சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022
July 2022 ? uyirmme monthly
சிறுகதை : சுப்ரபாரதிமணியன்
பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்..
சித்ராவிற்கு அந்த குமரன் பஞ்சாலைக்குச் செல்கிற போதெல்லாம் தான் ஏதோ ஒரு வகையில் உடல்ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்பது மனதில் பயத்தை கிளப்பிக் கொண்டு இருந்தது.அப்படியெதுவும் இதுவரை நடந்ததில்லை.
இந்த முறையும் பஞ்சாலையின் முகப்பில் சென்று காவலாளிக்கு வணக்கம் செலுத்திய போது அவன் பார்த்த பார்வையில் ஏனோ உடம்பு நடுங்கியது .அவள் கழுத்தில் இருந்த அடையாள அட்டைகயிற்றுடன் தொங்கி விளையாட்டு காட்டியது.இந்த எண்ணம் விபரீதம் என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.. அவள் கைப்பையில் சமீபத்தில் சங்கு கழுத்து வடிவமைப்பில் ஒரு சின்ன பேனாக் கத்தி வைத்திருக்கிறாள் . பேனா கத்தி என்பதை ஒருவரும் அறியமாட்டார்கள் பேனா போல் எழுதுவதற்கு இருக்கும் .மறுபுறம் விரித்தால் கூர்மையான கத்தியை தென்படும். அதை ஏன் தன் கைக்குள் அடக்கி கொண்டாள் என்பதில் அவளுக்கு ஆச்சரியம் இருந்திருக்கிறது. தன் தன்னார்வ குழுவின் இயக்குனர் மனோகரனிடம் தற்காப்புக்காக ஒரு பெப்பர் ஸ்பிரே வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டாள். அதற்கெல்லாம் நிதி வசதி உள்ளதா என்றார்.
” உனக்கு அந்த ஸ்பின்னிலிங் மில்லுக்கு போய்ட்டு வர்ற பஸ் டிக்கட் கட்டணம் கூடத் தர முடியாமெ பல சமயம் சிரமப்படறம் . இதுல.. இதெல்லாம் என்ன விபரீத கற்பனை. “
இந்த முறை அந்த பஞ்சாலைக்கு அவள் செல்வது 17ஆவது முறை .அவளின் இன்னொரு சக தோழியான ஜெபம் மேரி இன்னொரு தன்னார்வக் குழுவில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் தியாகி பஞ்சமர் பஞ்சாலைக்கு முப்பதாவது முறை சென்றவள். அந்தப் பஞ்சாலையின் முதலாளியை முப்பதாவது முறைச்சென்றபோதே சந்திக்க முடிந்திருக்கிறது. அதனால் பதினேழு முறைகள் என்பதெல்லாம் மிக சாதாரணம் தொடர்ந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நிர்வாகிகளோ முதலாளியோ கண்ணில் படுவர். பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றாள்
அவளின் குழுவிலிருந்து சொல்லப்படுகின்ற பணி அந்த பஞ்சாலையில் உள்ள தொழிலாளருக்கு சுகாதாரம் மற்றும் உடல்நலம் குறித்த வகுப்பெடுக்கும் ஒப்பந்தத்தில் நிர்வாகத்தை உடன்பட வைப்பது. அதை நிர்வாகத்திடம் பேசி ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்து பெறுவது தான் .அதற்குப் பின் தொடர்ச்சியாக அவள் அங்கு அந்த வகுப்புகளில் பாட எடுக்கச் செல்லலாம் என்பதை உணந்திருந்தாள் .தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளை பற்றி சொல்லித் தரலாம் .அங்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதில்லை என்ற ரீதியில் பிரச்சாரத்தையும் துவங்கி அந்த பஞ்சாலை பிரதேசம் பாலியல் அத்துமீறல்கள் இல்லாத பிரதேசம் என்று ஒரு பெரிய விழாவில் அறிவிக்கப்படும். தொடர்ந்து அவளின் அந்த பஞ்சாலை சார்ந்த விழிப்புணர்வு வேலைகள் அங்கு நடைபெறும் . அடுத்த புராஜெக்ட்டில் வேறு தன்னார்வக் குழுவில் இன்னும் சம்பள உயர்வுடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த நல்ல வார்த்தைகளுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும் .
பஞ்சாலை முகப்பில் இருந்த காவலாளி சற்றே மாநிறத்துடன் இருந்தான். அவனுக்கு உச்சமாய் இருபத்தைந்து வயது கூட இருக்காது. இதுபோன்ற காவலாளிகள் பெரும்பாலும் வயதானவர்களாக தான் இருப்பார்கள், ஆனால் அந்த காவலாளிக்கு இளம் வயது . ஒரு குடும்பஸ்தராக கூட இருக்க மாட்டார் என்று நினைத்தாள்.தன்னைப் போல.
