சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 17 ஆகஸ்ட், 2022

செங்கடல் முதல் நைல் நதி வரை: 3 (எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணம்) 0 ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஃபாரா சிராஜின் (Farah Siraj) கூட்டிணைவு இசை கூட நெடு நேரமாகியும் இரவில் இருட்டைக் கொண்டு வரவில்லை ஜோர்டான் – அம்மான் நகரில் அந்த நாட்டின் இரவு பத்து மணிக்கு மேலும் சூரியன் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த முதல் நாளில் எப்போது இருட்டாகும் என்று காத்திருந்து சலித்துப் படுக்கைக்குச் சென்றோம்.இரு மணி நேர வித்யாசம் நம் இந்திய நேரத்துடன். இரவில் நடந்த ஜோர்டான் நாட்டு கிராமிய இசை புதிதாக இருந்தது. தங்கியிருந்த விடுதியில் மாலை முதலே அந்த இசைக்குழு இசை பரப்பலில் ஈடுபட்டிருந்தார்கள். இரண்டு மணி நேரம் கழிந்த பின்பே அது திருமண ஏற்பாட்டில் அந்த ஜோர்டான் நாட்டு கிராமிய இசைக்குழு இருப்பது தெரிந்தது. நல்ல உயரம், திடமான உடம்பு, அழகு எல்லாம் சேர்ந்து ஆணகளையும் பெண்களையும் நோக்கி வியக்க வைத்துக் கொண்டிருந்தது. தண்ணீர், எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்கள் இல்லாததால் மத்திய கிழக்கின் மிகச் சிறிய பொருளாதார நாடுகளில் ஜோர்டான் ஒன்று என்று ஆகிப்போனது . (சிஐஏ வேர்ல்ட் புக்யூப்). இதன் விளைவாக நாட்டின் அதிக வேலையின்மை, வறுமை மற்றும் பணவீக்கம் உள்ளது. இந்த பிரச்சினைகள் இருந்தபோதிலும் ஜோர்டானில் பல துறைகள் உள்ளன, இதில் ஆடை உற்பத்தி, உரங்கள், பொட்டாஷ், பாஸ்பேட் சுரங்கங்கள், மருந்துகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு, சிமெண்ட் தயாரித்தல், கனிம வேதியியல், பிற ஒளி உற்பத்தி மற்றும் சுற்றுலா ஆகியவை அடங்கும். நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை ஒரு சிறிய பங்கை வகிக்கிறது. அந்தத் தொழிலில் இருந்து முக்கிய பொருட்கள் சிட்ரஸ், தக்காளி, வெள்ளரிகள், ஆலிவ், ஸ்ட்ராபெர்ரிகள், கல் பழங்கள், ஆடு, கோழி மற்றும் பால் ஆகியவை. ஜோர்டானின் பருவநிலை பெரும்பாலும் வறண்ட பாலைவனம் மற்றும் வறட்சி நாடு முழுவதும் பரவலாக உள்ளது. இருப்பினும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மேற்குப் பகுதிகளில் குறைந்த மழைக்காலமும் உள்ளது. ஜோர்டான் தலைநகரான அம்மன், 38.5ºF (3.6ºC) சராசரியான ஜனவரி குறைந்த வெப்பநிலை மற்றும் 90.3ºF (32.4ºC) சராசரியாக ஆகஸ்ட் உயர் வெப்பநிலை உள்ளது. ஆகஸ்ட் வெப்ப நிலை ஜீலையிலேயே வந்து விட்டதை உணர்ந்தேன் அப்படியான வெப்பநிலையும் சூரியன் மறையாத இரவும் கலந்திருந்த நாளில் ஜோர்டான் சார்ந்த ஏ ஆர் ரகுமானின் இசைக்கோர்வை ஒன்று பற்றிய செய்தியை நண்பர் ஒருவர் அனுப்பி வைத்திருந்தார். • 06:42 • 08:44 • கோக் ஸ்டுடியோவின் mtv season 3 பார்க்க நேர்ந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை என்கிற காரணம் மட்டுமல்லாமல் நேபாள பெண் துறவி அனி சோயிங் (Ani Choying) மற்றும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஃபாரா சிராஜின் (Farah Siraj) கூட்டிணைவும் என்னை ஈர்த்தது. ஆரம்பத்தில் இந்தப் பாடலின் அர்த்தம் புரியவில்லை என்றாலும், அதைப் பொருட்படுத்திக் கொள்ள முடியாதபடியாக அதன் இசை வடிவமும், சந்த லயமும், நம்மில் ஒரு புத்துணர்ச்சியையும், புது அனுபவத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது. • ஆதியில் சலனமற்ற, சப்தமற்ற காரிருள் இருந்தது. பெருவெடிப்பில் நிகழும் சலனமென மென்மையான மணி ஓசையுடன், ஓங்காரச் சப்தத் தொனியுடன் இயக்கம் தொடங்குகிறது. (அனி சோயிங்கின் மந்திர உள்ளடக்கம்) பின் ஒவ்வொரு வாத்தியக் கருவிகளாக இசைக்கத் தொடங்கி, பல்வேறு குரல்களின் மென்மையான பாடல் வரிகளில் தொடங்குகிறது இசை. பூமி உருவானதையும், அதில் உயிர்களின் தோற்றமும், பரிணாம வளர்ச்சியுமாக நம் உணர்வை இசையுடன் இணைத்துப் பார்க்கும் விசாலமான அனுபவமாக முகிழ்கிறது இசை வடிவம். • ஃபாரா சிராஜின் அட்டகாசமான ஜோர்டான் நாட்டின் நாட்டுப்புறப் பாடல் வடிவமாக (அவரின் கூற்றுப்படி) நம்மை ஆட்கொள்ளுகிறது அரபி சந்தத்துடன் கூடிய அவரின் குரல். பரிணாமத்தில் படிப்படியாக தன்னைப் புதுப்பித்துக் கொண்ட மனித இனம், கடந்த பத்தாண்டுகளில் வேகம் வேகமென மகிழ்ச்சி, துக்கம், வேதனை, சிரிப்பு, சிலிர்ப்பு, கொடூரம், உறவுச் சிக்கல்கள், உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடான சத்தமென அலைக்கழிக்கப்படுகிறது, இருந்தாலும் ஆதி உயிரியின் கூறு நம் முன் சமைக்கப்பட்டுள்ளதால், ஆதி அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, பரவசம் என்பவற்றை ஏங்கும் முகமாகவே நம் அகத்தோட்டம் உள்ளது. இவ்வாறான அகத்தேடலை ரகுமான் இசைக்கோர்ப்பில் கொடுத்திருப்பார். மெல்ல மெல்லத் தாளகதியுடன் கிளம்பும் இசை, பாடகர்களின் குரல், சடுதியில் திடுமென வேகமெடுக்கத் தொடங்கியதும் நம்மை அறியாமலேயே தாளகதியுடன் ஒன்றிவிடுகிறோம். • மேலும் மேலும் என வேகம் கூட்டிச் செல்லும் சிவமணியின் ட்ரம்ஸ், கிடார், ரகுமானின் கீபோர்டு வாசிப்பு, பாடகர்களின் உச்ச ஸ்தாதியுடன் கூடிய வேகம் நம்மை இழக்கச் செய்து பிரபஞ்ச இயக்கத்தின் தாளகதியுடன் ஒன்றி விடுகிறோம். ஃபாரா சிராஜின் குரல் வளமும், மலர்ச்சியும், தோற்றமும் நம் புறவய உணர்ச்சிகளின் தொகுப்பாக மாறி விடுகிறது. ஆனால் மென்மையான, சலனமில்லா மந்திர உச்சாடனத்துடன் கூடிய பேரமைதி கொண்ட தோற்றம் என அனிசோயிங்கின் இருக்கை, மனித மனங்களின் உணர்ச்சிக் குவியல்கள், ஆசைகள், வெறித்தனங்களுக்கு உட்பட்டும், இந்த பூமி தன் இயல்பிலேயே பேரமைதியுடன், சலனமில்லாமல் தன் சுற்றுப்பாதையில் அலாதியான சப்த லயத்துடன் தன் இருக்கையில் இருந்தபடியே சுழல்கிறது என்பதாக உணர வைத்து விடுகிறது. • பலத்த பேரோசைக்குப் பின் அனிசோயிங்கின் அமைதியான ஓங்காரத்துடன் லயங்கொள்ளும் பாடல் முடிவும், இந்த இசைக்கோர்ப்பினை நிகழ்த்தும் ஏ.