சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
புதன், 17 ஆகஸ்ட், 2022

எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணத்திட்டம் முடிவான ஜூலை மாதத்தின் மத்தியில் திருப்பூர் , கோவை மாவட்டங்களில் தொடர்ந்த மழையும் ஈரக்காற்றும் சூழலை ரம்யமாக வைத்திருந்தன. இந்த சூழல் வெளிநாட்டு பயணத்திலும் மையம் கொள்ளும் என்று வழக்கமாக எதிர்பார்ப்பது வழக்கம். அப்படித்தான் நானும் எதிர்பார்த்து இருந்தேன் ஆனால் சென்னை விமான நிலையத்தை அடைந்தபோது வாட்டிய வெப்பமும் அதன் சூழலும் மனதை உறுத்துவதாக இருந்தது. சித்திரை மாதத்தின் அக்னி நட்சத்திர வெயிலுக்குள் மாட்டிக் கொண்ட மாதிரி இருந்தது. நாம் செல்கிற நாடுகள் உல்லாச பயணம் சார்ந்தது என்பதால் அங்கெல்லாம் இந்த சூழல் இருக்காது .ரம்மியமாக இருக்கும் என்று தான் மனது சொல்லியது ஆனால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக நிகழ்ந்த சாவுகள் பிரச்சனைகள் பற்றிய அன்றைய செய்திகள் மனதிற்கு வந்து சிரமப்படுத்தின பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் இருக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. விமான விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் செல்கிற வரைக்கும் இதே மனநிலை தான் இருந்தது .ஆனால் அங்கிருந்த குளிர்சாதன வசதிகளும் சூழலும் சற்றே ஆசுவாசம் தந்தன இமிகிரேஷனில் பெட்டிகள் சரியாக போய் சேர்ந்த போது கையில் இருந்த ஏழு கிலோ எடையுள்ள பை பலவகையில் சிரமம் தருவதாக இருந்தது .முதலில் அதிலிருந்து சிறு பொட்டலம் . கொரோனா காலத்தில் மூச்சு சீராக வைத்திருக்கவும் மூச்சு திணறல் இல்லாமல் இருக்கவும இந்த பொட்டலத்தை மனைவி தயார் செய்து தந்திருந்தார் .அப்போது இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பொட்டலத்தில் பயன்பாடு அவ்வப்போது இருந்தது .இந்த முறை இரு சிறு பொட்டலங்களை இரண்டு வார பயணத்திற்காக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வைத்திருந்தார் .அது ஒரு வகையில் இன் கேலர் என்று சொல்லலாம் .மூச்சை சீராக்கவும் எதிர்ப்பு சக்தி தருவதற்கும் சீரகம், கிராம்பு சோம்பு உள்ளிட்ட பலவற்றை பொடி யாக்கி சிறு துணியில் கட்டி இருந்தார் .பயன்படுத்துவது கட்டாயமானது வீட்டில் அல்லது அதை பலரின் பார்வையில் படுவது என்பதெல்லாம் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் சிறு நெல்லிக்காய் அளவு இருந்த அந்த துணியில் கட்டிய பொருள் இமிகிரேஷனில் பல கேள்வியை எழுப்பியது நான் ஆங்கிலத்தில் அதற்கான பதில் சொல்லிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அவர்களுக்கு அது சமாதானம் ஆகவில்லை அதை பிரித்து பார்த்துவிட்டு நாக்கில் வைத்து பார்த்தார்கள் .மூக்கில் அருகில் வைத்து சுவாசித்துப் பார்த்தார்கள். என்னையும் சுவாசிக்கச் சொன்னார்கள் .நானும் அதை மூக்கினருகில் வைத்து சுவாசித்துக் காட்டினேன். சரி ஏதோ இயற்கை வைத்தியத்தில் நம்பிக்கை உள்ளவர் .ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கையற்றவர் என்ற முத்திரை குத்தப்பட்டு நான் அங்கிருந்து உள்ளே அனுப்பப்பட்டேன் ஆனால் இது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் தேவையானவை என்பதை பற்றி கூட அவர்களிடம் நான் சொல்ல ஆரம்பித்தேன் கொரோனா சூழலுக்குப் பின்னால் வீட்டிற்கு வந்த பின்னால் குளியல் போட்டுக் கொள்வதும் வெளியூர் சென்று விட்டு வந்த தருணங்கள் என்றால் ஆவி பிடித்தல் என்பதும் கபசுரக் குடிநீர் குடிப்பது என்பது இயல்பாகி விட்டது. மனைவி கிரிஜா அவர்கள் திட்டமிட்டு அதை செய்து தந்து கொண்டிருந்தார் ..அது ஆறுதலாக இருந்தது எங்கு வெளியில் சென்று விட்டு வந்தாலும் ஆவி பிடித்தலும் கபசுர குடிநீரும் அந்த சூழலில் இருந்து பாதுகாக்கும் என்பது ஒரு வகையில் விஞ்ஞான நம்பிக்கையாக இருந்தது .அப்படித்தான் விமான நிலையத்தின் உள்பகுதிக்கு சென்றபோது இந்த பயணமும் ரம்மியமாக இருக்கும் . அந்த நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான உபாயமாக இருக்கும் என்பதை திடமாக நம்பினேன் பல ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் கடுமையாக அதிகரித்து அதன் சீற்றத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஐரோப்பியக் கண்டத்தின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தொட்டிருக்கிறது. ஏற்கனவே நெருக்கடியில் இருந்த மக்கள் சுருண்டு விழுந்து செத்துக் கொண்டிருக் கிறார்கள். மக்களைப் பாதுகாக்க அரசுகள் தவறிவிட்டதாக தொழிற்சங்கங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். தொடர் எச்சரிக்கை களை மீறி வெப்பமயமாதல் பிரச்சனைகள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை அன்றைய தீக்கதிர் கட்டுரையொன்று இப்படியாகச் சொன்னது. மாறாக, அதற்கான காரணிகளை உற்சாகப் படுத்தும் வகையில்தான் கொள்கைகள் வகுக்கப்பட்டன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. லண்டனில் உள்ள ஜேபி மோர்கன் அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதலும் நடந்திருக்கிறது. சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களுக்கு இந்த நிதி நிறுவனம் பெரும் அளவில் நிதியை வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டித்தே இந்தத் தாக்குதல் நடந்தது. இயற்கைப் பாதுகாப்புக் காகப் போராடும் மருத்துவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டில் போடப்பட்ட பாரீஸ் சுற்றுச்சூழல் உடன்பாடு நடைமுறைக்கு வர வேண்டிய இந்தக் காலகட்டத்தில் 3 லட்சத்து 94 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியை ஜேபி மோர்கன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொழிற்சங்கங்கள் மும்முரம் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொழிற்சங்கங்கள் இறங்கியுள்ளன. வெப்பத்தின் உக்கிரத்தால் பணியாற்ற இயலாத இடங்களில் பணிப் பாதுகாப்புக்கான சட்டரீதியான ஏற்பாடு களை செய்து வருகிறார்கள். அதோடு, நெளிவு சுழிவான வேலை நேரம், பணி செய்து கொண்டிருக்கும்போது தேவையான இடைவேளைகள், குளிர் படுத்தும் உடைகள் அணிய அனுமதி மற்றும் போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகிய வற்றை உத்தரவாதப்படுத்தும்படி