ஆனால் வெயிலிலும் அலைச்சலிலும் அவள் முகம் வாடி இருந்தது.அவன் கூர்ந்து அவளின் கவலை தோய்ந்த முகத்திற்கு ஆறுதல் தருவது போல் பேச ஆரம்பித்தான் .
அவளின் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையை கழற்றி பக்கமிருந்த நாற்காலியில் வைத்தாள். உட்காரச் சொன்னதற்காய் நன்றி சொல்லிக் கொண்டாள்,
பத்து தரமாச்சும் வந்துட்டீங்க.. இன்னும் நீங்க உள்ளே போய் கூட பாக்க முடியல
பதினேழு தரம் ...ஆமாங்க அதுதான் ரொம்ப சிரமமா இருக்கு. இந்த ஒரு கம்பெனியிலிருந்து அக்ரிமெண்ட் போட்டா போதும். அது பலனளிக்கும்.....இத்தனை நாள் வந்ததுக்கு அக்ரிமென்ட் போட்டு கண்லே பாக்க முடியலே .
பஞ்சாலையின் முக்கிய முகப்பு பகுதியிலிருந்து நிர்வாக அலுவலகத்திற்கு செல்வதற்கு பேட்டரி கார் இருக்கிறது . அவனின் எண்ணைய் பூசி தலைமயிர் பரப்பில் வெள்ளி மின்னுவது போல் இருந்தது . அவனது சம்மதம் இல்லாமல் கடக்க முடியாது. பஞ்சாலை முகப்பிலிருந்து அந்த நிர்வாக கட்டிடம் உள்ள நீளமான பாதைகளும் தூரமும் மனதில் வந்து போகும் அவளுக்கு.
ஆமாம்மா நீங்க எந்த குழு.. உங்க குழு பெயர் .
இமயம்..
வேற குழுவும் அப்பப்போ வந்து போறாங்க அவங்களும் பார்க்க முடியல.. இமயம்.. உங்களுக்கு தெரியுமா அம்மா, காவிரி, நொய்யல் அப்படி இப்படி எல்லாம் கூட பேர் போறாங்க. நெறையப் பேர்வந்து போறாங்க
ஆமாங்க அவங்க எல்லாம் வந்து போறது தெரியும் எங்களுக்குக் கெடைக்கும்ன்னு சொல்லலாம் . நம்பிக்கை இருக்கு.
அங்களுக்கும் அனுமதி கிடைக்கலெ.
அதுதான் எங்களுக்கும் அனுமதி கிடைக்க மாட்டேங்குது போல
அவங்களுக்கு கேட்க எல்லாம் சரியா இருக்கா தெரியல
ஆமா
இப்போ யாரும் இல்லையே.. முதலாளி வரும் போதும் சொல்றன்
இப்படித்தான் சொல்றீங்க.. ஒவ்வொருதரமும் வரும் போது இப்படித்தான் சொல்றீங்க.. சரி போன் பண்ணிட்டு வரலாம்னு பார்த்தா போன் பண்ணுனா இமயம்ன்னு சொன்னா போது ரொம்ப பிசியா இருக்கம் அம்மா. அப்புறம் பார்க்கலாம்கீறிங்க முதலாளி, மேனேஜர் .. யாருமே இல்லை என்கிறீங்க.. வெளிநாடு போய் இருக்காங்க வெளியூர் போய் இருக்காங்க . ஒரு வாரம் கழிச்சு பேசிங்கறீங்களாம்மான்னு ஒரே பதில்
அப்படி எல்லாம் பதில் சொல்லச் சொல்றாங்கம்மா.
ஆனாலும் நீங்க தயவு பண்ணீ மனசு வெச்சா முடியும்
சிரமம்தாம்மா. அப்ப நீயே இன்னைக்கி உட்கார்ந்து அவங்க வர்ற வரைக்கும் காத்திருந்து பாத்துட்டு போறதுன்னு முடிவு பண்ணி இருக்கீங்களா..
ஆமாம்
செரி
அப்படித்தான் காத்துக்கிட்டு இருக்க முடிவு பண்ணி இருக்கன்.
அவங்க வந்தா சொல்றேன். நீங்க வேற எதாவது வேலை இருந்ததுன்னா போயிட்டு வாங்க
இல்ல. இன்னைக்கு இங்க மட்டும் இருந்து பாத்துட்டு போலாம்னு இருக்கேன் எத்தனை நாள் வந்துவந்து போறது .