ஆர்.ரகுமானின் மென்மையான அசைவுகளுடனும் கூடிய இசை மற்றும் அவரது முகத்திலும் அனிசோயிங்கின் முகத்திலும் காணும் அதே பேரமைதியுடன் கூடிய இயக்கம், அகத்தேடலில் கண்டடையும் பேரானந்த ஆன்மானுபவம், புறவயவுலகியலில் எவ்வகையான உணர்ச்சிக் குவியல்களுக்கு மத்தியிலும் அடைய முடியும் என்பதை உணர்த்துவதாகவுள்ளது. • நம்முள் அளப்பரிய கிளர்ச்சியையும், பேரானந்த அனுபவத்தையும் கொடுக்கும் இசைவடிவை ஏ.ஆர்.ரகுமான் படைத்துள்ளார். படைப்பின் ஊடகமாகவே அவர் மாறியுள்ளார். இவ்வாறான அனுபவத்தை எமக்குத் தந்த இந்தப் பாடல், தாய்மையின் அர்ப்பணிப்பாக, உலகிலுள்ள எல்லா அம்மாக்களுக்காகவும் சமர்ப்பணம் செய்வதாகக் கூறுகிறார் ஏ.ஆர்.ரகுமான். • ஜாரியா பாடலை எழுதியவர் பிரஸ்கன் ஜோஷி. • இறைவன், கருவைச் சுமக்கும் தாய் மூலமாகவே படைப்பினை நிகழ்த்துகிறார். எனவே அம்மாதான் படைப்பின் ஊடகமாக இருக்கின்றார் என்கிறார் ரகுமான். ஜாரியா என்பதன் பொருளும் அதுவே. ஊடகமாக, வழியாக (Medium, Path) என்று பொருள்படும். இந்த ஜாரியா பாடல் தாய்மையினைப் போற்றுவதன் காரணமாகவே தான் இணைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் துறவி அனிசோயிங். இந்தப் பாடலில் ஜோர்டானின் நாட்டுப்புறப் பாடலின் இணைப்பைச் சேர்த்து மெருகூட்டியுள்ளதாகக் கூறுகிறார் ஃபாரா சிராஜ். இதில் ரீடாஹா என்பது “எனக்கு அம்மா வேண்டும்” கெஃபிமா ரீடாஹா என்பது “எந்த வழி ஆயினும் நான் அவளுடன் இருக்கவே விழைகிறேன்” என்பதாகப் பொருள் தரும் எனக் கூறுகிறார் ஃபாரா சிராஜ். • ஃபாரா சிராஜ் கையாளும் இசை வடிவத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில் நமக்கு அரபிய இசை குறித்தான வரலாற்றுப் பார்வையும் அவசியமாகிறது. அரபிய இசை 2010 முதல் தனித்துவமாகவும், பரந்த வீச்சுடையதாகவும் இருந்தாலும், அதன் தொன்மை அரபிய தீபகற்பங்களின் கூட்டிசையாக உருவெடுத்துள்ளது. எனினும் ஐரோப்பிய அறிஞர்களால், அரபி இசை ஈரான் நாட்டில் இருந்து பிறந்தத்தாகவே அனுமானிக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டில் இருந்து எகிப்து அரேபிய இசை வடிவத்தை தன்னுள் சுவீகரித்துக் கொண்டது. கெய்ரோ புதுயுக அரபி இசையின் வடிவமாக மாறியது. உம் குல்தும் (எகிப்திய இசைக்கலைஞர்) ஃபரூஸ் (லெபனான் இசைக்கலைஞர்) முதலில் மதம் சாராத இசை வடிவத்தை முன்னெடுத்தவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்கள். 