவிட்டு பரிசோதனைக்காகப் போய் நின்றாள் . மூக்கில் குச்சியை விட்டு நோண்டி சாம்பிள் எடுத்துக் கொண்டார்கள் . அது மட்டும் போதவில்லை என்று வாயில் கூட உமிழ் நீர் சாம்பிள் எடுத்துக் கொண்டார்கள் மூக்கில் விட்டு நோண்டும் போது தான் அழுது விடுவாள். உடம்பு பதறிப்போய் விடும் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை ..இரவு பனிரெண்டு மணிக்கு ரிப்போர்ட் கிடைக்கும் என்றார்கள். முதலில் கைபேசியில் வாட்ஸ் அப்பில் தகவல் வரும் என்றார்கள். வெங்கடாசலம் எண்ணைத்தான் அவள் கொடுத்திருந்தாள் இரவு ஏழு மணிக்கு பிறகு அவளுக்கு பதட்டம் ஆகிவிட்டது. கொஞ்சம் எண்ணையை தலையில் வைத்து குளித்தது அப்புறம் காலை முதல் இதே நினைப்பாய் அலைச்சல் இருந்தது எல்லாம் சேர்ந்து தூக்கத்தைக் கொண்டு வந்துவிடும் என்பது போல் இருந்தது. ஆனால் தூக்கத்தை கட்டுப் படுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் எட்டு மணிக்கு எதிர்த்த வீட்டில் இருந்து வெங்கடாசலம் பரபரப்பாக வந்தான் “ ரிப்போர்ட் வந்து இருக்கு.. என்ன சொல்லுதுன்னு தெரியல. .கடைசியில பாசிட்டிவ் நெகட்டிவ் இரண்டு போட்டிருக்கிறார்கள் நமக்கு எது கரெக்ட்டுன்னு தெரியல ..பதட்டமா இருக்கு ” “போன் பண்ணிப் பாருடா வெங்கடேசா .அந்த பெருமாள் காப்பாற்றட்டும். டிக்கெட் எடுத்தாச்சு விசா வந்துருச்சு. இத்தனை செலவு பண்ணியாச்சு இனிமேல ஏதாவது ஏடாகூடமா இருந்தா இந்த பணம் எல்லாம் வீண் தானா ஆனா அப்படி எதுவும் ஆயிடக்கூடாது அந்தப் பெருமாள் காப்பாற்றுவார்” வெங்கடாசலம் பதட்டத்துடன் பரிசோதனை சாலைக்கு தொலைபேசி செய்தான் . பதிலில்லை. காலை வரைக்காத்திருக்க வேண்டும். ராத்திரி .முழுக்க மல்லிக்குத் தூக்கமில்லை. காலையில் பத்துமணி எப்போது ஆகும் என்று காத்திருந்து கேட்டுக் கொண்டான் “ நேத்துக் காலையில் வந்து டெஸ்ட் எடுத்தாங்க. மல்லி அந்த அம்மா டெஸ்ட் என்ன ன்னு புரியல. நல்லதுதானே” “ நல்லதுதான் நெகட்டிவ் தான்.. ஒன்னும் பயப்பட வேண்டியதில்லை பாசிட்டிவ் அப்படின்னு சொன்னா தான் சிரமம்.. ஓகே உங்களுக்கு .ரிப்போர்ட் வேணும்ன்னா காலையில ஆபீஸ் வந்து பிரிண்ட் அவுட் வாங்கிக்கங்க” நல்ல வழியாக அவன் புலனத்தில் இருந்து அதை மின்னஞ்சலுக்கு அனுப்பி வீட்டிலேயே அந்த பரிசோதனை முடிவைப்பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடிந்தது என்பது ஆறுதலாக இருந்தது. அவன் தான் டாக்சி பிடித்து கொண்டு வந்து விமானநிலையத்தில் இறக்கி விட்டுப் போனான் .அங்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னால் இருக்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு முன்னால் கொரானா பரிசோதனை எடுக்கவேண்டும் என்றார்கள் எட்டு மணி நேரத்துக்கு முன்னாடி அங்கே போய்விட்டாள் மல்லி அப்ப்டியென்றால் விடியற்காலையில் மறுபடியும் கொரானா பரிசோதனை எடுக்கவேண்டும். அதிகாலை நான்கு மணிக்கு விமானம் என்றால் அதற்கு முன் ஆறு மணிநேரம் முன் என்றால் இரவு பத்து மணி வருகிறது ..இரவு எட்டு மணிக்கே விமானநிலையம் சென்றுவிட்டாள். வெங்கடாசலம் நான் திரும்பி போக டாக்ஸி வெயிட்டிங் சார்ஜ் வேறு ஆயிடும் கிளம்புகிறேன் என்றான் முகப்புப் பகுதியில் உட்கார்ந்திருந்த நாலைந்து பேர் சேலம் சுற்றுலா ஏஜென்சியில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள் அவர்களிடம் வெங்கடாசலம் பேச்சு கொடுத்த போது அவர்களும் சார்ஜா விமானத்திற்கு செல்வதாக சொன்னார்கள் .அந்த ஏஜென்ட் கோபியை அவன் தேடிப்பிடித்து மல்லி பற்றி சொல்லி கொஞ்சம் கவனித்துக் கொள்ளச் சொன்னான். தொண்ணுறாயிரம் ரூபாய் கொடுத்து ஐந்து நாள் துபாய் சுற்றுலா செல்கிறார்கள் .அதற்கு அவர்களும் சார்ஜா விமானத்தை பிடிக்க வேண்டும் நாங்க பாத்துக்குறோம் நீங்க கிளம்புங்க என்றார்கள் .சேலத்துக்காரர்கள் அருகில் இருந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது அவள் 32 கிலோ பொருட்கள் கொண்டு போகலாம் என்று நினைத்து இருந்தாள் ஆனால் அது 30 கிலோதான் என்றார்கள். எடை போட்டுப் பார்த்தபோது இரண்டு கிலோ அதிகமாக இருந்தது அதற்கு இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றார்கள். பதட்டம் ஆகி விட்டது அவளுக்கு .மறுபடியும் ஸ்கேன் செய்யும் இடத்திற்கு அருகில் வந்து கத்தி ஒன்றை வாங்கி ஸ்கேன் செய்ததில் இருந்த லேபிளை வெட்டி எடுத்துவிட்டு பெரிய பையைப் பிரித்தாள் . 2 கிலோ சிறுதானியத்தை தனியே வைத்துக்கொண்டாள் இப்போது போய் பார்த்தபோது 30 கிலோ இருந்தது. ஆனால் மறுபடியும் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் .மறுபடியும் ஸ்கேன் செய்து விட்டு இரண்டு கிலோ அதிகமாக இருப்பதை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். காரணம் அவளின் கைப்பை முன்பே 10 கிலோ வரை எட்டியிருந்தது சேலத்துக்காரர் ஒருவரிடம் 2 கிலோ விவகாரத்தை சொன்னாள். அதுககு என்ன நாங்க கையில வச்சிக்கிறோம் என்றார்கள். அவளுக்கு ஆறுதலாக இருந்தது அவளின் துணிமணி எல்லாம் 10 கிலோ தனியே கைப்பையில் இருந்தது. ஆனால் தீபாவுக்கு தரவேண்டிய பொருட்களின் பட்டியலில் எண்ணெய், சிறு தானியங்கள் எல்லாம் 30 கிலோ ஆகிவிட்டது. அவளுக்கு எல்லாம் கொண்டுபோய் கொடுத்தாக வேண்டும் .பத்திரமாக போய் சேர்ந்தால் போதும் என்று அவள் நினைத்துக் கொண்டாள் . எல்லாவற்றிலும் பதட்டம். பயம் ஒட்டிக்கொண்டது. போர்டிங் பாஸ் தருகிற போது மல்லி அங்கே போய் தங்கிக் கொள்ள மாட்டார் பணிப்பெண்ணாக எங்கும் வேலையில் சேர மாட்டார் என்று உத்திரவாதம் தந்து தீபா அனுப்பியிருந்த கடிதத்தை திரும்பத் திரும்ப கேட்டார்கள்.. “ நான் எதுக்கு அங்க போய் இருக்க போறேன் எனக்கு சொந்த வீடு, சொந்தக்காரங்க எல்லாம் இங்கே இருக்காங்க நான் ஏன் போயி வேலைக்காரியாக இருக்கவேண்டும் “ என்று கண்களை கசக்கியபடி மல்லி விசாரித்த பெண்ணிடம் சொன்னாள் ஆனாலும் அவளுக்கு போர்டிங் பாஸ் தரப்படவில்லை சேலத்துகாரர்கள் எல்லாம் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு வேறு இடத்திற்குப் போய் விட்டார்கள் ஆனால் இன்னும் விமானம் கிளம்ப மூன்று மணி நேரம் உள்ளது .எந்த பிரச்சனையானாலும் சமாளிக்க வேண்டும் கியூ ஆர் ஸ்கேனிங் செய்யும்படி முதல் வரிசைக்கு போகச் சொன்னார்கள். அவளுக்கு விளங்கவில்லை விசா வாங்கியாகிவிட்டது சரியாகத் திரும்பி விடுவேன் என்று உறுதிமொழி கொடுத்த விஷயம் உறுதிப் படுத்தி விட்டது. இதைத்தாண்டி மறுபடியும் என்ன தொல்லை என்று நினைத்தாள் முதல் வரிசையில் சென்றபோது அவள் தங்கும் இடத்தின் முகவரி,, தொலைபேசி எண் எல்லாம் கேட்டார்கள் .கொடுத்தாள் .கைபேசியில் வருகிற விஷயங்களை பூர்த்தி செய்து கொண்டு வரச் சொன்னார்கள் .பிறகு அவளின் கைபேசியை வாங்கி அது 2ஜி அதில் ஒன்றும் செய்யமுடியாது என்று அவர்களே அலுப்புடன் விவரங்களைப் பதிய ஆரம்பித்தார்கள் அவளுக்கு வாட்ஸ்அப் தகவல்களை பார்க்க தெரியாது .ஆனாலும் இருக்கட்டுமே என்று ஒரு நல்ல போனைத் தான் வைத்திருந்தாள் ஆனால் க்யூ ஆர் ஸ்கேனர்க்கு அது பயன்படவில்லை என்பது மறுபடியும் வருத்தம் அளித்தது எப்படியும் அங்கு போய் சேர்ந்தால் போதும் என்று நினைத்தாள். ரொம்ப நேரத்திற்கு பிறகு அவளுக்கு போர்டிங் பாஸ் கிடைத்தது போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்ட மற்ற சேலத்து க்கரர்கள் தனியாக ஒரு இடத்தில் போய் உட்கார்ந்திருந்தார்கள்.தேடிப்போய் அங்கு போய் உட்கார்ந்து கொண்டாள். அந்த டிராவல் ஏஜென்ட் கோபி திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கண்களை மூடி கொஞ்ச நேரம் தூங்குகிற முயற்சியில் இருந்தாள். ஆனால் கைப்பை தவறிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் முழிப்பிலேயே இருக்கச் செய்தது. 0 சார்ஜா வந்து இறங்கிய போது அரை மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது பரிசோதனைகள் முடிந்து வந்தபோது எல்லாம் சுமூமாக இருந்தது 48 மணி நேரத்திற்கு முன்னால் எடுத்த கொரானா பரிசோதனை பற்றி யாருமே கோவை விமான நிலையத்தில் கேட்கவில்லை.அங்கு ஆறு மணி நேரத்துக்கு முன்னாள் விமான நிலையத்தில் எடுத்த பரிசோதனைக்காக 3400 ரூபாய் கட்ட வேண்டியிருந்தது பெரிய தொகை தான் என்ன இவ்வளவு பெரிய தொகை என்றால் இரவு 12 மணிக்குப் பிறகு இவ்வளவு அதுக்கு முன்னான் என்றால் 1200 ரூபாய்தான் என்றார்கள் வேறுவழியில்லாமல் அங்கு ஒரு கொரானாபரிசோதனை செய்ய வேண்டியிருந்தது விமானம் ஏறுவதற்கு முன்னால் தான் அந்த கொரானா பரிசோதனை முடிவு வருமோ அந்த முடிவு சாதகமாக இல்லாவிட்டால் என்னவாகும் விமானத்தில் ஏற முடியாதா .பதட்டமாக தான் இருந்தது அவளுக்கு இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பதட்டம் இருக்கும் விமானத்தில் ஏறி விட்டால் போதும் அந்த பதட்டம் குறைந்து விடும் சார்ஜா விமான நிலையத்தில் பல கொரானா பரிசோதனைக் கவுண்டர்கள். உடம்பை முழுக்க மறைத்தபடியான உடையில் வித்யாசமான உடையில் பலர் சோதனையில் இருந்தார்கள். வாயில் உமிழ்நீர் சோதனை எடுத்துக்கொண்டு போகச் சொன்னார்கள். இதற்குப் பணம் கேட்கவில்லையே. விசா கட்டணத்திலேயே வந்திருக்கும். அல்லது இன்சூரன்ஸ் …. என்னென்னவோ எழவு . அதில் சேர்ந்திருக்கும் பசி வேறு இம்சித்தது . கோவை இண்டர்னேசனல் விமானம்.. பயணத்தில் சாப்பாடு இல்லையா என்று சேலத்துக்காரர் ஒருவர் அலுத்துக்கொண்டார். அவர் பையில் வைத்திருந்த பன், பிஸ்கட் அவருக்கு ஆறுதல் தந்தது. அவர் வாங்கிய தேனீருக்கு நூற்று அறுபது ரூபாய் வாங்கிகொண்டார்கள் .மல்லி வேண்டாம் என்றாள். விமான நிலையத்தில் தேனீர் அறுபது ரூபாய் . விமானத்துள் நூற்று அறுபது ரூபாய். துபாய் காசில் குறையுமோ. இங்கு தேனீர் சாப்பிட முடியுமா . பணம் மாற்ற வேண்டுமே. இந்திய ரூபாய்க்கு மதிப்பு இருக்காதே. தீபா விமான நிலையத்திற்கு வந்திருந்தாள் என்பதால் அவளுடைய பதட்டம் எல்லாம் முடிந்துவிட்டது தீபாவை சிறுவயதில் வளர்த்தவர் என்ற வகையில் மல்லியின் மீது தீபாவுக்குப் பாசமும் மரியாதையும் உண்டு தீபாவின் கணவர் அலுவலகத்துக்கு போய்விட்டார் .தீபா வண்டி எடுத்துக் கொண்டு வந்து விட்டாள் ” ஊருக்கு போன் பண்ணி சொல்லணும் சிம்மு வாங்கணும். ” ” அத அப்பறம் பாத்துக்கலாம் பெரியம்மா” “ கொஞ்சம் பணத்தை மாத்தி வச்சுக்கோன்னு சொன்னார்களே” ”அதையும் அப்புறம் பாத்துக்கலாம். நானே தர்ரன் “ விடிகாலையில் கிளம்பி நான்கு மணி நேரம் பயணம் .வந்து இறங்கிய க் களைப்பு அன்றைக்கு முழுவதும் உடம்பு வலி என்றுத் தூங்கிக்கொண்டிருந்தாள் மல்லி. அடுத்த நாள் காலையில் நடைபயிற்சிக்கு போகலாம் என்று தீபா அழைத்து வந்துவிட்டாள். தீபாவின் கணவர் கட்டிட சம்பந்தமான வேலையில் இருப்பதால் நேரத்திலேயே கிளம்பிப் போய்விட்டார் .இரவுதான் வருவார் அதுவரைக்கும் சமைத்து சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டியது தான்.. அவள் வேலை செய்யும் அரேபியன் ரொம்பவும் கொடூரமாக தான் இருப்பான் என்றாள், அதுவும் கொரானாகாலத்தில் சம்பளத்தில் கொஞ்சம் பிடித்து வட்டார்கள் அது மறுபடியும் சரி செய்யப்படவில்லை உத்தியோக உயர்வு இருக்கும் என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில் நீடித்ததால் உத்தியோக உயர்வும் அவனுக்கு கிடைக்கவில்லை. எல்லா கஷ்டப்பட வேண்டியிருக்கு முஸ்லிம்கள் சொன்னா முஸ்லிம் தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யறாங்க. நாம சொன்னா செய்ய மாட்டேங்குறாங்க .