பழனிசாமி பல்வேறு பஞ்சாலைகளுக்கு 30, 40 முறைகள் சென்று இருக்கிறார். அதனால் அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.ஆனால் எந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை .ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நிலையில் மேலாளரிடம் பெறப்படும் வாக்குறுதி பல சமயங்களில் அடுத்த நாட்களில் நடைமுறைக்கு வருவதில்லை இதெல்லாம் தேவையில்லை எம்.டி சொல்லிட்டாங்க அதனால வேண்டாம். அல்லது இங்கெ முந்தியே ஒரு கமிட்டி எல்லாம் இருக்கு. அதெல்லாம் அவங்களெ பார்த்துக்குவாங்க ஆமா.. விஸ்வநாதன் வக்கீல் இருக்கிறார்.அவர் எல்லாத்தையும் பாத்துக்க்குவார் .
மெல்ல வெளியில் இருந்து வீசும் வெயிலுடன் கூடிய காற்றும்., மின் விசிறி காற்றும் எல்லாம் சேர்ந்து அவள் முகத்து வியர்வையை துரத்திக் கொண்டிருந்தது. தொண்டையில் இறங்கிய குளிர்ந்த நீர் இன்னும் ஆசுவாசப்படுத்தியது. பெரிய அளவிலான உடல் வலி காணாமல் போகப் பிரயத்தனம் செய்தது. எங்கு சென்றாலும் விஸ்வநாதன் பெயரை சொல்கிறார்கள் விஸ்வநாதன் வழக்கறிஞர்.அவர் மக்கள் தொடர்பு வேலைகள் எல்லாம் எப்படி செய்கிறார் என்ற கேள்வி வந்திருக்கிறது .பாதுகாப்பாக அப்படி ஒரு வழக்கறிஞர் பெயரை சொல்லி விட்டால் போதும் என்று என்ற எண்ணம் வந்திருக்கிறது.
நீங்க புதுசா வந்து கமிட்டி பாம் பண்ணி தொழிலாளர்களெப் பார்த்து பேசி கூட்டம் போட்டு.. அவரே எல்லாம் பண்ணுவாரு. அதுதா .
அவளின் பார்வையில் ஒரு பர்லாங் தூரம் கடந்து போய் அந்த நிர்வாக அலுவலகத்தில் யாராவது யாரையாவது சந்திப்பது இன்றையக் குறிக்கோளாக இருந்தது.வெயில் கானல் நீரைப் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தது. பஞ்சாலை முகப்பிற்கு வரும்போது உதவி மேனேஜரை அடையாளம் கண்டு கொண்டு கொண்டாள். இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து போய்க்கொண்டு இருந்த அவரிடம் கேட்டபோது முதலாளி யாரும் இல்ல நான் என்ன பண்ணட்டும் என்றபடி வாகனத்தை முடக்கி விட்டார் .
ஐயா நீங்க இந்த ஊர்க்காரரா
தேனி மாவட்டம்.. அங்க வேலை இல்லை அதனாலதான் இங்க வந்துட்டேன்
அங்கதான் விவசாயம் ..தண்ணீ.. கம்பம் பள்ளத்தாக்கு எல்லாம் பச்சையாக் கிடக்குமோ.. அதை தாண்டி எதுக்கு வர்றீங்க
பாக்க பசுமையா நல்லா இருக்குன்னு சொல்றீங்க வேலை சரியா இருக்காது. அந்தக் கூலி கம்மி . அதெ விட இரண்டு மடங்கு சம்பளம் இங்க கிடைக்கும் .
சரி வீட்டு வாடகை விலைவாசி தண்ணீக்கு காசு கொடுத்து வாங்கறப்போ இந்த சம்பளம் கட்டுபடியாகுமா
அதுசெரிதா. ஆனாலும் இந்த பகுதியில் இருக்கிற பல மில்கள்லெ ஏதாச்சும் வேலை இருக்கும். அதான் வந்துடறோம்
சரி இன்னிக்கு யாரையும் பார்க்க முடியுமா
யாரு இல்லம்மா என்னுடைய கையிலெ எதுவும் இல்லெ.முதலாளிகமார் யாருமே இல்லை நீங்க அவங்க வர்ற நாளா பார்த்து வாங்க. செய்தியை கடிதம் மூலமாகக் கொடுத்துட்டு போங்க.
அவள் தன் கைப்பையில் இருந்து எடுத்த கடிதத்தை இமயம் தன்னார்வ குழுவின் முகவரி அட்டையோடு சேர்த்து கொடுத்தாள்.கடிதத்தின் முனை மடங்கியிருந்ததை நீவி விட்டுக்கொண்டாள். கொஞ்சம் வியர்வை அந்த கடித முனையிலும் ஒட்டிக்கொண்டது.ஈரப்படுத்தியது
இந்த வரலாற்றை எத்தனை தடவை கொடுத்திருப்பீங்க. நானும் கொண்டுபோய்க் கொடுத்து இருக்கேன் .
