சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
புதன், 17 ஆகஸ்ட், 2022

செங்கடல் முதல் நைல் நதி வரை: 6 (எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணம்) சுப்ரபாரதி மணியன் அமிதாபச்சன் ஆலீவ் எண்ணெய்யைத்தான் வீட்டில் பல ஆண்டுகளாய் சமையலுக்குப் பயன்படுத்துகிறாராம்.பாரசீக நாட்டு மக்களை அமிதாப்பச்சன் தோற்றத்துடன் ஒப்பிடும் போது அது உண்மை என்பது உறுதிப்படும் நாமெல்லாம் உடம்பு உபாதைகளின் போது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் போது அதன் விலை உறுத்தும். அதை சாதாரணமாக சமையலுக்குப் பயன்படுத்தி உடல் உரத்துடன் இருக்கும் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் நாட்டினர் பொறாமைப்படவே வைப்பர் ஒரு ஆலிவ் மரத்தின் வயது 2,244. மத்திய கிழக்கு நாடுகளில் மான்டினிக்ரோ என்ற நாடு இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள ஒரு ஆலிவ் மரத்தின் வயது 2,244. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மரம் பூமியில் உயிருடன் வாழ்ந்துவருகிறது. அதாவது இயேசுவின் வயதை விட இந்த மரத்தின் வயது அதிகம் இந்த மரத்தை உள்ளூர்க்காரர்கள் ஸ்டாரா மஸ்லீனா என்ற பெயரில் அழைக்கிறார்கள்.. இயேசு ஒலிவ மலையில் பிரசங்கம் செய்த பல நிகழ்ச்சிகள் உண்டு . இந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் தெரிந்ததே. இயேசுவோ ஒலிவ மலைக்குப் போனார். மறுநாள் அதிகாலையில் அவர் திரும்பவும் தேவாலயத்துக்குப் போனார். அனைவரும் இயேசுவிடம் வந்தனர். இயேசு உட்கார்ந்து மக்களுக்கு உபதேசித்தார். வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். அவள் விபசாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவுகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள். 5 மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல் எறிந்து கொல்லவேண்டும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீர் சொல்கிறீர்?” என்று கேட்டனர். 6 யூதர்கள் இந்தக் கேள்வியை இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்டனர். இயேசுவின் மீது ஏதாவது குற்றம் சுமத்தவே அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். 7 யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். பிறகு இயேசு மறுபடியும் கீழே குனிந்து தரையில் ஏதோ எழுத ஆரம்பித்தார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர். முதலில் முதியவர்கள் விலகினர்; பிறகு மற்றவர்கள் விலகினர். அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனியாக விடப்பட்டார். அவள் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தாள். இயேசு அவளை ஏறிட்டுப்பார்த்து, “பெண்ணே, எல்லோரும் போய்விட்டார்கள். ஒருவனும் உன்னைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆண்டவரே, எவரும் என்னைத் தண்டனைக்குட்படுத்தித் தீர்ப்பளிக்கவில்லை” என்றாள். பிறகு இயேசு, “நானும் உனக்குத் தீர்ப்பளிக்கவில்லை. இப்பொழுது நீ போகலாம், ஆனால் மறுபடியும் பாவம் செய்யாதே” என்றார். மீண்டும் இயேசு மக்களோடு பேசினார். அவர், “நானே உலகத்துக்கு ஒளி. என்னைப் பின்பற்றி வருகிற எவனும் ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்” என்றார். ஆனால் பரிசேயர்கள் இயேசுவிடம், “உன்னைக்குறித்து நீ பேசும்போது நீ சொல்வதை உண்மையென்று நீ மாத்திரமே கூறுகிறாய். ஆகையால் நீ சொல்லுகின்றவற்றை நாங்கள் ஒத்துக் கொள்ளமுடியாது” என்றனர். அதற்கு இயேசு, “ஆம், என்னைப்பற்றி நானே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்லுகின்றவற்றை மக்கள் நம்ப முடியும். ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதோடு எங்கே போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் உங்களைப் போன்றவன் இல்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்றும் எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது. சாதாரணமாக ஒருவனைப் பார்த்து கணிக்கிற விதத்திலேயே நீங்கள் என்னைப்பற்றி கணிக்கிறீர்கள். நான் எவரைப்பற்றியும் கணிப்பதில்லை. 16 ஆனால் நான் கணிக்கும்போது என் கணிப்பு உண்மையுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தீர்ப்பளிக்கும் காலத்தில் நான் தனியாளாக இல்லை. என்னை அனுப்பிய என் பிதா என்னோடு இருக்கிறார். இரண்டு சாட்சிகள் ஒரே உண்மையைச் சொன்னால் உங்கள் சட்டம் உண்மைதான் என்று ஏற்றுக்கொள்கிறது. நானும் என்னைப்பற்றி சொல்லுகிற ஒரு சாட்சி, அத்துடன் என்னை அனுப்பிய என் பிதாவும் எனது இன்னுமொரு சாட்சி” என்றார். மக்கள் அவரிடம் “உன் பிதா எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். “நீங்கள் என்னைப் பற்றியும் என் பிதாவைப்பற்றியும் அறியமாட்டீர்கள். ஆனால் நீங்கள் என்னை அறிந்துகொண்டால் என் பிதாவையும் அறிந்துகொள்வீர்கள்” என்று பதிலுரைத்தார். பிரசங்கங்கள் செய்ய கடலையும் ஒலிவ மரக்காடுகளையும் யேசு விரும்பி தேர்வு செய்திருக்கிறார் . உலகத்திலுள்ள எல்லா மரங்களிலும் விசேஷமான மரம், "ஒலிவ மரம்" தான். அதன் இலைகளிலும், தண்டுகளிலும் விசேஷித்த எண்ணெய் நிரம்பியிருக்கிறது. அதமுழு உலகமும், ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட்டபோது, அனைத்து மரங்களும், நீரால் அழுகிப்போனபோது, ஒலிவமரமோ, எல்லா தண்ணீர்களுக்கும் மேலாக, அலங்காரமாய் தன்னுடைய இலைகளை காண்பித்தது. அது வெற்றிக்கு அடையாளம். 'எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும், நான் நிலைகுலைந்து போவதில்லை. தலைநிமிர்ந்து நிற்பேன்' என்று சொல்லுகிறதுபோல, இருக்கிறது. நோவாவின் பேழையிலிருந்து புறப்பட்ட புறா, ஒலிவ இலையை கொத்திக்கொண்டு, நோவாவிடம் போய் கொடுத்தது. இந்தியாவிலே, பெண் கேட்டு வருகிற மாப்பிள்ளையிடம், உங்களுக்கு வீடு வாசல் உண்டா? சம்பாத்தியம் எவ்வளவு? என்று கேட்பார்கள். ஆனால் இஸ்ரவேல் தேசத்திலே, பெண் கேட்டு வருகிற மாப்பிள்ளை வீட்டாரிடம், பெண்ணின் தகப்பனார் கேட்கிற முதல் கேள்வி, "மாப்பிள்ளைக்கு ஒலிவத் தோப்பு உண்டா?" என்பதே. பின்புதான், அத்தி மரங்களைப் பற்றியும், திராட்சத் தோட்டங்களைப் பற்றியும் விசாரிப்பார்கள். காரணம், ஒலிவ தோப்புகள், அவ்வளவு ஆசீர்வாதத்தையும், செழிப்பையும், வருமானத்தையும் கொண்டு வருகின்றன. இயேசு ஜெபிக்கப் போகும்போது, ஒலிவ மலையிலுள்ள, ஒலிவ மரங்களால் நிறைந்திருக்கிற கெத்செமனே தோட்டத்துக்குப் போனார். அங்கே, பிதாவினுடைய சமுகத்தில் தன்னுடைய இருதயத்தை ஊற்றி ஜெபித்தார். தேவபிள்ளைகளே, உங்களுடைய அலங்காரம் என்ன? உங்களுடைய மேன்மை என்ன? அது, அபிஷேகம் நிறைந்த வாழ்க்கையாக, இருக்கட்டும். ஊக்கமான ஜெபமாயிருக்கட்டும். சங்கீதக்காரன் சொன்னார், "உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக, உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது" (சங். 