பாகிஸ்தான்காரன் இந்தியா சூப்பர்வைசர் சொன்னா கேக்கவில்லை கஷ்டப்பட வேண்டி இருக்கு. வேலை வாங்க சிரமப்பட வேண்டி இருக்கு என்று அவள் கணவன் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார் சாப்பாட்டைப் பற்றி எந்த கவலையும் இல்லை .நம்மூர் அ.ரிசி விட பாகிஸ்தானிலிருந்து வரும் அரிசி விலை குறைவாகவே இருந்தது. பாதி விலையில் இருந்தது நல்ல அரிசியாகவும் இருந்தது பிரியாணி அரிசி கூட விலை குறைவாக இருக்கிறது என்றார்கள் .தீபாவுடன் மளிகை கடைக்கு போன சமயங்களில் தக்காளியும் கத்தரிக்காய் போன்றவையும் பெரிய அளவில் இருப்பதை பார்த்து பயந்து விட்டாள் மல்லி “ இதெல்லாம் பீட்டி ரகம், மரபணு மாற்றம் .” ” ருசி இருக்குமா ” ” இருக்கும் அதுக்கும் ஏதாவது பண்ணி இருப்பாங்க” ஒருநாள் வெந்தயகளி செய்யலாம் என்றாள் மல்லி செய்து வைத்திருந்தாள் எதிரில் இருந்த லட்சுமணன் குடும்பத்தினர் அதை வாங்கிப் போய் விரும்பி சாப்பிட்டார்கள் லட்சுமணனின் மனைவி இளம்பெண் சரியாகச் சமைக்கத் தெரியவில்லை என்ன சொன்னாலும் அவள் சமையலை கற்றுக் கொள்ள அக்கறை எடுத்துக் கொண்டுள்ளவில்லையாம். லட்சுமணனின் கஷ்டங்களில் அவள் சரியாக சமைக்க தெரியாமல் இருப்பதும் சேர்ந்துகொண்டது அவள் அடிக்கடி காவலாளியாக இருக்கும் ஒரு பஞ்சாபியியுடன் சொல்லி ஏதாவது வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவாள் அவனுக்கு அதிகபட்சமாக 1000 அரபு பணம் தான் சம்பளமாக இருந்தது அவன் பல சமயங்களில் ஒரு அரபுப் பணத்துக்கு விற்ற ரொட்டியை வாங்கி தேனீர் வைத்து குடித்துவிட்டு சாப்பாட்டு வேலையை முடித்து விடுவான். அப்படி இல்லாவிட்டால் ஊருக்கு பணம் அனுப்ப முடியாது அவனுக்கு தங்க இடம் இருந்தது அது தான் அவனின் மிகப்பெரிய சௌகரியமாக இருந்தது 0 ” நான் மூன்று ரவுண்டு நடந்துட்டேன் போதும் தீபா” ” சின்ன ரவுண்ட்தா போனீங்க .நான் இன்னமும் ரெண்டு ரவுண்டு போகணும் பெரியம்மா ” ” சரி நீங்க உட்காருங்க “ குழந்தைகள் விளையாடும் இடத்தில் இருந்தவர்கள் கையில் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை மெல்ல குழந்தைகளுக்கு ஊட்டினார்கள் அவர்களுக்கு வேடிக்கை காட்டினார்கள் .நிழலில் ஒரு பெண் நின்று கொண்டு கை கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்ய அதைப் பார்த்துவிட்டு இரண்டு வயது குழந்தை அவளைப் பார்த்து சிரிக்க முயற்சித்தது .இன்னொரு குழந்தை தூரி இருக்கிற இடத்திற்கு தட்டுத்தடுமாறி சென்றது அவளுக்கு பின்னால் சென்ற முதிய பெண் அவளை தூக்கி உட்காரவைத்து ஊஞ்சலை ஆட்டி விட்டாள் குழந்தை பாதுகாப்பாக உணர்ந்தது போல் சிரித்துக்கொண்டே இருந்தது பூங்காவிற்கு வந்த ஓர் இந்தியப்பெண் தன் முக கவசத்தை எடுத்து முழங்கையில் சுற்றிக் கொண்டாள் யாராவது காவல்துறையினர் தென்படும்போது அதை எடுத்து முகத்தில் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். வெகு விரைசலாக நடக்க ஆரம்பித்தாள். .அதுவரைக்கும் சுதந்திரம் . முகமூடி போடாத சுதந்திரத்துடன் அதிகபட்சமாய் ஏழெட்டுப் பேர்கள் அந்த காலை நேரத்தில் நடைபயிற்சி இருந்தார்கள் அவர்களில் ஓரிருவர் மட்டுமே முக கவசத்தை அணிந்து இருந்தார்கள் மற்றவர்கள் அதை கைகளில் வைத்துக்கொண்டும், முழங்கையில் மாட்டி வைத்துக் கொண்டும் கழுத்தில் மாட்டிக் கொண்டு இருந்தார்கள் தீபாவுக்கு அவர்களெல்லாம் யார் என்று தெரியவில்லை கொஞ்சம் மாநிறமாக இருந்தார்களை இந்தியர்கள் என்று நினைத்துக்கொண்டாள் இதுபோன்ற பூங்காக்கள் அந்தப் பகுதியில் ஏழெட்டு இருந்தன அதற்குக் காரணம் அந்தப் பகுதியில் அமெரிக்க காரர்களும் ஐரோப்பியர்களும் அதிகமாக இருந்தார்கள் அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் நல்ல குடியிருப்புகளையும், பூங்காக்களையும் அந்தப் பகுதியில் கட்டி இருக்கிறது .அந்த பகுதியில் வாடகையும் அதிகம் . தீபாவின் கணவர் ஓர் ஆண்டு ஒப்பந்தத்தில் அங்கே ஒரு பிளாட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்திருந்தார்.. கொரான காலம் சம்பளத்தை குறைத்து விட்டார்கள் .பதவி உயர்வு என்பது இல்லை ஆகவே பெரிய செலவை அது கொண்டு வந்திருந்தது என்ன செய்வது என்று தெரியவில்லை .ஓராண்டு வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னால் ஓர் அறையும் ஒரு சமையலறையும் இருக்கிற இடத்திற்கு போய் வாடகை குறைத்துக்கொள்வது என்றுதான் அவரும் முடிவு எடுத்திருந்தால். இப்போ செலவு பண்ற மாதிரி 50,000 எல்லாம் பார்த்து வாடகைக்கு கொடுக்க முடியாது இது பாதியா கிடைக்கிற மாதிரி எங்காவது போகணும் .சார்ஜா போய்விடலாம் என்றுதான் தீபா சொல்லியிருந்தாள சார்ஜாவில் வாடகை குறைவு. துபாய் அலுவலகத்திற்கு.ஒரு மணி நேரம் பயணம் அந்த மன்னர் தாராளவாதி என்றார்கள். நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சிக்கு 90 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தார்.. அவர் வீடு புத்தகங்களாய் நிரம்பியிருக்குமாம் பலர் துபாய் அலுவலங்களுக்கு சார்ஜாவில் இருந்து வந்து போய்க்கொண்டிருந்தார்கள் . அதனால் இரவு நேரங்களிலும் மாலை நேரத்திலும் பெரிய அளவில் வாகனம் நெருக்கடிகள் ஏற்படும் .ஆனால் பாதி வாடகைக்கு அங்கு சுலபமாகக் கிடைத்துவிடும் .அப்படி இல்லை என்றால் எதையும் சேமிக்க முடியாது என்பது தீர்மானம் .தீபாவின் அதற்கு உடன்பாட்டு ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். 0 இந்தப் பயணம் எல்லாம் அவளுக்கு தேவையா என்று மல்லி பல சமயங்களில் கேட்டுக்கொண்டிருந்தாள் கோவை விமான நிலையத்தில் கழிப்பறை எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டு இருந்தபோது கழிப்பறையை சுத்தம் செய்யும் பெண் அவளுக்கு கழிப்பறையை காட்டினாள் அப்போதுதான் மல்லி அவளிடம் பேச்சுக் கொடுத்தாள். நீ விமானத்தில் பறந்து இருக்கிறாயா… இல்லை மெட்ராஸ் வரைக்குமாவது ஒரு தரம் போகணும் .எல்லாரையும் வழி அனுப்புற வேலையில தான் இருக்கேன் ஆமாம் என்னையும் மத்தவங்க வழி அனுப்புற நாள் வரும் என்றாள் விமானம் பறந்துகொண்டிருந்த போது அவளுக்கு உடம்பு 1சில்லிட்டது. குளிர் அதிகமாகத்தான் இருந்தது அவள் போட்டிருந்த ஸ்வெட்டர் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. பசி வந்துவிட்டது போல இருந்தது. மதியம் பிரியாணி செய்து சாப்பிட்டாள் ஆறு மணிக்கு இரண்டு தோசை வேறு சாப்பிட்டாள் .பிறகு கையில் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதம் பொட்டலத்தை விமானநிலையத்தில் தீர்த்து விட்டாள் இப்போது என்ன பசி வேண்டிக்கிடக்கிறது ஆனால் குளிரும் பசியும் சேர்ந்து அவளின் உடம்பை இம்சித்தது .சர்வதேச விமானம் அல்லவா அதனால் சாப்பாடு கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று வெங்கடாசலம் சொல்லியிருந்தான் .ஆனால் அங்குமிங்கும் வந்துபோன விமானப்பணிப் பெண்கள் எதை எதையோ கொண்டுபோனார்கள் சிலருக்கு மட்டும் சில பொட்டலங்கள் கொடுத்தார்கள் அவள் உட்கார்ந்த இருக்கையின் யாருக்கும் எந்த பொட்டலம் தரப்படவில்லை.அது முன்னரே பதிவு செய்யப்பட்ட்தா. பணம் முன்பே தரப்பட்டதா.. இந்த பசியை எப்படி தாங்குவது தேனீர் சாப்பிட வேண்டும் பக்கத்திலிருந்த சேலத்துக்ககாரரிடம் தேனீர் சாப்பிடலாமா என்று கேட்டாள் அவன் இங்கே 150 ரூபா இறங்கி சாப்புட வேண்டியது தான் என்றான் .நம்ம ஊர் ஏர்போர்ட்டில் 1 60 வாங்கினாங்க இங்கே 150 ரூபாய். கீழே போனால் குறையுமா அந்த சார்ஜா நாட்டு காசுக்கு குறைவானதாக இருக்குமா . தெரியல.. ஆனா என்ன பண்றது செலவு பண்ணிதான் ஆகணும் பணிப்பெண்கள் தின்பண்ட வண்டியை தள்ளிக்கொண்டு இரண்டாவது முறை அவள் பக்கம் வந்த போது அவள் தேனீர என்று கேட்க இந்திய பணமா ,சார்ஜா பணமா என்று அந்த பணிப்பெண் கேட்டாள் .அவளின் நிறம் ஆச்சரியமாக இருந்தது வெள்ளையும் மஞ்சளும் கலந்து செய்த மாதிரி ஒரு நிறம் .சின்னதாக மஞ்சள் சட்டை போட்டு இருந்தாள். ஐந்அவளின் மார்பு மீது இருந்த இரண்டு சட்டை பாக்கெட்டுகள் மல்லிக்கு வினோதமாக தெரிந்தன .மார்பின்மீது இருக்கிற சட்டை பாக்கெட்டு எதற்கு பயன்படும் என்னமோ. நமட்டுத்தனமாக மல்லி கூட சிரித்துக்கொண்டாள் 150 ரூபாய் கொடுத்து தேனீர் சாப்பிட்ட பின்னர் தான் உடம்பு கொஞ்சம் ஒரு நிலைக்கு வந்தது தெரிந்தது தடுமாறிக் கொண்டிருந்த உடம்பு இப்போது உள்ளே கொஞ்சம் சூடு உள்ளே போய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது போல இருந்தது. அது ஞாபகம் வந்து போனது அவ்வப்போது வந்துடு போகிற கோழித்தூக்கம் போல. 0 குட்டிபூங்காவில் இப்போது காணப்பட்ட பனி கொஞ்சம் குளிரைக் கொண்டு வந்து விட்டது ஐந்து முறை அந்த பூங்காவின் ஓட்டப் பாதையில் நடந்து விட்டு தீபா சற்றே இளைப்பாற மல்லி அமர்ந்திருந்த மர பெஞ்சில் அமர்ந்து கொண்டாள் ”கொஞ்ச நேரம் இருங்க” ஐந்து நிமிடம் கழித்து வந்த தீபாவின் கைகளில் முருங்கைக்கீரை இருந்தது .அந்தப் பகுதியில் இருக்கும் மளிகைக்கடைகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் இட்லி மாவு வாங்கி வருவதை மல்லி அறிந்திருந்தாள். ”இங்க இருக்குற மத்த எல்லாரும் இது சாப்பிடுவாங்க நம்ம ஊரு இட்லி தோசையை யும் விரும்பி சாப்பிடுவாங்க. பொங்கல் பண்ணி மத்தியில் குழம்பு ஊத்தி நல்ல டேஸ்ட் பண்ணுவாங்க இட்லிண்ணா இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த ஐரோப்பிய கார்ர்கள் ரொட்டியை விட நம்மை இட்லிக்கு அடிமைகள்:” ”சரி இந்த முருங்கைக்கீரையை கொண்டு போறியே யாரும் கேக்கலையா” ”அப்பப்ப தேவையுள்ள போது வந்து எடுத்துக்குவன். இங்க தனியா பூங்கா வாட்ச்மேன் யாருமில்லை அப்பப்போ தண்ணி ஊத்துறது. , கிளீன் பண்ணறதுக்கு ஒரு அரை மணி நேரம் யாராவது ஒதுக்கி இருந்து பார்த்துட்டு போயிடுவாங்க. வேற யாரும் இருக்க மாட்டாங்க வேற யாரும் பொறிச்சிட்டு போக மாட்டாங்க.. யார் கேக்க போறேங்க”. ”இங்கதான் எவ்வளவு மருதாணி மரங்கள் இருக்கு ஆமாம் நம்ம ஊர்ல மருதாணி செடியில் தான் சொல்லுவோம் ஆனா இங்கே பார்த்தா மருதாணி மரமா எல்லா இடத்தில மருதாணி மட்டுமா ஆடாதோடை , மல்லிகை எல்லாமே நிற்கிறது” ”ஆமா அதான் ரொம்ப அதிகமா இருக்கும் அப்படித்தான் இந்த கீரையும் நிக்குது அதிலிருந்து பறிசிச்சிட்டு போறோம். எங்க இருக்கிற ஐரோப்பா காரன் அமெரிக்க காரணங்களா இட்லி மாதிரி இந்த முருங்கை பிடிக்குமா .தெரியல .யாரும் கொண்டு போனதாத் தெரியல . இதிலெ பொறுக்கணும். சுத்தம் . பண்ணனும் . குடும்பம் வேணும் இதுக்கெல்லாம் அவனுக்கு பொறுமை இருக்குமா தெரியல எல்லாரும் எல்லாமும் கொண்டு போனது இல்லை .அப்படித்தானே எனக்கு தெரியும் . இதிலிருக்கிற சத்து, ஜீவன் இதெல்லாம் இங்கிருக்கிற வெளிநாட்டுக்காரனுக்குத் தெரியுமா” அவனுக்கு தெரியாம எங்க இருக்கும். உலகமே அவன் கையில்தன் இருக்கு. இதுக்குக் கூட ஏதாவது பேட்டன் ரைட் வாங்கியிருப்பான் . அமெரிக்காகாரன் என்றால் சும்மாவா . வெளிநாட்டுக்காரன் என்றால் சும்மாவா “ தீபாவின் கையிலிருந்த முருங்கை மல்லியைபார்த்துச் சிரித்தது .