சரி அப்போ நான் இன்னிக்கி காத்துட்டு இருந்து நேரடியாக குடுத்துட்டு, பேசிட்டுப் போறேன்
சரிம்மா . என்னமோ பண்ணுங்கம்மா
என்னை வெளியே போக சொல்லிட்டு துரத்த மாட்டீங்களே .நான் வெயிட் பண்ணி யாரையாச்சும் பாத்துட்டு போறேன்
சரி நான் என்ன பண்ண முடியும். நான் உன்னை தொரத்த முடியாது. யாராவது கண்ணுல பட்டு என்னன்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லிருவேன்.
கண்டிப்பா பார்க்கணும்
. காவலாளியிடம் ஒரே மாதிரி பேச்சு, உரையாடல் என்று ஒவ்வொருமுறையும் அலுப்பாகவே இருந்திருக்கிறது அவளுக்கு. இந்த வெயில், புழுதியெல்லாம் இன்னும் அலுப்பை தொடரச் செய்யும்.அவ்வளவு வலிமை இந்த வெயிலுக்கு.
அந்தோணிசாமிக்கு தினகரன் மில்லில் ஒரு அளவுக்கு செல்வாக்கு இருந்தது. அங்குள்ள உணவு விடுதியில் மேலாளராக இருக்கும் அவரின் உறவினர்கள் சொல்லி அந்த முதலாளி வீட்டுக்கு போய் பேசி பலமுறை அந்த நிர்வாகிகள் உடன் சந்தித்துப் பேசி எப்படியோ ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்து வாங்கிகொண்டார். அவர் அடுத்த வாரம் தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்க இருப்பதாக சொன்னார். அப்படி யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் தான் முதலாளியும் நிர்வாகிகளையும் அணுக முடியும் என்று தோன்றியது .
போன வாரம் ஒரு பயிற்சி அவளுடைய அலுவலகத்தில் இருந்தது. எல்லாருக்கும் ஒரு பலூனை கொடுத்து ஊதி எதையாவது எழுதச் சொன்னார்கள். சரி என்று பின்னால் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். இப்போதைய தன்னுடைய கனவு என்னவென்று எழுதச் சொன்னார்கள் .தங்களுடைய நோக்கம் என்னவென்று எழுதச் சொன்னார்கள்.
சித்ராவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்குக் கிடைத்தது ஊதாநிற பலூன் .வயிற்றின் உள்ளிருந்து காற்று வெளியேறி அதை நிரப்பினாள் . ரொம்ப நாளாயிற்று இப்படி பலூன் ஊதி அது பெரிதாகி ஜாலம் காட்டி காற்றில் மிதக்கத் தயாரானதும் அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.
அந்த ஊதா நிற பலூனில் கனவு மெய்ப்பட வேண்டும் என்று எழுதினாள். என்ன கனவு. கல்யாணக் கனவா என்று குழுவின் தலைவி செல்வி கேட்டாள். அதெல்லாம் இல்ல இப்போதைக்கு ஏதாவது ஸ்பின்னிங் மில்லெ அக்ரிமெண்ட் எம் ஓ யு வாங்கணும். அதுதான் முக்கியம் அதை பற்றி கனவு .வேற என்ன பண்றது ஒவ்வொரு ஸ்பின்னிங் மில்லுக்கும் நடந்து பார்த்தால் தான் தெரியும்.
அப்போது அந்த குழு விவாதம் சுகாதாரம் பற்றி ஒரு உப தலைப்பில் இருந்தது அவளின் கனவில் ஏதாவது ஒரு பஞ்சாலையில் ஒப்பந்தத்தை வாங்கி விடுவதுதான் முக்கியமான நோக்கமாக இருந்தது .பலரும் பல வண்ணங்களில் பலவித கனவுகளை பலூன்களில் எழுதினார்கள். ஆனால் யாருடைய கனவிலும், பலூனிலும் இப்படி பஞ்சாலை ஒப்பந்தம் பற்றி குறிப்பு இல்லை. எல்லோரும் ஸ்வச் பாரத், சுகாதாரமான இந்தியா, எந்தத் தெருவிலும் சாக்கடையை ஓட விடக்கூடாது, எந்த தெருவிலும் கொசு புழக்கம் இருக்கக்கூடாது, எந்த தெருவும் குப்பைகள் இல்லாமல் இருக்கிற இடமாக மாற வேண்டும் என்பது தான் கற்பனையாக இருந்தது எல்லோருக்கும் சுத்தம் சுகாதாரம்
அப்புறம் நீங்க சாப்டீங்களா..
