சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022
சமீபத்தில் “ வண்ணத்துப்பூச்சி” என்ற தனி நபர் நாடகம் நாதன் ரகுநாதன் நடித்தது. திருப்பூரில் நடத்தப்பட்டது. அது கன்னட நாடகம். தமிழாக்கம் செய்யப்பட்டு நூலாக வந்துள்ளது .சிறுவர்களுக்கானது. அது தந்த நினைவில் ..
திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்
பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது ..
அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள் நடத்தப்பட்டன.
இவற்றை ஆரம்பத்தில் நானும், பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் .
இவற்றில் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை
என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும் “ மணல் வீடு “ என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற “ பசுமை எனும் தாய்மை “ என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு “ என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும் பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன.
இவற்றில் ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் “ நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின் “ வயிறு “ , , , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் ,
அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “அறந்தை நாராயணனின் மேற்பார்வையிலும் நட்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
எண்பதுகளிம் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன,
ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றன.
அந்த வகையில் இவ்வாண்டில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாதக் கூட்டங்களில் அரசியல் கவிதைகளை தோழர் எஸ் ஏ காதர்-தனி நபர் நடிப்பு - மோனே ஏக்டிங்க் வகையில் நாடகமாக்கினார். இவ்வாண்டின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்ட மாநாட்டில் தோழர் எஸ் ஏ காதர் ஸ்ரீநிதியின் பங்கேற்பில் மதம் என்ற நாடகம் நடைபெற்றது. கோவை திலீப்குமாரின் சிறு நாடகமும் அம்மாநாட்டில் அரங்கேறியது . (தோழர் எஸ் ஏ காதர் 25க்கும் மேற்பட்ட முழு நீள மேடை நாடகங்களை 70,80 களிலும் எழுதி இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் வயது 72. இன்னும் நாடக ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். அவ்ர் இரு நாவல்கள் உட்பட சில நூல்களை வெளியிட்டுள்ளார் . தோழர் எஸ் ஏ காதர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் )
மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், வெண்மணி நாடகக் குழுக்களின் தொடர்ந்த நாடக செயல்பாடுகள் திருப்பூரில் குறிப்பிடத்தக்கவை .