93:5). 0 ஒலிவ மரம் பார்ப்பதற்கு அப்படியொன்றும் அழகான மரம் இல்லை. லீபனோனின் கம்பீரமான கேதுரு மரங்களைப் போல வானளாவ உயர்ந்து நிற்கும் மரமும் இல்லை. தேவதாரு போல அதன் மரம் அவ்வளவு விலைமதிப்புள்ளதுமில்லை. வாதுமை மரத்தின் பூக்களைப்போல அதன் பூக்களுக்கு மனதைக் கொள்ளைகொள்ளும் அழகும் இல்லை. (உன்னதப்பாட்டு 1:17; ஆமோஸ் 2:9) ஒலிவ மரத்தின் சிறப்பம்சம் மண்ணுக்கடியில் மறைந்துள்ளது. நிலத்துக்கு அடியில் ஆறு மீட்டர் ஆழத்திலும், பக்கவாட்டில் அதைக்காட்டிலும் அதிக தூரத்திலும் பரந்து அகன்று செல்லும் இதனுடைய வேர்களே மரத்தின் வளத்துக்கும் அழியாத உறுதிக்கும் காரணமாகும். வறட்சி காலத்தில் கீழே பள்ளத்தாக்கில் இருக்கும் மற்ற மரங்கள் காய்ந்துபோனாலும் மலைச்சரிவுகளிலுள்ள ஒலிவ மரங்கள் காய்ந்துபோவதில்லை. முடிச்சு முடிச்சாக காணப்படும் அடிமரத்தைப் பார்த்தால் இது விறகுக்குத்தான் ஆகும் என்று தோன்றும்; ஆனாலும் அடிவேர்கள் பல நூற்றாண்டுகளுக்கு ஒலிவப் பழங்களைத் தர உதவுகிறது. இந்த உறுதிவாய்ந்த மரம் வளருவதற்கு, இடமும் சுவாசிப்பதற்கு காற்றோட்டமுள்ள மண்ணும் இருந்தால் போதும். களைகளும் நாசம் விளைவிக்கும் தாவரங்களும் இல்லாமல் இருந்தால் போதும். இப்படி இருந்தால் ஒரு மரத்திலிருந்து வருடத்துக்கு சுமார் 57 லிட்டர் எண்ணெய் கிடைத்துவிடும். இஸ்ரவேலர் மிகவும் பயனுள்ள இந்த எண்ணெயை பெற்றதால் ஒலிவ மரத்தின்மேல் மிகவும் பிரியமாயிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒலிவ எண்ணெயில் எரிந்த குத்துவிளக்குகளால் "அவர்களுடைய வீடுகள் பிரகாசமாயின". (லேவியராகமம் 24:2) சமையலுக்கு ஒலிவ எண்ணெய் இன்றியமையாததாக இருந்தது. சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்தது. இஸ்ரவேலர் அதிலிருந்து சோப்பு தயாரித்தனர். தானியம், திராட்சை, ஒலிவ பழங்கள் அவர்களுடைய முக்கிய பயிர்கள். ஒலிவ அறுவடை தவறிப்போனால் அது இஸ்ரவேலர் குடும்பத்துக்கு பெரிய நஷ்டமாக இருக்கும்.— (உபாகமம் 7:13; ஆபகூக் 3:17.) பொதுவாக ஒலிவ எண்ணெய் குறைவில்லாமல் ஏராளமாக கிடைத்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை மோசே 'ஒலிவ மரங்களுள்ள தேசம்' என்று குறிப்பிட்டதற்கு காரணம், அந்தப் பகுதியில் அதிகமாகவே அது வளர்க்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டில் கிட்டத்தட்ட அழிக்க முடியாத ஒரு மரம் வளருகிறது! அதை எத்தனைமுறை வெட்டிச் சாய்த்தாலும் அதன் அடிவேர் இருக்கும் வரை மறுபடியும் மறுபடியும் குருத்து விடுகிறது. மரத்தின் சொந்தக்காரருக்கு சமைக்க, விளக்கு எரிக்க, மற்றும் அழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான சாதனங்களை தயாரிக்க ஏராளமான எண்ணெயை வாரி வாரி வழங்குகிறது. பண்டையகாலக் கதை ஒன்று நியாயாதிபதிகள் என்ற பைபிள் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, “விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி” போயின. காட்டு மரங்களில் அவை விரும்பித் தேர்ந்தெடுத்த மரம் எது என்று தெரியுமா? அசைக்க முடியாதவாறு எதையும் தாங்குவதும், வளத்தை அள்ளித் தருவதுமான ஒலிவ மரமே.