சாப்பாட்டுக்கு நேரம் இருக்கு
ஆனாலும் உள்ள போனா கேண்டீன்ல சாப்பிடலாம் ஆனா நீங்க உள்ள போறதுக்கு உடமுடியாது
சும்மா விடுவீங்களா.
முதலாளி உள்ளே இருந்தால் விடலாம்.
யாரையாச்சும் நேர்ல பார்த்தா கூட போதும் அவரோட.. இல்லைங்க அவர் போன் நம்பர் கிடைக்க மாட்டேங்குது. செல்போன்.. போன்ல பண்ணிட்டு வாங்குறாங்க. சில பேரு மெயில் பண்ணிட்டு அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வாங்குறாங்க. சரி இமெயில் நம்பர் இமெயில் அய்டி கொடுங்கன்னா கொடுக்க மாட்டேங்கிறாங்க. குடுக்குற ஈமெயிலில பதில் வர்ரதில்லை. சரி..அப்புறம் உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா ...
கல்யாணத்துக்கு வகை எல்லாம் ஒன்னும் பெருசா தெரியலே இங்க . நான் இங்கே வெளியில இருக்கன் தனியாத்தா .மேனேஜருக்கு வகையான ஆளா இருக்கிறதா சொல்லிட்டு இருக்கேன். நான் இங்கே செய்யற வேலை செக்யூரிட்டி வேலை தான். செக்யூரிட்டி வேலையெச் சொல்லிட்டு கல்யாணம் பண்ண முடியாது. ஆனாலும் வேற வேலைன்னு பொய்யெல்லாம் சொல்லிட்டு பொண்ணு கேட்டு பண்ணிட்டவஙக இருக்கறாங்க . எனக்கு இஷ்டம் இல்லை .வீட்டில் அப்பா அம்மா அதைத்தான் பண்ணிட்டு இருக்காங்க.. பொய்யா எதையாச்சும் சொல்லிட்டு. எங்க மாட்டுவம் எங்கே உதறவம்ன்னு எனக்கு தெரியாது
போன வாரம் ஒரு பயிற்சியின் போது இதுபோல் ஒப்பந்தம் பெறுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி எழுதச் சொன்னார்கள். அதில் முதல் பகுதி நேர்மறையான விஷயங்களை என்று சொன்னார்கள் .
.நம்மில் பலரை பல பஞ்சாலைகளில் இருக்கும் காவலாளிகள் புன்முறுவலுடன் வரவேற்கிறார்கள். முகப்பில் இருந்து நிர்வாக கட்டிடம் உள்ள ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு கூட்டிச் செல்வதற்கு பேட்டரிகார்கள் தருகிறார்கள். அல்லது சிபாரிசு செய்கிறார்கள் .குடிப்பதற்கு குளிர்ந்த நீர் தருகிறார்கள். எல்லாம் சீக்கிரம் நடக்கும். ஒப்பந்தம் கிடைக்கும் என்று ஆயிரம் நம்பிக்கையை காவலாளிகள் சொல்கிறார்கள். அந்த காவலாளிகளுக்கு இதைச் சொல்வதில் சோர்வு இருக்கிறது. அதை மீறி அவர்கள் ஏதாவது ஆறுதல் சொல்கிறார்கள் பெரும்பாலும் என்ன ஒப்பந்தம் ..என்ன செய்யப் போகிறோம் என்பதை தேவையில்லாமல் பல காவலாளியிடம் கொட்ட வேண்டியிருக்கிறது ஆனாலும் யாரையும் சந்திக்க முடியாத போது இப்படி யாரிடமாவது கொட்டிவிட்டு வருவது கூட ஆறுதலாகத்தான் இருந்திருக்கிறது சித்ராவிற்கு.
எதிர்மறையான எண்ணங்கள் என்று வருகிறபோது முதல்ல இங்கே கமிட்டி இருக்கு நீங்க எல்லாம் போயி ஒன்னும் புதுசா போட வேண்டியது இல்லை அப்புறம் முதலாளியும் எம்டியும் எங்காவது வெளியூரில் இருப்பாங்க. பிளைட்ல பறந்துட்டு இருப்பாங்க .உங்களுக்காக அவங்க எல்லாம் இங்க உட்கார்ந்திருக்க முடியுமா. நீங்க வர்ற நேரத்துக்கு அவங்க இருக்க முடியுமா என்று விரட்டுவார்கள் முதலாளி,தன் சார்பாக என்று சொல்லி யாரையும் சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லாமல் போய்விடுகிறது. எதற்கெடுத்தாலும் ஏதாவது ஒரு வழக்கறிஞர் பெயரைச் சொல்லி அவர்தான் இந்த மில்லெ எல்லாத்துக்கும்.. அவரோட பேசி சொல்லச் சொல்லுங்கள் .அவர் சொன்னா எங்களுக்கு ரொம்ப சேப்பா இருக்கும்
அவள் தன்னுடைய தன்னார்வ குழு அலுவலகத்தில் அந்த வழக்கறிஞர் பெயரைச் சொல்லி அவரிடம் பேசி சுலபமாக உள்ளே செல்வதற்கு வழி செய்யுமாறு கேட்டுக் கொண்டாள், அவர்களும் பேசியதாக சொன்னார்கள் .ஆனால் இன்னும் அந்த விசயம் முடியாமல் இருக்கிறது.
