சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

சூழலியல் : சுப்ரபாரதிமணியன் ” இயற்கை, பூமி இவை மனிதனின் சாதாரணமான ஆசைகளை சாதாரணமாகவே நிறைவேற்றும் ஆனால் மனிதனின் பேராசையை நிறைவேற்றாது “ என்ற காந்தியின் வாசகம் சூழலுடன் ஒவ்வொரு கணத்திலும் இணைக்கப்படுகிறது மனிதனின் பேராசையும் இயற்கையைச் சுரண்டி சூழல்களை தொடர்ந்து நாசம் செய்து கொண்டிருக்கிறது .இயற்கை வளங்களை மனிதர்கள் அதிக உரிமை எடுத்துக் கொண்டு சுரண்டு வருவதும் மனிதனின் பயன்பாட்டிற்காகவே இருப்பதாக எண்ணிக்கொண்டு செயல்படுவதை மறுக்கும் சூழலியல் என்ற கோட்பாட்டை ஆர்ணே நேஸ் என்ற இயற்கையாளர் முன்வைக்கிறார் . மனிதர்களை மையம் கொண்டிருக்கிற இந்த வகை அணுகுமுறையை இந்தச் சூழலியல் கொள்கைகள் விமர்சிக்கின்றன. பூமி மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. தங்களுக்காக இயற்கையை மாற்றி கொள்ளலாம். அது ஒருவகையில் எப்போவதாவது பெரிய அளவில் கேட்டை உருவாக்கும். .அப்படி கேடுகளை கட்டிக்கொண்டு மனிதனை பாதுகாத்துக்கொள்ள புதுவரையறைகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுவதை சூழலியல் கொள்கைகள் விமர்சிக்கின்றன. இதன் மூலம் கானுயிர் பல்லுயிர் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இயற்கை பின்பற்றி எளிய வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்க வேண்டும். இயற்கையை பெருமளவில் சேதப்படுத்தாமல் இருக்க அளவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையே சாரமாக இருக்க வேண்டியிருக்கிறது .பூமியில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் சமமான உரிமை உண்டு. ஓர் உயிரினம் மீது மற்றொரு உயிரினம் அதிகாரம் செலுத்த எந்தவித உரிமையும் இல்லை . மனித உயிர்கள் மற்றும் மனிதர் அல்லாத பிற உயிரினங்களின் வாழ்வு மனிதர்களின் பயன்பாட்டிற்கான அளவுகோலை சார்ந்ததல்ல . மனிதன் தன் அடிப்படை தேவைகளை பூமியை கொண்டு நிறைவேற்றிக் கொள்ளலாம் . அதை மீறி பூமியின் செழுமையை சுரண்ட மனிதர்களுக்கு உரிமையில்லை பெரியது , சிறப்புடையது என்ற கருதுகோள்களில் உடன்பாடு இல்லாமல் எல்லா உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதை ஆர்ணே நேஸ் நேஸ் வலியுறுத்தி இருக்கிறார். .இயற்கை மனிதனால் சுரண்டப்படுகிறது.பூமியில் வாழும் பிற உயிரினங்களும் சுரண்டப்படுகிறது. அதேபோல் சமூகச் சூழல்களில் பெண்களும் சுரண்டப்பட்டு வருகிறார்கள் . என்பதை ஆண் சூழலியல் அடிப்படைவாதம் என்று சொல்லப்படுவதுண்டு. இதற்கு எதிராக பெண் சூழலியல் முன்வைக்கப்படுகிறது.சூழலியலில்தான் எத்தனை பிரிவுகள்.. உயிர்களை ஒருவரின் விருப்பமும் தேவையும் சார்ந்து பயன்படுத்திக் கொள்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று ஆர்ணே நேஸ் சூழலியல் சொல்கிறது . மனிதர்களை முதன்மைப்படுத்தும் சூழலியல் அணுகுமுறைக்கு எதிரானதாக இருக்கும் வேளையில் மனிதனுக்கு எவ்விதத்திலும் எதிரானதல்ல என்று தீர்க்கமாகச் சொல்லப்படுகிறது . . இயற்கை சூழலில் தான் தேவை என்று வலியுறுத்திய ஆர்ணே நேஸ் காந்தியத்தில் நம்பிக்கையுடைய்வர். 