சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 24 ஜூன், 2021
அண்டனூர் சுரா ,கந்தர்வகோட்டை
கேள்வி -
திருப்பூர் கனவு இலக்கிய வட்டம் கூகுள் மீட் - நேற்றைய நிகழ்வு எப்படி இருந்தது?
பதில் -
'நூலேணி' குறித்து பேசலாமென இருந்தேன்.
அதென்ன நூலேணி?
மரத்தினலான ஏணி என்றால் குறைந்தபட்சம் 30 டிகிரியில் சாய்த்து வைத்தாக வேண்டும். அதற்கான இடமில்லாத இடங்களில் நூலேணியே உகந்தது. மேலிருந்து கீழே தொங்கவிட்டால் எளிதாக ஏறிக்கொள்ளலாம். மரஏணி கீழிருந்து மேலே ஏற்றும். நூலேணி மேலிருந்தபடி கீழே உள்ளவர்களை தன் உயரத்திற்கு அழைக்கும்.
சுப்ரபாரதிமணியன் அவர்கள், 'நூலேணி' தக்கவர். (நூல் - புத்தகம்). இதைச்சொல்ல என் இதயத்தில் இடம் இருந்தது. இருந்தென்ன,???
கடந்த X ஆட்சிக்காலத்தில் Y என்கிற அமைச்சர் Z மேடையில் அரசு - ஆட்சி - அதிகாரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது அமைச்சு பறிபோய்விட்டது. பாவம் அவர், கொக்குநோய் கண்டவராக அமர்ந்துவிட்டார். அந்தக் கதைதான் நேற்று எனக்கு நிகழ்ந்தது !
நாம் மனது வைக்க இங்கே எதுவும் நடக்கப்போவதில்லை. எதற்கும் கோபுர சமிக்ஞை மனது வைக்க வேண்டும், அதற்கேது இதயம்????
கனவு - மெய்நிகர் சந்திப்பில் Google .. 27/6/21 மாலை 6 மணி ..
• படைப்பு அனுபவம் : உரை : திருவாளர்கள்
சி. அருண், மலேசியா
ஓ கே குணநாதன் ,இலங்கை
புதுவை யுகபாரதி ,பாண்டிச்சேரி
மஞ்சுளாதேவி ,உடுமலை
ஹேமலதா , கொச்சி
பேரா.விஜயன் , சித்தூர். கேரளா
சந்திரா மனோகரன் , ஈரோடு
வீரபாலன், ராஜபாளையம்
சாமக்கோடாங்கி ரவி, திருப்பூர்
மற்றும்
உங்களின் கவிதை வாசிப்பும் கருத்துரைகளும்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஆழ்வைக்கண்ணன்
முன்னிலை : சுப்ரபாரதிமணியன்
தொடர்புக்கு : ஆழ்வைக்கண்ணன் 75503 16500 (கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் )
மெய்நிகர் சந்திப்பில்.. 27/6/21 மாலை 6 மணி ..வருக
• படைப்பு அனுபவம் உரை : திருவாளர்கள்
சாந்தாதத், ஹைதராபாத்
விஜி வெங்கட் , ஹைதராபாத்
பேரா. பி ஆர் ராமானுஜம் ,தில்லி
அண்டனூர் சுரா ,கந்தர்வகோட்டை
மலர்விழி ,பெங்களூர்
இராமன் முள்ளிப்பள்ளம் ,மைசூர்
வெள்ளியோடன், கோளிக்கோடு
பேரா மணிவண்ணன்,உதகை
பொள்ளாச்சி அம்சப்ரியா
கோவை சசிகுமார்
கோவை மகேந்திரன்
திருப்பூர் விதுரன் சுரேஷ்
மற்றும் உங்களின் கவிதை வாசிப்பும் கருத்துரைகளும்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஆழ்வைக்கண்ணன்
முன்னிலை : சுப்ரபாரதிமணியன்
தொடர்புக்கு : ஆழ்வைக்கண்ணன் 75503 16500 (கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் )