நீங்க எல்லாம் உளவு பார்க்க வருவீங்க.. வந்து பார்த்துட்டு என்ன நடக்குதுன்னு வெளிய போய் சொல்வீங்க அதனால எதுக்கு என்று சில காவலாளிகள் சொல்கிறார்கள்.
வந்து போறிங்கம்மா இந்த சம்பவம் நடக்குது அந்த சம்பவம் நடக்குதுன்னு இங்க கஷ்டப்படுற கதையெ வெளியே சொல்றீங்க .. என்றும் சொல்கிறார்கள்.
சட்டுன்னு முடியற மாதரி அப்படி எல்லாம் வாய்ப்பு இருக்குங்களா
அதை நான் என்ன சொல்றது.. உன் கிட்ட தான் கேக்கணும் ..ரகசியமா என்று சிலவற்றை எடுத்துச் சொன்னார்கள்
சித்ரா பயிற்சியின் போது எழுதிய சவால்களில் முதல் சவால் ஏதாவது ஒரு பஞ்சாலையில் ஒப்பந்தத்தை போட்டு விடுவது. .கையெழுத்து வாங்கி விடுவது. இரண்டாவது அந்த ஆண்டில் பல பயிற்சி வகுப்புகளை தொழிலாளர்களுக்காக எடுத்து விடுவது .கரண்ட் கட்சமயத்தில் வந்து வகுப்பு எடுங்க என்று செண்பகா மில்லில் சொன்னதை வைத்துக் கொண்டு எப்போது மின்வெட்டு ஆகிறது என்று பார்த்து அந்த நேரத்தில் சென்று வருவது, அதற்கான அனுமதி பெறுவது , அவளின் அடுத்த கனவாக இருந்தது.
சமீபத்தில் மின்சார இலாகாவில் பலரின் தொலைபேசி எண்களை அவள் வாங்கி வைத்து இருந்தாள் .அவ்வப்போது தொலைபேசி செய்து இந்த வாரத்தில் ஏதாவது மின்வெட்டு இருக்குமா சட்டென்று ஒரு நாள் முழுக்க மின்சாரம் இல்லாமல் இருக்குமா என்றெல்லாம் கேட்டிருக்கிறாள் என்னம்மா நல்லா போயிட்டு இருக்கிற சமயத்தில் கரண்ட் கட் எப்போ வரும் எப்போ போகும்ன்னு எங்க உயிரை வாங்குறீங்க என்று சில அதிகாரிகள் அலுத்துக் கொண்டார்கள். அவளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. என்ன தான் மின்சாரத்தடை என்றாலும் ஒப்பந்தம் போடாமல் மின்சார தடை நேரத்தில் போய்விட முடியுமா.. முடியாது ஆனால் இதற்கு எதற்கு இந்த பிரயத்தனம் எல்லாம்..
பயிற்சியில் அவள் எழுதிய குறிப்புகளை எல்லாம் படித்தபோது மற்றவர்களும் அதையே தான் சொல்லக் காத்திருப்பது தெரிந்தது .ஆனாலும் ஒரு நாள் ஒப்பந்தம் பெற்று விடுவோம் என்பது நம்பிக்கையாக இருந்தது. பஞ்சாலை நிர்வாக அலுவலகத்தில் யாராவது தலையாட்டி சரி என்று சொல்லிவிட்டால் போதும் தன் அலுவலகத்தில் சொல்லி ஒரு ஒப்பந்தத்தை தட்டச்சு செய்து கொண்டு வந்து கையெழுத்து வாங்கி விடலாம். அது போதும். அது கூட தட்ட்ச்சு செய்து தயாராக இருக்கும் .
உள்ளார ஒரு தரம் போயிட்டு வந்தா என்ன இங்கே எக்ஸிபிஷனா நடக்குது வேடிக்கை பார்க்கிறதுன்னு கேப்பாங்க
இல்லைங்க உள்ளார மேனேஜர் யாராவது தட்டுப்படுவாங்க. ஏதாவது வழி கிடைக்கும்.