—நியாயாதிபதிகள் 9:8. 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கதரிசியாகிய மோசே பண்டைய இஸ்ரவேல் தேசத்தை ‘நல்ல தேசம், ஒலிவமரங்களுள்ள தேசம்’ என்று வருணித்தார். (உபாகமம் 8:7, 8) இன்றும்கூட வடக்கே எர்மோன் மலை அடிவாரத்திலிருந்து தெற்கே பெயர்செபா எல்லை வரையாக ஒலிவ மரத்தோப்புகளை ஆங்காங்கே காணமுடிகிறது. சாரோனின் கரையோரம், சமாரியாவின் பாறைகள் நிறைந்த மலைச்சரிவுகள், கலிலேயாவின் செழிப்பான பள்ளத்தாக்கு ஆகியவற்றை இன்னும் அவை அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பைபிள் எழுத்தாளர்கள் ஒலிவ மரத்தை அடிக்கடி அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த மரத்தின் அம்சங்கள் கடவுளுடைய இரக்கத்தை, உயிர்த்தெழுதல் வாக்குறுதியை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை விளக்க உதவின. . இஸ்ரவேலர் மிகவும் பயனுள்ள இந்த எண்ணெயை பெற்றதால் ஒலிவ மரத்தின்மேல் மிகவும் பிரியமாயிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒலிவ எண்ணெயில் எரிந்த குத்துவிளக்குகளால் அவர்களுடைய வீடுகள் பிரகாசமாயிருந்தன. (லேவியராகமம் 24:2) சமையலுக்கு ஒலிவ எண்ணெய் இன்றியமையாததாக இருந்தது. சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்தது. இஸ்ரவேலர் அதிலிருந்து சோப்பு தயாரித்தனர். தானியம், திராட்சை, ஒலிவ பழங்கள் அவர்களுடைய முக்கிய பயிர்கள். ஒலிவ அறுவடை தவறிப்போனால் அது இஸ்ரவேல குடும்பத்துக்கு பெரிய நஷ்டமாக இருக்கும்.—உபாகமம் 7:13; ஆபகூக் 3:17. பொதுவாக ஒலிவ எண்ணெய் குறைவில்லாமல் ஏராளமாக கிடைத்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை மோசே ‘ஒலிவ மரங்களுள்ள தேசம்’ என்று குறிப்பிட்டதற்கு காரணம், அந்தப் பகுதியில் அதிகமாகவே அது வளர்க்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இயற்கைவாதி டிரிஸ்ட்ராம், ஒலிவ மரத்தை ‘தேசத்தின் தனிச்சிறப்பான மரம்’ என்று வருணித்தார். ஒலிவ எண்ணெய்க்கு தனிமதிப்பு இருந்ததாலும், அது மிகுதியாய் கிடைத்ததாலும் மத்தியதரைக் கடல் பகுதி முழுவதிலும் பயனுள்ள சர்வதேச செலாவணியாக பயன்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துகூட ஒருவர் பட்ட கடன் ‘நூறு குடம் ஒலிவ எண்ணெய்’ என்பதாக குறிப்பிட்டார்.—லூக்கா 16:5, 6. மிகவும் பயனுள்ள இந்த ஒலிவ மரம் தெய்வீக ஆசீர்வாதங்களை நன்றாகவே சித்தரிக்கிறது. கடவுள் பயமுள்ள ஒரு மனிதன் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறான்? “உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப் போல் இருப்பாள்” என்பதாக சங்கீதக்காரன் பாடினார். “உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.” (சங்கீதம் 128:3) இந்த “ஒலிவமரக் கன்றுகள்” யாவை? சங்கீதக்காரன் இவைகளை பிள்ளைகளுக்கு ஏன் ஒப்பிடுகிறார்? ஒலிவ மரத்தின் விசேஷம் என்னவென்றால் அதன் அடிமரம் புதிது புதிதாக துளிர் விட்டுக்கொண்டே இருக்கும்.