2009இல் lமரணமடைந்த நார்வேக்காரர். அவருக்குப் . பிடித்தமானதை பற்றி பட்டியலிடலாம் .. பிடித்த வர்ணம் பச்சை, பிடித்த விலங்கு எலி பன்றி , , அவருக்குப் பிடித்த படம் ஆட்டன் பரோவின் காந்தி திரைப்படம் . கொல்ல வருவது பசுவென்றாலும் கொன்று விடு என்றார் காந்தி. காயப்பட்டு துடிக்கும் விலங்குகளை காப்பாற்றுவதை விட கொல்வது சிறந்தது என்பார் அர்னே. 96 வயதில் இறந்தார் . காந்தியைப் போலவே அவரை பாதித்தவர் ராக்சல் கார்சன் . அவரின் மௌன வசந்தம் நூல் மூலமாகவும் . நல்ல மலையேற்ற பயிற்சியாளராகவும் விளங்கினார் . பெரிய அணைகளை கட்டுவதற்கு இடம் எதிராக போராட்டங்களை நடத்தியவர். இளம்வயதில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். புரட்சி என்பது மனதில் அடியில் இருந்து தொடங்கப்பட வேண்டும். அது கொண்டு செல்லப்படும் நோக்கம், செயல் முறைகள் குறித்து தெளிவாக சிந்தனைவேண்டும். புரட்சியோ போராட்டங்களோ மனிதர்களின் நுகர்வு வாழ்க்கைக்கு அல்ல எல்லாமும். இயறகைக்காகவும் பிற உயிரினங்களின் வாழ்வுரிமைக்காகவும் அவை என்பதை வலியுறுத்தியவர் . அவர் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் அக்கறை கொண்டு கருத்துக்களை முன்வைக்கிறார் ஒரு நாளைக்கு 100 உயிரினங்கள் வீதம் ஒரு வருடத்திற்கு ஒன்றரை லட்சம் உயிரினங்கள் மனிதர்களால் அழிகின்றன . இது இயற்கை ஏற்படுத்தும் உயிரின அழிவை விட பத்தாயிரம் மடங்கு அதிகம். சூழல் சமன்பாட்டை உருவாக்க உலக மக்கள் தொகை 100 மில்லியன் அளவிற்கு இருக்க வேண்டும் என்றார். மனிதர்களுக்கு பூமி மீது எவ்வளவு உண்மையோ அதே அளவு உரிமை மற்ற உயிரினங்களுக்கும் உண்டு என்பதை நம்பியவர் . ஆர்ணே நேஸ். அதை நம்பாமல் நம் நுகர்வு வாழ்க்கை இயற்கையிலிருந்து விலகி ரொம்ப தூரமாய் போய்க் கொண்டிருக்கிறது .வியாதிகளும் மருத்துவமனைகளும் நெருங்கி வந்து விட்டன. 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003 போப் சூழலியல் தமிழில் : சுப்ரபாரதிமணியன் ) ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக உணவு தின மையமாக “ பருவநிலை மாறுகிறது, உணவும் வேளாண்மையும் மாற வேண்டும் ” என்பதை தெரிவு செய்துள்ளது. பட்டினிக்கு எதிரானப் போரில் வெற்றி பெறுவதை மேலும் கடினமானதாகக் கருத வைக்கிறது, அதுவும் பருவநிலை மாற்றம் போன்ற ஒரு சிக்கலான சூழ்நிலையில். இயற்கை மனிதனுக்கிடும் சவால், இப்படி மனிதன் இயற்கைக்கிடும் சவால் ஆகியவற்றை எதிர்கொள்வதைப் பொறுத்தமட்டில், நான் சில கருத்துகளை சிந்தனைக்கு முன் வைக்க விரும்புகிறேன். தற்போதைய பருவநிலை மாற்றத்திற்கான காரணம் என்ன? நம்முடைய தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்புகளைக் கேள்வி கேட்க வேண்டும். புள்ளி