எத்தனை தடவயோ வந்திட்டு இருக்கீங்க. நானுந்தா பாக்கறன்
இன்னிக்கு உள்ள போயிட்டு வரலாம்மா
என்னம்மா நீங்க நச்சரிக்கிறதுனாலே கேட்டன்
சரி போறேன்
போய் அங்க என் பெயரைச் சொல்லாதேம்மா
அது எப்படிங்க சொல்லாம இருக்க முடியும் செக்யூரிட்டி இல்லாமல் உள்ளே வர முடியாது
கேட்டா செரி. என்னவோ சொல்லிக்க
அப்புறம் உன் இஷ்டம்
அவளுக்கு ஆசுவாசம் பிறந்து விட்டது போலிருந்தது உடம்பில் பூத்திருந்த வியர்வை பூக்கள் எல்லாம் கருகி வீழ்ந்துவிட்டன காற்று ஆசுவாசப்படுத்தி அவளை புது மனுசி ஆகிவிட்டது போலிருந்தது சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள் ஸ்டிக்கர் பொட்டு நழுவி இருக்குமோ என்ற பயத்தில் எதிரில் இருந்த கண்ணாடியில் பார்த்தாள். அது முகம் பார்க்கும் கண்ணாடியாக இல்லாமல் கருப்பு தாள் ஒட்டப்பட்டது இருந்தது. உள்ளே இருக்கிற பொருட்களை பிரதிபலிப்பதாக இருந்தது. புத்துணர்ச்சி வந்துவிட்டது போல் அவள் நினைக்கத் தொடங்கினாள்
வர்ரங்க தேங்க்ஸ் ரொம்ப நன்றிங்க தேங்க்ஸ் ரொம்ப நன்றிங்க..
சரி சரி எவ்வளவு சீக்கிரம் வந்தர முடியுமா வந்திரும்மா. அந்த வரைக்கும் எனக்கு பாதுகாப்பா இருக்கும்
சரிங்க சரிங்க.. ரொம்ப நன்றிங்க ..ரொம்ப நன்றி
சித்ராவிற்கு அவள் அப்பாவின் ஞாபகம் வந்தது அவர் நெசவுத்தொழில் செய்து வந்தார். கால் ஆணி வலுவிழந்து போய் நெசவு மிதி பலகையை மிதிப்பதற்கு முடியாமல் போயிற்று பிறகு ஒரு புகையிலை குடோனில் காவலாளியாக வேலை செய்தார். எப்போதும் வாகனங்களும் பெரிய மனிதர்களும் வியாபாரத்திற்காக வந்து போகிற இடம். பெரும்பாலும் உட்கார இடம் கிடைக்காது நேரம் கிடைக்காது .நின்று கொண்டுதான் இருக்க வேண்டும். யாராவது வந்து போய்க் கொண்டிருப்பார்கள் உட்கார்ந்துவிட்டால் என்ன மரியாதை இல்லாமல் உட்கார்ந்து இருக்கே என்று கேட்பார்கள். அவர்கள் திட்டுவதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் நினைத்துக் கொண்டு நின்று சலித்து அந்த கால்கள் தரும் வலியை இரவுகளில் வேதனையாக வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மா அப்பாவின் கால்களை தொட்டு தொட்டு அழுத்தி ஆசுவாசப்படுத்துவார்கள். வெந்நீர் கொண்டு வந்து வெந்நீர் பாத்திரத்தில் அப்பாவின் கால்களை அமிழ்த்தி வைப்பார். வெந்நீரில் துணியை நனைத்து கால்களை சுத்தப்படுத்துவார். ஆனால் அவருடைய கால் வலி குறைந்தவுடன் ஆழ்ந்த தூக்கத்திற்குப் போய் விடுவார். நரம்புகள் சுருண்டிருப்பதைக் காட்டியிருக்கிறார். . ஆனால் தூக்கம்தான் அவரை ஆசுவாசப்படுத்துவது என்பது அவளுக்கும் தெரிந்திருந்தது. அப்பாவின் தம்பி மகன் பனியன் கம்பெனியில் நின்றுகொண்டே கட்டிங் செய்கிற வேலையை பல ஆண்டுகள் செய்து வந்தார் அவருக்கு இப்படித்தான் காலில் நரம்புகள் சுருண்டு கிடப்பதைக் காட்டியிருக்கிறார். அதை சரி செய்வதற்காக இரண்டு கால்களிலும் ஆக நாலைந்து முறை ஆபரேஷன் என்ற வகையில் சிகிச்சை செய்திருந்தார். ஆனால் எதுவும் ஒத்துழைக்கவில்லை பனியில் கம்பனியில் இருந்து ஓய்வெடுத்துக் கொள் சரியாகும் என்று மருத்துவர்களும் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். அவரும் சின்ன வயதில் வேறுவழியில்லாமல் இப்படி காவலாளியாக ஆகித்தான் போனார். பனியன் கம்பெனியில் நின்று கொண்டு வேலை செய்ய முடியவில்லை. வேறு என்ன வேலை செய்யத் தெரியும் என்று வேதனையும் தொடங்கி விட்டது. வேறு வழி இல்லாமல் அவர் காவலாளி வேலைக்கு தான் சென்றார். செக்யூரிட்டி என வயசானவங்க தான் வருவாங்க நீ என்ன இந்த நாப்பது வயசிலேயே வந்துட்ட என்று அவரைக் கேட்டார்கள் .