தொழிற் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான லின்சி மான், ‘‘பணியிடங்களை குளிருடன் வைத்திருக்கத் தங்களால் எவ்வ ளவு முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ, அவ்வளவு முயற்சிகளை முதலாளிகள் எடுக்க வேண்டும்’’ என்றார். அவரின் கருத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரான்சிஸ் ஓ கிராடி, ‘‘வேலை செய்யும் இடத்தில் அதிக பட்ச வெப்பம் என்ற வரம்பை நிர்ணயிக்க வேண்டும். சொல்லப்போனால், இத்தகைய ஏற்பாடு முதலாளிகளுக்கு நல்லது. அதிக வெப்ப சூழலில் பணிபுரியும் தொழிலாளியால் தன்னுடைய சிறந்த உழைப்பைத் தர முடி யாது’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ வல்லுநர்களும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கப் போகிறது என்று எச்சரிக்கும் மருத்துவ வல்லுநரான டிரேசி நிகோல்ஸ், ‘‘வெளிப்புறங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் தொடர்ச்சியான இடைவேளைகள், திரவ உணவுகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பசைகள் மற்றும் உடைகள் ஆகியவற்றிற்கு முதலாளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார். வரலாறு காணாத அளவில் வெப்பம் உக்கிரமடைந்துள்ளதால், மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் டொமினிக் ராப் கேட்டுக் கொண்ட பிறகுதான் டிரேசி நிகோல்ஸ் தனது கருத்தைக் கூறியிருக்கிறார். யார் அடுத்து வர வேண்டும், யாரைக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் சண்டையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருப்பதால் இந்தப் பிரச்சனையில் அக்கறை காட்டவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிடும் ஆபத்து உள்ளது என்று பிரிட்டனின் சுகாதாரப் பாதுகாப்பு முகமை எச்சரிக்கை விடுத்திருந்தும், அது குறித்த ஆலோசனையை மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்த உயர்மட்ட, அவசரக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. போர்ச்சுக்கல் வழக்கமான இறப்பு விகிதத்தை விட வெப்ப அலை வீசுவதால், மரணங்கள் அதி கரித்துள்ளன. போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயி னில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள் ளனர். போர்ச்சுக்கலின் வெப்பம் 47 டிகிரி செல்சியசைத் தொட்டுள்ளது. இது எதிர்பாராத ஒன்றல்ல என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர். வெப்ப அலைகளின் சீற்றத்தால் போர்ச்சுக்கலில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ள னர் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரி விக்கின்றன. உண்மையில் இது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநரான முனைவர் அமீர் கிவாடி, ‘‘2022 ஆம் ஆண்டின் கோடைக் காலம் வழக்கமான வெப்பத்தை விட அதிக மானதாகவே இருக்கும் என்று ஆண்டின் துவக்க கட்டத்திலேயே முன்னறிவிப்புகள் வந்தன. உண்மை நிலை அதையும் விட மோச மாக இருக்கிறது. கணித்ததைவிட வெப்பம் கடுமையாக உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரையில் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கிரீஸ், மொரோக்கோ, இத்தாலி ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெப்ப பாதிப்பிலிருந்து இந்தச் சுற்றுப்பயணம் அமைய வேண்டும் என்பதை பிரார்த்தனையாக மந்தில் கொண்டு மஸ்கட் செல்லும் விமானத்தில் ஏறினேன். 