* வயதாகும் போது அடிமரம், ஒரு காலத்தில் பலன்தந்தது போல கனி கொடுக்காமல் இருக்கலாம். அப்போது இந்த மரத்தை வளர்ப்பவர்கள் பல கன்றுகளை அல்லது இளங்கிளைகளை அப்படியே வளரவிட்டு விடுவார்கள். இவை மரத்தோடு சேர்ந்து அதன் முக்கிய பாகமாகிவிடும். சிறிது காலம் கழித்துப்பார்த்தால் அந்த வலுமிக்க அடிமரத்தைச் சுற்றி மூன்று அல்லது நான்கு கன்றுகள் பந்தியைச் சுற்றியிருக்கும் பிள்ளைகளைப் போலிருக்கும். இந்தக் கன்றுகளுக்கும் தாய்மரத்தின் அதே வேர்கள்தான் இருக்கும். இவை அனைத்தும் சேர்ந்து அமோகமாக கனிகொடுக்கும். ஒலிவ மரத்தின் இந்தத் தனிச்சிறப்பான அம்சம், பெற்றோரின் வலுமிக்க ஆவிக்குரிய வேரிலிருந்து பலத்தைப் பெற்று மகன்களும் மகள்களும் விசுவாசத்தில் எவ்வாறு உறுதியாக வளரமுடியும் என்பதை அழகாக விளக்குகிறது. பிள்ளைகள் வளர்ந்துவருகையில், கனிகொடுப்பதில் அவர்களும் சேர்ந்துகொண்டு பெற்றோருக்கு ஆதரவாய் இருப்பர். தங்களோடுகூட தங்கள் பிள்ளைகள் யெகோவாவை சேவிப்பதை பார்க்கும் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.—நீதிமொழிகள் 15:20. கடவுள் பாரபட்சமில்லாதவராக இருப்பதிலும் உயிர்த்தெழுதலுக்காக ஏற்பாடு செய்திருப்பதிலும் அவருடைய இரக்கம் வெளிப்படுகிறது. மனிதர்கள் எந்த இனத்தை அல்லது பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், யெகோவாவின் இரக்கம் எவ்வாறு அனைவருக்கும் கிடைக்கிறது என்பதை விளக்க பவுல் அப்போஸ்தலன் ஒரு ஒலிவ மரத்தை பயன்படுத்தினார். பல நூற்றாண்டுகளாக யூதர்கள் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாய், ‘ஆபிரகாமின் சந்ததி’யாக இருப்பதில் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.—யோவான் 8:33; லூக்கா 3:8. யூத சீஷர்களை பவுல் அடையாள அர்த்தமுள்ள ஓர் ஒலிவ மரக்கிளைக்கு ஒப்பிட்டு பேசினார். இயற்கையான யூதர்களில் பெரும்பான்மையினர் இயேசுவை நிராகரித்துவிட்டனர். இதனால் “சிறு மந்தை” அல்லது “தேவனுடைய இஸ்ரவேலின்” எதிர்கால உறுப்பினர்களாகும் தகுதியை இழந்தனர். (லூக்கா 12:32; கலாத்தியர் 6:16) இவ்வாறு அவர்கள் வெட்டி எறியப்பட்ட ஒலிவமரக் கிளைகளைப்போல ஆனார்கள். அவர்களுடைய இடத்தை யார் நிரப்புவார்? பொ.ச. 36-ல் ஆபிரகாமின் வித்தின் பாகமாக ஆவதற்காக புறஜாதியார் தெரிந்துகொள்ளப்பட்டனர். தோட்டத்தில் வளரும் ஒலிவமரத்தில் காட்டு ஒலிவ கிளைகளை யெகோவா ஒட்டவைத்தது போன்று இது இருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட ஆபிரகாமின் வித்தை உண்டுபண்ணுகிறவர்களில் புறஜாதி ஜனங்களும் இருப்பர். புறஜாதி கிறிஸ்தவர்கள் இப்போது ‘ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளி’களாக முடியும்.