முடியல அதான் வந்தன் இதென்ன அநியாயமா இருக்கு முடியலையேன்னு வர்றவங்களுக்கு எல்லாம் செக்யூரிட்டி வேலைக்கு ஆகுமா என்று கேட்டிருக்கிறார்கள் அப்பா அவரின் காலில் நரம்புகள் சுருண்டு கிடப்பது போல் கடைசி காலங்களில் உடம்பை குறுக்கிக் கொண்டு படுக்கையில் கிடந்தார் தொடர்ந்து நின்று கொண்டிருப்பது, அதிக ஓய்வு இல்லாமல் இருப்பதை அவர் உடம்பைக் குறுக்கு வைத்துவிட்டது. உடம்பு தாறுமாறாய் சிரமப்படுத்த வைத்தது. அப்படியான சூழலில் தான் அவர் ஒரு பூச்சி சுருண்டு கிடப்பது போல தன்னை சுருக்கிக் கொண்டு கால்களையும் கைகளையும் இறுக்கிக் கொண்டு படுக்கையில் ஒருநாள் இறந்து கிடந்தார். அதை நினைக்கிற போதெல்லாம் அவளின் கண்களில் நீர் கசியும். இந்த காவலாளிகள் மேல் அவள் எந்த ஒரு வசவையும் கோபத்தில் எந்த கணத்திலும் தந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறாள்.அவள் அப்பாவும் காவலாளியாக இருந்திருக்கிறார். எத்தனை பஞ்சாலைகள்.. எத்தனை அலுவலகங்களில் .. எல்லா இடங்களிலும் காவலாளிகள் ...எல்லாவற்றிலும் அவள் நுழைகிறபோது அங்கு இருக்கிற காவலாளிகளை பார்ப்பதை தவிர்ப்பாள். ஏதோ ஒரு வகையில் அவர்கள் அப்பாவை ஞாபகத்தில் கொண்டு வந்து விடுவார்கள் அது அவளைப் படுத்திக் கொண்டே இருந்தது.
அவளின் சித்தப்பாவும் இப்படித்தான் ஒரு பனியன் தொழிற்சாலையில் காவலாளியாக இருந்தார்.. இரவில் தொடர்ந்து தூக்கம் கெட முடியவில்லையென்று அந்த வேலையை விட்டு விட்டார். அவர் குருடாம்பாளையத்தில் இருந்த போது நிறைய கடன் ஆகி விட்டது. நெசவு தொழில் நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஒரு நாள் இரவில் தறிச்சாமான்களை விட்டு விட்டு கிளம்பி விட்டார். இரவில் விளக்கை ஏற்றி வைத்து விட்டு நடுஇரவில் கிளம்பி விட்டார். இரு தினங்கள் அந்த விளக்கு எரிந்து கொண்டே இருந்திருக்கிறது. வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்ற தோரணை அது.. பல நாட்கள் எரிந்து விளக்கணைந்து இருட்டானபின்புதான் வீட்டில் யாரும் இல்லை என்பது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.திருப்பூருக்குப் போனவர் சொசைட்டியில் கூலி நெசவுக்கு உட்கார்ந்தார். அதுவும் குடும்பத்தை ஓட்டக் கட்டுபடியாகவில்லை.
சட்டென தாகம் எடுப்பது போல் இருந்தது. கைப்பையில் சிறு பாட்டில் இருநத்து. தினந்தோறும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்லி அவள் தினமும் பார்க்கும் தினசரி வலியுறுத்திக் கொண்டே இருந்தது. . அவள் சென்றாண்டு வேலை செய்த குழு அனுபவம் ஞாபகம் வந்தது. தொழிற்சாலைகளில் தண்ணீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு என்று வலியுறுத்தி பல பிரச்சாரங்களை செய்கிற பணி அவளுக்கு... அதுவும் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் தண்ணீரைக் குறைக்க பிரச்சாரம் செய்ய சாயப்பட்டறைகளுக்குப் போகச் சொன்னார்கள்.அங்கு போன பின்பு <
...
[Message clipped] View entire message
ReplyForward