சேலம் பொன் குமார் அவர்களின் சமீபத்திய மூன்று நூல்கள் / சுப்ரபாரதிமணியன் வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன் கடிதங்கள் : இந்த தொகுப்பில் முக்கியத்துவம் பெறுவது அதன் வடிவமைப்பாகும். கோடு போட்ட ஒரு நோட்டில் எழுதுவது போல கோடு போட்டபடி அனைத்து பக்கங்களும் திறந்து இருக்கின்றன. அந்த கோடுகளின் மேல் அச்சாக்கம் செய்யப்பட்டு விசேஷமாக இருக்கிறது. முதல் பக்கத்தில் தென்படும் பேனாவும் கண்ணாடியும் கடிதங்களின் குறியீடுகளாகக் கூட அமைந்திருக்கின்றன. இந்த கடிதங்களில் பெரியவர்கள் வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன் போன்றவர்கள் பொன் குமார் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன .அவற்றில் இலக்கிய செய்திகள், இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய நிகழ்வு பற்றிய பகிர்வுகள் இருக்கின்றன. தமிழகத்தின் தமிழ் சூழல் பற்றிய பல்வேறு காலகட்டத்தின் இலக்கியப் பிரதிபலிப்புகளை அவை கொண்டிருக்கின்றன. வெவ்வேறு காலகட்டங்களிலும் இலக்கிய நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கின்றன. இலக்கிய ரசனை எப்படி மாறி இருக்கிறது என்பது அடையாளம் இந்த நூலில் உள்ள கடிதங்கள் ஆகும். அதேபோல வல்லிக்கண்ணன் அவர்கள் பொன் குமார் அவர்களின் தொகுப்பு பற்றி எழுதிய சில கடிதங்கள் மற்றும் பொன்குமார் காலத்தின் குரலாக இருக்கிற தி க. சி ஒரு பார்வை என்ற கட்டுரை போன்றவையும் இடம் பெற்று இந்த நூலை வெறும் கடிதங்கள் என்ற அமைப்பில் இருந்து மாற்றி ஒரு கொலோஜ் வடிவத்தில் கொடுத்திருக்கிறது. கடிதங்கள் எழுதப்படுகிற காலங்கள் போய்விட்டன. ஆனால் அப்படி எழுதப்பட்ட கடிதங்களை பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியம். அப்படி பாதுகாக்கிற எண்ணத்தில் இந்த தொகுப்பு அமைந்திருக்கிறது பொன்குமாரின் சமீபத்திய கவிதை தொகுப்பு ” தனிமையில் அலையும் ஒற்றைச் சிறகு “ பொன்குமார் நூல்கள் அறிமுகத்தில் தேர்ந்தவர். திறனாய்வாளர், நூல்களின் பாதுகாப்பாளர் ஒரு எழுத்.தாளரின் படைப்புகள் அவரிடம் இருக்கிறதோ இல்லையோ பொன் குமாரிடம் இருக்கும். அதுவும் அவருடைய நூலகத்தில் அவற்றையெல்லாம் எழுத்தாளர் வாரியாக பிரித்து வைத்திருப்பா.ர் அவற்றை தினந்தோறும் முகநூலில் பதிவு செய்வது ஆச்சரியமாக இருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர் பற்றிய நூல்களை தனியாக பட்டியலிட்டு வைத்திருப்பதும் அவற்றை கணினியில் சேமிப்பாக வைத்திருப்பதும் தேவைப்படும்போது அவற்றை பிரசுரிப்பதும் ஆச்சரியம் ஊட்டுகிறது. ஒரே மையத்தைக் கொண்டு கவிஞர்கள் பல வந்திருக்கின்றன அதேபோல பொன் குமார் அவர்கள் தமிழ் கவிதை வடிவத்தில் பல்வேறு விதமான வடிவங்களையும் முயற்சித்தவர். எழுதிக் கொண்டிருப்பவர். அந்த வகையில் நீள்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ உட்பட தனிப்பட்ட மையங்கள் சார்ந்த கவிதை நூல்களையும் எழுதி இருக்கிறார். அப்படித்தான் ஒரே மையம் கொண்ட கவிதை தொகுப்புகள் ஆக குழந்தைகள் பற்றிய அவர் ” இனிது” என்ற தொகுப்பை முன் வெளியிட்டு இருக்கிறார் இப்போது இந்த தொகுப்பில் தனிமை சார்ந்த அனுபவம் உங்களை பதிவு செய்திருக்கிறார். தனிமை என்பது ஒரு மனிதன் தனியாக இருப்பது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பது தான். கூட்டத்தோடு இருக்கிற போதும் அவன் தனிமையாக இருப்பதற்கு காரணம் அவனுடைய உளவியல் தன்மை தான். தனிமை சார்ந்து பல கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். வானத்தோடு இருந்தாலும் நட்சத்திரங்களோடு இருந்தாலும் மனிதர்களோடு இருந்தாலும் தனிமையிலேயே இருக்கிற மனம் பற்றி இந்த நூலில் பல கவிதைகளை சொல்லியிருக்கிறார். அதில் இயற்கை சார்ந்த விஷயங்கள், தனிமையில் எப்படி படுகின்றன என்பதையும் காட்டுகிறார். குடும்ப உறவுகளில் தனிமைப்படுத்தப்படும் மனிதர்களின் மனம் பற்றிய பல அங்க வாய்ப்புகள் இதில் உள்ளன. தனிமையில் இருக்கும் போது நினைவுகளை அசைவு போட்டு கொண்டாடுவதற்கான பல விஷயங்களை இந்த தொகுப்பு கொண்டிருக்கிறது. இன்னொரு தொகுப்பு ” இறகு என்பது இன்னொரு பறவை “ என்ற தலைப்பில் ஆனது. இறகில் இருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் பக்க தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது என்ற பிரமளின் கவிதை எல்லோருக்கும் நன்கு தெரிந்தது. பிரமிளின் கவிதைகளை பிரதி எடுத்தது போல தமிழில் உள்ள கவிஞர்களின் கவிதைகளை அவர் பலவற்றை தொகுத்திருக்கிறார் இதில் முன்னுரையில். அவற்றில் கைலாஷ் சிவன், பி வெங்கடாசலம், வைகறை போன்றவர்களின் கவிதைகளை குறிப்பிட்டு சிலாகிக்கிறார், அந்த கவிதை பற்றி சமீப காலத்திய சக எழுத்தாளர்கள் முகநூல் குறிப்புகளில் என்ன விமர்சனமாய் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதை பற்றியும் சிறு குறிப்புகளும் உள்ளது. இறகு என்பது பறவையினுடைய உடம்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் மனிதன் தான் அடையப் போகும் விடுதலைக்கு அந்த இறவு கூட காரணமாக அமையலாம். அந்த வகையில் பறக்கிற இறகோ, மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிற இறகோ அது வந்து சேர்வதற்கான காரணங்களோ என்பதைப் பற்றியெல்லாம் அலசக்கூடிய தொகுப்பு இந்த கவிதைகள் . பறவைக்கு பாரமாக இருப்பதால் இறக்கி வைக்கப்பட்டது இறகு என்கிறது ஒரு கவிதை. அதே போல மனம் பாரமாக இருப்பதால் இறக்கி வைப்பதற்கு இலக்கியம் ஒரு சுமை தாங்கியாக இருக்கிறது. அப்படி சுமை தாங்கியாக இந்த நூல் அமைந்திருக்கிறது சமீபத்தில் பொன் குமார் அவர்களின் இந்த மூன்று நூல்களை திண்டுக்கல் வெற்றிமதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இலக்கிய செயல்பாட்டில் இருக்கிற பொன் குமாருடைய முத்திரைகளாக இந்த நூல்கள் அமைந்திருக்கின்றன சுப்ரபாரதிமணியன்
ஹம்பி- / சுப்ரபாரதிமணியன் 0 இரண்டு பெரிய பாறைகள் பக்கத்தில் பக்கத்தில் உள்ளன. அவை இரண்டு சகோதரிகள். ஹம்பிக்கு வந்து அவர்கள் பாறைகளையும் அதன் சிதைவுகளையும் பார்த்து இருக்கிறார்கள். களைத்துப் போய் ஒரு இடத்தில் ஓய்வுக்காக உட்கார்ந்து இருக்கிறார்கள் இளைய சகோதரி மூத்த சகோதரியிடம் இந்த பாறைகளின் சிதைவை பார்க்கவா நாம் எவ்வளவு தூரம் வந்தோம், வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதை அவர் சொன்ன பின்னால் அவமதிப்பாக ஆகி அவர்கள் கற்களாகி விட்டார்கள். இந்த சிதைவுகளை நிராகரிக்கிறவர்களுக்கு பதிலாக அக்கா தங்கை குண்டு என்ற அந்த பாறைகள் அமைந்திருக்கின்றன. ஹம்பியின் கோட்டையும் தாமரை மகாலும் யானை தாவளமும் கோட்டைகளாகவே நிற்கின்றன. வழக்கமான யாத்திரிகர்கள் இந்த பகுதியை சுற்றி பார்க்கிற போது இந்த பாறையில் குறித்து அந்த இரு சகோதரியின் வார்த்தைகள் தான் ஞாபகம் வரும். ஆனால் அங்கு இருக்கிற பல்வகையான கோயில்கள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஹம்பி - பாறைகள்: / சுப்ரபாரதிமணியன் கணித ரூபங்களைக் காண்கிறேன் எந்த உருவமும் தென்படவில்லை. ஆனால் எந்த உருவத்தையும் பொருத்திக் கொள்ளலாம் வெயில் கொதிக்கிற போது அது கோபம் தரும் அம்மனாக இருக்கிறது. குளிர் வாட்டும் போது ஆசீர்வாதம் செய்யும் அம்மாவாக இருக்கிறது. ஆச்சரியங்கள் கடந்து போகிறபடி அதன் உருவங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. நிறமழையில் அவை கொள்ளும் ரூபங்கள் விசித்திரமானவை சுற்றிலும் சலசலத்து ஓடும் துங்கபத்திரா நதியின் நீரோட்டமும் சப்தமும் பாறைகளுக்குள்ளும் அடக்கம் அப்பாவி மக்களின் பல சொற்களைத் துப்பும் அவை பல சமயம். மக்களின் அழுகைகளை, துக்கங்களை உள்வரித்துக் கொள்ளும். பறக்க எத்தனைக்கும் பறவை போல் கிடக்கும். வானத்தை நோக்கி.படுத்துக்கிடக்கும். எங்கள் பார்வை இலக்கு வானம் என்பது போல் நிற்கும். இந்த பாறைகளில் இருந்து கல் தேரை உருவாக்கலாம்.. நட்சத்திரங்களை நோக்கி நகரும் ராக்கெட்டுகளை உருவாக்கலாம். நல்ல தூக்கம் கொண்டு வரும் படுக்கைகளையும் உருவாக்கலாம். அவற்றிலிருந்து எல்லா உருவாக்கத்திற்கு பின்னாலும் உருவம் எதுவும் இல்லாமல் என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் இருக்கிறது பாறைகள் விதவிதமான பார்வையில். அப்பார்வைகள் நமக்கு இல்லாத சுதந்திரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் நிறம் மாறிக்காட்டலாம் ஆனால் பொதுவான நிறமும் உண்டு அவற்றுக்கு. தியான நிலையில் இருக்கும் பாறைகளிலிருந்து கற்றுக் கொள்ள மோனநிலையும், தியான நிலையும் அவற்றின் ரூபங்களும் கூட உண்டு ஹம்பி பெல்லாரி மாவட்டம் கொசப்பேட்டை தாலுகாவில் அமைந்திருப்பதாகும். கமலாப்பூரில் இருந்து மெல்ல நடந்தால் ஹம்பி சார்ந்த பல விஷயங்களை பார்த்துக் கொண்டும் ரசித்துக் கொண்டும் செல்லலாம். இல்லாவிட்டால் ரிக்க்ஷாக்களும் மிதிவண்டிகளும் மின்சார வாகனங்களும் என்று கைக் கொண்டால் பயணம் சுலபமாகும். அலாவுதீன் கில்ஜியின் வருகை யாதகிரி ராஜ்யத்தில் பெரும் மாற்றங்களை உண்டு பண்ணியது. விஜயநகர பேரரசின் மன்னர்கள் சுயநல மிக்கவர்கள் என்றாலும் கலாச்சாரம், அறிவு வாதம், இலக்கியம் ஆகியவற்றை வளர்ப்பவராக இருந்தார்கள். கிருஷ்ணதேவராயர் திம்ம ராசாக்கு உதவியாளராக இருந்தார் விரனரசிமா அவரின் எட்டு வயது மகனை ஆட்சியில் ஏற்றுவதற்காக கிருஷ்ண தேவராயரின் கண்களையே எடுத்து விடும்படி சொன்னார். ஒரு பரிகாரமாய் அவரின் ஆலோசனை வேண்டாம் என்பதால்.திம்மராசா கிருஷ்ணதேவராயரை மறைத்து விட்டு ஒரு ஆட்டுக்குட்டியின் கண்களை எடுத்து கிருஷ்ணதேவராயன் கண்கள் என்று காட்டினார். கிருஷ்ணதேவராயரின் கண்களை எடுத்து விடும்படி தான் அவர் சொன்னார். அதற்காக அப்படி செய்தார். கிருஷ்ணதேவராயர் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதத்தில் நல்ல புலமை கொண்டவராக இருந்தார் அமுத்தமாலியா, ஜம்புவதி கல்யாணம் போன்றவை அவர் எழுதிய இதிகாசும் சார்ந்த நூல்கள். அவருக்கு கன்னட ராஜ்ய ராமண்ணா என்ற பட்டமும் உண்டு. அவர் ஞாபகமாக ஹம்பியில் இருக்கும் விருப்பாக்சார் கோவிலில் ஒரு உரையாடும் களத்தை கட்டினார். அவரின் அம்மா நாகலதேவியின் நினைவாக அவர் எழுப்பிய ஊர்தான் கொசப்பேட்டை. கிருஷ்ண தேவராயா காலத்தில் பெண்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது, மல்யுத்தம், இசை, நடனம் போன்றவற்றிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்க.ள் பலருக்கு காவலாளிகளாக உதவியாளர்களாகவும் பெண்கள் விளங்கினார்கள். ஆனாலும் குழந்தைகள் திருமணமும் வரதட்சணை என்பதும் கொடுமையானதாகவே அப்போதும் இருந்திருக்கிறது. பல வேலைகளுக்காக அவர் முஸ்லிம்களை கூட அதிகாரிகளாக நியமித்திருக்கிறா.ர் அம்பியின் முன்பகுதியில் தென்படும் கோவிலில் இருக்கிற முன்பாகங்களும் சிற்பங்களும் விருப்பாச்ச கடவுளின் உறவுகளை ஒத்திருக்கின்றன. விருப்பாக்சாவை பாம்பாத்தி என்றும் சொல்கிறார்கள். இதுதான் ஹம்பியில் உள்ள பழமையான கோயில். பம்பா தேவி எனும் பெண் பற்றிய துன்பக் கதைகளும் காணக் கிடைக்கின்றன. கொண்டேன்டா ராமா கோயிலுக்கு பின்னால் விட்டலா கோயொல் இருக்கிறது. சற்று உயரமான இடத்தில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் அங்கு மாருதி உருவம் நிர்மாணிக்கப்பட்டு இருக்கிற.து அந்த இரண்டு பக்கங்களிலும் தென்படும் கல்பந்தல்கள் பொன்னும் வைரமும் மின்னும் கற்களும் விற்கிற சந்தைகளாக இருப்பதை சொல்கின்றன. அந்த பகுதியை சூலை பஜார் என்று அழைக்கிறார்கள் அழைத்திருக்கிறார்க.