000 செங்கடல் முதல் நைல் நதி வரை: 2 (எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணம் ஆடு ஜீவிதம் நாவல் தமிழிலும் பல பதிப்புகள் கண்ட நாவல் . அந்த மலையாள நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் நடிகர் பிருத்வராஜ் உட்பட 50 பேர் கொண்ட குழுவினர் ஜோர்டான நாட்டில் பாலைவனப் பகுதியில் கொரானா காலத்தில் அங்கு விமான சேவை இல்லாததால் முடங்கிக்கிடந்த செய்தி பல நாட்கள் செய்திகளாக வந்தன. அகதிகள் போன்று தனிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தோம் என்று நடிகர் பிருத்வராஜ் ஒரு பேட்டியில் கூட சொல்லியிருந்தார் ஜோர்டான் நாடு அகதிகளை அதிகம் வரவேற்கும் நாடு என்று சொல்லப்படுவதுண்டு. சுற்றுலா வருகிறவர்கள் அகதிகளாக மாறும் சூழல் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன் வெயில் சற்றே அதிகமாகத்தான் அம்மான் நகரத்தில் இருந்தது. மழைப்பொழிவு அதிகமில்லை. வறட்சிதான்.ஆனால் வீசும் குளிர்காற்று ஆசுவாசப்படுத்தியது. சொற்ப விளைச்சலுக்கு ஆதாரமாக இந்தக் குளிர்காற்று இருக்கிறதாம். ஜோர்டான் அதன் கொந்தளிப்பான அண்டை நாடுகளுடன் இணைந்த ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறது. பக்கத்திலிருக்கும் பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்றவற்றில் நடக்கும் தீவிரவாதக்குழுக்களின் மோதலும் இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களும் ஜோர்டானை அமைதியான நாடாகக் காட்டிக்கொண்டிருப்பதால் அந்த நாடுகளிலிருந்து மக்கள் வெளியேறி இங்கு குடியேறுகிறார்கள். அமைதிதேசம் என்று கொண்டாடுகிறார்களாம். அதனால் நில மதிப்பு சமீப ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளதாம். உலக வங்கி ஜோர்டானை "உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடு" என்று குறிப்பிட்டுள்ளது. வேளாண் மற்றும் தொழில்துறை இராஜ்ஜியம் உள்ளது,. .ஜோர்டானியர்கள் சுமார் 14% வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். ஜோர்டானிய ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அரசாங்கம் ஆட்சேபிக்கின்ற போதிலும், தொழில்துறையை தனியார்மயமாக்குவதற்கு உதவினர் .. ஜோர்டான் தொழிலாளர்கள் 77% ஜோர்டான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 12% பேட்ராவின் புகழ் பெற்ற நகரமான Petra போன்ற தளங்களில் சுற்றுலா மற்றும் நிதி, போக்குவரத்து, பொது வசதிகள் போன்ற துறைகளில் சேவை செய்கின்றனர். ஜோர்டான் தனது அணுசக்தி நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், நான்கு அணுசக்தி ஆலைகளை கொண்டு வருவதன் மூலம், சவூதி அரேபியாவிலிருந்து விலையுயர்ந்த டீசல் இறக்குமதியை குறைக்கும் மற்றும் அதன் எண்ணெய் சுழலும் இருப்புக்களை சுரண்டுவதன் மூலம் தொடரும். இதற்கிடையில், அது வெளிநாட்டு உதவியை