1950 மற்றும் 60களில் அரபிய இசை, மேற்கத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தவும், அரபிய பாப் இசை உருவானது. மேற்கத்திய இசைவடிவமும் அரபிய இசையை உள்வாங்கியதுடன், அரபிய வாத்தியக் கருவிகளான ஓளட் மற்றும் தெர்புக்கி இசைக்கருவிகளுக்கு மாற்றாக லெக்டிரிக் கிடாரையும், டிரம்ஸையும் உள்வாங்கி இசையை உருவாக்கியது. • ‘ஹபிபி’உலகம் முழுவதும் புகழ்பெற்றது அனைவரும் அறிந்ததே. மேலும் சூஃபி பாடல்களும் இசை வடிவங்களும் இறைவனின் நெருக்கத்தையும், அவனுடனான உறவையும் உள்ளடக்கியவைகளாக இருந்தன. எலக்ட்ரானிக் நடன இசை வடிவம் ஆஸ்திரேலியாவில் பிறந்த ரிச்சி என்ற இசைக்கலைஞரால் வெகுஜன பாராட்டுதலுக்கு உள்ளாகியதுடன், தற்போதும் இரவு களியாட்ட விடுதிகளில் பாடப்படும் இசைவடிவமாகப் புகழடைந்துள்ளது. இது மேற்கத்திய இசைக்கருவிகளுடன் அரபிய இசைக்கருவிகளின் சேர்ந்திசையாக உருவெடுத்துள்ளது. மிக முக்கியமாக ஆப்பிரிக்க தொடக்கத்தில் உருவான ஜாஸ் மிகவும் புகழ்பெற்ற இசைவடிவமாக இன்றளவில் உருவெடுத்துள்ளது. அரபிய இசை, ராக் இசை நுட்பங்களையும் சுவீகரித்துக்கொண்டது. ராக் இசை எலக்ட்ரிக் கிடாரை மையப்படுத்தி உருவாகி 1940களில் இருந்து அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் துள்ளலுடன் கூடிய இசை வடிவம். • அரபிய இசை வடிவம் மக்ஃம் இசை வடிவம் எனப்படுகிறது. மக்ஃம் என்பது மென்மையான இசை வடிவம். மக்ஃம் அளவீடுகள் என்பது சின்னச் சின்ன உறுப்புகளால் ஆன ஒரு தொடர் குறிப்புகளைக் கொண்ட இசைக் குறிப்பேடு. சின்ன உறுப்புகள் ஜின்ஸ் என அழைக்கப்படுகிறது. இதன் பன்மை வடிவம் அஜ்னாஸ் எனப்படுகிறது. • • ஜின்ஸ் என்பது தொடர்ந்த மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து குறிப்பேடுகளைக் கொண்டது. மேலும் பிளெமென்கொ என்பது தெற்கு ஸ்பெயின் பகுதியினைச் சார்ந்த மூர் நாகரிக நாடோடிகளின் வேகமான மற்றும் இசைவான கைகளைத் தட்டியும், கால்களால் நிலத்தில் தட்டியும் இசைக்கப்படுகின்ற இசை வடிவம். போசா என்பது பிரேசிலின் சம்பா நடனத்தை ஒத்த நடன இசைவடிவம். ஃபாரா சிராஜ், பிளெமென்கோ, ஜாஸ், போசா மற்றும் பாப் இசை வடிவங்களின் கூட்டிசையாக நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், மனிதநேயத்தை வலியுறுத்தியும் அமைதிக்காகவும், எல்லா மக்களுக்கான விடுதலைக்கும் சேர்ந்ததாக தாள இசை வடிவத்தைக் கையாள்கிறார். • புத்தத் துறவியான அனிசோயிங், புத்தமத இசைவடிவமாக, புத்த மந்திரங்களை பல்வேறு தாள லயங்களுடன் பயன்படுத்துகிறார். மந்திரங்களின் வகைகள் அமைதி, அன்பு, ஆனந்தம் என பல்வேறு உணர்வு நிலைகளைக் குறிப்பிடுவதாக உள்ளன. ’நாகி கோம்பா’ இளம்பெண் துறவிகளுக்கான மடத்தை நிர்வகிப்பதுடன், புத்த மந்திர இசைவடிவத்தை உலகெங்கும் கொண்டு சென்றதில் முக்கியமானவர் அனிசோயிங். • இப்படியரு கூட்டிணைவைச் சாத்தியப் படுத்தியிருக்கும் ரகுமான் இசையமைப்பாளர் என்பதையும் கடந்து, ஆழ்ந்த அகத்தேடல் கொண்ட மனிதராகவும் நம் முன் நிற்கிறார். அலசல்களும் புரிதல்களும் எவ்வாறு இருப்பினும், ஜாரியாவின் அனுபவம் தியான நிலையில் நம்மைச் சில கணங்களாவது ஆழ்த்துவது யதார்த்தம்.