ள் தேவதாசிகளின், விபச்சார பெண்களின் சந்தை என்ற பொருளில், ஆனால் அதற்கான காரணம் சரியாக தெரியவில்லை பெண்களை வியாபாரப் பொருளாக அங்கே பயன்படுத்தியிருப்பார்கள் என்ற யூகம் இருக்கிறது. ஒடியா கொனார்க் கோயிலின் பாதிப்பில் உருவாக்கப்பட்ட கல் தேர் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. கிருஷ்ணதேவராயரின் இளைய சகோதரர் கட்டிய அட்சுதிரயா கோயில் குறிப்பிடத்தக்க கலை அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆயுதங்களை வைத்துக்கொண்டு பத்து கைகளுடன் இருக்கும் பெண் தெய்வ சிலை ஒன்று முக்கியமானதாக இருக்கிறது. கிருஷ்ணர் கோயிலில் இருந்து கமலாபுரம் செல்லும் வழியில 12 அடி கொண்ட ஒரு பெரிய லிங்கம் இருக்கிறது .அதுதான் ஹம்பி பகுதியில் இருக்கிற மிக உயரமான லிங்கம் ஆகும். சூரிய ஒளி அதன் மேல் பட்டு அது தருகிற அழகு சொல்லி மாளாது. நூற்றுக்கணக்கான லிங்கங்கள் பாறைகளில் அமைந்திருக்கின்றன. கிருஷ்ணதேவராய காலத்தில் ஒரு பிராமணரால் உருவாக்கப்பட்ட உக்கிர நரசிம்மர் 22 அடி உயரத்தில் இருக்கிறது. அது வெட்ட வெளியில் இருக்கிறது ஆனால் அதை சுற்றியுள்ள எந்த கோயிலும் இல்லை இந்த கோயில்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். அங்கங்கே காணப்படும் கல் சுவர்களின் பிரமாண்டமு திடமும் ஆச்சர்யப்படுத்துகிறது. வாசனைப்பொருட்களும் பஞ்சும் சார்ந்த இடங்களில் வியாபார முத்திரைகள் உள்ளன.ஹம்பி பஜாரினைச் சார்ந்த புனித ஸ்தலங்கள், கமலாபுரம் சார்ந்த பழைய அரசு ஸ்தலங்கள் குறிப்பிடவேண்டியவை. வெற்றி நகரமாக விளங்கிய விஜயநகரம் அதன் நினைவுச் சின்னங்களை நிறையவே கொண்டிருக்கிறது. எல்லா காலங்களிலும் நகர விரிவாக்கத்திற்காக செய்யப்படும் மக்கள் வெளியேற்றம் இங்கும் நடந்ததற்கான அத்தாட்சிகள் நிறைய உண்டு. இரண்டு பெரிய பாறைகள் பக்கத்தில் பக்கத்தில் உள்ளன. அவை இரண்டு சகோதரிகள். ஹம்பிக்கு வந்து அவர்கள் பாறைகளையும் அதன் சிதைவுகளையும் பார்த்து இருக்கிறார்கள். களைத்துப் போய் ஒரு இடத்தில் ஓய்வுக்காக உட்கார்ந்து இருக்கிறார்கள் இளைய சகோதரி மூத்த சகோதரியிடம் இந்த பாறைகளின் சிதைவை பார்க்கவா நாம் எவ்வளவு தூரம் வந்தோம், வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதை அவர் சொன்ன பின்னால் அவமதிப்பாக ஆகி அவர்கள் கற்களாகி விட்டார்கள். இந்த சிதைவுகளை நிராகரிக்கிறவர்களுக்கு பதிலாக அக்கா தங்கை குண்டு என்ற அந்த பாறைகள் அமைந்திருக்கின்றன. ஹம்பியின் கோட்டையும் தாமரை மகாலும் யானை தாவளமும் கோட்டைகளாகவே நிற்கின்றன. வழக்கமான யாத்திரிகர்கள் இந்த பகுதியை சுற்றி பார்க்கிற போது இந்த பாறையில் குறித்து அந்த இரு சகோதரியின் வார்த்தைகள் தான் ஞாபகம் வரும். ஆனால் அங்கு இருக்கிற பல்வகையான கோயில்கள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். .பல்வேறு மடங்கள் இருக்கின்றன. தேவாங்க செட்டியார்கள் என்ற சமூகம் தமிழ்நாட்டில் நெசவு தொழில் அதிகம் செய்பவர்களாக இருக்கிறார்கள். உலகம் முழுக்க இருக்கிறார்கள். அவர்களின் ஜாதி சார்ந்த உலக குரு, ஜாதி குரு காயத்ரி பீடத்தில் இருக்கிறார், அவர் தமிழ்நாட்டிற்கு வரும்போது பெரும் அரசியல்வாதிகளுக்கு கூடுகிற கூட்டமும் வரவேற்கும் கிடைக்கும். அவரை எதேச்சையாக காயத்ரி மடத்தில் பார்த்தபோது திருப்பூர் அவருக்கு நெருக்கமாக இருப்பதை தெரிந்து கொண்டேன். அப்போது கர்நாடகாவில் பிரதமர் மோடி வருகையையொட்டி தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சிகள் இருந்தன. அதை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருடனான உரையாடலில் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சிரமம் தந்தை எண்ணி அதை அணைத்து விடச் சொன்னேன். அப்படியே செய்துவிட்டு தன்னுடைய உரையாடலை தொடர்ந்தார் அந்த உரையாடலில் திருப்பூர் பகுதி நெசவாளர்கள் வாழ்க்கை பற்றியும் திருப்பூர் பற்றி பனியன் தொழில் பற்றியும் பல விசாரணைகள் இருந்தன. ஒரு ஆன்மீகவாதி என்பதை மீறி சாதாரண சம்பாசனையில் அக்கறை கொண்டவராக அவர் உரையாடியது என் மனைவிக்கு பெருத்த ஆச்சரியத்தை கொண்டு வந்தது. அவரின் மதம் சார்ந்த ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை அவர் சுட்டிக் காட்டிய போது அவர் ஒரு பெரிய சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாகவும் இருப்பது தெரிந்தது, அந்த அளவு பல கோயில்கள், பல நிர்வாக இடங்கள் அந்த மடத்தின் பெயரில் இருப்பது தெரிய வந்தது. ஹம்பி வருகிற தேவாங்க செட்டியார்களும் தமிழ்நாட்டுக்காரர்களும் காயத்திரி மடத்திற்கு வந்து செல்வது ஒரு வேலையாகவேக் கொள்கிறார்கள். மகிழ்ச்சியுடன் அதை செய்கிறார்கள். ஹம்பியில் சாதாரணமாக ஒரு நல்ல தேநீரை தேடித்தான் பிடிக்க வேண்டி இருக்கிறது. பெரும்பான்மையான கடைகளில் முன்பே தயாரிக்கப்பட்டு பிளாஸ்க்குளில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கிற தேநீரைத் தான் தருகிறார்கள். உடனடியாக தேநீரை தயாரித்து தருவதற்கான முயற்சிகள் இல்லை. பக்கம் இருக்கும் வாழை தோட்டங்களில் இருந்து வந்து குவிந்திருக்கும் வாழைப் பழங்கள் சீப்புகள் தெருவெங்கும் விறபனைக்காகக் கிடக்கின்றன. அங்கு உள்ள ஓர் உயர்ந்த மலையில் அனுமார் பிறந்ததாக சொல்கிறார்கள். ஹம்பி தான் பழைய கிஸ்கிந்தா என்றும் சொல்கிறார்கள். ராமர் சீதையை சிறை மீட்பதற்காக வானரங்களை கொண்டு படை அமைத்து பயிற்சியை அமைத்த இடம் ஹம்பி பகுதி என்றும் கதைகள் உள்ளன. பாறை கோயில்கள், சந்தை மண்டபங்கள், வீதிகள் போன்றவை இரவு நேரத்தில் வெளிச்சத்தில் ஆச்சரியத்தை கொடுக்க கூடிய அளவில் இரவின் ஒளியில் மின்னுகின்றன. பகலில் பாறையில் தருகிற ஆச்சரியத்தை போலவே ஹம்பி நகரத்தின் வீதிகள் இரவுகளில் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இவ்வளவு பாறைகளும் அதன் விசித்திர கோலங்களும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவை எல்லாம் எப்படி ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கமோ, பூமியின் பிறழ்வோ இந்த கோலத்திற்கு கொண்டு வந்து இருக்குமா என்று யோசனை வருகிற.து ஆனால் அதன் விளைவாய் உருவான இந்த பாறைகள் தரும் மனச் சித்திரங்கள் அழியாதவையா அமைந்திருக்கும்
Thamarai : Nov 2022 அறுப்பு ; சுப்ரபாரதிமணியன் நீண்டு கிடந்த சுவரில் அப்பியிருந்த இருட்டு அவளை பயம் கொள்ளச்செய்தது. பல ஆண்டுகளின் எச்சிலும் சீழூம் கலந்து ஒரு வித வர்ணமாகியிருந்தது. செடிகொடி புதர்களின் அடர்த்தி அவற்றை இயல்பான நிறத்தை மாற்றி வாகனங்கள் அப்பிப்போன மண்ணின் நிறத்திற்குக் கொண்டு வந்திருந்தது. முருகேஸ்வரிக்கு அந்த இளம் மருத்துவரின் முகம் பிடித்திருந்த்து. எவ்வளவு அழகான முகம். வடக்கத்திக்காரனாக இருப்பானா.. மார்வாடியாக இருப்ப்பானா .. பெயரில் தமிழ்த்தன்மை இருந்தது அவளுக்குப் பிடித்திருந்தது.. பிளாஸ்டிக் சர்ஜரி என்ற வார்த்தை மருத்துவரின் பெயருடன் ஒட்டிக் கொண்டிருந்ததால் மருத்துவமனைக்குள் புகச் செய்தது.மருத்துவரின் பெயர் பொரித்த போர்டுதான் அவளை உள்ளே வரச் செய்தது. தட்டுப்பட்ட மூன்று தாதியருமே களையிழந்த முகத்துடன் இருப்பதாகத் தோன்றியது. இவ்வளவு வசீகரமானவனாக மருத்துவர் இருப்பாரா, இவ்வளவு வசீகரமில்லாதவர்களாக அவரின் கீழ் பணிபுரியும் தாதிகள் இருப்பார்களா என்பதை மருத்துவரைக்கண்ட பின் அவள் யோசித்தாள். பெஞ்சில் உட்கார்ந்திருப்பவளைக்கடந்து சென்ற மருத்துவர் பார்த்த பார்வை வசீகரமாக இருந்தது. சட்டென அவரின் அறைக்குள் சென்று விட வேண்டும் என நினைத்தாள் முருகேஸ்வரி. “ என்ன அய் டி கார்டு இருக்கா “ ‘ “இல்லை ..” “ அய் டி கார்டு இல்லாமெ எப்படி . ஆதார் கார்டு, வோட்டர் அய்.டி“ “ இல்லதா.. என்ன பண்ண முடியும். “ ஏதாவது அடையாள அட்டை பெற்று விட வேண்டும் என்று பலமுறை முயன்றிருக்கிறாள். முதலில் பள்ளி சார்ந்த சான்றிதழைக்கேட்டார்கள். பலமுறை தான் படித்த பள்ளிக்குச் சென்றிருக்கிறாள். தூத்துக்குடியில் அழுக்கடைந்த ஆரம்பப் பள்ளி அது. “ உங்க அப்பாவையோ அம்மாவையோ கூட்டிட்டு வந்தா ரிகார்டு கெடைக்கலின்னாலும் வேற தயார் பண்ணித் தரமுடியும் “ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து விலகி வந்து எட்டாண்டுகள் ஆகிவிட்டன. சந்திக்க முயற்சித்தபோதும் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. வித்யா வீட்டில் அவளைச் சேர்த்துக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. அடையாள அட்டை இருந்தால் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். ஏதாவது சலுகை என்று வருகிற போது நீட்ட பயன்படும். அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது அவளுக்கு. “ என்ன கம்ப்ளெய்ண்ட் “ கொட்டாவி விட்டபடி வந்த தாதி கேட்டாள். “ டாக்டர்கிட்ட சொல்லிக்கறனே “ “ எங்ககிட்ட சொல்லமாட்டீங்களா “ “ அவ்வளவு தெரிஞ்சவங்களா நீங்க “ குரலை இறுக்கமாக்கிக் கொண்டே கேட்டாள். நிஜமான ஆண் தன்மை குரலில் வந்து விட்டது பயமளித்தது அவளுக்கு. சாய்ந்திருந்த சுவரில் பதிக்கப்பட்ட மார்பிள்களின் வழுவழுப்பும் பிரகாசமும் வலதுகையை நீட்டி அதைத் தடவச் செய்தது. மின்விளக்குகளின் ஒளியில் சுவர்கள் பிரகாசித்தன. ‘’ எதெ நெனச்சு நீவிக்கறே ‘’ “ உங்க டாக்டரெ நெனச்சுதா. போதுமா ... அவருக்குக் கல்யாணமாயிருச்சா “ “ நீயே கேட்டுத் தெரிஞ்சுக்க “ எலுமிச்சைபழ அளவிலான அவளின் புடைத்திருந்த மார்பினைத் தொட்ட மருத்துவர் “ இதையா பெரிசாக்கணும்கறே ” என்றார் “ ஆமா.. “ “ ப்ப்பாளிப்பழம் போல் பண்ணீர்லாமா “ “ உம்.. நெறைய செலவாகுமா “ “ ஆகும். “ அவரின் கைகள் பரபரவென் உடம்பில் ஊறியபோது வெளியில் இருந்த வெயில் அவளின் உடம்பிற்குள் புகுந்து கொண்டு எரிச்சலூட்டியது. அதையே தாங்கிக்கொள்ள முடியாதவள் போல் விருக்கென்று உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்தாள். “ அவசரமா ” “ புடிக்கலே .போறன் “ “ புடிக்கற மாதிரியே செய்யறன் “ “ .போறன் “ ” “ புடிக்காமெ டெஸ்ட் பண்றன் ..இரு “ விறுவிறுவெனக் கிளம்பி விட்டாள். மருத்துவ மனைக்கு அருகில் வரும் போதே ஒருவன் ஒம்பது ஒம்பது என்றான். அவளும் எரிச்சலை மனதில் கூட்டிக்கொண்டு எட்டு எட்டு என்றாள். அவன் அதிர்ச்சியடைந்தவன் போல் ஒதுங்கினான். நடையின் வேகம் அதிகரித்து ஆள் இல்லாத இடம் நோக்கி ஓடச் செய்தது. நீண்ட சுவரின் ஓரத்தில் பத்து நிமிடநடைக்குப்பின் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. . பனியன் கம்பனியின் சுவராக இருக்குமோ என நினைத்தாள். ஆனால் இருட்டிக்கிடந்த முகப்பு கேட்டும் புதர்களாய் மண்டியிருந்த செடிகளும் ஒதுங்கியிருந்த போர்டை பார்க்கச் செய்தது. இருட்டு கவிய ஆரம்பித்திருந்த நேரத்தில் போர்டு மங்கலாக அரசு பள்ளி என்பதைச் சொன்னது. நேற்றைக்கு அவளின் மார்பக்ப்பகுதியின் ஆடைகளை விலக்கி விட்டு அந்த கல்லூரி மாணவன் விரல்களால் பிசைந்தான். “ என்ன கைக்கு அகப்படவே மாட்டீங்குது. இவ்வளவு சிறிசா இருக்கு “ ” நீ குடுக்கற காசுக்கு பலாப்பழ சைஸா வேணும் “ “ அப்பிடி இருந்தாத் தானே எடுபடும்” அவனின் கையை சரேலென் விலக்கிக் கொண்டவள் அவனின் வலது காலில் எட்டி உதைத்தாள். “ செரி .. போ” “ “ஏன் ஒதைக்கிறே. “ “ வேண்டான்னு உதைக்கிறேன்.. ” “ காசு வேணமா “ “ காசு வேணுந்தா. ஆனா உங்கிட்ட இருந்து வேணா .” எலுமிச்சைபழம்போல் இருக்கிறது மார்பு. பப்பாளிப்பழத்தைப் போலவோ பாலாப்பழத்தைiப் போலவோ மாற்றவேண்டும். என்னதான் செலவாகும், கட்டுப்படியாகுமா என்பதைத் தெரிந்து கொள்ள மருத்துவரிடம் செல்ல நினைத்தாள். , செல்லம்மாவிற்கு மார்பு பெரிதாகத்தான் இருந்தது. கன்னம் எடுப்பில்லாமல் குழி விழுந்தது போல் இருந்தது . பின்பக்கம் புட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்தாள். அதற்கென ஊசி போட்டுக்கொண்டாள்..