நம்பியுள்ளது. ஜோர்தானின் நாணயம் தினார் , இது 1 டினாரின் = 1.41 டாலர் பரிமாற்ற விகிதம் உள்ளது. குறைந்தது 1லட்சம் ஆண்டுகளுக்கு இப்போது யோர்தானில் உள்ள மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன. இந்த சான்றுகள் கத்திகள், கை அச்சுகள் மற்றும் பனிக்கட்டி மற்றும் பசால்ட் செய்யப்பட்ட ஸ்கேப்பர்கள் போன்ற பல்லோலிதிக் கருவிகள். பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்மோன், மோவாப், ஏதோம் ஆகிய நாடுகளின் ராஜ்யங்களோடு யோர்தானின் எழுத்துப்பூர்வ வரலாறு ஆரம்பமாகிறது., நபி முஹம்மது இறந்த பிறகு, முதல் முஸ்லீம் வம்சம் உருவாக்கப்பட்டது, இதில் இப்போது ஜோர்டான். அம்மனுக்கு அல்-ஊர்டுன் அல்லது "ஜோர்டான்" என்று அழைக்கப்படும் உமாயத் பகுதியில் முக்கிய மாகாண நகரமாக மாறியது. 1258 ல் மங்கோலியர்கள் அப்பாஸ் காளிபாதைக் கைப்பற்றினர்; ஜோர்டான் அவர்களுடைய ஆட்சியின் கீழ் வந்தது. அவர்கள் தொடர்ந்து க்ரூஸேடர்ஸ் , அய்யுயிபைஸ் மற்றும் மம்லூஸ் ஆகியோர் இருந்தனர். 1517 ஆம் ஆண்டில், ஓட்டோமான் பேரரசு இப்பொழுது யோர்தானை வென்றது. ஒட்டோமான் ஆட்சியின் கீழ், ஜோர்டான்- யோர்தானை தீமையை புறக்கணித்துக்கொண்டிருந்தது. இஸ்தான்புல்லில் இருந்து உள்ளூர் வட்டார ஆளுநர்கள் இந்த பிராந்தியத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். முதலாம் உலகப் போரில் தோல்வியடைந்த பிறகு, 1922 இல் ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுறும் வரை இது நான்கு நூற்றாண்டுகளாக தொடர்ந்தது. ஒட்டோமான் சாம்ராஜ்யம் சரிந்தபோது, லீக் ஆஃப் நேஷன்ஸ் அதன் மத்திய கிழக்குப் பகுதிகள் மீது கட்டளை ஒன்றை எடுத்துக்கொண்டது. பிரித்தானியாவும் பிரான்சும் இந்த பிராந்தியத்தை பிளவுபடுத்த ஒப்புக் கொண்டது, கட்டாய அதிகாரங்களைக் கொண்டது, பிரான்ஸ் சிரியாவையும் லெபனானையும் எடுத்துக் கொண்டதுடன், பாலஸ்தீன பாலஸ்தீனத்தை (டிரான்ஜோர்டன் உட்பட) பிரிட்டன் எடுத்துக் கொண்டது. கிங் அப்துல்லா சுமார் 200,000 குடிமக்களுடன் ஒரு நாட்டைக் கைப்பற்றினார், அவர்களில் சுமார் அரைவாசிப்போர் நாடோடிக்கும். மே 22, 1946 அன்று, ஐக்கிய நாடுகள் சபையானது டிரான்ஸ்ஜார்டனுக்கு கட்டளை பிறப்பித்தது, அது ஒரு இறையாண்மை அரசாக ஆனது. பாலஸ்தீனத்தின் பிரிவினை மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் உருவாக்கத்தை உத்தியோகபூர்வமாக எதிர்த்ததுடன், 1948 அரபு / இஸ்ரேலிய போரில் இணைந்தது. இஸ்ரேல் நிலவியது, பாலஸ்தீனிய அகதிகள் பல வெள்ளப் பெருக்குகளில் முதலாவது ஜோர்டானுக்குள் நுழைந்தது. 1950 ல், ஜோர்டான் வெஸ்ட் பேங்க் மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றை இணைத்தது, இது மற்ற நாடுகளை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. அடுத்த ஆண்டு, ஜெருசலேமில் அல்-அக்சா மசூதியை விஜயம் செய்யும் போது, பாலஸ்தீனிய கொலையாளி கிங் அப்துல்லாவைக் கொன்றார். பாலஸ்தீனிய மேற்குக் கரையின் அப்துல்லாவின் நிலங்களைப் பற்றி அந்த கொலையாளி கோபமடைந்தார். அப்துல்லாவின் மனநிலை சரியில்லாத மகனான தாலால் ஒரு சுருக்கமான கடிதத்தை 1953 ல் அப்துல்லாவின் 18 வயதான பேரரசர் அரியணையில் அமர்த்தியிருந்தார். புதிய மன்னர் ஹுசைன், ஒரு புதிய அரசியலமைப்பில் "தாராளவாதத்துடன் பரிசோதனையை" மேற்கொண்டார். பேச்சு சுதந்திரம், செய்தி ஊடகம், மற்றும் சட்டமன்றம். 