அப்படித்தான் இசையில் ஆழ்ந்து கிடந்து தூங்கப் போனதும் நிகழ்ந்தது. பூ மா சரவணன் எழுதிய ஒரு கட்டுரை இதற்குத் துணை நின்றது ஓலைச்சுவடு இதழில் • • ஜோர்டான் அதன் தனித்துவமான நினைவுப் பொருட்கள் மற்றும் பரிசுகளுக்காகவும் பிரபலமானது. அசாதாரண கையால் செய்யப்பட்ட மடாபா விரிப்புகள், உயர்தர பீங்கான் மற்றும் மர பொருட்கள், அத்துடன் கருப்பு வெள்ளி நகைகள் விற்கப்படுகின்றன.ஜோர்டானில் இருக்கும்போது, அரபு இனிப்புகளை முயற்சி செய்யுங்கள் - உலகின் மிக சுவையான விருந்துகள். மீதமுள்ளவை அறிவாற்றல் மற்றும் உல்லாசப் பயணத்தை முழுமையாக ஒருங்கிணைக்கின்றன • எனவே இஸ்ரேலை விட இங்கு பொருட்கள் கொஞ்சம் விலை மலிவு என்று நண்பர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டார்கள். • கீழ்க்கண்டவாறு குட்டித் தகவல்களையும் சேகரித்துக் கொண்டார்கள். • ஜோர்டான் இந்த நாட்டின் தலைநகர் அம்மான். • 4. அகதிகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டாத நாடு இது. பாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளின் அகதிகள் இங்கு குடியேறியுள்ளனர். இப்போதுள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அகதிகள்தான். • • 5. பெட்ரா மிகப் பழமையான நகரம். 'ரோஸ் நகரம்' என்றும் அழைக்கப்படும் இந்த நகரில் அற்புதமான கட்டிடக் கலைக்குச் சான்றாகப் பல கட்டிடங்கள் இருக்கின்றன. • 6. பெட்ரோல் கிணறுகள் இங்கு இல்லை. • 7. இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டே நாடுகள் எகிப்தும் இதுவும்தான். • 8. கறுப்பு, வெள்ளை, பச்சை நிறப் பட்டைகளின் இடது பக்கத்தில் சிவப்பு முக்கோணத்தில் நட்சத்திரத்துடன் காணப்படுகிறது இதன் தேசியக் கொடி. • 9. 1946-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு. • 10. அரேபிய மறிமான் (Arabian oryx) தேசிய விலங்கு. • தேசிய விலங்கையெல்லாம் பார்க்கக் கிடைக்கவில்லை. மலை முகடுகளில் மேயும் ஆடுகள் அவற்றுக்கான உறவிடங்கள், அவற்றைக்கண்காணித்துக் கொள்ளும் மேய்ப்பர்கள் தங்கும் சற்றே சின்னக் குகை போன்ற இடங்கள்.. கவனத்திற்கு வந்தன . • அதில் நூற்றுக்கணக்கான இந்தியர்களும் மேய்ப்பர்களாக இருப்பார்கள் என்ற தகவல் பகல் நேரத்துக் கொடுமையான வெயிலின் உக்கிரத்தை மனதிற்குள் கொண்டு வந்தது. • ------------------------------------------------------------------------------------------------------------------------ • -