விவரங்கள், முரண்பட்ட கணிப்புகள் போன்றவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் எளிய கேள்விகளைக் கேட்க வேண்டும். இப்படிச் சொல்வதனால் அறிவியல் தரவுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அவற்றுக்கான தேவை முன்பைவிட அதிகம் இருக்கிறது. ஆனால், வெறும் தரவுகள், அதன் விளைவுகள் என்று நின்று விடாமல் அதையும் தாண்டி நாம் பார்க்க வேண்டும். நம் ஒவ்வொரு வருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு, படைப்பு மற்றும் அதன் ஒழுங்கின் பாதுகாவலர்களாக நமக்கிருக்கும் பொறுப்பு, இவையனைத்தும் தற்போதய மாற்றங்களுக்கான வழித்தடத்தை கண்டறிந்து அதன் மூலத்திற்குச் செல்ல நம்மை இட்டுச் செல்கிறது. முதலில், பருவநிலையின் பல எதிர்மறை விளைவுகள், மக்கள், இனக்குழுக்கள், நாடுகளின் சீர்கெட்ட தினசரி நடவடிக்கைகளினால் உருவானவை என்பதை நாம் ஒப்புக்கொண்டும். இதை அறிந்த பின்பு, நெறிமுறை மற்றும் தார்மீக அறம் சார்ந்த மதிப்பீடுகள் மட்டும் இதனைச் சரி செய்ய போதவே போதாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அரசியல் தளத்திலும் நாம் இயங்கியாக வேண்டும். தேவையான சில முடிவுகளை எடுக்க, குறிப்பிட்ட சில வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்க அல்லது புறக்கணிக்க, எதிர்காலத் தலைமுறையின் நலம் பொருட்டு அரசியல் தளத்தில் இயங்குவது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலமே நாம் உலகைப் பாதுகாக்க முடியும். நாம் நடைமுறைப்படுத்த நினக்கும் செயல்களைப் பொருந்த் திட்டமிட வேண்டும். உணர்வின் விளைவாக இருத்தல் கூடாது. அவற்றைத் திட்டமிடுவது அவசியமாகும். இப்பணியில் தலைப்பட்டிருக்கும் அமைப்புகளின் பங்கு இன்றியமையாததாகும். பொதுமக்கள், பொது மற்றும் தனியார் அமைப்புகள், தேச மற்றும் சர்வதேச எந்திரங்களின் கட்டுக்கோப்பான பிணைப்பாகச் செயல்படும் போதே அவை திறன்மிக்கதாக அமையும். எனினும், இந்த பிணைப்பு பெயரற்றதாக இருக்க முடியாது. சகோதரத்துவத்துடன் மூல ஒற்றுமையின் அடிப்படையில் செயல்பட்டாக வேண்டும். கால்நடை, விவசாயம், மீன்பிடி தொழில், ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் மக்கள், காடுகள் அல்லது கிராமங்களில் பருவ நிலை மாற்றத்தினுடைய விளைவுகளின் நேரடித் தொடர்புகளோடு வாழும் மக்கள், பருவநிலை மாற்றம் கொண்டால் தங்கள் வாழ்வும் பாதிக்கப்படும் என்பதை தெரிந்துள்ளனர். அவர்களின் தினசரி வாழ்வு சிக்கலான மற்றும் சில நேரங்களில் அதீத சூழ்நிலைகளால் பாதிப்படைகிறது, எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது. இதன் தொடர்ச்சியாய் அவர்களின் வீட்டை, பிரியமானவர்களைக் கைவிடும் எண்ணமும் மேலெழத் தொடங்குகிறது. அமைப்புகளால், தொழில்நுட்பங்களினால், அவ்வளவு ஏன் – நம்முடைய எண்ண அளவிலே கூட கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்ட உணர்வின் வலி இருக்கிறது. மக்களின் இலாப நோக்கங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில். நாட்டுப்புற வாசிகளின் மரபார்ந்த அறிவைக் கொண்டு, நாம் நுகர்வு,உற்பத்தி சார் தர்க்கங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளலாம். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் துறைகளில் பணியாற்றுபவர்களுள் தங்களைச் சர்வ வல்லமை படைத்தவர்களாக எண்ணிக் கொள்ளக் கூடிய நபர்கள் கூடி உள்ளனர். பருவ மாற்ற சுழற்சியைக் கருத்தில் கொள்ளாமல், பல்வேறு விலங்கு மற்றும் தாவர வகைகளைக் குறைபட்ட வகையில் மாற்றியமைக்கவும் செய்கின்றனர். இதனால், உயிர்களின் பன்முகத்தன்மை அழிவுறுகிறது. ஓர் உயிர் இயற்க்கையில் உள்ளதெனில் அதற்கென்று பங்கு இருக்கும், இருந்தாக வேண்டும். ஆய்வகங்களில் அற்புதமான விளைச்சல்களைத் தரும் வகைகள் சிலருக்கு நன்மை அளிக்கும் ஆனால் மற்றவர்களுக்கு அது அழிவு தருவதாக அமையும். எச்சரிக்கை என்ற அளவில் மட்டுமே நம் கொள்கை முடங்கிவிடக் கூடாது. சமநிலையோடும் நேர்மையோடும் செயல்படும் முறையை நாம் வகுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு வகை தாவரத்தின் மரபணுத் தேர்வு, உற்பத்தி அளவில் விரும்பத்தக்க நல்ல முடிவுகளைக் கொடுக்கலாம். ஆனால், தன் உற்பத்தி வளத்தை இழக்கும் நிலத்தை பற்றி நாம் கருத்தில் கொண்டோமா? தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை இழக்கும் விவசாயிகளின் கதி, பயன்படுத்த முடியாதவாறு ஆகும் நீர் வளங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக எந்த அளவுக்கு நாம் பருவநிலையை மாற்றுகிறோம் என்ற கேள்வியையாவது கேட்டோமா? தேவை எச்சரிக்கை உணர்வல்ல, ஞானம்; எதை விவசாயிகளும் மீனவர்களும் தங்கள் நினைவில் பாதுகாத்து தலைமுறைத் தலைமுறைகளாக அளித்தார்களோ, எது இப்போது உலகில் ஒரு சிலருக்கு மட்டும் முழுமையாகப் பயனளிக்கக் கூடியதாக அமைந்திருக்கும் உற்பத்தி முறைகளால் ஏளனமாகப் பார்க்கப்பட்டும் மறக்கப்பட்டும் வருகிறதோ அந்த ஞானம். நினைவில் கொள்ளுங்கள். இப்போதுள்ள முறைதான், அதன் எல்லா அறிவியல் கூறுகளைக் கொண்டிருந்தும், எண்பது கோடி மக்களைப் பட்டினியோடு உழல வைக்கிறது. இவை போன்ற அவலங்கள் நீடித்திருப்பது, இந்த அமைப்பைப் போல பல்வேறு சர்வ தேச அமைப்புகள் தினசரி எதிர்கொண்டு சமாளிக்கும் அவசரகால நடவடிக்கைகளில் நன்றாகவே பிரதிபலிக்கிறது. பருவநிலை மாற்றத்தை ஏதோ வானிலை ஆய்வோடு தொடர்புடையது என்று மட்டும் குறுக்கிவிட முடியாது. அது மக்களைத் தங்களின் இடம்விட்டு குடிபெயர வைக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா? பருவநிலை மாற்றத்தால் பெரிய அளவில் குடிபெயர்வுகள் நடந்துகொண்டிருக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள் பெருந்திரளான மக்கள் நிர்கதியாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெரிய மனிதக் குடும்பத்தில் பங்கு பெற முடியாமல் தனித்து