1967 மே மாதம், ஜோர்டான் எகிப்துடன் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒரு மாதம் கழித்து, எகிப்திய, சிரிய, ஈராக் மற்றும் ஜோர்டானிய இராணுவ வீரர்கள் ஆறு நாள் யுத்தத்தில் அழித்தனர், மேலும் ஜோர்டானில் இருந்து மேற்குக்கரையையும் கிழக்கு ஜெருசலேத்தையும் கைப்பற்றினர். இரண்டாவது, பாலஸ்தீனிய அகதிகளின் பெரிய அலை ஜோர்டானுக்குள் விரைந்தது. விரைவில், பாலஸ்தீனிய போராளிகள் ( ஃபெடெய்ன் ), தங்கள் சர்வதேச நாடுகளுக்கிடையே சிக்கலைத் தொடுக்கத் தொடங்கியது, மூன்று சர்வதேச விமானங்கள் உச்சமடைந்து, ஜோர்டானில் அவர்களைக் கட்டாயப்படுத்தியது. 1970 செப்டம்பரில், ஜோர்டானிய இராணுவம் மத்திய கிழக்கில் தாக்குதல் நடத்தியது; சிரியாவின் டாங்கிகள் வடக்கு ஜோர்டானைத் தீவிரவாதிகள் ஆதரித்தது. ஜூலை 1971 இல், ஜோர்தானியர்கள் சிரியாவையும், ஃபெடெய்னையையும் தோற்கடித்து, எல்லையை கடந்து ஓடினர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், ஜோர்டான் 1973 ல் யோம் கிப்பூர் போரில் (ரமாதான் போரில்) இஸ்ரேலிய எதிர்த்தாக்குதலைத் தடுக்க உதவும் ஒரு இராணுவ படைப்பிரிவை சிரியாவிற்கு அனுப்பி வைத்தார். அந்த மோதலில் ஜோர்டான் தன்னை இலக்காகக் கொள்ளவில்லை. 1988 ஆம் ஆண்டில், ஜோர்டான் உத்தியோகபூர்வமாக மேற்குக்கரைக்கு உரிமை கோரியது. மேலும் பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் மீது அவர்களின் முதல் இண்டிபாடாவில் ஆதரவு தெரிவித்தது. முதல் வளைகுடாப் போரின் போது (1990 - 1991), ஜோர்டான் சதாம் ஹுசைனை ஆதரித்தது, இது அமெரிக்க / ஜோர்டானிய உறவுகளை முறித்துக் கொண்டது. அமெரிக்கா ஜோர்டானிலிருந்து உதவி விலகி, பொருளாதார துன்பத்தை ஏற்படுத்தியது. சர்வதேச நல்லிணக்கத்தை மீண்டும் பெற, 1994 ல் ஜோர்டான் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட போர் முடிவடைந்தது. 1999 ஆம் ஆண்டில், கிங் ஹுசைன் நிணநீர் புற்றுநோயால் இறந்தார் மற்றும் அவரது மூத்த மகன் வெற்றி பெற்றார், அவர் கிங் அப்துல்லா II ஆனார். அப்துல்லாவின் கீழ், ஜோர்டான் அதன் கொந்தளிப்பான அண்டை நாடுகளுடன் இணைந்த ஒரு கொள்கையை பின்பற்றி, இன்னும் அகதிகளின் கூடுதல் வருவாயை அடைந்துவிட்டது. மஸ்கட் விமான நிலையில் இசைத்துக் கொண்டிருந்த ஓர் இசைக் குறிப்பை அடையாளம் கண்டு கொண்ட பெங்களூர்க்காரர் ஜோர்டான் இசை இங்கேயே முழங்க ஆரம்பித்து விட்டது என்றார்.தூரத்தில் வெட்டப்பட்டது போல் மலைகள். மரங்கள், செடிகள் இல்லாமல் பாறைகளாக ..போன்சாய் செடிகளைப் போல்.. வைப்பை வசதியை பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்துதான் பெற வேண்டியிருந்தது. வைப்பை வசதிக்குள் சுலபமாக நுழைய முடியவில்லை. அப்போதுதான் ஜோர்டான் இசை காதிலும் நுழைந்தது. ஜோர்டான் நாட்டு இசை ஏ ஆர் ரகுமானின் இசையில் செய்த பாதிப்பும் அவர் வெளியிட்ட இசை ஆல்பங்களும் கூட முக்கியமானவை.