புட்டம் பெரிதாக இருக்கும் கிரிஷிக்கு... அதன் காரணமாகவே கிரிஷிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதாய் செல்லம்மா நினத்தாள். அப்படித்தான் கிரிஷியும் சொன்னாள். செல்லம்மா புட்டம் பெருக்கவும் கன்னம் பளபளக்கவும் அவள் மாத்திரைகளும் ஊசியும் போட்டுக் கொண்டாள். முகத்திலும் ஏகமாய் வீக்கம் வந்து விட்டது. புட்டத்திலும் புண்கள் பெரிது பெரிதாய் வந்தன.. அந்த சமயங்களில் அறையை விட்டு வெளியே வராதவளாக இருந்தாள். சமையல்காரியைப் போல் சமையலறையில் முடங்கிக் கிடந்தாள் . கன்னத்திலும் மருக்கள் போல் புண்கள் வந்து தொல்லை செய்தன. வெளியே நடமாட முடியவில்லை. சமையலறையையும் ஒதுக்கி விட்டு சாமான் போடும் ஸ்டோர் ரூமில் பல நாட்கள் படுத்துக் கிடந்தாள். மருத்துவரிடம் போவதாகச் சொல்லிக்கொண்டு வெளியே போனவள் ஒரு பள்ளியின் பழையகிணற்றில்தான் விழுந்து செத்தாள். குறைவாகவே நீர் இருந்த அந்த கிணற்றின் கசடும் சேறும் அவள் உடம்பை இன்னும் புண்கள் பூத்தது போல் ஆக்கியது.. செல்லமாவை கிணற்றில் தேடியவள் முருகேஷ்வரி. கிணற்றில் ஏன் தேட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது என்று பல முறை கேட்டுக் பார்த்துக் கொண்டாள். இந்தப் பள்ளியிலும் இந்த நீண்ட சுவரைத்தாண்டி ஏதாவது கிணறு இருக்குமா. தண்ணீர் இருக்குமா. விழுந்தால் உயிர் போகுமளவு , சிரமங்கள் தராத அளவு ஓகே என்று சொல்ல வைக்குமா. இது என்ன விபரீத எண்ணம் என்ற நினைப்பு வந்தது அவளுக்கு. செல்லம்மாவின் உடம்பின் புண்கள் வெளியே தெரியாத அளவு சேறு அப்பியிருந்தது.செல்லம்மா என்பது அவளின் பாட்டி பெயர் என்பதை எப்போதோ ஒரு முறை சொல்லியிருந்தாள் முருகேஷ்வரியிடம்.. செல்லம்மாவிற்கு அவர்களின் இஷ்டமான மாதாவின் கோவில் இருக்கும் பத்ரிநாத்திற்குப் போக வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. ஆண்டுதோறும் முருகேஷ்வரி செல்லம்மாவுடன் கூவாகத்திற்குப் போய் விட்டு வருவாள். செல்லம்மா பத்ரிநாத் போக வேண்டும் என்று சேமித்து வைத்திருந்த பணத்தை மருத்துவரிடம் இழந்திருந்தாள். மாதாவின் வாகனம் சேவல் என்பதால் கோழிக்கறி சாப்பிட மாட்டாள். விரதம் இருப்பதைப் போல் அதைக்கடை பிடித்தாள். வந்து நின்ற இருட்டு ஆக்கிரமித்த சுவரின் ஓரம் அவளுக்குப் பாதுகாப்பாய் இருந்தது. அவள் உட்கார்ந்திருந்த உடைக்கப்பட்டக் கற்குவியலின் ஈரம் புட்டத்தைதை ஜில்லிடவைத்தது. கற்குவியலுக்குள் ஏதாவது பூச்சி, பூரன், பாம்பு இருக்கக்கூடும் என்ற பயம் மெல்ல எழுந்து அதை கூர்ந்து பார்க்கச் செய்தது. அது பூரான் உடம்பில் ஏறுவதைப் போல பயம் தந்தது. இது போன்ற பயம் ஆண்குறியை அறுத்து விட்டு சடங்கிற்குப் போகும் விசயத்தைச் செய்யலாமா, மாதாவிடம் அடைக்கலமாகலாமா என்ற கேள்வி வந்தது திருநங்கைகள் அடைப்பட்டுக்கிடந்த நிகேதனில் இருந்த போது வந்திருக்கிறது. அப்போது மனதில் எழுந்த தைரியம் எல்லா பயத்தையும் போக்கி விட்டது. சடங்குகள் முடிந்து காயம் ஆறும் வரை இப்படித்தான் அழுக்கான சுவரைப் பார்த்தேப் படுத்துகிகிடந்தாள் . கம்யூனில் யாருடனாவது பிணக்கு ஏற்படும் போது இப்படித்தான் சுவர்தான் அவளுடன் பேசுவதற்கு உபாயமாகியிருக்கிறது. அப்பா ஏதாவது பிணக்கு என்று வந்து விட்டால் இப்படித்தான் சுவரைப்பார்த்து நின்று கொண்டிருப்பர். அல்லது சுவரைப்பார்த்து உடம்பை நகர்த்திக் கொண்டு போய் கிடப்பார் என்பதும் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவர் கடவுளே கடவுளே என்று சுவரைப்பார்த்து அரற்றிக் கொண்டிருப்பார். அவளுக்கும் இப்போது கடவுளுடன் உரையாட வேண்டும் என்று தோன்றியது. எனக்கு ஒரு வழி சொல் . நானும் பிழைக்க வேண்டாமா . பிச்சை எடுக்கிறாயே. உனக்குப் பிடித்தமானது தானா. எனக்கு எங்கே பிடிக்கிறது . வேறு வேலை தெரியவில்லை. வேலையா இல்லை. இந்த ஊரில் திரும்பின பக்கமெல்லாம் பனியன் கம்பனிகள்.எங்கிருந்தெல்லாமோ வந்து குவிந்து வேலையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் நியாய சம்பளமோ இல்லியோ என்னமோ உழைப்பிற்கு காசு கொடுக்க ஊரில் முதலாளிகள் இருக்கிறார்கள் அதுவும் பார்த்தேனே, இந்த வகையில் பிச்சையெடுப்பதற்கு அதெல்லாம் மேல் . அதுவும் பார்த்தேனே, அனுதாபப்பட்டு வேலைக்குப் போலாமே என்பார்கள். வேலை கேட்டால் வேற எடம் பாரு என்பார்கள். இயல்புதானே. ஆண்களைப் பற்றித் தெரியாதா. நீயும் ஆணாக இருந்தவள்தானே . ஆமாம். ஆணாக இருந்தும் வேலை பார்த்துவந்தவன் முன்பு வேலை பார்த்திருக்கிறாய். சமீபத்தில் எங்கே போனாய். எங்கே வேலை பார்த்தாய். நாலு நாள் போனாய். எந்தத் தொழிலில்தான் சிரமமில்லை. வேலை செய்கிற இடத்தில் முக்கல் முணகல் உரசல் என்பதையெல்லாம் பெரிதாக எண்ணினால் இப்படித்தான். ஒம்பது ஒம்பது என்று சொல்லிக்காட்டுகிறார்கள் இரண்டு நாளைக்குச் சொல்வார்கள் அப்புறம் அவர்களும் உன்னை முழுப் பெண்ணாகத்தான் பார்ப்பார்கள். அப்படிப்பார்ப்பதில்லையே.. பார்ப்பார்கள். வீட்டில் இருந்த பெண் வேலைக்குப் போனாலும் இப்படித்தான் நடத்தியிருக்கிறார்கள் ஆரம்பத்தில் ..பிறகு அவளையும் மனுஷியாகப் பார்த்து மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் அல்லவா. மனுஷிகள் மகா மனுஷிகளாக இப்போது உயர்ந்து இருக்கிறார்களே. எந்த துறையில் அவர்கள் இல்லை. எந்தத் துறையில் அவர்கள் சாதிக்கவில்லை. நீயும் சாதிக்கலாம். நீண்ட சுவரும் இருட்டும் அவளை பயமுறுத்தியது. அவளின் அருகில் வந்து உட்கார்ந்தவன் மெல்ல அவளை உரசினான். அனுமதிக்கலாமா என்று ஒரு கணம் நினைத்தாள் . அவன் இடது கையை அவளின் இடுப்பைச் சுற்றி வளைக்கிற விதமாய் நகர்த்தினான். அவள் விறுக்கென்று எழுந்து உடம்பை உதறிய போது அவனின் கையிலிருந்த ஆணுறைப் பொட்டலம் கீழே விழுந்தது. subrabharathimanian Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003 ReplyForward
கேரளா அமைதி பள்ளத்தாக்கு 2022 - சுப்ரபாரதிமணியன் : கேரளா அமைதி பள்ளத்தாக்கு கொரோனா காலத்திற்கு பின்னால் நவம்பர் இறுதியில் இந்த முறை போயிருந்தபோது..அந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியிலும் சூட்டின் தன்மை அதிகமாக..வெப்பநிலை அதிகமாக மாறி இருப்பதை சொன்னார்கள். உலகம் முழுக்க வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பது..குளோபல் வார்மிங் என்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும்..இலக்காயி இருக்கிறது அதன் காரணமாக ஒரு சதுர கிலோமீட்டரில் 2000க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்த பகுதியில் சில மாறுபாடுகள் தென்படுகின்றன. 0 கேரளா அமைதி பள்ளத்தாக்கு பகுதியை சுற்றி பார்க்க நபர் ஒன்றுக்கு ரூபாய் 750 ரூபாய் வசூலிக்கிறார்கள் இப்போது. 300 ஏக்கர் பரப்பிலான விரிந்த அடர்ந்த காட்டுப்பகுதி .அபூர்வமான மரங்கள் செடி கொடிகள் பறவைகள் மிருகங்கள் இவற்றைக் காண வாய்ப்பு கிட்டும் போது இந்த தொகை பெரிதல்ல தான் .ஆனால் கேரளாவைச் சார்ந்த நிறைய பேர் தென்பட்டார்கள் தமிழகத்தினரைக் காண முடிவதில்லை அதிகம் . தமிழகத்திலிருந்து அதிக தூரம் இல்லை. கோவை, ஆன்கட்டி, அட்டப்பாடி..அவ்வளவுதான் 0 கேரளா அட்டப்பாடி பகுதிகளில் உலக கால்பந்தாட்டம் போட்டியை ஒட்டி கேரளா ரசிகர்கள் வெவ்வேறு அணிகளாக..விசிறிகளாக பிரிந்து தங்களுடைய ஆர்வத்தை காட்டியிருக்கும் பதாகைகள் .இதுபோல் தமிழகத்தில் சில சமயங்களில் காண முடிகிறது .ஆனால் உலக கோப்பை கிரிக்கெட்..உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் போது கேரள ரசிகர்கள் காட்டும் ஆர்வம் அவர் அபரிமிதமாக இருக்கிறது. இதை அவர்களுடைய படைப்புகளில் கூட சாதாரணமாக காணலாம் உதாரணத்திற்கு சுடானி பிரம் நைஜீரியா போன்ற படங்கள் கூட அமைந்துள்ளன இது போன்ற நிறைய படங்கள்.. படைப்புகள் 0 அமைதிப் பள்ளத்தாக்கில் அணையொன்றை 1970 நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர் கவிஞர் சுகதகுமாரி, சுகாதாகுமாரி என்பவர் இந்திய ஒன்றியத்தின், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கவிஞரும், செயற்பாட்டாளருமாவார். பெண்ணிய இயக்கம், அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார். அவர் கவி , போராளி என்றிருந்தாலும் அந்தப் பகுதி மக்களுக்கு அவர் டீச்சர். ஆசிரியையாகப் பணி புரிந்தவர் என்பதால் அப்படித்தான் அவர்கள் அன்பாக அழைக்கிறார்கள். கோடாரி வெட்டு விழப்போகிறது . ஏற்கனவே தாமதமாகிவிட்டது என்று தொடர்ந்து முழங்கியவர் மலையாளக் கவிஞர், சூழியல் களப்போராளி, பெண்ணுரிமைப்போராளி,அபயா என்ற ஆதரவிழந்தோர் சேவை அமைப்பின் முன்னோடி (திக்கற்ற மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புகலிடம் தரும் அபயா என்றொரு அமைப்பு). எனப் பலமுகங்கள் கொண்ட சுகதகுமாரி எனக்கு அறிமுகமானதே அவர் நடத்திய அமைதிப்பள்ளத்தாக்குப் போராட்டம் மூலம்தான் அந்தப்போராட்டம் தொடங்கியபோது அவர் குறிப்பிட்ட வரிகள் “ கோடாரி வெட்டு விழப்போகிறது . ஏற்கனவே தாமதமாகிவிட்டது. “ 1970 இல் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் அணையொன்றை நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர் கவிஞர் சுகதகுமாரி, உலகின் பல சூழற் போராட்ட அமைப்புகளில் இந்தியாவின் முதற் சூழல் செயற்பாட்டு இயக்கம் இதுவாகும். இயற்கை எழில் கொஞ்சும் இம் மலைப்பள்ளத்தாக்குப் பிரதேசம் அட்டப்படி அருகில் இருப்பதாகும் நீளவால்க் குரங்குகள் போன்ற பல வன விலங்குகள் இருக்குமிடமாகும்.. இந்தியாவின் முதல் சூழல் செயற்பாட்டு இயக்கம் அது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் அங்கு வறண்ட பூமியை வளமாக்கி கிருஷ்ணவனம் என்ற பெயரில் பூங்காவாக்கியவர். சூழலியல் அறிவியல் விசயங்களைப்பற்றி அரசியல்வாதிகள், அறிவியலாளர்கள் ஆகியோரைவிட எழுத்தாளர்கள் அக்கறை கொண்டு அவர்கள் மொழியில், உள்ளூர் மக்களிடம் மேம்பட்ட பரப்புரையை செய்ய வேண்டும் என்ற அவரின் கருத்துக்கள் என் சுற்றுச்சூழல் படைப்புகளுக்கு ஆதாரமாக இருந்தன. சுற்றுச்சூழலுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் சுகதகுமாரி. அதற்காக ‘பிரக்ருதி சமரக்‌ஷனா’ என்கிற அமைப்பையும் ஏற்படுத்தினார். அமைதிப் பள்ளத்தாக்கில் அணையொன்றை நிறுவுவதற்கு அரசு எடுத்த முயற்சிகளை இப்போராட்டங்கள் தடுத்து நிறுத்தி வெற்றி கண்டது..இதைத் தொடர்ந்து பூயம்குட்டி, ஜீரகப்பாறை, அச்சன்கோயில், பொன்முடி, மாவூர், விளாப்பில்சாலை போன்ற இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எதிராக சுகுதகுமாரியும் இந்த அமைப்பினரும் நடத்தியப் போராட்டங்கள் வெற்றி கண்டன. ஆரம்பத்தில் பெண் உணர்வுகளைப்பற்றி அதிகம் எழுத ஆரம்பித்தார். ‘முத்துச்சிப்பிகள்’, ‘பத்திரப்பூக்கள்’, ‘கிருஷ்ண கவிதைகள்’, ‘ஸ்வப்னபூமி’ என்று இவருடைய சில கவிதைத் தொகுப்புகள் ‘கேரள சாகித்ய அகாடமி விருது’, ‘கேந்திர சாகித்ய அகாடமி விருது’, ‘ஒடக்குழல் விருது’, ‘எழுத்தச்சன் விருது’ பெற்றவர்..