—ரோமர் 11:17. காட்டு ஒலிவ மரக்கிளையை தோட்டத்து ஒலிவ மரத்தில் ஒட்டவைப்பது என்பதை ஒரு விவசாயி நினைத்துக்கூட பார்க்கமாட்டான். அது “சுபாவத்திற்கு விரோதமாய்” இருக்கும். (ரோமர் 11:24) “நல்ல மரத்தை காட்டுமரத்தோடு ஒட்டவைத்தால் அராபியர் சொல்வது போல அது காட்டு மரத்தை கீழ்ப்படுத்தி அடக்கிவிடும், ஆனால் இதையே மாற்றிச் செய்தால் வெற்றி கிட்டாது” என்று தி லாண்ட் அண்டு தி புக் என்ற புத்தகம் விளக்குகிறது. இதைப் போன்றுதான் யெகோவா “புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்கு” கவனம்செலுத்திய போது யூத கிறிஸ்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 10:44-48; 15:14) கடவுளுடைய நோக்கம் நிறைவேற்றப்படுவது எந்த ஒரு தேசத்தையும் சார்ந்ததில்லை என்பதற்கு இது தெளிவான ஒரு அடையாளமாக இருந்தது. ஆம், “எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.”—அப்போஸ்தலர் 10:35. ஒலிவ எண்ணெயை சொல்லர்த்தமாகவும் அடையாள அர்த்தமாகவும் இரண்டு விதமாக பயன்படுத்துவதைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது. பண்டைய காலங்களில், காயங்களும் இரணங்களும் சீக்கிரமாய் ‘ஆறுவதற்கு எண்ணெய்’ பயன்படுத்தப்பட்டது. (ஏசாயா 1:6) இயேசுவின் உவமைகள் ஒன்றில் நல்ல அயலானாக இருந்த சமாரியன் எரிகோவுக்கு போகும் வழியில் அவன் சந்தித்த அந்த மனிதனின் காயங்களில் ஒலிவ எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து கட்டினான்.—லூக்கா 10:34. ஒலிவ எண்ணெயை தலைக்குத் தேய்த்தால் அது புத்துயிரளிப்பதாகவும் இதமாகவும் இருக்கும். (சங்கீதம் 141:5) ஆவிக்குரிய நோயினால் பீடிக்கப்பட்டவனைக் கையாளும்போது கிறிஸ்தவ மூப்பர்கள் ‘கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசு’வார்கள். (யாக்கோபு 5:14) மூப்பர்கள் தரும் அன்புள்ள வேதப்பூர்வமான புத்திமதியும், ஆவிக்குரிய நோயில் இருக்கும் உடன்விசுவாசிகளுக்காக அவர்கள் செய்யும் ஊக்கமான ஜெபமும், காயத்தை ஆற்றும் ஒலிவ எண்ணெய்க்கு ஒப்பிடப்பட்டுள்ளது. எபிரெய மொழிவழக்கில் ஒரு நல்ல மனிதனை “சுத்தமான ஒலிவ எண்ணெய்’ என்று சில சமயங்களில் கூறுவார்கள் என்பது சுவாரஸ்யமாய் உள்ளது. ஒலிவ மரம் ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவனுக்கு அடையாளமாக இருக்கிறது. இவர் உலகத்துக்கு அறியப்படாதவராய் இருக்கலாம். ஆனால் கடவுள் அவரை அங்கீகரிக்கிறார். இப்படிப்பட்ட ஒருவர் இந்த ஒழுங்குமுறையில் மரிக்க நேர்ந்தால் அவர் வரப்போகிற புதிய உலகில் மீண்டும் வாழ்வார்.—2 கொரிந்தியர் 6:9; 2 பேதுரு 3:13. வருடந்தோறும் கனிகொடுத்துக் கொண்டே இருக்கும் பட்டுப்போகாத இந்த ஒலிவ மரம் கடவுளுடைய வாக்குறுதியை நமக்கு நினைப்பூட்டுகிறது: “விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.” (ஏசாயா 65:22) அந்தத் தீர்க்கதரிசன வாக்குறுதி கடவுளுடைய புதிய உலகில் நிறைவேற்றமடையும்.—2 பேதுரு 3:13. ஒலிவ மரம் ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவனுக்கு அடையாளமாக இருக்கிறது. அதானால் இந்துக்கள் ஆலமரத்தையும், வேப்ப மரத்தையும், பூவரசம் மரத்தையும் பார்த்து புளகாங்கிதம் அடையும் போது கிறிஸ்தவர்கள் ஒலிவ மரங்களைப் பார்த்துப் பெருமைப்படுவதைக் கண்டேன்.வார்டு இணைய தள தகவல்கள் இவை. இதயத்திற்கும் உடலுக்கும் இதமாக இருக்கிறது என்று பாரசீக மக்கள் மட்டுமல்ல .. எல்லோரும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது அதைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்பு. அமிதாபச்சன் சொன்ன பின்னால் அப்சக்ஷன் ஏது..