விடப்படுகிறகள். அவர்களுக்கான இடத்தை எந்த அரசாங்கமோ அதிகாரமோ வழங்க முடியாது. மனிதர் என்ற அளவிலேயே அவர்களுக்கு அதை எடுத்துக் கொள்வதற்கான கண்ணியமும் உரிமையும் இருக்கிறது. அடிப்படை வாழ்வாதாரத்தை வேண்டி நிற்பவர்களைக் கண்டு மனம் கலங்கி நெகிழ்ந்தால் மட்டும் போதாது. சீரிய முடிவுகளும் நடவடிக்கைகளும் தேவை. சமத்துவமாக உணவை விநியோகித்தோம் என்றால் இந்த உலகில் அனைவருக்கும் உணவளிக்க போதுமான அளவு உற்பத்தி இருக்கிறது. நாம் இதைப் பலமுறை கத்தோலிக்க திருசபை வாயிலாகவும் சொல்லியிருக்கிறோம். ஆனால், இப்போது? தற்கால வணிக முறைகளின்படி உற்பத்தியை உணவு தவிர்த்து மற்ற பயன்பாட்டுகளுக்காக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது? பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவைப் பெற வழியில்லாத வரையில், மற்றவர்களிடம் கையேந்தும் நிலையுள்ள வரையில், தேவைக்கும் நுகர்வுக்கும் இடையே சரியான சமன்பாடு உருவாகத வரையில், உணவு வீணாவதைத் தடுக்காத வரையில்,இப்போதுள்ள உணவு விநியோக இயங்குமுறை வெறும் கோட்பாட்டளவில் தான் சரியானதாக இருக்கும். இந்த மாற்றத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியமாகும்; அரசியல் கொள்கை முடிவெடுப்போர், நிலத்தை உழுவோர், மீன் பிடிப்போர், காடுகளை பயன்படுத்துவோர் என ஒவ்வோருவரும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து ஒரே நோக்குடன் செயல்பட்டால், வளர்ச்சி வெரும் ஒரு சிலருக்கானதல்ல, படைப்பில் உருவான பொருட்கள் எதுவும் அதிகாரம் படைத்தவர்களின் வம்சச் சொத்தல்ல என்ற நிலையை உருவாக்கலாம். எவ்வளவோ ஆக்கப்பூர்வமான வழிமுறைகளும் சிறந்த பழக்கங்களும் இருக்கின்றன. நாம் செயல்படுவதற்கான ஆசை, அந்த செயலால் விளையும் பயன்களைக் கருதி அமையக்கூடாது. மாறாக, மக்களின் வாழ்விற்கும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குமான அவசியத் தேவையோடு தொடர்புடையது அது என்ற புரிதல் வேண்டும். ஆண்மீகமோ அல்லது பொருள் தேடலோ, எதுவாயினும் அது ஒரு சிலரின் முடிவுகளுக்கேற்ப அமைவதல்ல. மனிதர், மனித உயிர் இவை ஒன்றும் சோதனைக் கருவிகள் அல்ல. உணவென்பது வெறும் பொருளீட்டுவதற்கான கருவி அல்ல. அப்படிப் பட்ட சிந்தனையே உணவை வீணாக்க வைக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தேவையான அளவுக்கு ஆரோக்கியமான உணவை உண்ண உரிமை இருக்கிறது என்பது இயற்கை விதி. ஒற்றுமைப் பண்பை நடைமுறையில் பொருளாதரத்திற்குப் பங்களிக்கும் ஒன்றாக, சகோதரத்துவத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆட்சிமுறையின் அடிநாதமாக ஆக்க அவை செயல்படும் என்று நம்புகிறேன். அதில் சாமானிய மற்றும் விளிம்புநிலை மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பருவநிலை மாற்றம் குறித்த அக்கறைகளும் பயங்களும் பதட்டங்களும் கலந்திருக்கின்றன. ( போப் போன் பிரான்சிஸ் கடிதம் 2016..தமிழில் : சுப்ரபாரதிமணியன் )