சுற்றுச்சூழலுக்காகப் இவருக்குக் கிடைத்த விருதுகளும் ஏராளம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களையும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்களையும் பாதுகாக்க ஏற்படுத்திய ‘அபயா’ என்ற அமைப்பின் அலுவலகத்தில் ஒருமுறை அவரைப்பார்த்தேன். அந்த அலுவலகத்தில் நண்பர் வனமாலிகை பணி புரிந்து வந்தார். அவரிடம் அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தபோது அவர் வீட்டிற்குக்கிளம்பும் நேரம் ஆகிவிட்டது. இன்னொருமுறை சந்திக்கலாம் என்றார். அப்போது மதியம் சாப்பாட்டு நேரம் . அப்போது இயலவில்லை. இன்னொரு முறை நண்பர் வனமாலிகையைச் சந்திக்க அபயா அலுவலகம் சென்றபோது சந்தித்து அறிமுகப்படுத்தினேன். அப்போது நண்பர் வனமாலிகை உடல் நலக்குறைவால் அலுவலகம் வராமல் இருந்தார்,என் நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் தகவலையும் அதில் என் சாயத்திரை ( சாயம்புரண்ட திர என்ற தலைப்பில் சிந்தா பதிப்பகம் வெளியிட்டிருப்பதைச் சொன்னபோது மகிழ்ந்தார். சுற்றுச்சூழல் சார்ந்த நாவல் என்பதைச் சொல்லி விளக்கினேன். மகிச்சியடைந்தார். மலையாளத்தின் புதியகவிதை இயக்கத்தின் பெண்குரல் சுகதகுமாரி. 1962ல் வெளிவந்த புதுமுளகள் [புதியகுருத்துகள்] என்னும் நவீனக்கவிதை தொகுதியில் இடம்பெற்ற அன்றைய புதியகவிஞர்களில் சுகதகுமாரி மட்டுமே பெண். பின்னர் கவிஞராக . . பெரும்புகழ்பெற்றார்.என் கனவு இதழின் சார்பாக தற்கால மலையாளக்கவிதைகள் குறித்து ஒரு சிறப்பிதழைக் கொண்டுவந்தேன். ஜெயமோகன் மலையாளக்கவிதைகளைத் தேர்வு செய்தும் மொழிபெயர்ப்பு செய்தும் உதவினார். தாயாரித்தார். பின்னர் கனவு, காவ்யா ஆகியவை அதைத் தனியாக நூலாக வெளியிட்டன கேரள மக்களால் ‘சுகந்தா டீச்சர்’ என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட கவிஞர் சுகதகுமாரி எழுத்தாளர் மத்தியில் சுற்றுச்சூழல் போராளி என்ற ஒளிவட்டத்துடனே திகழ்ந்தார். 86 வயதான அவருக்கு நிமோனியா பிரச்னை தீவிரமாக இருந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர். உடன் கொரோனா பாதிப்பும் . மரத்தினு ஸ்துதி எந்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை போராட்ட ஆர்ப்பாட்டங்களின்போது பிரபலமாக மக்களிடம் சென்றடைந்தது. அவரின் இந்தக்கீழ்க்கண்ட பாடல் பிரசித்தி பெற்றது இரவுமழை வெறுமே விம்மியும் சிரித்தும் விசும்பியும் நிறுத்தாமல் முணுமுணுத்தும் நீள்கூந்தல் சுழற்றியும் குனிந்து அமர்ந்திருக்கும் இளம் பித்தியைப்போல இரவுமழை மெல்ல இந்த மருத்துவமனைக்குள் ஒரு நீண்ட விம்மலென பெருகிவந்து சாளரவிரிசலின் வழியாக குளிர்ந்த கைவிரல் நீட்டி என்னை தொடும் கரிய இரவின் துயர் நிறைந்த மகள் இரவுமழை நோவின் முனகல்கள் அதிர்வுகள் கூரிய ஓசைகள். திடீரென்று ஓர் அன்னையின் அலறல். நடுங்கி செவிகளை மூடி நோய்ப்படுக்கையில் உருண்டு நான் விசும்பும்போது இந்த பேரிருளினூடாக ஆறுதல் வார்த்தைகளுடன் வந்தணையும் பிரியத்திற்குரிய எவரோ போல. யாரோ சொன்னார்கள் வெட்டி அகற்றலாம் சீர்கெட்ட ஓர் உறுப்பை. சீர்கெட்ட இந்த பாவம் நெஞ்சத்தை என்ன செய்ய? இரவுமழை முன்பு என் இனிய இரவுகளில் என்னை சிரிக்கவைத்த மெய்சிலிர்க்கவைத்த வெண்ணிலவைவிட அன்பை அளித்து உறங்கவைத்த அன்றைய காதல்சாட்ச இரவுமழை இன்று என் நோய்ப்படுக்கையில் துயிலற்ற இரவுகளில் இருளில் தனிமையில் அழவும் மறந்து நான் உழலும்போது சிலையென உறையும்போது உடனிருக்கும் துயரம்நிறைந்த சாட்சி இரவுமழை! இரவுமழையிடம் நான் சொல்லிக்கொள்கிறேன் உன் துயரத்தின் இசையை நான் அறிகிறேன் உன் கருணையும் அடக்கிக்கொண்ட சீற்றமும் இருளில் உன் வருகையும் தனிமையின் விம்மல்களும் விடியும்போது முகம்துடைத்து திரும்பிச்செல்லும் உன் அவசரமும் ரகசியப்புன்னகையும் பாவனைகளும் எனக்குத்தெரியும் எப்படி அறிகிறேன் என்கிறாயா தோழி நானும் உன்னைப்போலத்தான். இரவுமழைபோலத்தான்.poem from jaya mohan link * சுகுதகுமாரி என்ற கவி இந்தப் பள்ளதத்தாக்கு வாழ்க்கையோடு தன்னை இணைத்துக் கொண்டவர் என்பதாலேயே அடிக்கடி அங்கு சென்று வருகிறேனோ என்று நினைக்கத் தோன்றியது.
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு திருப்பூரில் நாடக முயற்சிகள் –பற்றிய சுப்ரபாரதிமணியன் உரை எண்பதுகளில் எங்கள் அனுபவம் இப்படி இருந்தது.பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை. இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள் நடத்தப்பட்டன. இவற்றை ஆரம்பத்தில் நானும், பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் . இவற்றில் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும் “ மணல் வீடு “ என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற “ பசுமை எனும் தாய்மை “ என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு “ என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும் பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன. இவற்றில் ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் “ நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின் “ வயிறு “ , , , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “அறந்தை நாராயணனின் மேற்பார்வையிலும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது எண்பதுகளின் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன, ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றன. மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன. திருப்பூரில் நாடக முயற்சிகள் -2 சுப்ரபாரதிமணியன் ஆழ்வைக்கண்ணன் அவர்கள் பல உரைகளில் நாடகம் என்பது ” போலச் செய்தல்” என்பதாய் குறிப்பிட்டிருக்கிறார். நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கை.. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் என்கின்றனர் மரபாளர்கள்.. தமிழ் நாடகத் தந்தை என நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் அழைக்கப்படுகிறார். 'நாவில் வந்ததைப் பாடுவோம் நாடகம் தினம் ஆடுவோம் நாங்கள் சிறுவர் எங்கள் பிழையை நீங்கள் பொறுப்பீர் நாளுமே' எனப் பாடிக்கொண்டே சிறுவர்களை தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அவர் மேடையேற்றியபோது, தமிழ் நாடக உலகம் புதிய பரிணாம வளர்ச்சிக்குத் தயாராக இருந்தது. தமிழ் நாடகக் கலையை இவருக்கு முன், இவருக்குப் பின் என்று பிரிக்கலாம். அந்த அளவுக்குத் தமிழ் நாடகங்களில் இவரது பங்கு அளவிட முடியாதது. வள்ளி திருமணம், பவளக் கொடி, வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, இராம இராவண யுத்தம், சித்திராங்கி விலாசம் என, அவர் தந்த நாடகங்கள் பல இன்னும் மேடையேறிக் கொண்டிருக்கின்றன. அவர்தான், தமிழ் நாடக முதன்மை ஆசிரியர், தமிழ் நாடக விடிவெள்ளி எனக் கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களைத் தொடர்ந்து நாடக மரபு வலுப்பெற்றது.. எண்பதுகளில் எங்கள் அனுபவம் இப்படி இருந்தது.பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை. இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள் நடத்தப்பட்டன. இவற்றை ஆரம்பத்தில் நானும், பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் . இவற்றில் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும் “ மணல் வீடு “ என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற “ பசுமை எனும் தாய்மை “ என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு “ என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும் பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன. இவற்றில் ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் “ நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின் “ வயிறு “ , , , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “அறந்தை நாராயணனின் மேற்பார்வையிலும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது எண்பதுகளின் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன, ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றன. அந்த வகையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாதக் கூட்டங்களில் அரசியல் கவிதைகளை தோழர் எஸ் ஏ காதர்-தனி நபர் நடிப்பு - மோனே ஏக்டிங்க் வகையில் நாடகமாக்கினார் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்ட மாநாட்டில் தோழர் எஸ் ஏ காதர் ஸ்ரீநிதியின் பங்கேற்பில் மதம் என்ற நாடகம் நடைபெற்றது. கோவை திலீப்குமாரின் சிறு நாடகமும் அம்மாநாட்டில் அரங்கேறியது . (தோழர் எஸ் ஏ காதர் 25க்கும் மேற்பட்ட முழு நீள மேடை நாடகங்களை 70,80 களிலும் எழுதி இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் வயது 72. இன்னும் நாடக ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். அவர் இரு நாவல்கள் உட்பட சில நூல்களை வெளியிட்டுள்ளார் . மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன. இந்தத் திருப்பூர் முயற்சிகளில் ஆழ்வைக்கண்ணனும் சேர்ந்து கொள்கிறார். திருப்பூர் குமரன் நாடகமுயற்சிகள் அதில் ஒன்று . அதன் நாடகப்பிரதி தற்போது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்து மாவட்ட மைய நூலகங்களில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ,பள்ளி கல்லூரி மேடைகளில் மாணவர்களை வைத்து நாடகமாக நடத்தியும், நடித்தும் காட்டி உள்ளார்.. . 2004 இல் நடைபெற்ற திருப்பூர் குமரன் நூற்றாண்டு விழாவில் இந்த நாடகம் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகள் அனைவரையும் அமர வைத்து அவர்கள் முன்பாக இந்த நாடகம் நடித்துக் காட்டப்பட்டது அனைவரின் வரவேற்பு பெற்றது. தமிழக அரசு சார்பில் நடைபெற்ற குமரன் நூற்றாண்டு விழா வில் பள்ளி மாணவர்களை வைத்து நாடகத்தை அரங்கேற்றப்பட்டது இதன் தொடர்ச்சியாக அவர் என் “ பசுமைப்பூங்கா “ சிறுவர் நாடக நூலில் உள்ள நாடகங்களையும் எளிமையான நாடகங்களாக்கியிருக்கிறார். இந்த அவரின் நாடகமுயற்சிகளுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்
கனவு சுப்ரபாரதி மணியன் அவர்களுடன் ஒரு நேர்காகாணல் காப்பியன் பெரம்பலூர் காப்பியன்: வணக்கம், தாங்கள் சமீபத்தில் பெற்றுள்ள விருதுகள் குறித்து சொல்லுங்க கனவு: மேனாள் மத்திய நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து, தமிழறிஞர் ஒளவை நடராஜன் போன்றவர்களால் அமைக்கப்பட்ட எழுத்து அறக்கட்டளையின் சார்பாக சிறந்த நாவலுக்கான விருது, அதாவது என்னுடைய 'அந்நியர்கள் ' என்ற நாவலுக்கு விருது 1 லட்ச ரூபாய் பணமும் கொடுத்து சிறப்பித்தார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அடுத்து சார்ஜாவில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் கொடுக்கப்பட்ட புக்கிஸ் விருது. இந்த சார்ஜா புத்தகக் கண்காட்சி என்பது அபுதாபி, சார்ஜா, துபாய் போன்ற நாட்டினர் சேர்ந்து நடத்தும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய புத்தக கண்காட்சி ஆகும். நானும் என்னுடைய நண்பர் சின்னராஜும் சார்ஜாவில் வசிக்கும் சிறந்த 30 மலையாள எழுத்தாளர்களின் வரைந்த ஓவியங்களையும்எடுத்துச் சென்றேன். அங்கு என்னுடைய 'சப்பரம் ' எனும் நாவல் மொழிபெயர்க்கப்பட்டு (மலையாளம்) வெளியிடப்பட்டது. அந்த நாவலை வெளியிட்ட பதிப்பாளர் என்னை அங்கு அழைத்து இருந்தார். நான் மனைவியுடன் அங்கு சென்று வந்தேன். எனது ஐந்து நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் நான் மலையாள நாவல்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளேன். முன்பு சொன்ன அந்நியர்கள் எனும் நாவல் திருப்பூரில் வசிக்கும் இடம் பெயர்ந்தவர்களின் வாழ்வை மையமாக கொண்டதாகும். அந்நாவல் ' துளசி' எனும் வடநாட்டுப் பெண் இடம்பெயர்ந்து திருப்பூரில் வசிக்கிறாள். அவள் தன் வாழ்வில் காதல், குடும்பம் போன்ற இயல்பான நிகழ்வுகளில் ஏற்படும் இடர்பாடுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சொல்லமுடியாத துயரங்களை எடுத்துச் சொல்லகிறது. திருப்பூரில் மட்டும் 10 லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் 5 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்களின் வேதனைகள், இன்றைய திருப்பூரின் இன்னொரு முகத்தை அந்நாவல் எடுத்துக்காட்டுகிறது. காப்பியன்: கனவு இதழ் 36 ஆண்டுகளாக வெளிவருகிறது. இது வெளியிட்டுள்ள சிறப்பிதழ்கள் குறித்து கூறுங்கள். கனவு : கனவு இதழ் என்பதே சிறப்பிதழ்தான். அதிலும் குறிப்பாக பல்துறைசார்ந்த சிறப்பிதழ்களைக் கொண்டு வந்துள்ளேன். ஜெயமோகன் தொகுத்த மலையாளக் கவிதைகள், பாவண்ணன் தொகுத்த கன்னட கவிதைகள், அசோகமித்திரன் சிறப்பிதழ், சுந்தரராமசாமி சிறப்பிதழ்கள், சினிமா சார்ந்த சிறப்பிதழ்கள், இலங்கை சிறப்பிதழ், சிறார் இலக்கியச் சிறப்பிதழ் போன்ற சிறப்பிதழ்களைக் கனவு வெளியிட்டுள்ளது. மேலும் இலண்டன், ஐரோப்ப்பிய நாடுகளுக்கு நான் சென்று இருந்தேன். அங்கு வசிக்கும் எழுத்தாளர்கள் குறித்த சிறப்பிதழ் வெளியிட்டுள்ளேன். காப்பியன் : கனவு இதழ் குறித்தும் அதன் வாசகர்கள் குறித்தும் கூறுங்கள். கனவு: கனவு இதழ் 800 பிரதிகள் அச்சடிக்கிறேன். 100 பேர் சந்தாதாரர்கள். ஒரு இதழ் வெளியிட ரூ 10,000 ஆகிறது. என்னுடைய சுயவிருப்பத்தின் பேரின் பல லட்சரூபா செலவு செய்து வருகிறேன். இது ஒரு பெரிய இடர்பாடுதான். முடிந்த வரை இதனைத் தொடர்ந்து செய்வேன். தொடக்க காலத்தில் ஐதிராபாத்தில் (ஆந்திரா) வசிக்கும் பொழுது அங்கு இருக்கும் தமிழர்களின் கடைகளுக்கு கனவு இதழை எடுத்துச் செல்வேன். பலர் அதனை வரவேற்க்கவில்லை. சிலர் ' கனவு ' இதழை வாங்கி மாட்டுவர்கள். இது எல்லாம் யாரு சார் வாங்குவாங்க. பாலஜோதிடம், ஜோதிடம், கனவு நிவர்த்தி போன்ற புத்தகம் இருந்தா குடுங்க என்பார்கள். சிலர் வாங்கிச் செல்வர், கடைகளில், மற்ற புத்தகக் கண்காட்சிகளில் சிலரிடம் கெஞ்ச்சித்தான் அங்கு விற்பனைக்கு வைக்க முடிந்தது. காப்பியன் : கனவு சிற்றிதழ் மூலம் வளர்ந்த எழுத்தாளர்கள் குறித்து? கனவு: கனவு இதழால் வளர்ந்த எழுத்தாளர்கள் என்று கூறமுடியாது. பலருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது கனவு. எழுத, திறனாய்வு செய்ய பலருக்கும் கனவு பயன்பட்டுள்ளது. நான் என்னுடைய படைப்புகளை கடந்த சில ஆண்டுகளாகத்தான் எழுதி வருகிறேன். ஜெயமோகன் போன்றவர்கள் இதில் முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறார்கள். காவியா பதிப்பகம் கனவில் வந்த 700 பக்க சிறந்த படைப்புகள் (சிறுகதைகள்) தொகுப்பாக வெளியிட்டுள்ளது. அடுத்து 50 சிறுகதைகள் தொகுப்பு ஒன்று வெளியிட்டுள்ளோம். காப்பியன்: கனவு வெளிமாநிலம், வெளிநாடு என செல்கிறதா ? கனவு: கனவு தொடக்க காலத்தில் வெளிநாடு சென்றது. இப்போது இல்லை. அங்கு சென்றால் எடுத்துச்செல்வேன். வெளிமாநில வாசகர்கள் சிலருக்கு அனுப்பிவைப்பேன். இலங்கைக்கு சில காலம் இதழ் சென்றது. புலம் பெயர்ந்த தமிழர்களிடையே (வெளிநாடு) கனவு ஓரளவு அறிமுகமாகி உள்ளது. இப்பொழுது தமிழ்நாட்டு வாசகர்கள்தான் அதிகம்பேர் வாசித்து வருகிறார்கள். காப்பியன்: படைப்புகளைக் கனவுக்கு அனுப்பி, அதில் இடம்பெறாது தவித்த படைப்பாளிகள் அல்லது வருத்தப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்களா? கனவு: இருக்கிறார்கள். கவிதை சிறுகதை அனுப்புவார்கள். அது எனக்கு பிடித்து இருந்தால் வெளியிடுவேன். அதற்காக வருத்தப்பட்ட வாசகர்கள் நிறையபேர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், யாரும் வருத்தப்பட்ட கனவு வாசகர் வட்டம் என்று அமைப்பாக திரளவில்லை. (சிரிப்பு) காப்பியன்: கனவு சிற்றிதழின் நோக்கம் சுருக்கமாக? கனவு: பதிய புதிய படைப்பாளிகளை உருவாக்குவது, அணிகளுக்கு மேடையமைத்துக் கொடுப்பது என்பது இதன் இலக்கு, கனவில் இடதுசாரி கருத்துகள், தமிழ்த்தேசிய மரபு சார்ந்த கருத்துக்கள் அதிகம் இடம் பெறும். காப்பியன்: தங்களை வளர்த்த எழுத்தாளர்கள் யார் யார்? கனவு : இப்படி குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது. நானே படித்து படித்து எழுதி வளர்ந்தேன் எனக்கு கிடைத்த கதா விருது, சிறந்த தாவனுக்கான தமிழக அரசு விருது, தமிழ்ச்செம்மல் விருது போன்றவைகள்தான் என்னை வளர்த்து வருகின்றன. காப்பியன்: கனவுக்கு செலவு செய்வதை உங்கள் குடும்பத்தினர் பார்க்கும் பார்வை ? கனவு: கனவுக்கு பணம் செலவு செய்வது தேவையில்லா செலவு என்றுதான் பார்க்கிறார்கள். என்னுடைய சுயவிருப்பம் இதில் அதிகம் பங்காற்றுகிறது. நானும் புலி வாலைப் பிடித்த கதையாக தொடர்கிறேன். புலி வால் என்னை விட்டுச் செல்லும் வரை விடாமல் பிடிக்க முயல்கிறேன். (சிரிப்பு) காப்பியன்: அடிப்படையில் கணக்கு படித்த நீங்க எழுத வந்த கதை... கனவு : நான் கோவை பூ.சா.கோ கல்லூரியில் எம்.எஸ்சி (கணக்கு) படித்தேன். அப்பொழுது புதுவெள்ளம் என்று மாணவர் இதழ் வந்தது. அதில் சில கவிதைகள் எழுதினேன். வெளிவந்தது. எனக்கு தமிழ்ப்பற்று, படைப்பாற்றல் தொடக்கம் அதுவே எனலாம். நாங்க ஒரு நெசவாளர் குடும்பம். எங்க குடும்பத்தில் எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளிகள் என்று யாரும் இல்லை. நான், என் முயற்சியால் படைப்பாளியாக மாறியுள்ளேன். இந்த தமிழ்ச் சமூகம்தான் என்னை வளர்த்து எடுத்தது. காப்பியன்: கனவு இதழின் எதிர்கால செயல்திட்டம் குறித்து...? கனவு : காசு கொஞ்சம் அதிகம் கிடைத்தால், அதிக பக்கங்களில் கனவு வெளியிடலாம்.நன்கொடை எதுவும் வருவதில்லை.பென்சன் காசை அதிகம் செலவு செய்ய முடிவதில்லை. புது சந்தா அபூர்வம். இலவசப்பிரதிகள் தான் அதிகம். மேலும், விரிவாகச் செய்தால் புதிய படைப்பாளிகளை உருவாக்கலாம் என்ற ஒரே ஒரு செயல்திட்டம்தான் இருந்து வருகிறது. என் மூச்சு உள்ளவரை, என்னால் இயங்க முடியும் எனும் நிலை வரை கனவு சிற்றிதழை வெளியிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாசகர்கள், சிற்றிதழ் ஆர்வலர்கள், தமிழ்நாடு அரசு, இந்திய ஒன்றிய அரசு போன்றவை இதுபோன்ற சிற்றிதழ்களுக்கு ஊக்கம் கொடுத்தால் கனவு இதழ் மட்டுமல்ல பல்வேறு சிந்தனைகள் சார்ந்த இதழ்கள் வளரும். படைப்பாளிகள் சுதந்திர படைப்பாளிகளாக வலம் வருவர். ( 03.10.2022 )
பத்திரிக்கை செய்தி கல்வித்துறை சார்ந்த நூல்களை எழுதும் திருப்பூர் ந.குமரன் அவர்களுக்கு ” கனவு விருது” அளிக்கப்பட்டது.11/12/22 ஞாயிறு மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற விழாவில் அந்த விருதை வழக்கறிஞர், எழுத்தாளர் சாமக்கோடா ரவி அவர்கள் வழங்கினார், விழாவிற்கு மக்கள் மாமன்ற நிறுவனத் தலைவர் சி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ந.குமரன் அவர்களின் கல்வி சார்ந்த நூல்கள் பற்றி கல்வியாளர் முத்துபாரதி விரிவாக பேசினார். குழந்தைகளின் திருக்குறள் சார்ந்த உரைகளும் அவர்களுக்கு பாராட்டுகளும் அஜந்தா நாராயணசாமி வழங்கினார். கவிதை வாசிப்பும் புத்தக அறிமுகங்களும் நடைபெற்றன. கனவு விருதைப் பெற்றுக் கொண்ட ந. குமரன் அவர்கள் பேசும்போது சென்னையில் அவர் சில புலனாய்வு இதழ்களில் பணியாற்றிய அனுபவத்தையும் அரசியல் சூழல்களை புரிந்து கொண்டது பற்றியும் கல்வி நூல்கள் எழுதும் அனுபவத்தையும் அவற்றை மாணவர்கள் சரியாக படித்து பயன்பெற வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அவரின் கல்வி நூல்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை முதற்கொண்டு கடன் வசதி வரைக்கும் எல்லா விவரங்களும் தரப்பட்டிருக்கின்றன. அதேபோல சுய முன்னேற்றத்துடன் மாணவர்கள் தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் அவர் அந்த நூல்களில் தகவல்கள் தெரிவிக்கிறார். மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது ந. குமரன் அவர்களுடைய நூல்களாகும். நகுமரன் அவர்களின் கல்வி நூல்கள் பணியை பலர் பாராட்டிப் பேசினர். ஆசிரியைகள், மல்லிகா , மைதிலி மற்ரும் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன் ,.வின்செண்ட்ராஜ், ஆனந்தன், மாரிமுத்து, தங்கவேல், நாதன் ரகுநாதன் உட்பட பலர் உரையாற்றினர்
வாழ்த்துகிறேன். கோவை பூ சா கோ கலை கல்லூரியில் முதுநிலை கணிதம் படித்தேன். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கணிதம் படித்தேன். மற்றும் அங்கு அந்த காலத்து பியூசி கூட திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்தேன். உள்ளூர் கல்லூரி என்பதால் எப்போதும் அந்த கல்லூரி தமிழ் துறையுடன் தொடர்பில் இருப்பேன். சென்றாண்டில் கூட மாணவருக்காக வகுப்பெடுப்பதற்காக பலமுறை சென்றிருக்கிறேன். நல்ல அனுபவமாக அமைந்தது. . தமிழ் துறை சார்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆர்வம் எடுத்துக் கொண்டு பல நிகழ்ச்சிகளை சென்றாண்டு நடத்தினார்கள். அதில் தீபன் போன்ற உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய கருத்தரங்குகள் பற்றிச் சொல்லலாம். . என் திருப்பூர் மையமான படைப்புகள் பற்றி ” திருப்பூரியம் “ என்றொரு கருத்தரங்கையும் அவர்கள் நடத்தினார்கள். நானும் அந்த மாணவர்களின் படைப்புகளை தொகுத்து மின்னூல் ஒன்றை ” கனவு” சார்பாக வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளின் போது நான் விஜயராஜ் அவர்களை சந்தித்து இருக்கிறேன். கவனித்திருக்கிறேன். அவர் இந்த கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துகிற போது ஆர்வத்துடன் பங்கு பெறுவார். சமூக ஊடக விஷயங்களில் அக்கறை கொண்டு தீவிரமாக இருப்பார். நவீன படைப்புகள் பற்றி அவ்வப்போது பேசுவார். இப்போது அவர் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த கவிதை தொகுப்பும் வெளியிடுகிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் ஈடுபாடும், அக்கறையும் பாராட்டும்படி இருக்கிறது., அவருடைய கவிதைகளில் குடும்ப உறவுகள், அவரைச் சுற்றியுள்ள உறவுகள், இயற்கை சார்ந்த விஷயங்கள் பற்றி எல்லாம் மிகவும் கவலைப்படுகிறார். எந்த சிக்கலும் இல்லாமல் எளிய மொழியில் அவற்றையெல்லாம் எழுதுகிறார். கவித்துவமாய் பல விஷயங்கள் அவர் மனதில் இருந்து கழிகின்றன. திருப்பூர் கல்லூரியில் படிக்கிற மாணவர்களில் பெரும்பகுதியினர் பகுதி நேர வேலையாக பின்னலாடைத் துறை சார்ந்த வேலையை செய்கிறார்கள். படிப்பு முடிந்த பின்னால் அவர்களுக்கு வேலை தேடுவது சிரமமாக இல்லை. அதில் தீவிர அக்கறை எடுத்துக் கொள்வதில்லை .அவர்கள் கற்ற பின்னலாடை தொழில் சார்ந்த மீண்டும் இயங்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் விஜயராஜ் அவர்களுக்கு பின்னலாடை துறை சார்ந்த வேலை அனுபவங்கள் இருந்தால் கூட, அவர் கல்வியும், மேல் படிப்பும் மிக முக்கியம் என்று கருதி பின்னலாடை துறை சார்ந்த வேலைகளை ஓரளவு புறந்தள்ளிவிட்டு மேல் படிப்பு சார்ந்து தொடர்ந்து இயங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதில் பல இடையூறுகளை கண்டறிந்து அதில் இருந்து மீண்டு தொடர்ந்து வருகிறார். இந்த வகையில் பல மாணவர்களுக்கு நான் இதுவரை சொன்ன அறிவுரைகளில் பின்னலாடைத் துறைகளுக்குள்ளே மட்டும் இருந்து விடாதீர்கள். அது சாதாரண தொழிலாளி ஆக்கிவிடும். அதிலிருந்து மீள்வதற்காக வேறு படிப்பு முயற்சிகளும் வேறு வேலை முயற்சிகளும், படைப்பிலக்கியத்தில் அக்கறையும், வாசிப்பில் அக்கறையும் இருந்தால் வாழ்க்கை இன்னொரு புதிய திசை காட்டும் என்ற அறிவுரையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன். விஜயராஜ் அவர்களுடைய முயற்சிகள் அந்த வகையில் இருக்கிறது. தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இருந்து விடுவிக்கிறவை.அவை தன்னுடைய தனி தன்மையுடையதாகக் கருதுகிறார். அந்த வகையில் அவருடைய இந்த கவிதை தொகுப்பு முயற்சிகள் ஆரம்பகாலப் படிக்கட்டுகள் என்று சொல்லலாம். தீவிரமான வாசிப்பும், எழுத்து பயிற்சியும் அவரை கவிதை மட்டும் அல்ல, வேறு உரைநடை இலக்கியம் சார்ந்தும் நிறைய சாதனைகளை செய்ய வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது, அந்த வகையில் அவருடைய இந்த கவிதை முயற்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, தொடர்ந்து அவர் சாதனைகளை புரிய இது ஒரு சிறு ஆரம்பமாக இருக்கிறது, அவரை வாழ்த்துகிறேன். சுப்ரபாரதி மணியன், திருப்பூர்
பத்திரிக்கை செய்தி “ எல்லா காலங்களிலும் கல்வி மனிதர்களுக்கு அவசியம் என்பதை காலம் உணர்த்திக் கொண்டே இருக் கிறது “ என்று உடுமலை சார்ந்த பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது பேசினார் . திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நூல்கள் அறிமுகமும் , உடுமலை இளைய பாரதி அவர்களின் 15 ஆவது குறும்பட வெளியிடும், அவருக்கு கனவு விருது அளிப்பதும் நடைபெற்றது அப்போது கொடுப்பினை எழுதிய ” உயிர் காற்று ”, உடுமலை இளைய பாரதி எழுதிய கவிதைகள் , சுப்ரபாதிமணியன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த ” பெயிண்ட் பிரஷ் 000 “ ஆகிய நூல்கள் அறிமுகம் நடைபெற்றது.. சுப்ரபாதிமணியனின் நூலை தூரியை சின்னராஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து ஓவியருடைய உலகங்கள் பற்றி விரிவாக பேசினார் ..உடுமலை தோழர் ராசா அவர்களின் சிறுகதை மற்றும் கவிதை தொகுப்புகள் பற்றி இளைய பாரதி பேசினார் இந்த விழாவில் உடுமலை பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் ..அவர் இலங்கையில் இருந்த போது போர் சூழல் மோசமாக இருந்ததை அவர் உரையில் குறிப்பிட்டார் :: பதுங்கு குழிகள் ஈழத் தமிழர்களில் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று ” இலங்கையில் போர்க்காலங்களில் பதுங்கு குழிகள் ஈழத் தமிழர்களில் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று. .ஈழத் தமிழர்களின் உயிர் காத்த வீடு பதுங்கு குழி என்று சொல்லலாம் . பதுங்கு குழிக்கு போவதற்கு முன்னால் எல்லோரையும் வா வா என்று அழைக்கபடியே ஓடுவோம் .அங்கு ,நாய் ,பூனை, ஆடு மாடு ,கோழிகளும் பதுங்கிக் கொள்ளும் ,மாடுகள் உள்ளே போக முடியாத நிலையில் பதுங்கு குழி வாசலில் தலைகளை மட்டும் உள்ளே விட்டவாறு கத்திக் கொண்டே இருக்கும் வீதிகள் , பாடசாலைகள் , சந்தைகள், மருத்துவமனைகள்,கோவில்கள் என்று பதுங்கு குழிகள் இல்லாத இடமே இருக்கவில்லை .விமான சத்தம் அருகில் கேட்டதும் ஒருவரை ஒருவர் இறுக்கிக் கொண்டு கட்டிப்பிடித்துக் கொள்வோம் அந்தப் பதுங்கு குழிக்குள் .. விமானம் போய்விட்டது என்று சொன்னதன் பிறகு பிடிகளை தளர்த்திக் கொள்வோம் ..அதன் பின்னர்தான் யார் யாரை கட்டிப்பிடித்தார் என்று தெரியும் ..அந்த விமானத்தின் சத்தத்தில் அதிர்வில் ஆண் பெண் வயது வேறுபாடு இன்றி அவர்களுக்கு தெரியாமல் மலம் சலம் கழித்து இருப்பார்கள். ..விமானம் போனபின்பு நாற்றம் வருது , நாற்றம் வருது என்று எல்லோரும் சொல்வார்கள், ஆனால் எங்கிருந்து வருது என்று யாருக்கும் தெரியாது ,வெளியே வந்ததன் பின்தான் தெரியும், அவரவர் உடம்பிலிருந்து தான் நாற்றம் என்று . இந்த சூழலிலும் வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்ட பின்னர் எதை தள்ளி போட முடியும் என்ற சூழலில் போர் தாக்குதல்களும் மக்களுக்கு பழகிப் போகிவிட்டது. அதற்கு ஏற்றவாறு வேலைகளை செய்ய மக்களும் பழகிக் கொண்டார்கள் . இந்த பதுங்கு குழு வாழ்க்கையோடு தான் நாங்கள் எல்லாம் கல்வி கற்க வேண்டி இருந்தது .கல்வி மனிதர்களுக்கு எல்லா காலங்களிலும் அவசியம்” கூட்டத்திற்கு மக்கள் மாமன்ற தலைவர் சி சுப்பிரமணியன் தலைமை வகித்தார் ..உடுமலை சார்ந்த தோழன் ராசா ,இயல் .கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் .இன்சூரன்ஸ் குமார் அவர்கள் கனவு விருதை உடுமலை இளைய பாரதி அவர்களுக்கு வழங்கினார் . . முன்னதாக நாதன் ரகுநாதன் , ஆனந்தன் , தங்கவேல் ஆகியோர் பங்கு பெற்ற வழக்காடு மன்றம் சிறப்பாக நடைபெற்றது “ எல்லா காலங்களிலும் கல்வி மனிதர்களுக்கு அவசியம் என்பதை காலம் உணர்த்திக் கொண்டே இருக் கிறது “ என்று உடுமலை சார்ந்த பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது பேசினார் . திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நூல்கள் அறிமுகமும் , உடுமலை இளைய பாரதி அவர்களின் 15 ஆவது குறும்பட வெளியிடும், அவருக்கு கனவு விருது அளிப்பதும் நடைபெற்றது அப்போது கொடுப்பினை எழுதிய ” உயிர் காற்று ”, உடுமலை இளைய பாரதி எழுதிய கவிதைகள் , சுப்ரபாதிமணியன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த ” பெயிண்ட் பிரஷ் 000 “ ஆகிய நூல்கள் அறிமுகம் நடைபெற்றது.. சுப்ரபாதிமணியனின் நூலை தூரியை சின்னராஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து ஓவியருடைய உலகங்கள் பற்றி விரிவாக பேசினார் ..உடுமலை தோழர் ராசா அவர்களின் சிறுகதை மற்றும் கவிதை தொகுப்புகள் பற்றி இளைய பாரதி பேசினார் இந்த விழாவில் உடுமலை பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் ..அவர் இலங்கையில் இருந்த போது போர் சூழல் மோசமாக இருந்ததை அவர் உரையில் குறிப்பிட்டார் ::
6 திரைக்கதைகள் :சுப்ரபாரதிமணியன் முன்னுரை : வணக்கம். நவம்பர் 2022ல் தாராபுரம் கிளமண்ட் பீட்டர் அவர்களை எதேச்சையாகப் பார்த்தபோது அவர் அவரின் திரைக்கதை நூல் ஒன்றை அச்சாக்கும் பணியில் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவர் என் நாவல்களைத் திரைக்கதைகளாக்கும் முயற்சி பற்றிச் சொன்னார். அவரும் ஒத்துழைப்பு தந்தார். அந்த முயற்சியின் விளைவாய் முதல் தவணையாக இந்த என் ஆறு நாவல்கள் இப்படி சில வரிகளில் திரைக்கதைகள் ஆகி உள்ளன. உங்கள் பார்வைக்கு இவை. தொடரும் இனியும் இந்தத் திரைக்கதைகள் பணி.. சுப்ரபாரதிமணியன் 94861 01003 / 94423 50199 மின்னஞ்சல் : subrabharathi@gmail.com, rpsubrabharathimanian@gmail.com
திருப்பூர் சக்தி விருது 2023 இவ்வாண்டிற்கான பெண் எழுத்தாளர்கள் நூல்களுக்கான “சக்தி விருது”க்கு 2019ம் ஆண்டு முதல் வெளிவந்த எல்லாவகை நூல்களின் இரண்டு பிரதிகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கக் கடைசி தேதி : பிப்ரவரி 15 , 2023 முகவரி: திருப்பூர் மக்கள் மாமன்றம், மங்கலம் சாலை, டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் 641 604 ( 95008 17499 / 99940 79600 ) (வரவேற்கும்..திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் / திருப்பூர் மக்கள் மாமன்றம் / கனவு )
திசையொன்று நாவல் பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் ஆறுதல் தருபவை..பயணம் மனிதர்களைப் பிணைக்கிறது. வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இயறகை சார்ந்த புரிதல்களும் அனுபவமும் மனிதர்களை பிரபஞ்ச மனிதர்களாக மாற்றுகிறது. அப்படியொரு பயணம் சில மனிதர்களுக்குத் தரும் அனுபவங்களும் வாழ்க்கையை ஊடுருவிப் பார்க்க உதவும் தருணங்களும் கொண்டது இந்நாவல். Uyirmei Chennai rs 150
ஒரு பேட்டியை நேரடியாகக் கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாமல் இப்படியும் ஆரம்பிக்கலாம்.. 0 சுப்ரபாதி மணியின் பேட்டிகள் : தொகுப்பில் சிங்கப்பூர் நகரம் மெல்ல இருட்ட துவங்குகிறது. தெருக்களில் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்துவிட்டன. வாகனங்கள் விரைவாகச் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒழுங்கமைப்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த உணவு விடுதிக்கு வந்து விடுமாறு திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தகவல் தெரிவித்து இருந்தார். நண்பர் ரெ. பாண்டியன் அவர்களின் வீட்டு தொலைபேசி எண்ணில். ரெ.பாண்டியன் அவர்கள் என்னுடன் வர முடியாத சூழலில் இருந்தார். அவர் அந்த உணவு விடுதிக்கு செல்வதற்கான பேருந்து அடையாளத்தையும் வழியையும் சொல்லித் தந்தார் .வழியை விசாரித்து பக்கத்தில் இருந்த ஒரு மலர் கடையை பார்த்தபடி அந்த உணவு விடுதிக்கு வந்து சேர்ந்தேன். முதல் நாள் நா. முத்துசாமி அவர்களின் கூத்து பட்டறை நாடகம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு கனிமொழி அவர்களும் அரவிந்தன் அவர்களும் வந்திருந்தார்கள் சிங்கப்பூரின் புகழ் பெற்ற நாடகவியலாளர் இளங்கோவன் அவர்களும் வந்திருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் தமிழ் முரசுக்கு பேட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். உணவு விடுதியில் வெளியில் போடப்பட்டிருந்த மேசைகளை பார்த்துக் கொண்டு அவற்றின் ஒழுங்கமைப்பை ரசித்துக்கொண்டு அந்த இடத்தின் உள்ளே நுழைகிறேன். உயரமான சுவர்கள், அதன் கூரை எல்லாவற்றையும் உட்கொண்டது போல் அமைதியாக இருந்தது. பச்சை நிற சட்டையும் நீல நிற பேண்டும் சிவப்பு நிற டையும் அணிந்த அந்த உணவு விடுதியின் பணியாளர்கள் என்னை வரவேற்றார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்து அங்கிருந்து நாற்காலி ஒன்றில் உட்கார ஆசைப்பட்டேன். அந்த நாற்காலி நல்ல அழுத்தமான மர வர்ணத்தை பூச்சாகக் கொண்டிருந்தது. அதிலிருந்த மூன்று சின்ன சித்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. கனிமொழி அவர்கள் உள்பகுதியில் இருந்து வந்து என்னை வரவேற்றார். அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட போது மிகவும் சவுரியமாக உணர்ந்து அடுத்த பக்கம் இருக்கும் சாலையைப் பார்க்க சில வாகனங்கள் கண்களில் பட்டன. சிறு பொம்மை போல பல கார்கள் விரைந்து போனது. பல வாகனங்களின் இரைச்சலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது அதனால் வேறு இடத்திற்கு செல்லலாம் என்று இன்னொரு பகுதிக்கு சென்ற போது சாலை நடமாட்டம் எனச் செல்லும் வாகனங்கள் இல்லாமல் சவுரியமாக இருந்தது. தமிழ் முரசு பத்திரிக்கை நிறுவனம் பற்றியும் தமிழ் முரசு பத்திரிக்கை சிங்கப்பூர் தமிழர்கள் வாழ்க்கையில் எப்படி முக்கியமான ஒரு பத்திரிக்கையாக, செய்தி ஊடகமாக இருக்கிறது என்பதையும் அவர் சொன்னார். அந்த பத்திரிகை பணி தனக்கு எப்படி பிடித்து இருக்கிறது என்று சொன்னார். வழங்கப்பட்ட தேநீருக்கு சர்க்கரை கட்டிகளை எடுத்து போட்டுக் கொண்டேன். ஆனால் இனிப்பு சுவை போதவில்லை அதே அளவு தான் கனிமொழி அவர்களும் சக்கரைக்கட்டிகளை போட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு அந்த இனிப்பு சரியாக இருந்திருக்க வேண்டும். நான் மீண்டும் ஒரு சக்கரைக்கட்டியைப் போட்டுக் கொண்டேன். அவர் அதை பார்த்து தேநீர் சுவையாக இருக்கிறது அல்லவா என்றார். நான் இப்போது இன்னொரு சக்கரைக்கட்டையை போட்டுக் கொண்டதால் சுவை வந்து விட்டதால் ஆம் என்றேன். ( முன்பொரு முறை திருப்பூர் காலச்சுவடு நிகழ்ச்சியொன்றுக்கு வந்த போது இரவு உணவை கட்சிக்காரர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் உணவை வெகு அளவோடு எடுத்துக் கொண்டதையும் தேநீருக்காக சர்க்கரையை வெகுக் குறைவாகப் பயன்படுத்தியதும் கூட நினைவில் இருந்தது ) எங்கள் நேர்காணல் தொடங்கியது